Advertisement
sing venky : கருத்துக்கள் ( 58 )
sing venky
Advertisement
Advertisement
ஜூலை
31
2015
பொது மக்கள் ஜனாதிபதியையே மதிக்க தவறியவர்கள்
உழலில் ஊரித்திளைத்த கட்டுமரமும், சோனியாவும், அய்யா கலாமை பற்றி பேச கூட அருகதை அற்றவர்கள். அவருக்கு கிடைத்த அரசு மரியாதையும், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மரியாதையும் அன்பும் தங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற பொறாமையும் தான் காரணம். அரைகுறை தமிழால் பிதற்றி தனக்கு தானே புகழ் பாடி மக்களை மூடர்களாக்கி ஆட்சி அரியணையில் அமர்ந்து தன் குடும்ப உறுப்பினர்களோடு கூட்டுக்கொள்ளை அடிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க மக்கள் முன்பு போல் முட்டாள்களாக, மடையர்களாக இல்லையே என்ற வஞ்சக நஞ்சு இதுபோன்ற ஊழல் நரி கூட்டத்திற்கு இருக்கும். இதுபோன்ற கட்டுமரங்களுக்கு (இதுகளை கோடாரி காம்போடு ஒப்பிடுவதுதான் சரி) இனியும் ஏமாற தமிழன் நிரந்தர இழிச்சவாயன் இல்லை. அறிவு பெற்ற வளமையை, ஒற்றுமையை அமைதியை, முன்னேற்றத்தை விரும்பும், படித்த, அறிவுள்ள இளையசமுதாயத்தை புரிந்துகொள்ளுங்கள் கேடுகெட்ட அரசியல் மூடர்களே கூத்தாடிகள் கூட்டம் (தங்களை சுற்றி சுய-புகழ் பாடி கூட்டத்துடன்) வந்து டாக்டர். கலாம் அவர்களின் இறுதி சடங்கிற்ற்கு நேரில் வந்து அவரை அவமரியாதை செய்யாமல் இருந்ததற்கு நன்றி   13:59:45 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஜூலை
29
2015
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
29
2015
பொது நாற்காலிக்கு ஆசைப்படாத கலாம்
கலாம் போன்ற சில அறிய மனிதர்களை சாமானியர்கள் தெரிந்து வைத்திருக்கும் சூத்திரங்களால் (Formula) அளந்துவிட/அடைத்துவிட முடியாது. இவர் ஏன் அங்கும்-இங்கும் நடந்த சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சாயத்து பேச வர வில்லை என்று கேட்கும் எவருக்கும் இவரை தூற்ற அருகதை இல்லை. எல்லைகள் தாண்டிய அன்பும், அடக்கமும் பணிவும் அதேவேளையில் நாட்டின் பாதுகாப்புக்காக ந்யுக்ளியர் டெஸ்ட், ப்ரம்ஹோஸ் போன்ற அறிவியல் ஆயுத சோதனைகளை முன்னுக்கு எடுத்துசெல்லும் அறிவும் துணிவும் அபூர்வமான கலவை. நாட்டில் நீங்களும் நானும் திறமையிருந்தும் அன்றாடம், எத்தனை எத்தனை (ஜாதி, மதம், நிறம், மொழி, தோற்றம்) பிரிவினைகளால் முன்னேற்ற தடைகளை பார்த்திருப்போம்? இவற்றுள் தோய்ந்து போனவர் எத்தனைபேர்? அந்த பிரிவினை நோயை தொற்றிக்கொண்டு பழிவாங்கும் வெறிபிடித்தவர் எத்தனைபேர்? அரசின் அனைத்து துறைகளிலும் காணப்படும் அவற்றை கடந்து நீந்திவர அயரா உழைப்பும், அன்பும், பொறுமையும் இல்லாவிடில் இத்தனை தடைகளை நீந்தி வந்திருக்க விட்டிருப்பார்களா. இது தான் சாதனை . இந்தியா ஒரு சமாதானத்தை விரும்பும் அதே சமயத்தில் வலிமையான, ஒற்றுமையான, பண்பாடு மற்றும் ஒழுக்கமான, அறிவாற்றல் கொண்ட நாடு என்பதை உலக அரங்கில் நிலைநிறுத்துவது எத்தனை பெரும்பாடு ? தனிமனித உயர்வால், அறிவால், அன்பால் நம் நாட்டில் உள்ள ஏழ்மை, ஊழல், பிரிவினை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை ஆகிய பிணிகளை நீக்கிட தற்போது இருக்கும் நம் சமுதாயத்தை நம்பவில்லை அவர்..... எதிர்காலத்தில் உதிக்கப்போகும் மாணவ பிஞ்சுகளின் இதயத்தில் விதைத்தால் அது நிச்சயம் நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும் என்ற உறுதி கொண்ட நெஞ்சினார்... அவரின் ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்தது. சொன்னதையே சொல்லிகொண்டிருக்கும் கிளி பிள்ளையல்ல அவர் பேச்சு. இவரைப்போன்றே நாட்டின் அறிவியல், முக்கியமாக அணு ஆராச்சியை நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே துவக்கிய டாக்டர். ஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனத்தில் விக்ஞானிகளுக்கிடையே அவர்பேசிய உரை முற்றிலும் மாறுபட்டது. அது வழக்கமான மாணவர்களுக்கான அறிவுரை அல்ல விஞ்ஞானிகளை உருவாக்கும் அறிவுயல் ஆராச்சி நிறுவனங்களில் உள்ள மூத்த விஞ்ஞானிகளுக்கானது. அப்போது அவர் மேற்கோள் காட்டியது நோபல் பரிசு பெற்ற தமிழக விஞ்ஞானி சர். சி. வி. ராமன். நாட்டின் உயரிய அறிவுயல் ஆராச்சி நிறுவனங்களில் அரசியல் சதுரங்கம் ஆடி நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையை இருக்கும் மூத்த விஞ்ஞானிகளுக்கான சவுக்கடி, மற்றும் இளைய தலைமுறை சுய சார்பான, சக மனிதனின் தேவைகளை நிறைவேற்றிடும் (ஹை-டெக் என்றாலே பணக்காரர்களுக்கு பயன்படும் சொகுசு கருவிகள் அல்லாமல்) இந்திய தயாரிப்புகளை உருவாக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தினார்... எனக்கென்ன என்று இந்த சமுதாயத்திலிருந்து ஒதுங்கிகொண்டிருக்க அவரால் ஏன் முடியவில்லை? அது தான் நாட்டின் மீது அவர் கொண்ட பற்று.... ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நம்பிக்கை ஒளி ஏற்ற, இந்தியர்களை ஒருங்கிணைக்க தன்னால் முடியும் என்று களமிறங்கி அந்த விதையை விதைத்திட்ட மகான் நிவீர் வாழ்வீர் எம்தன் இதயத்துள் நம்பிக்கையில் நாட்டின் முன்னேற்றத்தில்   19:35:53 IST
Rate this:
1 members
1 members
19 members
Share this Comment

ஜூலை
27
2015
பொது உடலநலக்குறைவால் அப்துல் கலாம் காலமானார்
நாட்டிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு கடைசி மூச்சு உள்ளவரை நாட்டிற்காக உண்மையாக உழைத்தவர். அண்ணாரின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுவோம்   21:50:53 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
29
2015
அரசியல் "சொந்தக் காசில் சூனியம் வைத்த விஜயகாந்த் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்படும் வாய்ப்பு
கோல்டன் வரி "அவர் இன்னமும் "செல்லுலாய்ட்' உலகில் இருக்கிறாரே தவிர, உண்மை உலகத்திற்கு வரவே இல்லை''. இவர் மட்டுமல்ல இன்னமும் நிறையவே சினிமா காரர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிதர்சன உலகம் தெரிவதில்லை. சினிமாவை மக்கள் பொழுது போக்காக தான் பார்க்கிறார்கள் என்பதை மறந்து அது தான் வாழ்க்கை நடைமுறை பாடமாக ஏற்றுக்கொண்டு மக்கள் வாழ்வதாக நினைக்கும் மூடர் கூட்டம் சினிமா பிரபலங்களுள் அதிகம்.   21:56:11 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
29
2015
உலகம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா அனுப்பிய ஆளில்லா விண்கலம் பூமியை நோக்கி விழுகிறது
ஐ.எஸ்.எஸ். ஒரு நாளைக்கு 15 முறை பூமியை வளம் வருகிறது. ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒரு ஸ்மார்ட் ஆப் மூலம் நம் தலைக்கு மேலே வானில் எப்போது கடந்து செல்லும் என்பதை துல்லியமாக பார்க்க முடியும். நான் போட்டோவே எடுத்திருக்கிறேன்.   21:47:02 IST
