Rangarajan Pg : கருத்துக்கள் ( 682 )
Rangarajan Pg
Advertisement
Advertisement
மார்ச்
17
2017
பொது வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் தினகரன் தரப்பு காண்டு
அரசியல்வாதிகளுக்கு எதற்கு மானம் மரியாதை? அரசியலுக்கு வருவதே பணம் திருடுவதற்கும் மக்களை ஏமாற்றுவதற்கும் தான். திருட்டு தொழிலுக்கும் சீட்டிங் தொழிலுக்கும் எதற்கு மானம் மரியாதை எல்லாம்.   10:08:54 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
17
2017
பொது ஏர் இந்தியா விமானங்களில் குடிமகன்கள் தொந்தரவுக்கு ஆளாகும் பயணிகள்
விமானத்தில் மதுவுக்கு தடை போட்டால் என்ன? எதற்காக பயணிகளுக்கு மது கொடுக்க வேண்டும்? அவர்கள் ஒன்றிற்கு நான்காக வாங்கி குடித்து விட்டு இப்படி தான் ரகளையில் ஈடுபடுவார்கள். மதுவுக்கு பதில் பழரசம் கொடுக்கலாமே. மது அருந்திவிட்டு ரகளை செய்யும் பயணிகளுக்கு சிறிய டோஸ் தூக்க மாத்திரை கலந்த பாணத்தை கொடுத்து அவர்களை SEDATE செய்யலாம்.   09:26:37 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
13
2017
சம்பவம் நெட்டிசன்களிடம் வறுபடும் பள்ளிக்கல்வி அமைச்சர்
பாவம் அவருக்கு பள்ளிக்கூடம், கல்வி, படிப்பு, தேர்வு, மாணவர் மனநிலை ஆகியவை பற்றி தெரியாது. பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட அவர் ஒதுங்கியதில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் பாழா போன அரசியல் தான். அந்த அரசியல் வாழ்வு அவருக்கு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் அவருக்கு வாய்த்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி கொள்ள நினைத்திருப்பார். அந்த நேரத்தில் மாணவர் தேர்வு எழுதுவது, அவர்கள் மனநிலை போன்றவைகளா அவருக்கு முக்கியம்? போட்டோ பிடித்து பேப்பரில் போடுவது தானே முக்கியம். ""நானும் வேலை செய்கிரேன் மம்மி"" என்று காண்பிப்பதற்காக தானே இது. அல்லது ""நானும் எஜுகேட்டட் தான்"" என்று ஒருவேளை உலகத்திற்கு காண்பிப்பதற்காக இருக்குமோ?????   08:54:20 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

மார்ச்
13
2017
சம்பவம் டில்லி பல்கலை.,யில் தமிழக மாணவர் தற்கொலை
மகனை இழந்த பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இட ஒதுக்கீடு சமாச்சாரம் இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறதோ. எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று நினைத்து தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது? எதிர்காலம் போட்டிகள் நிறைந்தது. இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு உபயோகித்து கொண்டு தங்களை நன்கு முன்னேற்றிக்கொள்வதை விட்டு எல்லா விஷயத்திலும் தங்களுக்கு இட ஒதுக்கீடு விஷயம் கை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இதை போல தற்கொலை செய்து கொண்டு சில பல அரசியல் கட்சிகளின் பிழைப்பை ஓட்ட உதவி செய்வோம் என்று இருந்தால் யார் என்ன செய்ய முடியும். எதிர்கால போட்டிகளை சமாளிக்க தெரியாமல் இப்படி செய்து கொள்வதால் யாருக்கு என்ன லாபம். வயதாகி வேலையிலிருந்து ஓய்வு பெரும் வரை இட ஒதுக்கீடு விஷயம் தங்களுக்கு உதவ வேண்டும். சுய முயற்சியால் எதையுமே சாதிக்க மாட்டோம்,, சாதிக்கவும் தெரியாது என்ற மனநிலையில் எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தின் கையை எதிர்பார்த்து கொண்டு இருப்பதால் வரும் வினை இது. இதனால் ஒரு உயிர் பறிபோனது, சில அரசியல் கட்சிகளுக்கு தான் சில நாட்களுக்கு இதை வைத்து பிழைப்பு ஓடும்.   08:27:14 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
12
2017
அரசியல் பத்தினி தெய்வம் என விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு பாத்திமா பதிலடி
இந்த கலி காலத்தில் ""பத்தினி"" மற்றும் ""தெய்வம்"" போன்ற வார்த்தைகள் கூட கெட்ட வார்தைகளாகி விட்டது.   10:45:00 IST
Rate this:
3 members
1 members
17 members
Share this Comment

மார்ச்
7
2017
கோர்ட் கோடி கணக்கில் ஏமாற்றியவரை விட்டுவிட்டு, சேலை திருடியவருக்கு ஓராண்டு சிறையா?
ஒரு பெரிய திருடன் தப்பித்து வெளியில் இருக்கிறான் என்பதற்காக சின்ன திருடர்களை எல்லாம் நியாயப்படுத்துவது சரியில்லை. இப்படியே போனால்,, பிற்காலத்தில் கொலை குற்றம் புரிந்தவர்கள் கூட ""அவன் ஒம்போது கொலை பண்ணிட்டு வெளியிலே சுத்தறான் நான் ஒரு கொலை தானே பண்ணேன்"" என்று கூட வாதிடுவார்கள். இது சரியான பேச்சு அல்ல.   12:00:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
7
2017
கோர்ட் கோடி கணக்கில் ஏமாற்றியவரை விட்டுவிட்டு, சேலை திருடியவருக்கு ஓராண்டு சிறையா?
மல்லையா மட்டும் தானா பரபரப்பு கிளப்புகிறார்? யாரும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லையே.   11:59:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2017
சம்பவம் முஸ்லீம் பெண்களுக்கு ‛வாட்ஸ் அப் மூலம் ‛தலாக் அனுப்பிய கணவர்கள்
இது கம்ப்யூட்டர் காலம். இப்படி தான் இருக்கும். பெண்களின் மதிப்பு மரியாதை நம் நாட்டில் சிரிப்பாய் சிரிக்கிறது.   13:37:42 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
5
2017
சம்பவம் விரைவில் அதிவேக ரயில்கள்
அதிவேக ரயில்களை விட இரு நகரங்களுக்கு மணிக்கு ஒரு ரயில் விட்டால் மக்கள் தொந்திரவு இல்லாமல் ரயில் பயணம் செய்யலாம். டிக்கெட் முன்பதிவு தொல்லை இல்லாமல் பயணம் செய்யலாம். புறநகர் மின்சார ரயில்களில் செல்வது போல இரு பெரு நகரங்களுக்கு பயணம் செய்யலாம். இதனால் சாலைகளில் ஆம்னி பேருந்துகளின் தொல்லைகள் குறையும். எரிபொருள் சேமிக்கலாம், சாலை விபத்துக்கள் குறையும், காற்று மாசு கட்டுப்படும். எல்லாவற்றையும் விட சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இயற்கையை அழித்து விவசாய நிலங்களை எடுத்து சாலைகளை விரிவாக்கி கொண்டு செல்வதை தவிர்க்கலாம். இதே போல சரக்கு போக்குவரத்துக்கு தனியாக ரயில் பாதை அமைத்து அதையும் செய்யலாம். இதனால் சாலைகளில் பெருமளவு வாகன போக்குவரத்து கட்டுக்குள் வரும். எத்தனையோ நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும். பொருளாதாரமும் உயரும். இதை எல்லாம் தொலைநோக்கு பார்வையாக கொண்டு செய்வதை விட்டு தேவை இல்லாமல் மணிக்கு இத்தனை வேகத்தில் ரயில் விட்டு என்ன செய்ய போகிறார்கள்? அவசரமாக செல்பவர்கள் விமானத்தில் சொல்லட்டுமே. இதற்காக மறுபடியும் விவசாய நிலத்தில் தான் கை வைப்பார்கள். நம் நாட்டில் தேவை இல்லாததை எல்லாம் செய்வார்கள். மக்களுக்கு என்ன தேவையோ அது எது என்று தெரிந்திருந்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.   11:39:34 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
5
2017
பொது ரூ.3.5 கோடி தருவோம்னு சொன்னீங்க என்னாச்சு? சாக்ஷி ஆவேசம்
நம் நாட்டு அரசியல்வாதிகளை நம்பலாமா? ரொம்பவும் அழுத்தி கேட்டால் வடிவேலுவின் ""கிணத்தை காணோம்"" கதை தான் நடக்கும்.   10:33:48 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment