Advertisement
Natarajan Ramasamy : கருத்துக்கள் ( 175 )
Natarajan Ramasamy
Advertisement
Advertisement
ஜனவரி
18
2017
பொது ஜல்லிக்கட்டுக்கு ஏன் இந்த மல்லுக்கட்டு?
பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு பொங்கல் போது மட்டுமே நடக்கும். போனவருஷம் ஜனவரியில் ஆரம்பித்த வழக்கு ஒரு வருஷம் ஆன பின்பும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொல்லவில்லை . இதுவே மாநில அரசின் கையையும் மத்திய அரசின் கையையும் கட்டி விட்டது . வீணாக மத்திய அரசு அவசர அரசாணை இட நேரக்கூடாது .உச்ச நீதிமன்றம் மக்களின் உணர்வுகளை மதித்து தீர்ப்பை இன்றே வெளியிடவேண்டும் .   13:00:16 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
1
2016
அரசியல் மேற்கு வங்க தலைமை செயலகத்தில் இருந்து வெளியேற மம்தா மறுப்பு
சுங்க சாவடியில் ராணுவம் தனது ஆட்களை நிறுத்துவதனால் மம்தா விற்கு என்ன கஷ்டம்? இருந்த மாநில சுங்கச்சாவடி காவலர்களை நீக்கினார்களா? இல்லையே? மடியில் கனமா?   05:19:18 IST
Rate this:
8 members
0 members
76 members
Share this Comment

நவம்பர்
30
2016
கோர்ட் படங்களுக்கு வரி விலக்கு நீதிபதி சரமாரி கேள்வி
கேளிக்கை வரி கொடுத்தால் அது அரசாங்கத்திற்கு சேரும்.அது திரும்பி மக்களுக்கு அரசாங்கத்தால் செலவிடப்படும். கேளிக்கை வரி இல்லையெனில் படம் பார்க்கும் மக்கள் வரி பணம் கொடுக்கவேண்டாம். வரி கொடுப்பதால் டிகெட் விலை அதிகம் என்று படத்தை பார்க்காமல் செல்பவர்கள் எத்தனை? zero யாருக்கு உதவ இந்த வரி தள்ளுபடி? யாருக்காக இந்த வழக்கு? ஆங்கிலேயர்கள் இந்தியர்கள் கேளிக்கை இடங்களில் கூடி சுதந்திரத்தை பற்றி பேசுவதை தவிர்க்க போட்ட வரியே இந்த வரி இது இன்றும் ஏன் இருக்கிறது என்று புரியவில்லை.இதில் தமிழ் என்ன,ஆங்கிலம் என்ன வேறு மொழிகள் என்ன?இதே படம் சின்ன திரையில் ஒளிபரப்பினால் பார்ப்பவர்கள் எல்லோரும் வரி காட்டுகிறார்களா? கேலிக்கூத்து   16:57:33 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
24
2016
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ் மக்களுக்கு பாதிப்பு என்கிறார் மன்மோகன்
மன்மோகன் சிங்க் நிதி அமைச்சராக இருந்தபோது நடந்த ஹர்ஷத் மெஹ்தா வால் இந்தியா என்றும் கண்டிராத, மகா பொருளாதார மோசடி பங்கு மார்க்கெட் இல் நடந்தபோது கைகட்டி வை பொத்தி,இருந்த பொருளாதார மஹாமேதையாய் பாராட்டுங்கள் அப்போது கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்த சாதாரண குடிமகன்களை மறந்துவிட்டுப்பேசுங்கள். எத்தனை retired வயதானவர்கள் பணம் அழிந்தது ? அதனால் எத்தனை பேர் இறந்தனர்? இன்று பணத்தை இழப்பவர்கள் யார் ? அரசியல் கட்சிகள், வோட்டை விலைக்கு வாங்குபவர்கள் ,அரசியல் வாதிகள் வரிஏய்ப்பதற்காகவே கருப்புப்பணத்தில் வாழ்பவர்கள், சுபாரி கொலைகாரர்கள், வெளிநாட்டிலிருந்து நம் நாட்டில் பயங்கரவாதத்தை பரப்புபவர்கள் இவர்களுக்கு கொஞ்சம் கஷ்ட காலமானால் சந்தோஷப்படுங்கள்.   18:42:11 IST
Rate this:
6 members
1 members
32 members
Share this Comment

நவம்பர்
20
2016
உலகம் நேரடி போருக்கு தயார் பாக்., தளபதி திமிர் பேச்சு
இதுவரையில் நடைபெற்ற எந்த நேரடி போரிலயும் பாக்கிஸ்தான் ராணுவம் தோல்வியையே தழுவியது.அவர்கள் நடத்திய பங்களாதேஷ் போரில் சரணாகதி என்று அவர்களின் தளபதி எழுத்துமூலம் கையெழுத்து இட்டார்.பாக்கிஸ்தான் ராணுவம்வாங்கிய அடி தாங்காமல் ரஷ்யாவின் உதவியை நாடி,தாஸ்கண்டில் லால் பகதூர் சாஸ்திரியுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நாடினார்கள்.கார்கில் போரிலும் அதே கதி தான். அந்த நாட்டின் அரசியல் வாதிகளின் லஞ்ச வூழலினால் ராணுவம் ராணுவம் தலை தூக்கி பேசுகிறது. இல்லையெனன்றால் முக்காடு போடவேண்டியவர்கள்.இந்தியாவில் நேரில் மோதினால் தோல்வி என்பதை ஒத்துக்கொண்டதாலேயே,இவர்கள் இங்கு பயங்கரவாதச்செயல்களில் கவனம் செலுத்துகிறார்கள். பாகிஸ்தானிற்கு நம்முடன் சண்டை போட முகாந்திரமே இல்லை. காஷ்மீருக்காக என்றால், தான் ஆக்ரமித்து தன வசம் வைத்திருந்த காஷ்மீரின் ஒரு பகுதியை சீனாவிற்கு தாரை வார்த்து கொடுத்தது ஏன் ? இந்த அழகில் இவர்களுக்கு நம்மிடம் உள்ள காஷ்மீரும் வேண்டுமாம் அதற்க்காக போராம்?   03:18:49 IST
Rate this:
3 members
0 members
138 members
Share this Comment

