அடிப்படை சுகாதாரத்தைப் பின்பற்றாத கம்பெனிகளின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கின்றது. இத்தனை நாள் கொடுத்தோமே என்றால் - மக்கள் மடையர்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள்.. கேன் தண்ணீர் தான் குடிப்பேன் என்ற வறட்டுக் கெளரவம் - அதில் நிரப்பப்பட்ட தண்ணீர் சுத்தமானதா என்பதைக் கவனிக்கத் தவறி விட்டது. மக்கள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்தால் அதனால் விழிப்புணர்வினைப் பெற வேண்டுமே தவிர எல்லாரும் சேர்ந்து அடாவடியாக வேலை நிறுத்தம் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
18-மே-2013 08:38:17 IST
ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார் மானம்பாடி ஸ்ரீநாகநாதஸ்வாமி. சிவனடியார்களும் இறையன்பர்களும் ஒருங்கிணைந்து திருக்கோயில் பாதுகாக்கப்படுவதற்காக தொடர் கூட்டுப் பிரார்த்தனை செய்ய முன்வரவேண்டும். எது எதற்கோ ஒன்று கூடும் மக்கள் இதற்கு ஒன்றுபட மாட்டார்களா?....
18-மே-2013 08:27:06 IST
கண்கள் கலங்குகின்றன.. பெற்றோர்களிடம் காட்டிய அன்பும் மரியாதையும் தாய் மொழியிடம் தங்கள் கொண்டுள்ள பற்றும் தங்களை மேலும் புகழுடன் வாழவைக்கும்... வாழ்த்துக்கள்..
13-மே-2013 14:35:15 IST
உண்மையான அக்கறையா?... உங்களுக்கா?...நெஞ்சைத் தொட்டு சொல்ல முடியுமா?.. 1974ல், முதல்வராக பதவி வகித்த நீங்கள் தான், மத்திய அரசுடன் சேர்ந்து மங்களகரமாக இலங்கைக்கு தாரை வார்த்தது கொடுத்தீர்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழக்கு தொடுத்து அவர்களுக்கு நல்ல பெயர் கிடைத்து இருக்கின்றபோது நீங்களும் ஒரு வழக்கு தொடர்ந்து நாடகம் ஆடுகின்றீர். இது மீனவ சமுதாயத்தினர் மீது அக்கறை பிறந்ததால் அல்ல.. நானும் வழக்கு போட்டேன் என்று மேடைகளில் டமாரம் அடித்துக் கொள்வதற்காகத் தான்....
11-மே-2013 09:27:32 IST
பயணிகள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனரா...இது யாரோ கிளப்பி விடுகிற மாதிரி இருக்கு..வேற ஏதாவது உருப்படியா செய்வதற்கு வேண்டுகோள் வைக்கத் தெரியவில்லையா... இது இன்னும் எத்தனை நாட்களுக்கு தாங்கும்?.. நாலு மரத்தை வச்சி தண்ணி ஊற்றினால் கூட சுற்றுச்சூழலைப் பாதுகாத்த மாதிரி இருக்கும்...மின்சாரத்தை நம்பி பாடுபடும் மக்களுக்கு நிரந்தர தீர்வு இல்லை... தெரியாமலா சொன்னாங்க... குடிக்கிறது கூழு... கொப்பளிக்கிறது பன்னீரு...ன்னு..
08-மே-2013 08:29:46 IST
சிறுவனாக இருந்தும் பெரிய செயல் செய்துள்ள விஷ்ணு - தாயைப் பிரிந்த துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்கு இறைவன் நல்லருள் புரிவாராக...
08-மே-2013 08:19:45 IST
பேருந்துகளை பெட்ரோல் குண்டு வீசி எரிப்பதும் மரங்களை வெட்டித் தள்ளி சாலைகளை மறிப்பதும் அராஜகம்.. ஒருபோதும் திருந்தாத ஜென்மங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
02-மே-2013 08:15:47 IST
இந்திய அரசின் அலட்சியத்தினால் ஓர் இந்தியனின் உயிர் வெறியர்களால் பறிக்கப்பட்டுள்ளது. சரப்ஜித் ஆத்மா சாந்தி அடைவதாக...அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
02-மே-2013 08:08:51 IST