spr : கருத்துக்கள் ( 1147 )
spr
Advertisement
Advertisement
ஏப்ரல்
18
2018
பொது பெண் பத்திரிக்கையாளரிடம் வருத்தம் தெரிவித்தார் கவர்னர்
பொதுவாகவே நம் மக்களின் மனநிலை கெட்டுவிட்டது. இப்பொழுது பெண்கள் கூட ஆடவரை கைகுலுக்கி கட்டித்தழுவி பேசுகிறது வழக்கமாகிவிட்டது என்றாலும், பெண்களிடம் மட்டுமல்ல ஆண்களையும் சற்று தூரத்தில் வைத்தே பேசுவது நல்லது என்பது பாஜக ஆதரவு பெற்ற நபராயிருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே. ஆளுநருக்கு நல்ல படிப்பினை. இதர தலைவர்கள் செய்திருந்தால் அவர் வயதானவர் இல்லையென்றாலும் ஏற்றுக்கொள்ளப்படுமா   07:21:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது சொத்து பறிமுதல் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்
"6 வாரத்திற்குள் அவர் ஆஜரானால், கோர்ட் நடவடிக்கைகள் நிறுத்தப்படும். தவறும்பட்சத்தில், கோர்ட் அனுமதியின்றி அவரது சொத்துகள் முடக்கி வைக்கப்படும். சிறப்பு கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் தான் மேல்முறையீடு செய்ய முடியும்" முடக்கி வைப்பது முதல் நடவடிக்கை ஆனால் இது போதாது. வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்ட வேண்டும் குறிப்பிட்ட காலத்தில் பணம் திருப்பித்தரப்படவில்லையெனின் சொத்துக்களை ஏலம் விடவும் வங்கிகளுக்கு உரிமை தரப்பட வேண்டும் இதற்கு எதிராக எந்தவிதமான மேல் முறையீடும் அனுமதிக்கப்படக்கூடாது. இவை இல்லையேல் இது ஒரு கண்துடைப்பு நாடகமே இதனால் முடக்கப்பட்ட சொத்தை விற்கவும் முடியாது கடன் வசூலும் நடக்காது மேல்முறையீடு செய்தால், "காட்ட வேண்டியதைக் காட்டினால், பெற வேண்டியதனைப் பெறலாம்" என்றபடி நீதியரசர்களும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வாய்ப்பிருக்கிறது அதனால்தான் காங்கிரசும் ஆதரவு அளித்துள்ளது   07:14:36 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
சம்பவம் 150 பேர் பாஸ்போர்ட் முடக்கம்
"வங்கியில், 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் இருப்பவர்கள், நாட்டை விட்டு தப்பி செல்லாமல், இருக்க, அவர்களது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டது. "நல்ல முயற்சி பாராட்டுகள். இதே போல அவர்களது சொத்துக்களையும் முடக்க உத்தரவிட வேண்டும்   07:03:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது ரூ.100 கோடி சொத்துக்களை உதறிய இளைஞர்
பணத்திற்கு ஆசைப்படாதவர் என்றால், இவர்கள் துறவறம் செல்ல வேண்டாம் மக்கள் இவரை தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தால், இவர் போன்றவர்கள் அரசியலில் நல்ல பதவிக்கு வந்தால், கொள்ளையடிப்பதை விட்டு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பிருக்கும் எனினும் பாராட்டுகள் பல்லாண்டு வாழ்க   07:00:57 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
8
2018
சம்பவம் பாலியல் தொல்லைக்கு எதிராக நடிகை அரை நிர்வாண போராட்டம்
"திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டால், ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்து அனுப்ப சொல்கின்றனர். நாங்கள் பெண்களா அல்லது விளையாட்டு பொருட்களா?" என்று சொல்லிவிட்டு, இவரே "இடுப்புக்கு மேல் போட்டிருந்த ஆடையை அகற்றினார் வெறும் ஜட்டி மட்டும் அணிந்த நிலையில், தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்." அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபடுவது ஒரு விளம்பரமே நடிக்க வாய்ப்பு கொடுத்தால் இதனை விட மோசமாக கவர்ச்சி காட்டலாமோ   10:34:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
அரசியல் நீதிபதிகளை அச்சுறுத்தவே கண்டன தீர்மானம் ஜெட்லி
முதலில் அரசின் முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் இணைய ஊடகங்களில் செய்தி வெளியிடுவதனைத் தவிர்க்க வேண்டும் தேவைப்பட்டால், அவர் செய்தியாளர்களை அழைத்து செய்தி வெளியிடலாம் அல்லது அரசுக்காக ஒரு இணையதளம் ஆரம்பித்து, அதில் தங்கள் கருத்துக்களை குறிப்பாக கொள்கை முடிவுகள், ( கிரண் பேடி வெளியிட்ட சில ஆணைகள் போன்றவை ) அரசின் அறிவிப்புக்கள் இவற்றை வெளியிடலாம் தனியார் இணைய தளங்களான பேஸ்புக், ட்வீட்டர் இவை முறையான வகையல்ல.   10:28:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
பொது பணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரிப்பு
இது எதிர்பார்த்த ஒன்றே. திரு மோடியின் தவறான அணுகுமுறை, அரசின் நிர்வாக அதிகாரிகள் (குறிப்பாக வங்கி அதிகாரிகள்) ஒத்துழைப்பு இன்மை எல்லாம் காரணம் இது திரு மோடி தனது சுய முடிவு என்று பொறுப்பேற்றதால், அவரது நிழல் பிரதமர் நிதியமைச்சர் ஆதரவுடன் வருமான வரித்துறையும், பொருளாதார குற்றங்கள் விசாரணை துறையும் மற்றோர் நிழல் பிரதமர் (உள்துறை அமைச்சர்) வசமுள்ள அதிகாரிகளும் சேர்ந்து ஒத்துழைக்காததால் நடந்திருக்கலாம் திரு மோடியின் வங்கி நிர்வாக சீரமைப்பு தொடர்பான அறிவிப்புக்களால் அதுவும் வங்கிகளில் நடந்த தொடர் கொள்ளை வாராக்கடன் அதிகரிப்பு இவற்றாலும் வங்கியின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து போயிருக்கிறது என்பது வெளிப்படை   10:21:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
பொது மாணவியரை, அழைத்த பேராசிரியை வழக்கில் விசாரணை தொடங்கியது!
"என் அதிகாரத்திற்கு உட்பட்டு மட்டுமே, பதில்பேச முடியும்." வழக்கு முடிந்துவிட்டது   09:49:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
பொது பாலியல் புகாரில் ஆதாரமற்றது என்கிறார் கவர்னர் மறுப்பு!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆளுநருக்கெதிராக பாலியல் குற்றசாட்டை வைத்தது நினைவிருக்கிறதா?(1991-1996 ஆட்சிகாலம்) ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்த போது, சென்னாரெட்டி கவர்னராக இருந்தார். அவருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டது. கவர்னர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார்’ என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையிலேயே குற்றம் சுமத்தினார். பெண்ணாக இருப்பதில் உள்ள வசதி இதுதான் நம் ஆளுநர் கொஞ்சம் கவனமாக 10 அடி தள்ளி நின்றிருக்க வேண்டும் நீதி வெண்பா சொல்வது இதுதான். இனியாவது அவர் இதனை புரிந்து கொண்டால் நல்லது கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம் வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா) கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ,(இங்கே இது போல பெண்கள் என்று கொள்ளுங்கள்) கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள்.   09:45:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
பொது பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
"அதிகபட்சமாக பா.ஜ., கட்சியை சேர்ந்த 12 பேர் மீதும், சிவசேனாவை சேர்ந்த 7 பேர் மற்றும் திரிணாமுல் காங்., கட்சியில் 6 பேர் மீது பெண்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்தை ஆய்வு செய்ததில் இத்தகவல் தெரியவந்துள்ளது." இது அவர்களே வெளியிட்ட தகவல் என்பதால், தொடர்புடைய கட்சியின் தலைவர்கள் இது குறித்து விசாரணைக்கு முன் வந்து, அவ்விசாரணை முடியும்வரை இவர்களை தாற்காலிகமாக கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பார்களா? மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் பாஜகவின் தலைவர் திரு அமித்ஷா உடனடி நடவடிக்கை எடுப்பாரா (மோடிக்கும் கட்சிக்கும், ஆட்சிக்கும் இனி தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை அவர் பணி ஒய்வு பெற்றது போல தோன்றுகிறது. இனி அவரது முகம் பாஜகவிற்கு இனி தேவைப்படாது. திரு மோடி தானாக முழுப்பொறுப்பேற்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றி பெறவில்லை ஆனால் திரு ஜெட்லீ பொறுப்பேற்று, முயற்சி எடுத்த GST நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடந்து இயல்பு நிலைக்கு வந்து விட்டதால், அதன் நாயகர் திரு ஜெட்லீ அடுத்த பிரதமர் ஆகலாம் )   09:30:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment