அடேயப்பா இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய மிகவும் உயர்ந்த பண்பாளர் இந்த ராஜு. கிடைத்த வரையில் மக்களின் பணத்தை சுருட்டி விட்டு பெரிய்ய சத்திய சந்தன் மாதிரி கபட வேஷமிடும் அரசியல் வாதிகளே இவருடைய கால் தூசுக்கு நீங்கள் சமமா? இந்திய நாட்டின் பிரதமராக வரும் தகுதி இதுபோன்றவருக்கே உண்டு நேர்மை என்ற இந்த பண்புக்கு முன்னால் பல்கலை கழக படிப்பு எம்மாத்திரம்? வாழ்க வளமுடன்
15-மே-2013 17:06:19 IST
கிரிமினல் சட்டங்களில் அபராதமும், சிறைவாசமும், மரணதண்டனைகளும் கடுமையானவைகளாக கருதப்படுகின்றன. ஆயினும் இவற்றால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. லஞ்சம் வாங்கியோ, கொள்ளை அடித்தோ கோடி கோடியாக சொத்து சேர்ப்பவர்கள் மாட்டிக்கொண்டால், பத்து வருடம் சிறையில் அடைத்தாலும் சிரித்துகொண்டே பெரிய்ய சுதந்திர போராட்ட வீரனை போல சிறைக்கு செல்கிறான். ஜெயிலில் இருந்து திரும்பி வந்தால் தன்னைகாக்க பெரும் செல்வம் இருக்கிறது என்ற தைரியம் அதற்கு காரணம். அதனால் பாதிக்கப்பட்டவனுக்கு என்ன பயன்? அதே சமயம் மாட்டிக்கொண்டவனின் சொத்துக்களை அரசு அபகரித்து இழந்தவனிடம் ஒப்படைத்தால் இழந்தவனுக்கும் நஷ்டமில்லை குற்றவாளிக்கு நாம் மீண்டு வரும் போது நடுத்தெருவில் நிற்போம் என்ற எண்ணம் வருவதால் இது கிரிமினல் சட்ட தண்டனைகளைவிடவும் மிகவும் கடுமையானதாக கருதப்படும். சமீபத்திய கலவரங்களில் சுமார் முன்னூறு அரசு பேருந்துகள் அடித்து நொறுக்க பட்ட வழக்கில் குற்றங்கள் நிரூபிக்க படும் பட்சத்தில், சம்பந்த பட்ட கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி அரசு நஷ்டத்தை சரிசெய்தால், இவர்கள் திவால்தான். தானாகவே அடங்கிவிடுவார்கள் மேலும் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுவோர் சார்ந்திருக்கும் கட்சிகளுக்கு நன்கொடைகளை அளிப்பவர்களின்மீதும் அரசு தக்க நடவடிக்கை எடுத்தால், இவர்களின் வருமானமும் காலி
05-மே-2013 06:51:09 IST
அங்கே தமிழ் நாட்டில் தர்மபுரியில் ஒரு கமிஷனர் இருக்காரு. அவரு இப்பிடித்தான் பெண்ண, ஆசிரியர்களை அடிச்சு நிமிதிட்டாறு. முட்டா...............
26-ஏப்-2013 12:31:06 IST
குஜராத் அமெரிக்கா ஆக வேண்டாம். அமெரிக்கா என்ன பெரிய்ய ஆதர்சமா? கடனில் மூழ்கி தவிக்கும் அமெரிக்காவை மேக் அப் போட்ட கான்சர் பேஷண்டோடு ஒப்பிடலாம். இந்தியாவிலேயே எடுத்துகொண்டால், பீகார், மத்ய பிரதேஷ், சத்தீஸ்கர், மற்றும் கோவா இவை எல்லாம் சிக்கலான பலவிதமான கலாச்சாரங்களும் பழக்க வழக்கங்களும் சட்ட சிக்கல்களும் நிறைந்த இந்த நாட்டிலேயே வளர்ச்சியை கண்டுள்ளன. நீங்கள் ஒசத்தியாக கூறும் அமெரிக்காவில் சுலபமாக தவறு செய்து விட்டு தப்பிக்க முடியுமா? நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது ஒட்டு மொத்த அமெரிக்காவே குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பதை தீவிரமாக ஆதரிக்கிறது. இங்கு அப்படியா? முதலில் இன்னொருவனை பார்ப்பதோடு நிறுத்துக்கொள்ளலாம். தேசத்தின் கொடியில் உள்ளாடை தைத்து அணியும் அவர்கள் நம்மிலிருந்து வேறு பட்டவர்கள். நாம் நம்முடைய பலங்களை பெருக்குவோம், பலவீனங்களை குறைப்போம். காப்பி அடிப்பதை நிறுத்துவோம்.
11-ஏப்-2013 14:39:53 IST
இந்த போராட்டம் என்ற வெளிப்புற போர்வைக்குள் எத்துனை லட்சம் கோடிகளோ, தலைவர்கள் தங்களின் உயிரை காத்துக்கொள்ள என்னென்ன பேரங்களோ எனவேதான் 2009 இல் காட்டாத அக்கறை இப்போது காட்ட படுகிறது
20-மார்-2013 15:55:41 IST