Rate this:
2 members
1 members
10 members
Share this Comment

ஏப்ரல்
1
2015
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
13
2015
உலகம் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு தீர்வு அவசியம் மனிதாபிமான அடிப்படையில் அணுக மோடி வலியுறுத்தல்
புலிகளை மறைமுகமாக தீவிர வாதிகளுடன் ஒப்பிட்ட மோடியின் குயுத்தி புத்தி கண்டனத்திற்குரியது. ராஜீவ் காந்தி காலத்திலிருந்தே பிரதமரின் ஆலோசக கூட்டத்தில் உள்ள குள்ள நரிகள் கூட்டம் இன்னமும் தொடர்ந்து பிரதமரை சுற்றி கூடாரமிட்டு வருகின்றன என்பது வெட்ட வெளிச்காமாகியிருக்கிறது. அந்த தமிழின விரோத இந்துத்துவ - உயர் சாதி 'டிப்லாமட்' கூட்டத்தை ஒழிக்கும் வரையில் இந்தியாவில், மத சார்பின்மை, சமத்துவம், அனைத்து குடிமகன்களையும் சமமாக நடத்தும் மனப்பாங்கு என எதுவும் இருக்க போவதில்லை. ஆக மொத்தம் மோடி ஒரு குல்லா போடாத மற்றுமொரு காங்கிரஸ் கை கூலி போல் செயல் படுகிறார் என்பதில் ஐயமில்லை. தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்படாமல் இருக்க இந்திய கடற்படை இந்திய மீனவர்களுக்கு காவல் காக்க வேண்டும். அதைவிடுத்து ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள், தமிழக மீனவர்கள் என்று ஏதோ அவர்கள் வேற்று நாட்டு குடிமகன்களை குறிப்பபோல் குறிப்பிடுவதும் அதுவும் வட இந்திய ஊடகங்கள் இதனை ஒரு செய்தியாக கூட வெளியிடாமல் இருப்பதும் இந்திய தமிழ் குடிமகன்களுக்கு இழைக்கப்படும் துரோகம். ஒவ்வொரு முறையும் கடிதம் எழுதுவதும், அப்புறம் நீங்களா பார்த்து எதாவது செய்யுங்கள் என்று இலங்கை அரசிடம் கெஞ்சி பிச்சை கேட்பதும் வெட்கமாக இல்லை ? சென்ற முறை சென்னையில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்பதை மறக்கவோ மறைக்கவோ கூடாது. இந்தியா அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்பதை உறுதி படுத்த வேண்டும், மோடி .   13:09:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
17
2015
அரசியல் ஜெ.,யை விட அதிக ஓட்டு பெற்றார் வளர்மதி ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க., அமோக வெற்றி
மக்களின் ஓட்டு மூலம் எழுதப்பட்ட தீர்ப்புக்கு தலை வணங்கியே ஆக வேண்டும்.... தினமலருக்கு நன்றி இந்த தேர்தல் முடிவுக்கு எதிர்கட்ச்சியினர் என்னென்ன சப்பை கட்டு கட்டுவார்கள் என்று நேற்றே கார்டூன் போட்டதற்கு   01:13:46 IST
Rate this:
95 members
0 members
68 members
Share this Comment

பிப்ரவரி
13
2015
சம்பவம் பாம்புகளை நேசித்தவர் ராஜநாகம் தீண்டி பலி
அது மனித நேயம் இல்லை... பாம்பு நேயம்.பாம்பை பிடித்தால் பாம்பால் தான் சாவான் என்பதற்கு இது உதாரணம். சிங்கம், புலி, சிறுத்தை, பாம்பு, தேள், இன்ன பிற விஷ ஜந்துக்கள், கிருமிகள் மனிதனை கொல்லக் கூடிய அனைத்து ஜீவராசிகளையும் ஒழிக்க வேண்டும். பூமி மனிதனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இங்கு மனிதனை அச்சுறுத்தும் எந்த விளங்கும் ஜீவராசியும் இருக்கவே கூடாது.   03:09:12 IST
Rate this:
259 members
4 members
29 members
Share this Comment