kuthubdeen : கருத்துக்கள் ( 614 )
kuthubdeen
Advertisement
Advertisement
மார்ச்
19
2018
அரசியல் லிங்காயத் - தனி மதம் கர்நாடக அரசு பரிந்துரை
ஏற்கனவே மத ரீதியில் அடித்து கொள்ளும் நமக்கு இன்னொறு புதிய அணு குண்டு. ஒரே கோட்பாடு வழிபாடுள்ள மதத்தில் இது என்ன புது குழப்பம். சிவனை ஹிந்து மக்கள் அனைவரும்தானே வழி படுகிறார்கள். இது ஒரு உட் பிரிவா.. எது எப்படியோ வரும் காலத்தில் இதனால் மோசமான மோதல்களே ஏற்படும். எங்கள் மதத்திலும் சிறிதாக வளர்ந்த பிரிவு இன்று இஸ்லாத்திற்கே ஆபத்தாக அமைந்துள்ளதை நண்பர்கள் பார்க்க வில்லையா? அதற்கும் இதற்கும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்க வில்லை.அரசியல்வாதிகள் கையில் விசயம் போய்விட்டது. இதை முடிந்தவறை தங்களுக்கு சாதகமாக்க முயற்சிப்பார்கள். இது கர்நாடகாவோடு நிற்காமல் ஒட்டு மொத்த இந்தியாவிலும் வரும் காலங்களில் பரவும் அபாயம் உண்டு என்று எச்சரிக்கிறேன். இது உங்கள் மதம் சார்ந்த விசயம் என்பதும் அறிவேன். இதே போல் இன்றைய ஈரானில் சிறிய அளவில் தோன்றிய ஒரு பிரிவே சியா பிரிவு. இரு பிரிவினரும் அல்லாஹ்வைதான் வணங்கினாலும் எந்த அளவு விரோதியாக மாறியுள்ளார்கள் என்பதை கண்முன்னால் பார்க்கிறோம்.அதேதான் நடக்க போகுது இங்கும் கைபுள்ள சொன்னதில் அர்த்தம் இருக்கு. பொண்டாடட்டீ புள்ளைகளை காப்பாற்ற மறைந்து மறைந்து ஓட வேண்டி வரும். உண்மையாக சொன்னால் இது முஸ்லிங்களுக்கு சந்தோஸமான செய்தியே காரணம் நம்மை இப்படி பாடுத்துகிறார்களே வேணும் இவர்களுக்கு என்று நினைப்பதில் தவறில்லைதான். நானும் விலக்கல்ல. என் மனதில் தோன்றியதை பதிவிட்டேன்.   06:48:41 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
19
2018
பொது அமைதி, நல்லிணக்கமே தத்துவங்களின் அடிப்படை
மோடி அவர்களின் சி செய்கைகள் புரிந்து கொள்ள கடினமாகவே இருக்கு.உண்மையில் மனதில் உள்ளதை இறைவனே அறிவான்.முஸ்லிம் பண்டிகைகளுக்கு இவர் வாழ்துக்கள் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.இன்று அவர் சால்வை கொடுத்து அனுப்பிபுகழ்ந்தும் உள்ளார்.உண்மையாகவே பிஜெபியின் மனம் மாற்றத்தை நோக்கி செல்கிறதா..அனைத்து மக்களிடமும் பாகுபாடு காட்டாமல் நாட்டின் நலனை மட்டும் முன்னெடுத்தால் பிஜெபி ஒன்றும் எதிரி அல்ல.ம தவிசயத்தை ஆண்மீக வாதிகளிடம் விட்டுவிட வேண்டும்.தனிப்பட்ட ஒரு மதத்திற்கு மட்டுமே பிஜேபி என்ற எண்ணத்தை மாற்ற மோடி பாடுபட்டால் இஸ்லாமியர்கள் அதரிக்கும் நாள் வெகு தூரமில்லை.உண்மையாகவெ பிஜெபி என்றால் அது முஸ்லிம் விரோத கட்சி என்ற மணப்பபான்மையே ஒவ்வொரு முஸ்லிம் மனதிலும் பதிந்துள்ளது.அரசின் சில செயல்களும் அதை நியாயப் படுத்தியதும் உண்மை.மோடியின் மாற்றத்தை வரவேற்கிறேன்.பிரதமர் பதவி கூட மனமாற்றத்திற்கு காரணமா இருக்கலாம்.என்னைப் போன்ற பெரும்பாலான முஸ்லிம்கள் அமைதியையும் அன்பையும் ஒற்றுமையையயுமே விரும்புகிறோம்.மோடியின் மாற்றம் அவர் கட்சியை சார்ந்தவர்களுக்கும் வரணும்.   06:21:53 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment

மார்ச்
18
2018
பொது நடராஜன் கவலைக்கிடம் பரோலில் வரும் சசிகலா
எதும் சதி இல்லையே...   08:07:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2018
சம்பவம் தீவிர சிகிச்சையில் நடராஜன்...
மணிதர்களின் ஆட்டத்திற்கும் மமுடிவு உண்டு..வாழும் காலத்தில் இளமை முறுக்கில் செய்யும் தீய செயல்களால் வெறுப்பைதான் சம்பாதிக்க முடியும்.உடல் நலம் தேரட்டும்..அவரும் மனிதரே...   07:53:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
17
2018
அரசியல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய பா.ஜ., மோடி மீது ராகுல், சோனியா கடும் தாக்கு
நண்பா வங்கியில் கணக்கு இருந்தால் மட்டும் போதாது...போடுவதற்கு பணமும் வேணும். நாமெல்லாம் ஓரளவு புண்ணியம் செய்தவர்கள்.வறுமை ஏழ்மை அறியாமல் இறைவன் கருணை காட்டியுள்ளான். சந்தோச படுங்கள். நான் அரசியலுக்குள் நுழைய வில்லை.சாதார்ன மக்களின் நிலை நம்நாட்டில் கேள்வி குறி. நாம் மமற்ற முன்னேறிய நாடுகள் போல ஆவோமா அதற்கான சூழ்நிலை இருக்கா.. அனைவரும் தன்னிறைவு பெறமுடியுமா...இந்த கேள்வி என் மனதில் உதித்தபடியே இருக்கு.அரசால் எதுவுமே செய்ய முடியாது எண்பதும் தெரியும். ஒருசில மிக சிரிய விசயமே அரசால் செய்யவும் முடியும். இதில் நல்ல ஒருவிசயம் ஏழையாக இருந்தாலும் ஒரு வேளை சாப்பாடு கிடைத்து விடுது.. அது மட்டும் இல்லை என்றால் நினைத்தே பார்க்க முடியாத விபரீதம் ஏற்பட்டு விடும்.பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகி கொண்டு இருக்கான் நாட்டில். என் அனுபவத்தில் என் பகுதியை வைத்துதான் சொல்ல முடியும். வாழ்கை தரத்தில் 40ஆண்டுகளாக அதே நிலையில் நான் சிறு வயதில் அதே காட்சிகள். சிறிய மாற்றம்..வீடுகளில் இப்ப மின்சார விளக்குககள் சிலவும் அரசு புண்ணியத்தில் டி வியும் சில நவின பொருட்கள் மட்டுமே. சிலர் பைக் வைத்து கொண்டு சீன் போடறதும் உண்டு..வீடுகள் அதே குடிசைகளும் ஓட்டு வீடுமே..சிலர் பொருளாதார ஏற்றம் கண்டுள்ளனர். என்னுடைய வாழ்வும் சில காலமே... இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் நாட்டில் பெரிய மாற்றத்தை ஏழைகளின் வாழ்வில் மலர்ச்சியை பார்க்க முடியல..இது யாருடைய தவறென்றும் புரியல.நம் நாடு பணக்கார நாடாக வளமுடன் இருக்க ஆசை.. வரும் சந்ததியாவது நலமா இருக்ககனும் என்பதே என் பிரார்த்தனை..   07:48:09 IST
Rate this:
9 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
18
2018
சம்பவம் சுங்கச்சாவடி ஊழியரை அடித்து உதைத்த பா.ஜ. எம்.எல்.ஏ.
அப்படி நினைக்க வேனாம்.. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஒன்னுதான். நம் அபிமானம் வேறு. இவரைப் போன்றவர்களுக்குதானே கட்சிகள் சீட்டு கொடுக்கின்றன. இவரின் செயல்கள் கட்சிக்கு தெரியாமலா இருக்கும்.   07:13:52 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
15
2018
அரசியல் இடைத்தேர்தல் தோல்வி பா.ஜ. எம்..பி.க்கள் பலம் 272 ஆக குறைந்தது
முதலில் மாடுகளுக்கு காட்டும் அக்கறையை மணிதர்களிடமும் காட்டனும். .நாங்க மட்டும்தான் ஹிந்துக்களின் பாதுகாவலர்கள் என்ற போலி ஏமாற்று வேலையை நிறுத்தனும். பெரும்பாலான ஹிந்து மத சகோதர சகோதரிகளே வாக்குகள் மூலம் ஆட்சியை தீர்மானிப்பவர்கள். தலித்கள் சிறுபான்மையானர் இதர பிற்படுத்த பட்டவர்களே நம் நாட்டில் அதிகம். அவர்களை புறக்கனித்து விட்டு முன்னேனேறிய வகுப்பினரை மட்டும் நம்பிக் கொண்டு இருந்தால் எந்த காலத்திலும் வெற்றி பெறவே முடியாது. குஜராத் குஜராத் என்ற பொய் பிரச்சாரம் சென்ற முறை எடுபட்டது. குஜராத் மக்களே இன்று மாறிவிட்டார்கள். குஜராத் ம.பி..உ.பி..ராஜஸ்தான் பீஹார் போண்ற பிஜெபி கோட்டைகளே இப்ப கலகலத்து கிடக்கு.. அவர்களின் பலமே இங்குள்ள 250 தொகுதிகள் தான். இங்கே வீழ்ந்து விட்டால் காங்கிரஸை விட கேவலமான நிலமை வந்து விடும். காங்கிரஸ் உ.பியில் மரண படுக்கையில் இருப்பதால் அதை அங்கே பொருட் படுத்த வில்லை. மாநில கட்சிகளின் ஆதிக்கம் அங்கே. மற்றபடி மாநில கட்சிகள் ஆட்சி செலுத்தாத பிற மாநிலங்களில் காங்கிரஸ் ஓரளவு வவலுவாகவே இருக்கு. அதெல்லாம் சரி...பிஜெபியின் 4ருட ஆட்சியில் அப்படி என்ன மக்களிடம் பெரிய பொருளாதார மாற்றத்தை வளர்ச்சியை பார்த்து விட்டோம். ஆறுமாதங்கள் பேங்கில் நின்னு கஷ்ட பட்டோமே... அதனால் இப்ப வரை என்னதான் நாட்டுக்கு பெரிய லாபம் கிடைத்து விட்டது. அம்பானி அதானி மற்ற பணக்காரர்களின் சொத்துக்கள் மட்டும் இரட்டிப்பு ஆகி உள்ளதாம். நான் சொல்லவில்லை. புள்ளி விபரங்கள் காட்டுது.. ஊழல்கள் ஆட்சி மாற்றத்துக்கு பிறகே வெளிப்படும்.இப்பொலுது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிக்கொகொண்டுதான் இருக்கு. மீடியாக்களும் இப்ப மாற தொடங்கி விட்டன... கூட்டி கழித்து பார்த்தால் வரும் தேர்தல் பிஜெபிக்கு அதிர்ச்சியாக மட்டுமே இருக்கும்.   07:45:10 IST
Rate this:
15 members
0 members
40 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் சமாஜ்வாதி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் யோகி
ஐம்பது சதவீத மக்கள் எவனையுமே நம்பல... யாரையும் மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடல ...பக்தாஸ் அனைவரும் நோட் த பாயின்ட்.   18:44:54 IST
Rate this:
6 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் சமாஜ்வாதி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் யோகி
உள்ளூர் பிரட்சினை இரண்டு தொகுதியிலும் என்றால் இப்ப ஆட்சி செய்வது நீங்களா வேறு யாருமா? பிரட்சினையை நீங்க சரி செய்யாம என்ன வேலை நீங்க பார்ப்பது.. பிரட்சினையை சரி செய்ய முடியாத முதல்வர் பதவியில் இருந்து அல்லவா விலகனும். செய்வீங்களா?   18:40:12 IST
Rate this:
8 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் சமாஜ்வாதி கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் யோகி
அதெல்லாம் கிடையாது... ஓட்டுக்கள் பிரிந்து சிதறி கிடப்பது பிஜேபியின் வெற்றியை சுலபமாக்கி உள்ளதே உண்மை. அங்கே 3கட்சிகள்தான் களதில் உள்ளவை. தலித் ஓட்டுக்கள் முழுவதும் மாயாவதிக்கு தான். சமாஜ்வாதி முழுக்க யாதவர்கள். முஸ்லிம்கள் இருவருக்கும் சமமாக வாக்களிப்பதால் அவர்களின் வாக்குககள் இரண்டாக பிரிகிறது. இடையில் காங்கிரஸ் வேறு. முன்னேறிய சமுகத்தின் ஒட்டு மொத்த ஓட்டும் பி ஜேபி யிடம். அந்த ஓட்டுக்கள் சிதற வாய்ப்பு இல்லை. அதனால் சென்ற தடவை 4முனை போட்டியில் அனைத்து இடங்களையும் அள்ள முடிந்ததது. இப்ப அகிலேசும் மாயாவதியும் உண்மையை புரிந்து கொண்டு விட்டார்கள். அதன் வெளிப்பாடே வெற்றி   18:29:05 IST
Rate this:
4 members
1 members
17 members
Share this Comment