Sivaprakasam Manickam : கருத்துக்கள் ( 159 )
Sivaprakasam Manickam
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2018
பொது மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்
இந்த மாதிரியான சில்லறைத்தனமான அரசியல் செய்வதில் கை தேர்ந்த கட்சி பிஜேபி செய்வதில் வியப்பில்லை. தமிழகத்தை பொறுத்த மட்டில் திமுக, அண்ணா திமுக ஆகிய கட்சிகள் ஏற்கெனெவே செய்துவிட்டன. இதிலிருந்து மக்கள் படிக்க வேண்டிய அனுபவ படிப்பு என்னவென்றால் எல்லா அரசியல் கட்சிகளில் எதுவும் யோக்கியமான கட்சி கிடையாது என்பது தான். ஆசிரியர்களுக்கு சம்பளம் காவல்துறையினருக்கு சம்பளம் அதிகப்படுத்துதல் போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை அதிகப்படுத்துவது. அரசு பணியாளர்களும் அதனை சார்ந்த பணியாளர்களும் இந்த சம்பள அதிகரிப்பினால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும், இவை எதுவுமே இல்லாத தனியார் நிறுவன ஊழியர்களும் அன்றாடம் தொழில் செய்து பிழைப்பை நடத்துபவர்களும் நடுத்தெருவில் நிற்பர். இதுதான் அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதனருகினில் ஓலைக்குடிசை கொண்டு பொன்னான உலகம் என்று மார்தட்டிக்கொள்ளும் நம் மக்களை க்கொண்ட நம் நாடு. வாழ்க பாரதம்.   12:43:01 IST
Rate this:
25 members
4 members
17 members
Share this Comment

நவம்பர்
27
2018
சினிமா முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக அரசு...
எழுதுகின்ற வேலையே இருக்காது. கருத்து எழுதுகின்ற அவசியம் ஏற்படாது அல்லவே.   12:26:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
27
2018
சினிமா முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக அரசு...
உள்ளதை சொன்னால் ரௌடிகளையும் கொலைகாரக் கும்பலையும் கையில் வைத்துக்கொண்டு மிரட்டினால் பாமரன் என்ன செய்வான். ஆனானப்பட்ட அமைச்சர்களும் அப்படித்தானே இருந்தார்கள். வானத்தில் ஆகாய விமானம் பார்க்கும்போதே தரையில் கும்பிட்டு விழவில்லையா?   22:14:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
27
2018
சினிமா முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக அரசு...
ஊழல் செய்த செய்யும் செய்யபோகிற தலைவர்களையெல்லாம் தலையில் தூக்கிவைத்து ஆடும் மக்கள் உறுப்பட்டத்தில்லை இது சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளிலேயே உறுதியாகிவிட்டது. அப்படியே எவனாவது வந்து சங்கை ஓதினாலும் அவனுக்கு பின்னாடியே வந்து அரசியல் அல்லக்கைகள் கூச்சல். இது ஒழிஞ்சா நாடு உருப்பட ஒரு சந்தர்ப்பம் இருக்கு. என்னைப்போன்ற நடுநிலையாளர்கள் தற்போது விரும்புவது குடியரசு தலைவரின் ஆட்சியே சிறந்தது. ஏனெனில் சிலர் மட்டுமே காழ்ப்புணர்ச்சியை காரணமாகி பழி வாங்கப்படலாம் ஆனால் குற்றம் குறையும் பெரும்பாலும் குற்றம் செய்பவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள். அம்மையார் இந்திரா காந்தி கொண்டுவந்த எமெர்ஸெண்சி சமயத்தில் எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்பட்டனர் ஆனால் சிஸ்டம் மிக சிறப்பாக செயல்பட்டது.   20:05:59 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
27
2018
அரசியல் ரூ.90 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல் பிரதமர் மோடி
பிஜேபி பண மதிப்பிழப்பின் போது பிடிபட்ட பல ஆயிரக்கணக்கான கோடிகளை மறந்து விட்டீர்களே. அது சரி சிலருக்கு வெகு நாட்களுக்கு முன் நடைபெற்ற ஊழல்கள் மட்டுமே மிக நன்றாக நினைவில் இருக்கும். நல்ல வேளையாக 2014 கு முன்பே கர்நாடக மாநிலத்தில் திரு எடியூரப்பா செய்த ஊழல் சுரங்க ஊழல்கள் மிக சமீபத்தில் 500 கோடி செலவில் நடந்து முடிந்த திருமணம் ஆக மொத்தத்தில் காங்கிரஸ் பிஜேபி இரண்டுமே இல்லாத ஜனாதிபதி ஆட்சியை ஏன் அமல் படுத்தக்கூடாது. ஒரு RTO அலுவலர் சேர்த்த லஞ்சம் பல கோடிகள். இதுபோல இந்தியாவில் உள்ள RTO களில் எவ்வளவு லஞ்சப்பணம் . 96000 கோடி என்பது நம்ப முடியாத ஒரு தொகை என்பதை எந்த ஒரு சாதாரண மனிதனாலும் புரிந்து கொள்ள முடியும். இன்றும் கூட ஆன் லைன் அனைத்தும் செலுத்திய பிறகும் கூட லஞ்சம் கேட்டு மாட்டிய செய்திகள் வந்து கொண்டுதானிருக்கின்றன.   14:18:38 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.வுடன் போட்டியிட தெரியவில்லை மோடி
