Ramesh Gopalakrishnan : கருத்துக்கள் ( 1 )
Ramesh Gopalakrishnan
Advertisement
Advertisement
பிப்ரவரி
18
2017
சிறப்பு கட்டுரைகள் மக்களின் மனம் அடுத்த தேர்தலை நோக்கி!
அன்புள்ள தமிழனுக்கு உன் தமிழ் மொழி பேசும் ஒரு சக தமிழனின் கடிதம். என்ன தலையெழுத்து இந்த தமிழினத்திற்கு ? ஒரு நல்ல தலைவனைக் கூடவா இது வரை எந்தத் தமிழ்ப் பெண்ணின் கருவறையும் தரிக்கவில்லை, சுமக்கவில்லை ?. இல்லை கனன்று பிறந்த தழல்கள் எல்லாம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் பிள்ளைகளின் தலைமுறைக்கும் உணவும் பிறவும் தேடித்தேடி சலிக்காமல் இன்னும் சேர்க்கப் போராடும் போராட்டத்தில் நீர்த்துப் போனதோ ? உன்னையும் என்னையும் போல்..நிற்க.. நீயும் நானும் இந்த இரை தேடும் போராட்டத்தில் மூச்சுப் பிடித்து ஓடும் ஆற்றலைத் தரும் கல்வியை நமக்குத் தந்தது தன் தாயையும் தன் அரசியல் தூய்மைக்காக நேர்மைக்காக தன்னிடமிருந்து தள்ளியே வைத்த அந்த விருதுநகர் தலைவன் அல்லவா ? இன்று நம் பிள்ளைகளுக்கு வேண்டும் கல்வியை விரும்பும் பள்ளியில் எவ்வளவு கொடுத்தும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும், நாடு கடந்து கடல் கடந்து நன்கு சம்பாதிப்பதால், நயமாய் வாழ்வதால்... நம்மையும் நம் குடும்பத்தையும் மேட்டுக்குடிக்கு உயர்த்த தலைமுறைகள் பல நீண்ட போராட்டத்தில் பொது நலம் என்பதை நம் வாழ்க்கைக்கு வெளியே மிகத் தள்ளி வைத்து பார்த்து வளர்ந்த தலைமுறை நம் தலைமுறை. இது சரியா தவறா என்பதற்கு அல்ல இந்த கடிதம். ஒரு தூங்காத மழை இரவில் இந்த நம்பிக்கை கோரும் சட்டமன்ற காணொளிப் பதிவைக் கண்டபிறகு எழுந்த உணர்வுகளை என் சன்னலைத் திறந்து உன்னிடம் பகிர்ந்த்து கொள்ளும் ஒரு பகிர்வு.இங்கு கறிவேப்பிலையே அவ்வளவு விலை ..அதனால் இங்கே கதவைத் திறந்து பகிர்ந்து கொள்ளும் அன்பு எவ்வளவு விலை என்பதை புரிந்து கொள்வாய்.எவ்வளவோ அரசியல் சூ ழ்ச்சிகளின் மத்தியிலும் உன் பாட்டனும் என் பாட்டனும் விளையாண்ட சல்லிக்கட்டை பசித்திருந்து விழித்திருந்து மீட்டெடுத்த நம் தலைமுறை நிச்சயமாக ஒரு பெரும் நம்பிக்கை. தன்னலமற்ற தலைவர்கள் ஒரு ஓமந்தூராரைப் போல், ஒரு கக்கனைப் போல், ஒரு காமராஜரைப் போல் இங்கு ஆள வந்தால் மட்டுமே இந்த குப்பை கூளங்கள் சுத்தமாகும். இந்தக் காணொளியில் ஒரு கூட்டம் திருடர் கூட்டம்... ஒரு கூட்டம் கொள்ளையர் கூட்டம்... ஆண்டு.. ஆண்டு.. பல ஆண்டுகள் உண்டு கொழுத்த கூட்டம்... பல தலைமுறை களித்து வாழ கோடி கோடிகள் சேர்த்தும் இன்னும் போதாமல் இன்று இந்த அவையை அலங்கோலமாக்கி ஆட்டம் போடும் அற்பப் பதர்கள் ஒரு புறம்.. அமைதியின் போர்வையில் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு ஒரு மிகப் பெரிய கொள்ளைத்திட்டத்துடன் ஒரு கூட்டம் மறு புறம்... உன் சமூக வெளித்தளங்களில் உன் எண்ணங்களை உன் உணர்வுகளைப் பதியும் பொழுது பகிரும் பொழுது ஒன்று தெளிவாகக் கொள். இந்த க் கட்சிகள் எல்லாம், பதர்கள் எல்லாம் முதலில் களையப்பட வேண்டும் இந்த களர் நிலத்தை தூய்மைப்படுத்த… புகையை, மதுவைத் தொடாத, ஓழுக்கமே வாழ்வாய் கண்ணியம் மிகுந்த தலைவர்கள், இளைஞர்கள் கூட்டத்தைக் கண்டெடுப்போம்.. நாமும் பசித்திருந்து விழித்திருந்து சிறிது பொதுநலத்தையும் நம் உணவில் உப்புடன் தினமும் சேர்த்து இனி உண்போம். நானும் என்னால் இயன்ற ஒரு சிறு விதையை பொது வெளியில் விதைத்து என் மகளுடன் தண்ணீர் ஊற்றி வருகிறேன் சில வாரங்களாக... எண்ணங்களில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. இயற்கை துணை செய்யும். இந்த மடலைப் படித்த பிறகு உன் உணர்வுகளை எனக்கு மடலாக்கு.. என் கதவுகளைத் திறந்து உன் மடலுக்கு காத்திருக்கிறேன். அன்புடன், உன் தமிழ் மொழி பேசும் ஒரு தமிழன்.   01:52:32 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X