chinnamanibalan : கருத்துக்கள் ( 173 )
chinnamanibalan
Advertisement
Advertisement
ஜூலை
19
2017
விவாதம் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அளித்தது சரியா?
நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள ஒருசிலருக்கு இது உதவும்.   19:08:33 IST
Rate this:
1 members
2 members
3 members
Share this Comment

ஜூலை
18
2017
கோர்ட் ஜெயலலிதா மீதான வழக்கு முடித்து வைப்பு
நீதிமன்றங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க வழி காணாமல், வாய்தாக்கள் வழங்குவதன் விளைவு ஆட்களும் காலாவதி. வழக்குகளும் காலாவதி. அரசியல்வாதிகள் தவறு செய்து எளிதில் தப்பித்து கொள்ள சட்டமே உறுதுணையாக இருப்பது வருந்த தக்கது.   08:28:36 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
16
2017
சம்பவம் போதையில் மயங்கிய மாணவர்கள் ஆசிரியர்களே மீட்ட அவலம்
மதுவால் சீரழிந்து போனது மாணவர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகமும் தான். வெட்கக்கேடு.   07:50:29 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
15
2017
பொது தூய்மையில் உறைந்த காமராஜர் இவரை போல் உண்டோ இன்று...
தமிழகத்தில் காமராஜர் கொண்டு வந்த இலவசக்கல்வி திட்டம் தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடிகோலியது. இன்று காமராஜரை குறை கூறுவோர் கூட அவர் அளித்த இலவச கல்வியால் பயனடைந்தவராகவே இருப்பார் என்பது உறுதி. ஆட்சியில் எளிமை, நேர்மை ஆகியவற்றுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். அவர் ஆட்சி காலத்தில் படித்தவர்களுக்கு எல்லாம் லஞ்ச லாவண்யமின்றி நேர்மையான முறையில் வேலை கிடைத்தது. இன்று அரசுப்பணியில், குப்பை கூட்டும் பணிக்கு கூட பல லட்சங்கள் லஞ்சமாக பெறும் அவலம் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.   08:56:11 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
14
2017
அரசியல் ரூ.600 கோடி தந்தால் கிருஷ்ணா நீர் ஆந்திர மாநில அரசு கிடுக்கிப்பிடி
ஏரி குளங்களை முறையாக தூர் வாரி, மழை காலத்தில் வீணாகும் மழைநீரை தேக்கி வைத்து பயன்படுத்த அரசு நிர்வாகம் தவறி விட்டது. மாறாக இலவசங்களை வாரியிறைத்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி,மக்களை மறந்து, கோடிகளை குவிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டதன் விளைவு, இன்று குடிநீருக்கு ஆந்திராவிடம் கடன்பட்டு நிற்கும் அவலம் மட்டுமல்ல, கல்குவாரி குட்டையில் தேங்கியுள்ள நீரையும் பயன்படுத்த வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நாளை நாம் உண்ணும் உணவிற்கும் இதே நிலைதான் ஏற்படும்.   08:28:38 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
14
2017
பொது வறட்சியிலும் காப்பாற்றும் வேம்பு அய்யலூர் விவசாயிகள் ஆர்வம்
தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்களில் வேப்ப மரங்களை வளர்ப்பதன் மூலம் மண்ணும் வளம் பெறும்.மக்களாலும் வளம் பெறுவர். வேப்ப மர வளர்ப்புக்கு உதவ அரசு முன்வர வேண்டும்.   08:47:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
13
2017
அரசியல் அ.தி.மு.க., சசிகலா லஞ்சம் கொடுத்தாரா என விசாரிக்க...உத்தரவு----!
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஓட்டுக்கு லஞ்சம், சின்னத்தை கைப்பற்ற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம், சிறப்பு வசதிகளை பெற சிறைத்துறைக்கு லஞ்சம். பணம் பாதாளம் வரை பாயும் என்கிறது தமிழ் பழமொழி. தமிழகத்திற்கு தலைகுனிவுதான் மறுப்பதற்கில்லை.   08:39:53 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
13
2017
பொது சசியை சிக்க வைத்த ரூபா யார்?
எங்கு நோக்கினும் லஞ்ச லாவண்யம் எனும் நிலையில், தமிழ்நாட்டில் நேர்மைக்கு சகாயம் எனில் கர்நாடகாவில் நேர்மைக்கு ரூபா போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒருசில துணிவு மிக்க அதிகாரிகள் இருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.   18:56:35 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
13
2017
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
பல்வேறு ஊர்களிலும் பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில், மக்களின் வரிப்பணம் கமிஷன் அடிப்படையில் பாதாளத்தில் தோண்டி புதைக்கப்பட்டது என்பதே உண்மை.எனவேதான் இத்திட்டம் பல ஆண்டுகளாகியும் எங்குமே செயல்பாட்டுக்கு வரவில்லை.   08:50:07 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
13
2017
அரசியல் பட்டனை தட்டினால் பட்டா வீடு தேடி வரும்!
பட்டா மாறுதல் பெறும் ஒருவர், வருவாய் துறைக்கு லஞ்சமாக எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது என்பது ஊரறிந்த விஷயம். இதில் அமைச்சர் கூறுவது போல் இனி பட்டனை தட்டினால் பட்டா வீடு தேடி வருமா? அல்லது கதவை தட்டி லஞ்சத்தை பெற அதிகாரிகள் வீடு தேடி வருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.பட்டா பெறுவதில் உள்ள ஊழலை ஒழிக்க ஆயிரம் சீர்திருத்தங்களை செய்தாலும், அரசை வழி நடத்துவோர் கறைபடாத நிர்வாகத்தை நடத்தினால் மட்டுமே, பட்டனை தட்டினால் பட்டா கிடைக்க வழி பிறக்கும்.   08:33:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment