எப்பாடு பட்டாவது இவர் சிறை செல்வதை உறுதியாகக வேண்டும்..பிரபலமாக இருந்தால் செய்வது எல்லாம் சரியா? நீதி மன்றத்திற்கு நன்றி....இவருக்கு விடுதலை அளித்தால் அது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகி விடும்..
10-மே-2013 18:58:07 IST
மீண்டும் ஒரு முறை இரண்டு வருடம் +2 பாடத்தை மட்டும் படித்து வெற்றி கனியை பறித்துள்ளனர்....மாணவர்கள் திறமையானவர்கள் தான், ஆனால் இந்த கல்வி முறை சரி இல்லை...இங்கு முதல் இடம் பெற்ற எத்தனை பேரால் மத்திய , மாநில அரசுகள் நடத்தும் நுழைவு தேர்வில் வெற்றி பெற முடியும்? +1 பாடத்தையும் படித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்....
09-மே-2013 12:44:24 IST
இதே சட்டம் தான், ஒரு தப்புக்கு ஒரு தண்டனை என்று சொல்கிறது....அப்படி இருக்கையில் தூக்கு தண்டனை கைதி எதற்கு ஆயுள் தண்டனையை சேர்த்து அனுபவிக்க வேண்டும்? இது சட்டப்படி சரியா?
12-ஏப்-2013 14:32:05 IST
நீங்கள் சொல்வது 90 % உண்மை...நீங்கள் காது கொடுத்து பொறுமையாக கேட்க கூடிய ஆள் என்றால் அதோ கதி தான்...தங்கள் பிரச்சினைகளை உங்களிடம் சொல்ல கூட்டம் அலை மோதும்...
27-மார்-2013 16:30:20 IST
உடையை வைத்து ஒருவரை தீர்மானிக்க முடியாது....எனது team mate sleeveless உடை தான் அணிவாள்..ஆனால் வெள்ளியன்று லக்ஷ்மி விரதம் இருப்பாள்...கணவன், குடும்பம், மீது அதிக பாசம் வைத்துள்ளாள்....அது போல சுடி மட்டும் அணியும் பெண்கள் கணவனை, கணவன் வீட்டாரை கண்ட படி பேசுவதையும் கண்டு இருக்கிறேன்....உடைக்கும் குணத்திற்கும் சம்பந்தம் இல்லை...ஆனால் ஒரு சில இடங்களில் நாகரீகமான உடை அணிந்து தான் இருக்க வேண்டும்...நாம் ஒன்றும் காடுகளில் திரியும் விலங்குகள் இல்லை...கோவிலுக்கு வருவதே ஒரு மன அமைதியை தேடி தான், இது போன்ற உடைகள் மன சஞ்சலங்களை தான் கொடுக்கும்..அங்கும் கூட எட்டுப்பட்டி ராசா நெப்போலியன் போல தொடை தெரிய உடை அணிவது மிகவும் தவறு...
03-மார்-2013 09:38:57 IST
உங்க முன்னாடி மட்டன் பிரியாணி வெச்சுட்டு சாப்பிட கூடாது அப்படின்னு சொன்ன என்ன செய்விங்க? ரெண்டு நாள் பார்பிங்க, மூணாவது நாள் மூக்கு பிடிக்க சாப்பிடுவிங்க..நல்லதோ கெட்டதோ, தொடர்ந்து கவனத்தை ஈர்க்கும் போதும் மனம் அதில் சாயும்...தலைய சுத்தி எதுக்கு மூக்க தொடணும்? எல்லா கடைகளையும் மூடிவிட்டு போக வேண்டியது தானே...
26-பிப்-2013 17:49:34 IST
காயத்ரி வெங்கட், கண்டிப்பாக இந்த வாதம் அவரது சுயநலத்தின் முன் எடுபடாது...Brindha என்ற வாசகி சொல்லியது போல் வலியில் சுகம் காணும் பேர்வழி..வார்த்தைக்கு வார்த்தை என்னவள் என்னவள் என்று சைகோ போல மனதிற்குள் பதிய வைத்து உள்ளார்..செல்வ ராகவன் படத்தில் வரும் கதா நாயகன் இவர்...ஒரு வித மன மயக்கத்தில் இருக்கும் நபர்..சுயநலம் மட்டுமே பார்க்கும் ஒரு சுயநலவாதி...இதனை குழப்பங்களுக்கும் இவர் தான் காரணம்...கல்யாணத்திற்கு முன்பே காதலியை கை பிடித்து இருக்கலாமே..அந்த பெண்ணிற்கு (இவர் மனைவிக்கு) ஒரு வேண்டுகோள், உங்கள் வாழ்க்கையை இவரை போன்ற கனவில் மிதக்கும் ஆளை நம்பி கெடுத்து கொள்ளாதீர்கள்..இவரிடம் தகுந்த ஜீவனாம்சம் வகையறாக்களை பெற்று இவரை மறந்து நீங்கள் நிம்மதியாக இருங்கள்....
08-பிப்-2013 15:50:04 IST
முடிவு செய்த ஒரு விசயத்திற்கு அறிவுரை கேட்க வேண்டிய அவசியம் என்ன? யார் யார் வேலை இல்லாமல் இருகிறார்கள் என்று பார்க்கவா? இல்லாத காதலிக்கு பூங்கொத்து கொடுத்து கற்பனையில் வாழ்ந்து விட்டு போக வேண்டியது தானே...சுயநலம் பிரதானம்...மனைவியாவது, குழந்தையாவது தன் இன்பமே முக்கியம், தனக்குள் உள்ள அந்த போதை தரும் எண்ணமே முக்கியம்...
08-பிப்-2013 10:55:32 IST