நவம்பர்
18
2016
கோர்ட் ரூபாய் விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!வீதிகளில் கலவரம் நடக்கும் அபாயம் உள்ளது என்கிறது
கள்ள நோட்டுக்காரர்களும்,கருப்புப்பண முதலைகளும், வெளிநாட்டிலிருந்து இங்கு தீவிரவாதத்தை பரப்ப அங்கு கள்ளநோட்டு அடித்து நம் கையாலேயே நம் கண்ணை குத்துபவர்களும் , கோடிக்கணக்கான பணம் புரளும் சினிமா சந்தை முதலாளிகளும், நிலம் கட்டிட முதலாளிகளும் , பணம் கொடுத்து வோட்டு வாங்கும் அரசியல் கட்சிகள், நோட்டு செல்லாது என்று அறிவித்த பின் விளையும் கஷ்டங்களை அறிந்து கவலையில்லாமல் தாங்கள் தொழிலை தங்கு தடையின்றி செய்து வந்தனர்.இவர்கள் பொங்கியெழுவது எதிர்பார்த்ததே. வங்கிகளில் Rs 4500 /2000 மாற்றுமிடத்தை ஆக்கிரமிக்கும் கும்பலில் இவர்களின் ஆட்களே அதிகம். அரசின் DEMONATISATION இந்த முதலைகளிடமிருந்து நேர்மையான சமூகத்தை காக்க எடுத்த ஆணை. இதுபோன்ற இக்கட்டான வேளைகளில் நீதிமன்றங்கள் சட்டப்படி மட்டுமே கருத்து சொல்வது அழகு.   04:49:15 IST
Rate this:
19 members
0 members
54 members
Share this Comment

நவம்பர்
18
2016
கோர்ட் நீதிபதிகள் நியமனம் மத்திய அரசு முடிவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
130 கோடி மக்களில் இந்த 43 பேர் தான் உண்டா? நீங்கள் தேர்வு செய்து அரசுக்கு அனுப்பிய பின் சிலர் இறந்துவிட்டாலும் அவர்களே வேண்டும் என்று கூறமுடியுமா?   04:07:17 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
17
2016
அரசியல் ஊழல் இரு மடங்காக அதிகரிக்கும் சீதாராம் யெச்சூரி
முன்பு இந்தியாவில் 10000 மற்றும் 5000 புழக்கத்தில் இருந்தது. யெச்சூரி கூற்றுப்படி அப்போது ஊழல் 10 மடங்கு. அப்போது இந்த அரசியல் வாதிகள் தெரிந்தே இந்த நோட்டுகளை புழக்கத்தில் விட்டார்கள்./அல்லது மவுனியாக இருந்தார்களா?   07:10:00 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
14
2016
பொது மோடி, இந்தியாவின் லீ குவான் யு
நம் ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும் எதிரிக்கட்சிகளுமே உள்ளன. வருடத்தில் 365 நாட்களிலும் அரசியலை வியாபாரமாக நடத்தும் கட்சிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்வு ஸ்தம்பிக்கும் அளவு போராட்டம் செய்து பொது சொத்துக்களை நாசம் செய்து வருவதை யார் தடுப்பது? ரௌடி களும் கொலைப்படைகளும் கருப்புப்பணத்தினால் தான் வளர்கின்றன. இது மறுக்க முடியாத உண்மை. மோடியின் இந்த முடிவினால் இந்த விஷயங்களில் மாற்றம் ஏற்படும். சிங்கப்பூரில் லீ ஆண்டபோது எதிர்க்கட்சிகளும் 365 நாள் அரசியல் செய்யும் அரசியல் வியாதிகளும் கூலிப்படையும் இல்லை. சொந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பவர்களை லீ விட்டதில்லை. அங்கு தொலைக்காட்சிகளில் விவாத மேடை என்று கூறி தவறான கொள்கைகளை மக்களுக்கு நாள் முழுவதும் சொல்லமுடியுமா? நமக்கு பிடித்திருப்பது வியாதி . அறுவை சிகிட்சை அன்றி வேறு வழியில்லை. கருப்புப்பணத்தை வெள்ளையாக்க 3 மாதம் அவகாசம் கொடுத்து பார்த்தால் வெளி வந்ததா? மயிலே,மயிலே என்றால் இறகு போடும் மனது இங்கு இருக்கா?   18:19:57 IST
Rate this:
2 members
0 members
53 members
Share this Comment

நவம்பர்
10
2016
பொது கையிருப்பு நோட்டுகளை மாற்றுவது எப்படி?
வெளிநாட்டில் வேலை செய்யும் NRI ,லீவில் வந்துபோகும் போது ஏர்போர்ட் செல்வதற்கு வேண்டியதுபோக சிறிய அளவு இந்திய பணத்தை தன்னுடன் எடுத்துபோவார்கள்.கைஅடக்கமாக ரூ 5௦௦/1000 4 அல்லது 5 இருக்கலாம். இவர்கள் அடுத்தமுறை இந்தியா வருவது ஒரு வருடம் கழித்தே. இது குறைந்த பணமாக இருந்தாலும், மாற்ற என்ன வழி?   04:16:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment