ramakrishnan balasubramanian : கருத்துக்கள் ( 38 )
ramakrishnan balasubramanian
Advertisement
Advertisement
நவம்பர்
9
2018
பொது சர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம் நடிகர் ரஜினி கண்டனம்
நீங்களே உங்கள் பத்திரிகையில் கருத்து எழுதும்போது எவ்வளவு தடைகள் வைத்திருக்கும்போது ஒரு படத்தை எடுக்க எவ்வளவு யோசிக்க வேண்டும். நீங்கள் புகை பிடிப்பதை படத்தின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தீர்கள். உங்கள் தீவிர ரசிகர்கள் அது சினிமா என்று நினைக்காமல் நிஜம் என்று தான் இன்றும் நினைக்கிறார்கள். கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்பவர்கள் அழுகின்ற குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்திருப்பார்களா? முதல்வர் ஆக நினைக்கும் படத்தில் அவரும் புகை பிடிக்கிறார். கண்மூடித்தனமாக இருக்கும் மக்கள் நிஜம் என்று தான் எல்லாவற்றையும் நினைக்கிறார்கள் . அப்படிப்பட்ட ரசிகர்களை நல்ல செய்கையின் மூலமாகத்தான் நடிகர்கள் இருவரும் சினிமாவில் காட்டவேண்டும். கண்மூடித்தனமான ரசிகர்களுக்கு சினிமாவில் "நல்ல மெசேஜ்" கொடுத்தால் தான் கொஞ்சபேர்களையாவது நல்வழி படுத்தமுடியும். நல்ல பொழுது போக்கு படங்கள், குடும்ப படங்கள், சமூக சிந்தனை படங்கள்,பெண்களை முழு ஆடைகளை அலையவிட்டு படங்கள் எடுங்கள். ஆபாசமான படங்களை எடுக்காதீர்கள் நீங்கள் முழு ஆடை அணியலாம் ஆனால் அவர்கள் அரைகுறை ஆடைகளை அணியவேண்டுமா? பெண்களை தெய்வமாக நினைக்கும் நீங்கள் அவர்களை காம கன்னியா சித்தரிக்காதீர்கள். இப்படி நீங்கள் புரட்சி செய்ய முடியுமா? உங்கள் துறையை முதலில் சிஸ்டம் செய்யுங்கள் பிறகு மற்றவற்றுக்கு வாருங்கள். பிறகு நீங்கள் இருவரும் நாட்டை ஆள வாருங்கள்?   14:55:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
15
2018
சம்பவம் குழந்தையை கொன்று, தம்பதி தற்கொலை
அழகான தம்பதி அழகான பெண் குழந்தை. வேறென்ன வேண்டும் உங்களுக்கு? அழகான புகைப்படம். வெளி மாநிலத்தில் இருந்தவரை எந்த பிரச்னையும் இல்லை என்று தோன்றுகிறது. சொந்த ஊருக்கு வந்ததுதான் பிரச்னை. எமனையும் கூட்டிக்கொண்டு வந்துள்ளீர்கள் அங்குதான் தவறு என்று தோன்றுகிறது. சண்டை இல்லாத வீடுகள் இல்லை. "வீட்டுக்கு வீடு வாசல்படி". ஆழ்ந்த அனுதாபங்கள்.   16:22:17 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
15
2018
சம்பவம் தேனீக்கள் கொட்டி 50 மாணவர்கள் காயம்
ஒருவர் செய்த "விளையாட்டு" பலரை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனீக்களை துன்புறுத்தியதால் பழி வாங்கும் எண்ணம் கொண்ட தேனீக்கள் அனைவரையும் கொட்டியிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் அல்லது திறமையாக தேன் எடுப்பவர்கள் தேனீக்களை உடனடியா அப்புறப்படுத்தவேண்டும். ஆயிரம் பேர் கட்டிய அழகிய மண்டபம் ஒருவர் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம்.   15:20:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2018
சம்பவம் சேலம் பெண் மீது ஆசிட்வீச்சு
ரொம்ப நாளா இச்செயல் மறைந்து இருந்தது. தற்பொழுது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. ஆசிட் பயன்பாட்டை வரைமுறை படுத்த வேண்டும். செயல்படுத்தமுடியுமா என்பது மிகவும் கடினமான காரியமாக தோன்றுகிறது.   15:11:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
12
2018
அரசியல் அடக்க நினைத்தால் திமிறும் காளையாக எழுவேன்
