Selvakumar : கருத்துக்கள் ( 1 )
Selvakumar
Advertisement
Advertisement
செப்டம்பர்
11
2018
பொது திருத்தப்பட்ட, ஸ்மார்ட் ரேஷன் கார்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
நான் இதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இணையதளத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை செய்யலாம். பெயரில் உள்ள பிழைகளையோ அல்லது முகவரியில் உள்ள பிழைகளையோ தற்போது திருத்தம் செய்ய முடியாது. உணவுத்துறையால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் ஏராளமான பிழைகள் உள்ளன. குறிப்பாக ஸ்ரீ என்ற எழுத்து ஸ்ர என்று இருக்கும். முன்பு அதை நாமே சரி செய்யலாம் ஆதார் கார்டினை பதிவேற்றுவதன் மூலம். ஆனால் தற்போது அவ்வசதி நிறுத்தப்பட்டுள்ளது. 1967 சேவை மையத்தில் கேட்டால் AC அலுவலகத்து நேரில் செல்ல வேண்டும் என்கின்றனர். சரி நேரில் சென்றால் கணினியில் கைதேர்ந்த ஊழியர்களால் செய்யப்படுகிறதா என்றால் சந்தேகமே. மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப் படலாம். குறிப்பாக உச்சரிப்பிற்கு கடினமான பெயர்கள் சரியாக உள்ளீடப் படவேண்டும். நேரில் சென்றால் பின்பு எதற்கு ஆன்லைன்? மற்றும் சேவை மையம். நேரில் சென்றால் லஞ்சத்திற்கே வழிவகுக்கும். மற்றும் தரவிறக்கப்படும் pdf கோப்பில் பெயரிலோ அல்லது முகவரியிலோ ஆங்கில எழுத்து இருந்தால் அது வருவதில்லை உதாரணமான 257 / A என்று இருந்தால் 257 / 􀀀 என்று வருகிறது. இதனால் பல சிக்கல்கள் எழுகிறது. எனவே மீண்டும் பழைய முறையில் உரிய ஆவணத்துடன் ஆன்லைன் மூலம் பிழை திருத்தும் வசதியும், தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் பிடிஎப் கோப்பினை பதிவிறக்கம் செய்யும் வசதியும் தந்து நேரில் அலைக்கழிக்கப்படுவதை தவிர்த்து வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க வேண்டுகிறேன்.   11:30:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X