தமிழ் : கருத்துக்கள் ( 271 )
தமிழ்
Advertisement
Advertisement
மே
25
2017
அரசியல் தே.ஜ., அரசின் மூன்றாண்டு நிறைவையொட்டி... கொண்டாட்டம்!20 நாட்கள் விழாவை அசாமில் துவக்குகிறார் மோடி
கறுப்புப்பணம், லஞ்சம், ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும். வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் மீட்கப்படும். இந்த நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் ஒழிக்கப்படும். ஆண்டுக்கு மூன்று கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலையில்லாத இளைஞர்களைப் பார்க்கவே முடியாதபடி செய்வேன் என்று மோடி கர்ஜனை செய்தார். ஆனால் இந்த மூன்றாண்டுகளில், சுமார் ஒன்பது லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறது இந்த அரசு. மத்திய அரசின் தொழிலாளர் துறையே இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. பசி, பட்டினி, பஞ்சம் நிலை மோசமாகத் தான் உள்ளதே ஒழிய பெரிய மாற்றமில்லை. இந்த நிலையில் எதற்கு மூன்றாண்டு நிறைவுக் கொண்டாட்டம்??? கட்சியின் வளர்ச்சிப் பணிகள் முயல் வேகத்திலும், மக்கள் நலப்பணிகள் ஆமை வேகத்திலும் நகர்கிறது.   20:59:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
25
2017
பொது ரூபாய் நோட்டு வாபஸ் ரூ.5 லட்சம் கோடி லாபம் 10 அம்சங்கள்
என்ன தான் பக்கம் பக்கமாக அறிக்கை தயாரித்து வெளியிட்டாலும், இந்த Demonetization மன்மோகன் சிங் சொன்னது போல “organised loot and legalised plunder”. இன்னும் வெற்றி, வெற்றி என மீசைல மண் ஒட்டலை புராணத்தையே பாடிக் கொண்டிருக்காமல், தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வது நல்லது. "தோல்வியை ஒப்புக் கொள்ள அஞ்சாதே. தோல்வியிலிருந்து படிப்பினைகளைக் கற்றறிந்து கொள். தவறாக எதனை நீ செய்தாயோ அதனை முழுமையாகவும், நிறைந்த கவனத்துடனும், நிறைந்த ஒழுங்குமுறையுடனும் மறுபடியும் செய்" என்ற வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.   08:30:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
25
2017
உலகம் எதிரிகள் அத்துமீறினால் தலைமுறைகள் தாண்டி வருந்துவர் பாகிஸ்தான் புலம்பல்
ஆமாம், நீங்க சொல்வது சரிதான், கண்டிப்பாக வருத்தப்படுவோம். அகிம்சை வழியைக் கடைபிடிக்கும் நாங்கள், பாகிஸ்தானை தரைமட்டமாக்கி இவ்வளவு உயிர்ச்சேதம், பொருட்சேததத்திற்கு காரணமாகி விட்டோமே என நினைத்து கண்டிப்பாக வருத்தப்படுவோம்.   08:54:00 IST
Rate this:
4 members
0 members
35 members
Share this Comment

மே
24
2017
அரசியல் சக மந்திரிகள், மூத்த அதிகாரிகளை முதல்வர் நம்பாததால்...சா்ச்சை!
சொந்தக்காரனை வைத்து தனியாக பேச வேண்டிய அவசியம் என்ன? அரசியல் பேசவில்லை, நாட்டு நலனுக்காகத் தான் பேசியது உண்மை எனில், ஆங்கிலம் தான் பிரச்சினை எனில் உடன் சென்ற தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்குக் கூடவா ஆங்கிலம் தெரியாது. நல்லா சுத்துறாங்கய்யா காதுல பூ. என்ன டீல் நல்லபடியா முடிஞ்சுதா??? இவங்க எல்லாம் ஊழலில் ஊறினவங்க, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேணாலும் செய்வாங்க. ஆனால் யோக்கிய சிகாமணி என சொல்லிக் கொள்ளும் மோடி, ஏன் இந்த கொள்ளைக் கும்பல்களை ஒவ்வொருத்தரா கூப்பிட்டு ஏன் பேசிகிட்டு இருக்கார்???. சும்மா, கண்ணை மூடிகிட்டு மோடிக்காக வரிஞ்சு கட்டிகிட்டு நிற்காம, நடுநிலையா யோசிங்கப்பா.   08:43:31 IST
Rate this:
8 members
0 members
36 members
Share this Comment

மே
25
2017
பொது மணல் தட்டுப்பாடு எம் சேண்ட் விலையும் எகிறியது
"மணல் குவாரிகளை அரசே நடத்தும், மூன்றாண்டுகளில் ஆற்று மணல் அள்ளுவது முற்றிலுமாக நிறுத்தப்படும். அதற்கு மாற்றாக 'எம் சான்ட்' எனப்படும் செற்கை மணல் பயன்படுத்தும் முறைக்கு மாறவேண்டும்" என்ற அறிவிப்பும், அதன் பின்னர் "அரசின் நேரடி மணல் விற்பனையில் சிக்கல் அதிகாரிகள், ஊழியர்கள் பற்றாக்குறை" என்ற அறிவிப்பும் வந்ததே ஞாபகம் இருக்கா? எல்லாம் கூட்டிக் கழித்துப் பாருங்கள், கணக்கு சரியா வரும். "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்பது புரிஞ்சா சரி.   08:25:33 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
24
2017
அரசியல் ஆட்சி ஓராண்டு நிறைவு அ.தி.மு.க.,வினர் அமைதி
என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள், ஓராண்டு நிறைவு விழா கொண்டாட. ஆனால், இந்த ஆட்சி கலையாமல் ஓராண்டு நிறைவடைந்ததே மிகப் பெரிய சாதனை தான். அதை இவனுக கொண்டாடலாம்.   08:46:20 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

மே
24
2017
அரசியல் ஆட்சியை கவிழ்க்க முடியாது அமைச்சர் சவால்
இந்த ஆவின் பாலில் கூட ஊழல் செய்தவங்க தானே நீங்க எல்லாம். நம்ம மக்களுக்கு சகிப்புத்தன்மை அதிகமாகிக் கொண்டே போய்விட்டதால், இவனுகளுக்கு துளிர் விட்டுப் போச்சு. மக்கள் எல்லா கூத்துகளையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல், இவனுக எல்லாம் வாய்க்கு வந்ததை விவஸ்தை இல்லாம பேசிகிட்டு திரியராங்க. கொள்ளையடிக்கிறதை விட்டுட்டு, நாட்டிற்கு நல்லது செய்ங்க, 40 வருடம் என்ன... 400 வருடம் கூட எந்த கட்சியையும் ஆட்சி செய்ய மக்கள் அனுமதிப்பார்கள்.   08:35:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
24
2017
அரசியல் 2019ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களை பிடிக்கும் வெங்கையா நாயுடு
"கடந்த மூன்றாண்டு பா.ஜ., ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை" :- ஊழல் குற்றச்சாட்டுக்கள் எதுவுமே இல்லையா அல்லது சாதுர்யமாக மறைக்கப்படுகிறதா? யாரை அடக்கி வைக்கணுமோ, அங்கு மட்டும் வருமான வரித்துறை சோதனை, சிபிஐ புலனாய்வு நடப்பது சந்தேகம் அளிக்கிறது.   08:04:43 IST
Rate this:
14 members
0 members
25 members
Share this Comment

மே
24
2017
பொது 50 டிகிரி செல்சியஸை நெருங்குது கோடை வெப்பம்
நம்ம தெர்மோகூல் ராஜுவ கூப்பிட்டு வெயிலின் தாக்கத்தைக் குறைப்பது எப்படி என கேளுங்கப்பா, ஏதாவது யோசனை வைத்திருப்பார். கொளுத்துற வெயிலை சமாளிக்க முடியலை.   07:51:36 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
24
2017
பொது உலகம் சிரிக்கும் போராட்டம் அய்யாக்கண்ணு எச்சரிக்கை
விவசாயிகள் மீது உண்மையான அக்கரை உள்ளவர் எனில், எல்லா விவசாய சங்கங்களிடமும் கலந்து பேசி, அனைவரையும் ஒருங்கிணைத்துப் போராடி இருக்க வேண்டும். அதிலும், இந்த கோமாளி, வித விதமா வித்தை காட்டி விவசாயிகளுக்கு என இருந்த கொஞ்ச, நஞ்சம் மானத்தையும் ஆடை அவிழ்த்து வாங்கிட்டார். இனியாவது, யாரோ ஆட்டுவிக்கும்படி தனித்து செயல்படுவதை விட்டுவிட்டு, அனைத்து விவசாயிகள் சங்கங்களையும் கலந்து ஆலோசித்து, மாநில அரசிடம் என்ன வலியுறுத்த வேண்டும், மத்திய அரசிடம் என்ன வலியுருத்த வேண்டும் என முடிவு செய்து அனைவரும் ஒன்று கூடி அறவழியில் அமைதிப் போராட்டம் நடத்துங்க. எப்படி என தெரியவில்லை எனில் இளைஞர்களிடம் பயிற்சி எடுங்க. உலகே சிரிக்கும் என மேலும் மேலும் ஏதாவது கோமாளித்தனங்கள் செய்து, தமிழ்நாடே உம்மால் தலைகுனியும்படி செய்துவிடாதீர்.   07:43:49 IST
Rate this:
12 members
0 members
45 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X