என்னைக் கேட்டால் ஏழு மலையானின் ஒரு நல்ல பெரிய படத்தை வாங்கி அதை வீட்டில் வைத்து கும்பிட்டாலே போதும். வியாபரத் தலமாகி விட்ட திருப்பதியில் அங்கங்கு காசை கொடுத்து ஆண்டவனை தரிசிப்பதோடு உடைமைகளையும் திருடர்களிடம் பறி கொடுப்பது தேர்ந்த ஆத்திகர்களைக் கூட நாத்திகர்களாக்கிவிடும் கருவறையில் இருப்பவர் மட்டும் அல்ல அந்த ஊரில் இருக்கும் அனைவருமே தங்களை ஆண்டவனாக பாவித்துக் கொள்வதுதான் பிரச்சினையின் மூல காரணம்
24-மே-2013 08:08:06 IST
"எந்த இலாகா வேண்டும் என்று கேட்கமாட்டேன். எதையுமே வந்த வரை லாபம் என்று எடுத்து கொள்வேன்"- சபாஷ் ஆரம்பமே அட்டகாசம் தெளிவாக தனது லாப நோக்கை வெளியிட்டிருக்கிறார் அம்பரீஷ். அரசியல்னா அவ்வளவுதானா?
19-மே-2013 06:46:00 IST
இந்த எஸ்கார்ட் சர்வீஸ் என்பது ஐந்து நட்சத்திர விபச்சாரம். நல்ல கட்டமைப்புகளுடன் திறம்பட இயங்கி வரும் ஒரு தொழில். காலம் இருக்கும் இருப்பில் இதையும் ஒரு முக்கிய வர்த்தகமாக அறிவித்து கம்பனி சட்ட விதி முறைகளுக்கு உட்பட்டது என்று அரசு அறிவித்தாலும் அதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.. அரசோ, தனி நபர்களோ, மானத்தையும் விட வருமானம்தானே முக்கியம்?
18-மே-2013 07:07:41 IST
உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரி, மோகன் இது விளம்பர மார்கெட்டிங் யுகம். எல்லாவற்றிலும் பிரதானமாக இருப்பது பணம் மட்டும்தான். ஒரு தன்மானமுள்ள மக்கள் வசிக்கும் நாடாக இருந்தால் கிரிக்கெட்டை அடியோடு ஒதுக்கி விட்டு சகட்டு மேனிக்கு நம் காசில் பொலி காளைகள் போல மமதையுடன் திரியும் இந்த ஆட்டக் காரர்களையும் கிரிக்கெட் நிர்வாக அமைப்புகளையும் மண்டியிட செய்திருக்கலாம். ஆனால் இதற்குப் பிறகும் இவர்களையும் இந்த ஆட்டத்தையும் சீரியசாக எடுத்துக் கொண்டு டிக்கெட் வாங்க நள்ளிரவில் வரிசையில் நிற்கும் அளவு விழிப்புணர்வு இல்லாத ஒரு சமுதாயத்தை யாரால் எப்படி திருத்த முடியும்? பேசாமல் கிரிகெட் ஆடுவதை நிறுத்தி விட்டு அதற்கான வாரியங்களில் இருக்கும் நிதியை ஹாக்கி, கால்பந்து, கூடைப் பந்து போன்ற விளையாட்டுக்களை மேம்படுத்த செலவிடலாம். விளையாட்டுக்கான அடிப்படி உபகரணங்களான ஷூக்கள் ஜெர்கின்ஸ் இவை கூட இல்லாது உயிரைக் கொடுத்து விளையாடி நாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் இந்த விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை தரத்தையும், தின்று கொழுத்து பணத்தில் புரளும் கிரிகெட் ஆட்டக் காரர்களின் ஐந்து நட்சத்திர வாழ்க்கை முறையும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது தூ என்ன கேடு கேட்ட தேசம் இது
18-மே-2013 06:58:06 IST
தஞ்சை சரஸ்வதி மகாலில் கலை இலக்கியம், நிர்வாகம், இசை, கட்டடக் கலை என்று பல துறைகள் பற்றி அறிய பல செய்திகளை தாங்கி கட்டுக் கட்டாக இறைந்து கிடக்கும் பழைய ஓலை சுவடிகள் பராமரிப்பில்லாமல் கரையான்களுக்கு இரையாகி வருகின்றன. அவற்றை பாது காத்து கணிணினியில் சேமித்து வைப்பது மிக சிறந்த தமிழ் தொண்டாக இருக்குமே ஒழிய 100 கோடியில் சிலை எடுப்பது எந்த வகையில் மொழிக்கு உதவும்? கட்சி சார்ந்த காண்டிராக்டர்கள் வேண்டுமானால் பயன் பெறுவார்களாக இருக்கும் வருமானத்துக்கு சிலைகள் ஒரு வழி. இது தொடங்கியது 67 இல்
16-மே-2013 07:02:04 IST
குமரேசன், கருத்து நல்லாத்தான் இருக்கு. ஆனால் பாரதி சொன்னது "சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்". கங்கை நதிபுறத்து கோதுமை பண்டத்தை தான் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்று சொன்னார்
15-மே-2013 11:06:19 IST
வீரபாண்டியார் மதுரைக்காரர் பக்கம் தளபதிக்கு எதிர் அதாவது கருணாநிதிக்கு நேர் எதிர் நிலைப்பாடு கொண்டவர். அதனால்தான் அவிங்க வீட்டுல காசு வாங்கி கொண்டு கல்யாணத்தை நடத்தி கொடுத்தோமா வந்தோமா என்றில்லாமல் வழக்கம் போல கொளுத்திப் போட்டு விட்டு வந்திருக்கிறார். ஹையோ, ஹய்யோ இவரைப் போய் கல்யாணத்திற்கு அழைத்த வீரபாண்டியார் குடும்பத்தினரை சொல்ல வேணும்
13-மே-2013 19:36:13 IST
பதவிக்கும் சிறுபான்மையினர் ஓட்டுக்கும் ஆசைப்பட்டு பொறாமையில் கருகும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதை நிதீஷ் வெளிப்படுத்தி வருகிறார். பாஜக யாரை தலைவராக முன்னிறுத்தவேண்டும் என்பதைக் கூட இவரைக் கேட்டுக்கொண்டு முடிவு செய்ய வேண்டும் என்பது ரியலி டூ மச். லாலு பிரசாத் காட்டில் மழை. அவரை மீண்டும் பதவியில் அமர்த்தாமல் ஓய மாட்டார் போலிருக்கிறது நிதீஷ்
10-மே-2013 06:18:40 IST
நெடுஞ்சாலைகளில் நியாய விலையில் தரமான உணவு கிடைக்கிறதா என்று கண் காணித்து, MRP யை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை என்றால் அது வரவேற்க தக்கது. அதை விட்டு விட்டு அரசே மலிவு விலை உணவகங்களை நடத்தும் என்றால் மாநிலத்தின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? சாப்பாடு என்பது முழு நேர வேலையாக போய் அரசுக்கு அதை கவனிக்க மட்டும்தான் நேரம் இருக்கும் அடுத்த தேர்தலின் பொது இதை தேர்தல் அறிக்கையில் சேர்த்து விட்டால், இன்னும் சுத்தம் ..உருப்பட்டு விடலாம்
06-மே-2013 05:06:47 IST