Advertisement
Natchammai Mahesh : கருத்துக்கள் ( 5 )
Natchammai Mahesh
Advertisement
Advertisement
நவம்பர்
23
2014
வாரமலர் ஜிலேபி!
75 சதவிகிதம் இந்த மாதிரி பாவப் பட்ட பெற்றோர்கள் இருக்காங்க, மீதி 25 சதவிகிதம் மகனும் மருமகளும் சந்தோஷமாக இருப்பது பொறுக்காமல் மகன் தன் கைப்பிடியில் இருக்க வேண்டும் என்று பண்ணுகிற அநியாயங்களையும் கதையாக எழுதினால் நன்றாக இருக்கும். எனக்கு தெரிந்து (என் வீடு உள்பட) மருமகள் பெற்றாள் என்ற ஒரே காரணத்தினால் மகன் வயிற்றுப் பிள்ளைகளை கரித்துக் கொட்டும் மாமியார், மாமனார் இருக்கிறார்கள்.   03:58:04 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
24
2014
அரசியல் ஒரே நபரிடம் அதிகாரங்கள் குவிவது தவறு பிரியங்கா
ஏம்மா ஒரு நபரிடம் குவியக் கூடாது, ஆனால் ஒரே குடும்பத்திடம் குவியலாமா? உன் குடும்பம்தானே வெள்ளைக்காரன்கிட்ட இருந்து இந்தியாவ வாங்கி அடிமைப்படுத்தி வச்சிருக்கு?   04:18:17 IST
Rate this:
3 members
0 members
118 members
Share this Comment

பிப்ரவரி
9
2014
வாரமலர் கற்(ர்ப்)பக விருட்சம்!
பாவம் புதுசா கதை எழுதுறாங்க இல்ல அதான். என்னால் அதை கூட பொறுத்துக்கொள்ளலாம் ஏன் என்றால் அது சொல் குற்றம். ஆனா கதையே எனக்கு பிடிக்கலை முதல்லையே இந்த மாதிரி பெண்தான் எனக்கு வேணும் இதுக்கு சம்மதம்னா பெண் பார்க்க வர்றேன்னு சொல்லணும். அது என்ன கடை கடையா ஏறி இறங்கி புடவை செலக்ட் பண்ற மாதிரி பொண்ணு செலக்ட் பண்றது. இவனுக்கு ஏற்கனவே அந்த பணக்கார பொண்ணு வேணாம்னு தோனிடிச்சு அப்புறம் எதுக்கு பெண் பார்க்க போகணும். முதல்ல டெர்ம்ஸ் எல்லாம் பேசி பிடிசிறுந்தா கடைசியில தானே பெண் பார்க்க போயிருக்கனும்.   06:52:57 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
2
2014
வாரமலர் வாரிசு!
நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? என் கல்யாணக் கடன் அடையவே எங்க அப்பா, அம்மாவுக்கு அஞ்சு வருஷம் ஆச்சு. அவங்க நான் எதுவும் கேட்டுக்கிட்டு போயி நிக்காம இருந்தாலே ரொம்ப சந்தோஷப் படுவாங்க. அவங்களா இதுவரைக்கும் என்கிட்டே எதுவும் கேட்டதில்லை, நானா எதுவும் கொண்டு போயி கொடுத்தாலும் வாங்க மாட்டேங்கிறாங்க அதுல எனக்கு வருத்தம் உண்டு. நாமா விருப்பப்பட்டு வாங்கி தர்றது வேற, புடுங்கி எடுத்து வாங்கிக்கிறது வேற. நீங்க ஒரு பெண் பிள்ளைக்கு தகப்பன் இல்லை, அல்லது உங்க பெண்ணுக்கு கல்யாணம் நடக்கலை. அதனால இப்படி பேசுறீங்க. நான் சொல்ல வந்தது பெற்றோர்கள் இரண்டு விதமாவும் இருக்காங்க, பெற்ற பிள்ளைக்காக எல்லாம் செய்து கடைசியில் பிள்ளைகளிடம் ஒரு அன்பான வார்த்தை வராதா என்று ஏங்குபவர்கள். மற்றொன்று, பெற்ற பிள்ளையிடம் எவ்வளவு புடுங்க முடியுமோ அவ்வளவு புடுங்கிக் கொண்டு தம்பதிக்குள்ளும் குழப்பம் விளைவிப்பவர்கள். அய்யா மருமகள் ஸ்டவ் வெடித்து சாவதும், வரதட்சணை சாவுகளும் நடப்பது பக்கத்து வீட்டுக் காரர்களால் இல்லை இந்த மாதிரி மாமியார் மாமனார்களால் தான், அவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்ன? பெரியவர்கள் பெரியவர்களாக நடந்தால் பிரச்சனையே இல்லை.   06:24:18 IST
Rate this:
2 members
1 members
13 members
Share this Comment

பிப்ரவரி
2
2014
வாரமலர் வாரிசு!
பெற்ற பிள்ளையிடம் பணத்தை தவிர வேறு எதுவும் எதிர்பார்க்காத பெற்றோரும் உண்டு, அதை உதாரணமாக வைத்து ஒரு கதையும் வருவதில்லையே? எங்கள் வீட்டு கதையே ஒரு நல்ல உதாரணம். நாங்கள் அமெரிக்காவில் வசிக்கிறோம். வீடு வாங்கினால் லோன் அடைய நம் ஆயுளே முடிந்துவிடும் (அமெரிக்காவில் வீடு வாங்கிய எல்லோருக்கும் இது தெரியும்) என் மாமன், மாமி இங்கு வந்து இருந்து கொண்டு எங்களுக்கு கொடுக்கும் குடைச்சல் சொல்லி மாளாது. இந்த கதையில் நடப்பது அப்படியே உல்டாவாக நடக்கும். எதுவும் கேட்டு கிடைக்கவில்லை என்றால் பெற்றோருக்கு மரியாதை தர தெரிவதில்லை, இந்த காலத்து பிள்ளைகள் மோசம் என்று வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு தேவையானது எதையும் செய்ய நாங்கள் யோசித்தும் இல்லை மரியாதை தரத் தயங்கியதும் இல்லை. அவர்கள் கேட்பது எல்லாம் (முக்கால்வாசி அனாவசியமான செலவுகள் தாம்) பணத்துக்கு வெட்டு வைக்கும் விஷயங்கள். நாங்களோ பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கம். சொன்னால் புரிந்து கொள்வதும் இல்லை. இதை பற்றி யாராவது எழுதினால் நலம்.   07:00:28 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment