Advertisement
Rajkumar : கருத்துக்கள் ( 141 )
Rajkumar
Advertisement
Advertisement
ஜனவரி
24
2016
வாரமலர் தற்கொலை!
நல்ல பதிவு தான்.. இருந்தாலும் தற்கொலை செய்யப்போரவங்க மையத்தை எதுக்கு கூப்பிடுவாங்க - சொந்த பந்தத்தை கூப்பிட்டுவிட்டு உடனே முடிவு எடுப்பாங்க.. அது இருக்கட்டும். படிக்கும்போது நல்லாத்தான் இருக்கு.. ஆனா மன அழுத்தமின்னு ஒன்னு வரும் பாருங்க. (அந்த நிலமையில ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இருந்திருக்கேன் - கார் வண்டி ஹெட் லைட்டை டிம் பண்ண சொன்னதுக்கு என்னை ஒருவன் அடிச்சிட்டான்) அப்போ யாரையும் கூப்பிட தோணாது. விடுவிடுவென்று வீட்டுக்கு போனேன். பொண்டாட்டியிடம் எனக்கு மனசு சரியில்லை.. தயவு செஞ்சு எதுவும் பேசாதேன்னு சொல்லிட்டு, குழந்தையை தூக்கிக்கொண்டு மார்கெட்டுக்கு போய்விட்டேன். (தனிமையை தவிர்க்கணும் - இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் இருக்கணும் - இதுமட்டுமே முக்கியம்)   13:27:10 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
23
2016
பொது தங்கம் முதலீடு திட்டத்தில் மாற்றம்
நகையை வச்சா 2.25 வட்டி கொடுப்பீங்க. அதே நகை திரும்ப கிடைக்கபோறதில்ல.. அதே.. பணத்தை பிக்சட் டெபாசிட்டில் போட்டா 7.5 to 8 சதவீதம் வட்டி.. வொய் நோ சேம் பிளட் ??   13:19:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
23
2016
பொது நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறதா தமிழக அரசு?
பேசாம நடந்தால் வரி நின்னால் வரி பேசினால் வரின்னு தூங்கினால் வரி போட்டா - (அம்மா வாழ்கன்னு சொன்னா வரி சலுகை பெறலாம்) நெறைய வசூல் பண்ணலாமில்ல   13:10:42 IST
Rate this:
0 members
0 members
80 members
Share this Comment

ஜனவரி
24
2016
பொது சீனாவைப் பார்த்து நாம் பயப்படுவானேன்!
அதே நேரத்தில் சீனாவிற்குண்டான தேவைகள் பங்களாதேஷ், இந்தியா வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சர்வசாதாரணமாக செல்கிறது. இருந்தாலும் சீனாவை அடித்து கொள்ள முடியாது.. ஏன் தெரியுமா.. குவாங்க்சு என்று ஒரு மாநிலம் (நகரம்) அங்கே உலகில் என்ன பொருள் தயாரிக்கனுமினாலும் குறைந்தது பத்து தொழிற்ச்சாலைகள் ஆவது இருக்கும்.. இந்தியாவில் அந்த வசதி இருக்கா ? துணி வகையறாவுக்கு திருப்பூரும் தோல் தொழிற்சாலைகளுக்கு கோவையும் மட்டும் இருந்தால் போதுமா..? சொல்லிக் கொள்ளும்படி எக்சிபிஷன் இந்தியாவில் ஏதாவது உண்டா.. (கூகிளில் ஒருவருடத்திற்கான ஹாங்காங் சீனா எக்சிபிஷன்களின் லிஸ்டை பார்க்கவும்) மேலும் விசா நடைமுறை சிக்கல்களும் அதிகம். நான் சீனாவுக்கு சப்போர்ட் செய்யவில்லை.. ஆனால் இந்தியாவின் நிலை இது தான்.   13:03:17 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
24
2016
பொது சீனாவைப் பார்த்து நாம் பயப்படுவானேன்!
1) ஆமாம் 2) ஆமாம் 3) இதுவும் ஆமாம். இப்போதெல்லாம் முன்புபோல் ஆட்கள் வேலை செய்ய தயாராய் இல்லை. ரெண்டு மாசம் வேல பாக்குறாங்க ஒரு ஐபோன் வாங்குறாங்க - வேலையை விட்டு நின்னு வேற மெனக்கெடல் குறைவான வேலை தேடுறாங்க. இப்படி இருப்பதால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு அல்லது இரண்டு ஒன்றாகி வேலை பார்க்கும் சூழல் நிலவுகிறது. அது மட்டுமல்லாமல் சீன தொழிற்சாலைகள் மாதாந்திர சம்பளம் கொடுக்க பெரிதும் விரும்புவது இல்லை - ஏனெனில் ஆர்டர் குறைந்தால் சம்பளம் எப்படி கொடுப்பது. மேலும் ஐரோப்பாவின் தேவைகளும் குறைந்து வருகிறது. மக்கள் பணத்தை செலவிடுவதை குறைக்க ஆரம்பித்து விட்டனர். இது மட்டுமல்ல சில பேக்டரிகள் ஒரு வருஷம் அல்லது ஆறுமாசம் வேலை பார்க்கும் (திருவிழா கடைகள் மாதிரி) அப்புறம் மூடப்படும். பேக்டரிகள் பார்க்கத்தான் பெரிச்ச்ச்ச்சாஆ இருக்கும்.. ஆனால் வேலை செய்யும் ஆட்கள் குறைவு. இது நான் கடந்த பத்து வருடங்களில் கண்டு உணர்ந்த உண்மை   12:57:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
16
2016
உலகம் அமெரிக்காவுக்கு ஓடுபவர்களில் இந்திய இன்ஜினியர்களே அதிகம் லட்சக்கணக்கில் செலவு செய்யும் அரசுகளுக்கு பயனில்லை
மிகச்சரியான கருத்து - சொந்த ஊரை விட்டுட்டு வேலைக்கு சென்னைக்கு போவதை விட - வெளி நாடு போறது எவ்வளவோ பெட்டர். இது என்னோட லாஜிக்.   13:47:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
16
2016
பொது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதால் மக்கள் கொதிப்பு லிட்டர் ரூ.16க்கு விற்க வேண்டியதை தடுப்பதா என, கட்சிகள் ஆவேசம்
விற்பனை விலையை குறைத்தால் உடனே இட்லி சாம்பார், போக்குவரத்து செலவு (ஆட்டோக்கள்) விலைவாசி குறைந்துவிடுமா அப்படியே குறைந்தாலும் ஒரு ரெண்டு ரூவா ? வரிகளை உயர்த்தி அரசாங்கம் வருவாய் ஈட்டினால் தானே நிவாரண நிதி, நிதி பற்றாக்குறை, செலவீனங்கள், எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் - அதானே லாஜிக்.. விற்பனை விலையை உயர்த்தாத வரைக்கும் நல்லது தான். பெட்ரோல் விலை குறஞ்சிடுச்சே ஒரு ஆட்டோக்காரராவது கட்டணத்தை குறைக்கிறாரா - தங்கம் விலைவாசியை காரணம் காட்டுவதில்லை.. ?? ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு அப்படிங்கிறப்ப இனிமே விலைவாசி குறையும் என்பது வெறும் பம்மாத்து - (நான் எந்தக்கட்சிக்கும் ஆதரவாளன் அல்ல)   13:44:04 IST
Rate this:
26 members
0 members
22 members
Share this Comment

