Advertisement
GG.RAJA : கருத்துக்கள் ( 46 )
GG.RAJA
Advertisement
Advertisement
ஜூலை
1
2015
அரசியல் ஜெ., கருத்து சிரிப்பு, எரிச்சல் தருகிறது கருணாநிதி கருத்து
கொஞ்சம் பொறுங்கள். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான். அதன் பிறகு நீங்கள் சிரிக்க முடியாது கண்ணீரும் அழுகையும் எரிச்சலும் அழிவும்தான்   09:27:40 IST
Rate this:
415 members
0 members
310 members
Share this Comment

ஜூன்
25
2015
விவாதம் பார்லி., கேன்டீனில் எம்.பி.,க்களுக்கு மானியம்
இந்தியாவில் வி.ஐ.பி. க்கள் எனப்படுகிற எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் அனைவருமே சாதாரண மக்களுக்கு இல்லாத பல விஷேச சலுகைகளைப் பெற்றவர்களாயிருக்கின்றனர். அதிலும் சாதாரண மக்களின் வரிப்பணத்திலேயே அவர்கள் இந்தச் சலுகைகளை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் உண்ணும் உணவுகளுக்குக் கூட மக்களின் பணத்தில் இத்தகைய சலுகை வழங்கப்பட வேண்டுமா..? எதற்காக இவ்வளவு குறைந்த விலையில் அவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன..?நமது மக்களின் பிரதிநிதிகள் என்ன ஏழைகளா..? அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா..? நமது எம்.பி.க்களில் பெரும்பாலோனோர் கோடிஸ்வரர்கள். ஒரு சிலர் வேண்டுமானால் இலட்சாதிபதிகளாக இருக்கலாம். இவர்கள் அலவன்ஸ்கள் உட்பட மாத சம்பளமாக சுமார் ரூ 1,50,000 பெறுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் உணவை சாதாரண மக்கள் வாங்கிச் சாப்பிடுகிற அதே விலையில் வாங்கிச் சாப்பிட முடியாதா..? அல்லது அப்படிச் செய்தால் அவர்களது கௌரவம் குறைந்து விடுகிறதா..? நமது மக்கள் பிரதிநிதிகள் சாப்பிடுகிற சாப்பாட்டிற்கு கூட அவர்களுக்கு வாக்களித்த மக்கள்தான் பணம் தர வேண்டுமா..? இது எந்த வகையிலான வி.ஐ.பி. கலாச்சாரம்..? இந்நிலை நீடிக்கக் கூடாது.எம்.பி.க்களுக்கு அளிக்கப்படுகிற இத்தகைய உணவு மானியத்தை மத்திய அரசு உடனடியாக இரத்து செய்ய வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த மானியத்தை இரத்து செய்ய அரசை வலியுறுத்த வேண்டும். எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் மக்களின் பிரதிநிதிகள்தான் எஜமானர்கள் அல்லர்.   20:26:23 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
30
2015
அரசியல் இலங்கையில் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை கருணாநிதி
இந்த அநியாயத்தை கண்டித்து 1 மணி நேர உண்ணாவிரதம் இருங்களேன்   09:35:42 IST
Rate this:
73 members
0 members
45 members
Share this Comment

மே
20
2015
அரசியல் எது ஊழல்? கருணாநிதி விளக்கம்
வந்துட்டாரய்யா உலக மகா உத்தம புத்திரர் சொம்பை எடுத்து மறைத்து வையுங்கள். தமிழகத்தில் முதன் முதலாக ஊழலை அறிமுகப்படுத்தியவர் வீராணம் ஊழல், பூச்சி மருந்து தெளிப்பதில் ஊழல் என எதிலும் ஊழல் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, மேதகு நீதிபதி சர்க்காரியா அவர்களால், விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் கெட்டிக்காரர் என்று சான்றழிக்கப்பட்டவர் கருணாநிதி. உலக வரலாறு காணாத 1,76,000 கோடி 2ஜி ஊழலின் கதாநாயகி கருணாநிதியின் மகள் கனிமொழி. அதே 2ஜி ஊழலில் ஆயிரக்கணக்கான கோடிகள் கமிஷன் பெற்றவர்கள் கருணாநிதியின் பேரன்களான KD சகோதரர்கள் அதே 2ஜி ஊழலில் தன் துவக்கிய கலைஞர் டி.வி.க்கு தன் மகள் கனிமொழி மூலமாக 215 கோடிகமிஷன் பெற்றவர் கருணாநிதி. பி.எஸ்.என்.எல்.லில் 600 கோடிக்கும் மேல் சுருட்டியவர்கள் கருணநிதியின் பேரன்களான KD சகோதரர்கள். டாடா விடமிருந்து பலநூறு கோடி ரூபாய் மதிப்புடைய வோல்டாஸ் கட்டிடத்தை விழுங்கியவர் துணைவியார் ராசாத்தி அம்மாள். மேலும் 2ஜி ஊழலில் கிடைத பல்லாயிரக்கணக்கான கோடிகளை குடும்பம் முழுவதும் பங்கு போட்டுக் கொண்டதாகவும் செய்திகள் உண்டு. இதுமட்டுமல்ல.. உலகத்தமிழ் மாநாடு என்ற பெயரில் நடந்த குடும்பக் கச்சேரி மூலம் நூற்றுக்கணக்கான கோடிகள், சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் பல நூறு கோடி ஊழல்கள் என கருணாநிதிக்கு சொந்தமான ஊழல் வரலாறுகள் இன்னும் பல உண்டு. இப்படிப்பட்டவர் 1 ரூபாயானாலும் ஊழல்தான் என்று நீதியை எடுத்துரைக்கிறார் சாத்தான் வேதம் ஓதிய கதை என்பது இதுதான்.   09:20:53 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

மே
10
2015
கோர்ட் ஜெ., வழக்கின் தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்துமா?
தமிழகதில் தீய சக்திகள் மீண்டும் தலைவிரித்தாடாமலிருக்கவும், குடும்பமே தமிழகத்தைப் பங்கு போட்டுப் பிரித்து கொள்ளையடிக்க வழி செய்யாத வகையிலும் தீர்ப்பு அமையும் என்று நம்புவோம்.   11:46:00 IST
Rate this:
392 members
3 members
223 members
Share this Comment

மே
10
2015
பொது ஜெ.,வுக்கு விடுதலையா, தண்டனையா?தமிழகத்தில் சூடுபிடித்த சூதாட்டம்
நாளை தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது தமிழகதில் தீய சக்திகள் மீண்டும் தலைவிரித்தாடாமலிருக்கவும், குடும்பமே தமிழகத்தைப் பங்கு போட்டுப் பிரித்து கொள்ளையடிக்க வழி செய்யாத வகையிலும் தீர்ப்பு அமையும் என்று நம்புவோம்.   01:24:28 IST
Rate this:
235 members
29 members
359 members
Share this Comment

மே
5
2015
அரசியல் பா.ம.க., அன்புமணி கடிதத்திற்கு தி.மு.க., பதிலடிவரிக்கு வரி கிடுக்கிப்பிடி கேள்வி
கடிதங்களும் பதிலடிகளும். மு.க.ஸ்டாலின் முதலில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கடிதம் எழுத, அதற்கு பதிலடியாக அன்புமணி ராமதாஸ் ஸ்டாலினுக்கு கடிதம் எழுத, அதற்கு பதில் சொல்ல முடியாமல் மூக்குடைபட்டுப் போன ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை எழுத வைத்து தாமரைச் செல்வன் பெயரில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். தாமரைச் செல்வன் பெயரில் வந்திருக்கும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்ல 3 விஷயங்கள்தான் இருக்கின்றன. ஆனால், அந்த மூன்றுமே சொத்தை. இனி அறிக்கையின் சாராம்சங்களைப் பார்ப்போம். தி.மு.க.வால்தான் அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தது என்று சொல்கிறார் தாமரைச் செல்வன் பெயரிலிருக்கும் கருணாநிதி. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 100 தொகுதிகளுக்கும் குறைவாகவே கிடைத்தது. அதிமுக சுமார் 85 இடங்களைப் பிடித்தது. பா.ம.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால்தான் தி.மு.க.விற்கு இந்த அளவிற்காவது இடங்கள் கிடைத்தன. இல்லையேல் 2006லும் அதி.மு.க.தான் வெற்றி பெற்றிருக்கும். கருணாநிதி முதலமைச்சராகவே ஆகியிருக்க முடியாது. அப்படி 100க்கும் குறைவான இடங்கள் கிடைத்த போதிலும் பா.ம.க. போன்ற கூட்டணிக் கட்சிகளை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளாமல் தன்னை முதலமைச்சராகவும் மகனை துணை முதலமைச்சராகவும் ஆக்கிக் கொண்டு 5 வருடங்கள் பதவியில் ஒட்டிக் கொண்டு குடும்ப ஆட்சியை நடத்தி தமிழகத்தை குடும்பமே பங்கு பிரித்து சுருட்டிக் கொள்ள வழி செய்தவர் கருணாநிதி . மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய ஊழலில் சிக்கி நீதிமன்றத்தின் நீண்ட படிக்கட்டுக்களை மிதித்துக் கொண்டிருக்கும் அன்புமணிக்கு ஊழலைப் பற்றிப் பேச என்ன தகுதிதியிருக்கிறது என்றும் கேட்டிருக்கிறார் கருணாநிதி. இது நல்ல தமாஷ். ஆயிரக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட 2ஜி ஊழலில் கருணாநிதியின் குடும்பம் முழுவதுமே அகப்பட்டுக் கொண்டு நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுக்களை மிதித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் கனிமொழி உட்பட சிலர் நீதிமன்றம் கொடுத்த ஜாமீனால் வெள்யில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஊழல் குடும்பத்தினருக்கு ஜெயலலிதாவைப் பற்றியோ அன்புமணியைப் பற்றியோ வாய் திறக்கக் கூட தகுதி கிடையாது. பா.ம.க.கூட்டணி வைக்காத கட்சி எது? வருடத்திற்கு ஒரு கட்சியோடு கூட்டணி வைப்பது பா.ம.க.என்றும் கூறியிருக்கிறார் தாமரைச் செல்வன் பெயரிலிருக்கும் கருணாநிதி. தி.மு.க.வின் கதை மட்டும் என்ன? தி.மு.க. கூட்டணி வைக்காத கட்சி எது? பா.ஜ.க. காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. முஸ்லீம் லீக், ம.தி.மு.க. கம்யூனிஸ்ட்கள், ஜாதி அமைப்புகள் என பல்வேறு கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி வைத்து அதிகாரத்திற்கு வந்து உலகம் காணாத வகையில் ரூ 1,76,000 கோடி ஊழலில் ஈடுபட்டு குடும்பத்தை ஆசியாவின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் சேர்த்து வைத்திருக்கிறார் கருணாநிதி. உலகின் மிகப்பெரும் ஊழல் கட்சி எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு அது தி.மு.க.தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.   09:59:31 IST
Rate this:
222 members
2 members
137 members
Share this Comment

ஏப்ரல்
28
2015
அரசியல் தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி வெற்றி தமிழகத்தை காப்பாற்றும் கருணாநிதி
கருணாநிதி அவர்களே..தமிழகத்தைக் காப்பாற்றுவதுதான் உங்கள் கூட்டணியின் நோக்கம் என்றால் விஜயகாந்தை முதல்வராக அறிவித்து தேர்தலைச் சந்தியுங்களேன். பல ஆயிரக்கணக்கான ஊழல்கள் தொடர்புடைய கருணாநிதியின் குடும்ப ஆட்சி தேவையில்லை   09:15:31 IST
Rate this:
274 members
1 members
154 members
Share this Comment

ஏப்ரல்
15
2015
அரசியல் ஜெ., வழக்கு தீர்ப்புக்கு முன் தலைமை நீதிபதி மாற்றம் ஏன்?
ஜெயலலிதா என்ற பெயரைக் கேட்டாலே கருணாநிதிக்கு சர்வநாடிகளும் ஒடுங்கிப் போய்விடுகின்றன. ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டால் அவ்வளவுதான் .....தன் மகள் 2ஜி வழக்கிலிருந்து தப்பமுடியாது ராசாவோடு சேர்ந்து திகார் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் தான் உட்பட தன் குடும்பமே பங்கு பிரித்துக் கொண்ட ஆயிரக்கணக்கான கோடிகள் 2G ஊழல் பண விவகாரம் முழுமையாக வெளிவந்துவிடும், தன் பேரன்களான KD சகோதரர்கள் சிறைக் கம்பிகளை எண்ண வேண்டியிருக்கும், தன் குடும்பத்தினர் எவருக்கும் எந்தக் காலத்திலும் முதல்வர் பதவி கிடைக்காது தி.மு.க. என்றழைக்கப்படுகிற கருணாநிதி குடும்ப முன்னேற்றக் கழகமே இல்லாதொழிந்துவிடும்.. என்பது கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும். அதனால் நீதிபதியை இடம் மாற்ற செய்தது தவறு.. ஜாமீன் கொடுத்தது தவறு என்று தினசரி எதையாவது உளறிக் கொண்டிருக்கிறார்.   09:36:09 IST
Rate this:
85 members
1 members
124 members
Share this Comment

மார்ச்
21
2015
அரசியல் ஆதாயத்திற்கு தான் மசோதாவை ஆதரித்தாரா ? கருணாநிதிக்கு வெங்கையா கேள்வி
கர்நாடகத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா அவர்களின் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையிட்டு விசாரணையில் சாதகமான தீர்ப்பை பெறுவதற்காகவே நில ஆர்ஜித மசோதாவை அதிமுக ஆதரித்தது என்பதுதான் கருணாநிதி சொல்ல வருகிற கருத்து. ஒரு வழக்கிலிருந்து ஒருவர் விடுபடுவதும் ..தண்டனை பெறுவதும் அவ்வழக்கின் தன்மை,வழக்கை விசாரணை செய்யும் நீதிபதி அந்த வழக்கை அணுகும் விதம், வழக்கறிஞர்களின் வாதப்பிரதிவாதங்கள் மற்றும் சட்டப்பிரச்னைகள் போன்றவற்றைப் பொறுத்ததே ஆனால், கருணாநிதி மத்திய அரசை அனுசரித்து நடந்து கொண்டால் வழக்கிலிலிருந்து விடுபட்டுவிடலாம் என்று கூறுகிறார். மத்திய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை ஆனால், கருணாநிதி ஒரு மிகவும் மூத்த அரசியல் தலைவர் அவர் விசயம் தெரியாமல் எதுவும் கூறமாட்டர் அப்படிப்பட்டவர் வழக்கின் நடவடிக்கைகளையும் தீர்ப்புகளையும் அரசின் தலையீடுகள் தீர்மானிக்கின்றன என்று கூறுகிறார் என்றால் முன்னனுபவம் இன்றி அப்படிக் கூறியிருக்கமாட்டார் அல்லவா..? கடந்த ஐ.மு.கூ. ஆட்சியில் அந்த அரசின் மிக முக்கிய கூட்டணி தலைவராக கருணாநிதி இருந்தார் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு உட்பட பல்வேறு மக்கள் விரோத மசோதாக்கள் கருணாநிதியின் ஆதரவுடனேயே அப்போது நிறைவேறின. காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் விவகாரம் போன்ற பல்வேறு தமிழக நலன் சார்ந்த விசயங்களில் அப்போது முதல்வராயிருந்த கருணாநிதி மத்திய அரசிடம் தமிழக நலன்களுக்காகப் போராடாமல் விட்டுக் கொடுத்தே வந்தார். அப்படியானால், இதெல்லாம் 2ஜி வழக்கிலிருந்து தன் மகள் விடுதலையாக மத்திய அரசு உதவும் என்பதற்காகத்தான் நடந்ததா..? தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்ற தடையாயிருப்பவர் ஜெயலலிதாவும் அவரது கட்சியான அ.தி.மு.க.வும்தான் இந்நிலையில் ஜெயலலிதா அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டால், தி.மு.க. தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு பெரிதாக எந்த தடையும் இருக்கப்போவதில்லை. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஐ.மு.கூ. அரசு தலையிட்டு ஆதிக்கம் செலுத்தியிருக்கக்கூடும் என்று கூறினால், அதில் என்ன தவறிருக்க முடியும்..? கருணாநிதியின் கருத்துப்படி, இப்போதிருக்கும் மத்திய அரசு ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவிக்க தனது செல்வாக்கை நீதிமன்றத்தின் மீது பிரயோகிக்க முடியும் என்றால், முன்பிருந்த கருணாநிதியின் ஆதரவில் இயங்கி வந்த ஐ.மு.கூ. அரசு, ஜெயலலிதாவை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும் வகையில் அவருக்கு தண்டனை விதிக்க நீதிமன்ற நடவடிக்கைகளிலும் வழக்கின் தீர்ப்பிலும் தனது செல்வாக்கை ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது..? இது சிந்திக்க வேண்டிய விஷயமல்லவா..? ஐ.மு.கூ. ஆட்சியின்போது இதுபோன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையீடு இருந்ததால்தான் இப்போதைய மத்திய அரசின் மீதும் கருணாநிதிக்கு அதே ஐயம் வருகிறது என்று கூறினால் அதிலென்ன தவறிருக்க முடியும்..? அப்படியானால், சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா பெற்ற தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பா...அல்லது கருணாநிதி மத்திய அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி பெற்ற தீர்ப்பா என்று மக்களுக்கு இருந்த ஐயத்தை கருணாநிதியின் இந்த அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.   09:29:09 IST
Rate this:
216 members
1 members
3 members
Share this Comment