இந்த நிலை தொடர்ந்தால், எப்படி குதிரைப்பந்தயம் சூதாடிகளின் ஆட்டமாக கருதப்படுகிறதோ அதைப்போல் இந்த கிரிக்கெட்டும் ஒருநாள் தறிகெட்டவர்களின் ஆட்டமாக கருதப்படும்.
18-மே-2013 13:32:42 IST
இதில் என்ன சந்தேகம் இருக்கிறது? இவர்கள் நடத்துவது சுயநல அரசியல் என்பது எல்லோரும் அறிந்ததுதானே. தங்கள் பலத்தை காட்டத்தானே இவர்கள் தங்கள் ஜாதியை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். எங்கோ இருக்கும் இலங்கை தமிழருக்காக குரல்கொடுக்கிறோம் என்பவர்கள் இங்குள்ளவர்கள் ஒற்றுமைக்காக இவர்கள் செய்தது என்ன? அப்பாவி இலங்கைத்தமிழர்களின் பிரச்சனையை இவர்கள் தங்கள் அரசியலுக்கான துருப்புச்சீட்டாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பது தான் உண்மை. இனவெறி அரசியல் என்பது ஒரு சமூக புற்றுநோய். இதை ஒட்டுமொத்த மக்களும் மனது வைத்தால் தான் ஒழிக்க முடியும்.
07-மே-2013 12:53:14 IST
பதட்டமான தருணத்தில் நம் நாட்டு தலைவர்களின் அணுகுமுறை சரியாக இருந்திருக்கிறது என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அதே நேரத்தில் சீனாவுடன் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
07-மே-2013 12:20:48 IST
என்று தனியொரு மனிதன் பிறரை கொலை செய்வதை நிறுத்துகிறானோ, அன்று வரை இந்த மரண தண்டனை தொடர வேண்டும். ஒரு நாடு நாகரிக பாதையை நோக்கி செல்கிறதென்றால், அங்கு கொலைக்குற்றம் குறைய வேண்டும். மாறாக மரணதண்டனையை நீக்கிவிடுவதால் அது நாகரிக பாதையை நோக்கி செல்கிறது என்று கூறிவிட முடியாது.
11-ஏப்-2013 19:04:54 IST
இவரைப் போன்ற மோசடிப் பேர்வழிகளை, டீ என்ன தண்ணீர் கூட கிடைக்காத சகாரா பாலைவனத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். மக்கள் வாழ்க்கையை பாலைவனமாக்கியவர்களுக்கு இதுதான் சிறந்த தண்டனையாக இருக்கும்.
11-ஏப்-2013 10:38:11 IST
ஒரு சாமான்யன் இப்படி கூறியிருந்தால் அது தவறில்லை ஆனால் சட்டமேதை, அதுவும் நாட்டின் பத்திரிகை கவுன்சில் தலைவராக இருக்கும் ஒருவர் இப்படி கூறுவது வியப்பாக இருக்கிறது. இவரைப்போல் பெரும்பாலானோர் இப்படி ஓட்டளிக்க மறுக்கும் பட்சத்தில், வெகு சில வாக்குகளைப்பெற்று தகுதியற்றவர்கள் பதவிக்குவர வாய்ப்பு அதிகமாகி விடும் என்பதை இவர் உணரவில்லையா? இன்றைக்கு பதவியில் இருக்கும் அனைவரையும் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தது இந்த ஊடகங்கள் தான். இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. மேலும் எந்த ஊடகமாவது ஒரு வேட்பாளர் தவறான நபர் என்று தெரிந்த பின்னர் அவரைப்பற்றிய தேர்தல் செய்தியை புறக்கணித்ததுண்டா? மக்கள் இன்றும் ஊடகத்தைதான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மாற்றத்தை ஊடகம் மட்டுமே கொண்டுவர முடியும். அரசியல்வாதிகளை மட்டும் குறைகூறி பயனில்லை.
03-ஏப்-2013 19:30:35 IST
ஆயுதப்படை சிறப்பு அதிகாரசட்டம் அவசியம் என்று ராணுவ தளபதி கூறுவது மிகவும் சரியானது. அரசியல்வாதிகள், பல நேரங்களில் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு பயந்து தங்கள் கோரிக்கைகளை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் இவர்கள் இத்தகைய கோரிக்கைகளை மக்கள் நலனுக்காக வைப்பதாக கூறுவார்கள். ஆனால் ராணுவம் மட்டும் இவர்களை எப்போதும் தீவிரவாதிகளிடமிருந்து காக்கவேண்டும். இதைத்தான் பூனைக்கும் தோழனாக இருந்து கொண்டு பாலுக்கும் காவல் இருக்கச்சொல்வது.
16-மார்-2013 10:35:31 IST