அவர் என்ன மந்திரவாதியா புதுப்புது அவதாரம் எடுக்க?   12:21:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
13
2018
பொது வெள்ள தடுப்புக்கு ரூ.4,415 கோடி
பெரிய தொகையாக இருக்கிறது? இந்நேரம் நீதிமன்றத்துக்கு போய் தடை வாங்க யாரும் போகவில்லையா? கவர்னரிடம் ஊழல் புகார் கொடுக்கவில்லையா? எதிர்ப்பு குரல் எழுப்பவில்லையா?   12:18:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சம்பவம் சந்தன மரம் வெட்டிய 4 பேர் கைது
சந்தன மரத்தை இவர்கள் மட்டும் எப்படி மோப்பம் பிடிக்கிறார்கள். மரத்தை சுற்றி வேலிபோட மாட்டார்களா? எவ்வாறு காட்டுக்குள் செல்கிறார்கள். வனத்துறை என்ன தூங்கிக்கொண்டு இருக்கிறதா? இல்லை வெட்டியவுடன் கைது எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் செய்கிறார்களா.? இதற்கு தாமாக முன்வந்தோ அல்லது பொது நல மனுவோ போட யாரும் இல்லையா? இந்த செய்தி மக்கள் படிப்பதில்லையா ? கண்ணில் படவில்லையா.? எதிர்க்கட்சிகள் இதை கண்டும் காணாமல் இருக்கிறார்களா? அரசுக்கும் இந்த செய்தி எட்டவில்லையா? சுட்டால்தான் குரல் எழுப்புவர்களா? இறைவனுக்கே "வெளிச்சம்".   12:13:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
13
2018
சம்பவம் வேலூர் சிறையில் மொபைல் போன் கண்டுபிடிப்பு
இதிலிருந்து யாரும் தங்கள் கடமையை சரிவர செய்வதில்லை என்பது நிரூபணமாகிறது.செய்திக்காக இதுபோன்ற செய்திகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சோதனை செய்கிறவர்கள் கையில்தான் அனைத்தும் இருக்கிறது. சோதனை கருவிகள் இல்லையா? காவல் நிலையங்களில் உள்ள /எதிரில் அவ்வளவு குப்பைகள் மலைபோல் தேங்கி கிடந்தும் ஒருநாளைக்கு கூட "அதை" அள்ள மனமில்லாதவர்கள் இந்த போன்களை கண்டுபிடித்து என்ன செய்ய போகிறார்கள். சுகாதாரம் பற்றி தினமும் விளம்பரம் வேறு? ஒரு தனி அறை கண்காணிப்பு கேமராவுடன் அமைத்து கைதியையும் பார்வையாளர்களையும் பேச விடலாமே? யாருக்கு காது குத்துகிறார்கள்? நல்ல மனிதர்களும், நல்ல எண்ணங்களும், நல்ல திறமையும், நல்ல கடமைகளும், நல்ல விழிப்புணர்வுகளும் இருந்தால் ஒரே நாளில் சோதனை யாவையும் முடித்துவிடலாம். சிறைச்சாலை அப்படியென்ன ஆயிரம் ஏக்கர் நீள அகலம் கொண்டதா? வினாவை மக்களிடமே விட்டு விடலாம்.   12:00:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
13
2018
கோர்ட் அனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது
நாட்டில் இது ஒரு முக்கியமான பிரச்சனையா ? அவனவன் சொத்துக்கு / சோத்துக்கு நாயா பேயா அலைந்து கொண்டு இருக்கிறான் இதில் எதை சாப்பிட்டால் என்ன ? விஷத்தை சாப்பிடாமல் இருந்தால் சரி. சைவம் அல்லது அசைவமோ மக்களுக்கு எதையும் சாப்பிட உரிமை இருக்கிறது. பிழைப்பு இல்லாமல் ஒருவர் மனு கொடுக்கிறார் என்றால் அதை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டுமோ ? எண்ணிக்கையின் அடிப்படியில் வழக்கு / தீர்ப்பு என்று கணக்கு எடுக்கிறார்களோ ?   11:38:34 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
13
2018
பொது இந்து மதத்தை பின்பற்றுகிறேன் விஜய் தந்தை
தாமிரபரணி ஆற்றில் குளிக்க வேண்டுமானால் குளியுங்கள் ? "குரு" சொன்னால் மனம் மாறவேண்டும் என்றால் மாறுங்கள். கோவிலுக்கு போகவேண்டும் என்றால் போங்கள். தற்பொழுது எந்த கடவுளை நினைத்து வணங்குகிறீர்களோ வணங்குங்கள். எந்த கடவுளையும் மக்களையும் புண்படுத்தாதீர்கள். பேட்டியும் கொடுக்காதீர்கள்.   11:22:14 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X