முதலில் ஒவ்வொரு ரயில் வண்டியிலும் ஓட்டுனர் காபினில் முதல் உதவி பெட்டி என்பதை பேருக்கு வைக்காமல் அதில் அவரச காலத்திற்கு தேவையான மாத்திரை மருந்துகள்(மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள்) ... நேரடியாக அம்புலன்சை தொடர்புகொள்ளும் வசதியுடன் கூடிய தொலைபேசி.. ஆக்சிஜன் நிறைதுள்ள சிலிண்டர் மற்றும் மாசக் போன்றவை கட்டாயமாக இருத்தல் அவசியம்... ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளை அழைத்துசெல்லும் இவர்களின் உயிருக்கு பாதுகாப்புக்கு ரயில்வே நிர்வாகமே பொறுப்பு ஏற்க்க வேண்டும்... தன உயிரைவிட பலபேரின் உயிருக்கு மதிப்பளித்த உத்தமனின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக... இவரின் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்...
25-மே-2013 11:24:31 IST
லலித் மோடி இப்போ பேசலாம்.... ஏனெனில் லலித் மோடியே பரவாயில்லை என்ற சூழ்நிலையை இப்போதைய பிசிசிஐ நிர்வாகத்தினர் உருவாகியுள்ளனர்... லலித் மோடிக்கு ஒரு நியாயம், இப்பொழுது உள்ளவருக்கு ஒரு நியாயமா...
25-மே-2013 10:33:20 IST
கருத்து சுதந்திரம்... பேச்சு சுதந்திரம்... போன்றவற்றை மட்டும் பெற்றுவிட்டு பொருளாதார சுதந்திரத்தை மேலை நாடுகளிடம் அடமானம் வைத்துவிட்டோம்... காங்கிரஸ் இதனை அவர்களிடமே விற்றுவிட்டது... ஒன்று மட்டும் கருத்தில் கொள்ளவேண்டும்... எந்த பண்டத்தை வேண்டுமானாலும் அதிக விலை கொடுத்து இந்திய நிருவனங்களிடமிருந்தே வாங்கலாம்... சீன பண்டங்கள் எவ்வளவு குறைந்த விலைக்கு நமக்கு கிடைத்தாலும் அதனை நாம் வாங்க கூடாது என்ற நிலையை நாம் ஏற்போமாக...
25-மே-2013 10:28:41 IST
இது என்னமோ லைசன்ஸ் வாங்கி நடத்துற குதிரை பந்தயம் போல தெரியுது... குதிரைக்கு வைக்கிற பேர் மாதிரியே டீம்களுக்கும் வைக்கும்போதே லைட்டா சந்தேகம் இருந்திச்சி... இப்போ தெளிவாயிட்டது... இது ஒரு பந்தயம்தான்... பொழுதுபோக்கு அம்சம்தான்... பணம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் விளையாடலாம் என்று முன்கூட்டியே அறிவிசிருந்தால் தேவல... இப்போ மோசடி... நம்பிக்கை துரோகம்... நன்மதிப்புக்கு களங்கம் என்று நடிக்க வேண்டிய அவசியம் இருக்காதல்லவா...
25-மே-2013 09:57:58 IST
சூதாட்டம் முகப்பரு மாதிரி... முகப்பருவை ஒரு இடத்திலிருந்து கிள்ளி எடுத்தால் முகம் முழுவதும் பரவும்... பரு வராமல் இருக்க முகத்தில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்... அது போல கிரிக்கெட்டில் அதிகரித்து வரும் பணபுழக்கத்தை குறைத்து கிரிக்கெட் உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும்... இல்லையெனில் பணவீக்கம் போல் ஊழல் பெருக்கெடுத்து ஓடும்...
22-மே-2013 12:50:56 IST
ஒரு இந்திய காங்கிரஸ் லீக், (ஐசிஎல்) இந்திய பிரீமியர் லீக் பற்றி கவலை கொள்கிறது... காங்கிரஸ் ஆடும் அரசியல் சூதாட்டத்தின் விளைவுகள் பற்றி இதுவரை இவர் கவலை பட்டதாக தெரியவில்லையே.... காங்கிரஸ்காரர்கள் இதுவரை செய்த ஊழலுக்கு எத்தனை தேசிய சட்டங்கள் உருவாக்க வேண்டுமோ.... தேசிய அளவில் நடக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் எதனை காங்கிரஸ் புள்ளிகளுக்கு தொடர்பு உண்டோ தெரியவில்லை... ஊழல் என்றால் அதில் காங்கிரசும் அடக்கம்... என்பதுதானே எழுதப்படாத விதி...
22-மே-2013 12:40:05 IST
ஸ்ரீசாந்த், தான் அப்பாவி என்று அவரே கூறிய பிறகு அவர் மீது தேவை அற்ற விசாரணைகள் எதற்கு... இந்த சூதாட்ட விஷயங்களும், அடுத்தடுத்து முக்கிய வி ஐ பி க்கள் கைது நடவடிக்கைகளும் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது...இவ்வாறு பிரதமர் கருத்து கூறுவார் என்று விரைவில் எதிர்பார்க்கலாம்...
22-மே-2013 12:19:24 IST
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லை என்ற நிலை வேண்டும்.... இது சட்டசபையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்... சென்னை தவிர்த்து தமிழகமெங்கும் பலமணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு... மாநகரங்களில் ஏழைகள் அதிகமாம்... எனவே அங்கு மட்டுமே அம்மாவின் உணவகம்... விளை நிலங்களெல்லாம் விலை நிலங்களாக மாற விளைச்சல் குறைந்துள்ளது... அரிசி, பருப்பு, எண்ணெய் விலைகளெல்லாம் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது... மாடுகள் இன்னமும் அடிமாடுகளாக கேரளாவிற்கு அனுப்பபடுகின்றன... (முஸ்லிம்களில் குரோஷி இனத்தவர் பசுவதையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிகொண்டுள்ளனர்)...மக்களின் வேதனைகளையே சாதனைகளாக மாற்றி கொண்டுள்ள முதல்வரின் சாமர்த்தியம் யாருக்கு வரும்...
17-மே-2013 16:12:01 IST
இந்த கிரிக்கெட் வீரரகளுடன் கடத்தல் பேர்வழி தாவுத் இப்ராஹிம்க்கு தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறதே, விசாரணையை கிரிக்கெட் சூதாட்டதுடன் மட்டும் முடித்துக்கொள்ளாமல் இன்னும் பல உண்மைகளை வெளிக்கொண்டுவர விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்... சிலர் பணத்தை சூதாடி தொலைக்க இந்த போட்டிகளை காணும் நம் மக்கள் நேரத்தை சூதாடி தொலைக்கின்றனர்...
17-மே-2013 15:40:39 IST