உண்மை உண்மை உண்மை சென்ற காங்கிரஸ் ஆட்சியில் கிஸ்தி (GST கொண்டுவர முயன்றபோது என்ன நடந்தது. வாராக்கடன் காங்கிரஸ் காரர்கள் உருவாக்கியது. ஜனார்தன் ரெட்டி எடியூரப்பா லஞ்ச வழக்கில் மாட்டிக்கொண்டு பதவி இழந்தது. இன்னும் பலப்பல. பிஜேபி தான் இருப்பதிலேயே உத்தமமான கட்சி பணமதிப்பீடிழப்பு உள்ள காலத்திலேயே ரூபாய் 500 கோடி செலவில் திருமணம். தமிழக அமைச்சர்கள் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் ஆனால் அவர்கள் எவர்மீதும் நடவடிக்கை கிடையாது. ஒருவர் செய்யும் காரியத்தினை மற்றவர் தவறு என்று சுட்டிக்காட்டிவிட்டு அதே காரியத்தை தவறு என்று சுட்டிக்காட்டிய நபரே செய்வர். கேட்டால் அது எனது திறமை என்பர். அவர் எப்படி பட்டவர் என்று மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.   13:33:07 IST
Rate this:
15 members
0 members
74 members
Share this Comment

நவம்பர்
1
2018
பொது இலக்கை கடந்தது ஜிஎஸ்டி வசூல்
காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது GST கொண்டு வர மிக மோசமாக எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி இன்று ஒரு லச்சம் கோடி வசூல் என்று மார்தட்டிக்கொள்வது அழகல்ல. எனக்கு வந்த ரத்தம் உனக்கு வந்த தக்காளி சட்னி. ஜோக் தான்   22:31:13 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
29
2018
அரசியல் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை இல்லை எஸ்கேப்!
சிபிஐ யின் நிலையே கேள்விக்குறியாகி விட்டதே. இவர்களைப் போல் உள்ளவர்கள் எல்லாம் விசாரித்து என்னவாக போகிறது அது தெரிஞ்சுதான் உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது.சபாஷ்.   16:01:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
22
2018
பொது லைசென்ஸ் பெற்றவர்களால் தான் அதிக விபத்து அம்பலம்! போக்குவரத்து துறை அதிகாரிகள் பரபரப்பு தகவல்
ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களால் தான் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன என்றால் யார் காரணம். தகுதியற்றோருக்கு கையூட்டுபெற்றுக்கொண்டு உரிமம் வழங்கியதே காரணம். மேலும் ஆளுக்கு ஒரு டிசைன்/ஸ்டைல் நம்பர் plate பொருத்தி வண்டிகள் ஓடுகின்றன. அதை கூட தடுக்க முடியாத அரசு போக்குவரத்து துறை. மது குடித்துவிட்டு இருச்சக்கர வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகள் நூறு சதவிகிதம் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலானவை தக்க அதிகாரிகளின் தயவால் அல்லது அவர்களது பினாமிகளால் நடத்தப்படுவதாக பரவலாக குற்றசாட்டுகள் உள்ளன. நடு ரோட்டில் பேருந்துகளை (இடது ஓரம் இடமிருந்தாலும்) நிறுத்துவது ஷேர் ஆட்டோக்கள் நினைத்த இடத்தில நிறுத்துவது இன்னும் ஏராளம் கன ரக வாகனங்களின் டயர்கள் வழு வழு என்று இருந்தாலும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் கண்டுகொள்ளாமல் விடப்படுவது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்துக்கும் காரணம் யார்? கடுமையான நடவடிக்கை அபராதம் இல்லாததே. சாலைகளில் அரை அடி முதல் ஒரு அடி அளவில் பள்ளங்கள். முதலில் இதை எல்லாம் சரி செய்யாமல் எதையாவது சொல்ல கூடாது.   09:49:26 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
18
2018
பொது டெங்கு பரப்பினால் நடவடிக்கை சுகாதாரத்துறை எச்சரிக்கை
மாநகராட்சிக்கு மிக முக்கிய வேண்டுகோள் முதலில் காலியாக உள்ள பிளாட்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றவும் சாலை ஓரங்களில் அங்கங்கே பாழடைந்த நிலையில் கேட்பாரற்று கிடைக்கும் வாகனங்களை அகற்றவும் நடவடிக்கை எடுங்கள் சில காவல் நிலையங்களை சுற்றியும் பாழடைந்த வாஹனங்கள் ஏராளமாக கிடக்கின்றன.   09:36:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X