ஜனவரி
10
2016
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பெற்றோர்களில் பலருக்கு இந்த பிரச்சினை இருக்கிறது, (முன்னொரு காலத்தில் டைவர்ஸ் ஆனால்) இப்போது காதல் திருமணம் - ஊர் என்ன சொல்லுமோ, ஜாதி ஆட்கள் என்ன சொல்வார்களோ, சுடுகாட்டில் இடம் கிடைக்காதோ அப்படியெல்லாம் பல்வேறு பயங்கள். உண்மையை சொன்னால் நான் (என்னை) காதலித்த ஒரு இஸ்லாமிய மருத்துவர் பற்றி எனது வீட்டில் சொன்ன போது என் அம்மா பயந்து விட்டார்,(அவர் வீட்டில் எப்படி என்று தெரியவில்லை) மூன்று மாதங்களுக்கு அட்வைஸ் மழை பொழிந்தது. தம்பி பேசுவதையே நிறுத்தி விட்டான். வீட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும், ஜாதி சங்கத்தை விட்டு நீக்கிவிடுவார்கள், யாரும் உன் குழந்தைகளுக்கு வரன் கொடுக்கமாட்டார்கள் என்று எக்கச்சக்கம். இதில் என் சித்தப்பா எதுக்கு வீண் வேலை என்று முக்கினார். இதெல்லாம் 2005 ல் நடந்தது. காத்திருந்தவர் (இரண்டாம் தாரமாக) திருமணமாகி ஒரே வருடத்தில் டாக்டர் கணவர் சைக்கோ என்பதை அறிந்து டைவர்ஸ் பெற்றுவிட்டார். இப்போ கதை என்ன தெரியுமா, ஜாதியிலேயே திருமணம் செய்து கொண்டேன் (சந்தோஷமாக தான் இருக்கிறேன்). மிரட்டிய சித்தப்பா தன் மகனுக்கு அவர் காதலித்த வேறு ஜாதி பெண்ணை தான் திருமணம் செய்து கொடுக்க போகிறார். பேசாமல் இருந்த தம்பி தன் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியாமல் இருக்கிறார். ஏற்கனவே வேறு ஜாதி திருமணம் செய்தவர்கள் கொடையாளி போல் காட்டிக்கொண்டு ஜாதி சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இதையெல்லாம் விட இன்னமும் பிரான்ஸ் (பெண் அல்லது மகன்) வரன் என்றால் ஜாதி மதம் (ஏனோ அங்கிருப்பவர் பலர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிடுகின்றனர்) பார்க்காமல் சிகப்பு கம்பள வரவேற்ப்பு கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் அம்மாவே நினைத்தார் ஊருக்கு தாம்பா உபதேசம் சொல்றானுக.   20:34:34 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
10
2016
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு மருத்துவ நண்பர் (ஜைன மதம் இல்லை ஆனால் குரு வழிபாட்டினை மேற்கொள்கிறார்) வெங்காயம் சாப்பிடுவது இல்லை. ஒரு ஓட்டலில் சப்பாத்திக்கு டீயை தொட்டு கொண்டு சாப்பிட்டிருக்கிறார். நாங்கல்லாம் சப்பாத்திக்கு ரசத்தையே தொட்டுகிட்டு சாப்பிட்டவங்க   20:14:55 IST
Rate this:
2 members
1 members
7 members
Share this Comment

டிசம்பர்
27
2015
வாரமலர் சாண்டோ சின்னப்பா தேவர் (21)
நன்றாக இருக்கிறது.. தொடரை ஆரம்பத்திலிருந்து எப்படி படிப்பது ?   12:52:27 IST
Rate this:
28 members
0 members
6 members
Share this Comment