Advertisement
pattikkaattaan : கருத்துக்கள் ( 137 )
pattikkaattaan
Advertisement
Advertisement
அக்டோபர்
6
2015
பொது ஆசிரியர்கள் நாளை ஸ்டிரைக் பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
அரசு ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்து, ஒழுங்காக மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக இருந்தால் ஏன் தனியார் பள்ளிகள் இவ்வளவு முளைத்திருக்கும்? அப்பள்ளிகளில் சேர்க்க ஏன் பணத்தை அள்ளி கொடுத்து காத்திருக்க வேண்டும் ? அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயமா தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என அரசானை பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் சம்பளம் வீண் ...   12:19:16 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
6
2015
முக்கிய செய்திகள் நரகமாகும் நகரச்சாலை!நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள் நிரந்தரத் தீர்வு காண்பது எப்போது?
தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு சென்னையை தவிர வேறு எந்த நகரங்களும் கண்ணுக்கு தெரிவதில்லை. அங்கிருக்கும் மக்கள் பிரட்சினைகள் எதற்கும் கவலையில்லை ... அவர்கள் வோட்டு மட்டும் போடவேண்டும் ... இவர்கள் நாட்டை ஆளவேண்டும் ... பின் ஐந்து ஆண்டுகள் கழித்து திரும்பிவந்து "மக்களே ஒட்டு போடுங்கள் " என்று கேட்பார்கள் ... மக்களும் வரிசையில் நின்று ஓட்டளிப்பார்கள் ... தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றமுடியாது ...   11:52:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
5
2015
அரசியல் சூரிய மின்சக்தி துறையில் ஜெர்மனி ரூ.7,500 கோடி முதலீடு
//ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், சூரிய மின்சக்தி துறையில், 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் உறுதியளித்து உள்ளார்.//... இதை எப்படி நம் பிரதமர் அனுமதித்தார் என்று தெரியவில்லை ?...அப்போ ஏற்கெனவே உள்ள அதானி குழுமம் என்ன செய்யும் ?.. ஒண்ணுமே புரியலே   10:06:13 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
5
2015
பொது விபத்து ஏற்படுத்தினால் ஏழு ஆண்டு சிறை போக்குவரத்து விதிமுறை கடுமையாகிறது
நம் நாட்டில் வாகனம் ஓட்டுபவர்களில் எத்தனை பேருக்கு போக்குவரத்து விதிகள் தெரியும்?.. தெரிந்தாலும் எத்தனை பேர் அதை ஒழுங்காக கடைபிடிக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ....என் வாகனத்தை நான் எப்படி வேண்டுமானாலும் சாலையில் ஓட்டுவேன் என்ற மனநிலையில் தான் பலபேர் வாகனம் ஓட்டுகின்றனர் ...விபத்து ஏற்படுத்தும் போது தன்மேல் தவறு இருப்பினும். ஒப்புக்கொள்ள மறுத்து, தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தப்பிக்க நினைப்பது, விபத்து ஏற்ப்படுத்தி நிற்காமல் செல்வது போன்ற நிகழ்வுகள் தான் தொடர்ந்து நடக்கின்றன. வெளிநாடுகளில் ஓட்டுனர் உரிமம் வாங்குவது என்பது மிக கடினமான காரியம். ஆனால் நம் ஊரில் காசு கொடுத்தால் போதும், உடனே ஓட்டுனர் உரிமம் கிடைக்கும். பிறகு விபத்து நடக்காமல் இருக்குமா? சாலை பராமரிப்பு மிக கேவலமாக உள்ளது. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட்டு கொள்ளை அடிக்கும்வரை இந்த நிலை மாறாது...   09:58:13 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
5
2015
பொது மருத்துவ கல்லூரியில் சேர வருகிறது நுழைவுத்தேர்வு?
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்விலேயே முறைகேடு செய்து சீட்டு வாங்கியது தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். தகுதியான மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ சீட்டு கொடுக்கப்படவேண்டும் ... தனியார் பல்கலைகழகங்கள் பணம் கொள்ளை அடிப்பது தடுத்து நிறுத்தப்படுமா?   09:41:12 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
29
2015
உலகம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீருக்கான ஆதாரம் கண்டுபிடிப்புநாசா
நல்லா தேடச் சொல்லுங்கோ... எலும்புகூடுகள் கூட புதைந்து கிடக்கும்.... நம் மூதாதையர்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள் ....   09:39:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
28
2015
பொது ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் சுவாமி அடுத்த அதிரடி
ஒருவர் ஆயுள் கைதியாக அவதிப்பட வேண்டுமெனில், ஒருமுறை வீட்டுக்கடன் வாங்கினாலே போதும்...   15:24:13 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
21
2015
சம்பவம் கருத்தடை மாத்திரை சாப்பிட்ட மாணவி ஏற்கனவே கருவை கலைத்ததாகவும் பகீர்
படிப்பதற்கு மிக அதிர்ச்சியாக உள்ளது ... பெற்றோர் தங்கள் பிள்ளைகள்மீது இந்த வயதில் மிக கவனம், அக்கறை, அன்பு, அரவணைப்பு, கண்காணிப்பு, கண்டிப்பு என அனைத்தும் செலுத்த நேரம் ஒதுக்க வேண்டும் ..   10:04:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2015
அரசியல் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கலாசார அமைச்சர் மகேஷ்
//'பெண்கள் நள்ளிரவில் வெளியே சுற்றுவது நம் இந்திய கலாசார பழக்கமல்ல//.... நம்ம ஊர் பெண்கள் என்ன வேண்டுமென்றா நள்ளிரவில் வெளியே செல்கிறார்கள்?.. பணி நிமித்தமாக மற்றும் கல்வி கற்க வெளியூர் செல்லும் பெண்கள் இரவில் பயணம் மேற்கொள்ளவேண்டியுள்ளது .... இவர்களையெல்லாம் தவறாக பேசுவீர்களா?..."நள்ளிரவில் நகைகளோடு ஒரு பெண் சுதந்திரமாக என்று வெளியே செல்ல முடிகிறதோ, அன்றுதான் இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடு " என்று சொன்ன அண்ணல் காந்தி ஒரு லூசுப்பயலா ?   11:51:55 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
21
2015
பொது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆபாச வீடியோக்களை தடுக்க நடவடிக்கை
இன்றைய நாட்களில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கே விலையுயர்ந்த கைபேசிகளை வாங்கி கொடுப்பதை பெற்றோர் தங்கள் கௌரவமாக கருதுகிறார்கள். பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் மற்ற விசயங்களில் ஈடுபட்டு சீரழிந்து போனபின்பு, பெற்றோர் வருத்தப்பட்டு என்ன பயன் ? வருமுன் காப்போம்   11:34:29 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment