Advertisement
Rangarajan Pg : கருத்துக்கள் ( 731 )
Rangarajan Pg
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2015
அரசியல் தி.மு.க.,வுக்கு எதிர்காலம் இல்லையா? சட்டசபை தேர்தல் பதில் சொல்லும் கருணாநிதி ஆவேசம்!
முதலில் உங்கள் வீட்டு மானத்தை காப்பாற்றி கொள்ளுங்கள் திமுக தலைவர்களே . உங்கள் மீது விழும் வாசகர்களின் அர்ச்சனைகளை எப்படி தான் சகித்து கொண்டு நாளொரு அறிக்கையும் பொழுதொரு பொய்யையும் கூறி கொண்டு திரிகிரீர்களோ. தமிழையும் இனத்தையும் காத்தாராம். கேட்பதற்கே நாராசமாக இருக்கிறது. எப்படி தான் எல்லோருக்கும் எல்லாமும் தெரியும் என்று தெரிந்த பிறகும் இப்படி பொய் கூற இந்த வயதான இளைஞருக்கு மனம் வருகிறது. அது சரி, அவரவர் பிழைப்பை பார்க்க வேண்டாமா,, மானம் மரியாதை பார்த்தால் பணம் சம்பாதிக்க முடியுமா என்ற கேவல கோட்பாடுகளுடன் வாழ்பவர் தானே இந்த அரசியல்வாதிகள்.   08:33:03 IST
Rate this:
356 members
0 members
404 members
Share this Comment

ஜூலை
31
2015
பொது தமிழகத்தில் பேரமைதி போலீசார் நிம்மதி
ஒரு நல்ல மனிதர் இறந்தார் அதனால் மக்களும் நல்ல அற வழியில் அவர்களது அஞ்சலியை செலுத்தி இருக்கிறார்கள். திருடர்களும் தங்கள் திருட்டு தொழிலை செய்யவில்லை. அவர்களும் இந்த நல்ல மனிதருக்காக தற்காலிகமாக நல்லவர்கள் ஆகி இருக்கிறார்கள். நம் தமிழகமே அமைதியாக இருந்தது. நல்ல மனிதர் ஒருவருக்கே இவ்வளவு மாற்றம் என்றால் எல்லா தலைவர்களும் இவரை போல நல்லவர்களாக, எளிமையானவர்களாக, பொது வாழ்க்கையில் தூய்மையானவர்களாக இருந்தால் நம் நாட்டில் சமூக விரோத செயல்களே அற்று போகும் என்று தான் தோன்றுகிறது. ஐயா அப்துல் கலாம் அவர்கள் உயிருடன் இருக்கும்போது பல நல்ல விஷயங்களை கூறினார், நடத்தி காட்டினார். மறைந்த பிறகும் பல நல்ல விஷயங்களை அடையாளம் காட்டி விட்டு சென்றிருக்கிறார். இந்த நல்லவைகளை தொடர்வதும் துண்டிப்பதும் இனி அவரவர் கைகளில்.   09:23:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
31
2015
பொது தமிழகத்தில் பேரமைதி போலீசார் நிம்மதி
இந்த மூன்று நாட்கள் மக்களிடம் காணப்பட்ட இந்த மாற்றம் தான் உண்மையான பகுத்தறிவு. பகுத்தறிவு பகுத்தறிவு என்று பிதற்றும் திமுக, தி க போன்ற போலி பகுத்தறிவு கட்சிகள் இதை ஒரு பாடமாக கொள்ள வேண்டும். இந்த காலத்தில் எந்த அரசியவியாதியின் மரணத்திலும் இத்தகைய ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் அமைதியாக அஞ்சலி செலுத்தி இருக்காது. அராஜகம் தான் நடத்தி இருக்கும். காரணம் அவர்கள் மதுவும் பிரியாணியும் காட்டி வரவழைக்கபடிருப்பார்கள்.   09:17:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
30
2015
பொது யாகூப் தூக்கு உறுதி அதிகாலை 6.30 மணிக்கு தூக்கு!
மிக மிக தீவிரமாக இந்த கொலைகாரனின் கருணை மனு பரிசீலிக்கப்பட்டு கடைசி வரை நன்கு விசாரிக்கப்பட்டு தீர்க்கமாக கொடுக்கப்பட்டு தீர்ப்பு. மிக நல்ல தீர்ப்பு. யாரையும் உயிரை எடுக்கும் எண்ணம் இல்லை, ஆனால் கொலை குற்றவாளிகளுக்கு அதுவும் திட்டமிட்டு அப்பாவி மக்களை கொலை செய்த தீவிரவாதிகளுக்கு கருணை காட்ட கூடாது. இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்தாலோ அல்லது தண்டனை குறைப்பு செய்து சிறையில் வைத்திருந்தாலோ அரசுக்கு நஷ்டம், அதுவுமில்லாமல் இவனை விடுவிக்க கோரி இவனது ஆட்கள் விமானத்தையும் பிரமுகர்களையும் கடத்தி பணய கைதியாக வைத்து கொண்டு மிரட்டுவார்கள். ஆகவே இவனுக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனை நியாயமானதே. இந்த தீவிரவாதம் ஒழியட்டும், தீவிரவாதி நாய்கள் சாகட்டும், இவனுக்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை மற்ற தீவிரவாதிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையட்டும். நல்லதே நடக்கும்.   13:55:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
29
2015
அரசியல் தி.மு.க. போராட்டம் ஒத்திவைப்பு
போரூர் ஏரியை அகலபடுத்த இவர்கள் எதற்கு போராட்டம் செய்கிறார்கள் என்றால் அடுத்து இவர்கள் எப்படியாவது ஆட்சி அமைக்க நேரிட்டால் இவர்களது கழக கண்மணிகள் அந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதற்காக தான் இருக்கும். அப்படி ஆக்கிரமிப்பு செய்யும்போது ஏறி சிறிதாக குறுகலாக இருந்தால் ஆள் ஆளுக்கு பிரித்து கொள்ளும்போது சிறு சிறு இடங்களாக தான் கிடைக்கும், இதுவே ஏரியை அகலபடுதினால் பெரிய பெரிய ஏரியாவாக ஆக்கிரமித்து கொள்ளலாம் இல்லையா. அதனால் தான்.   13:36:14 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
29
2015
கோர்ட் ராஜிவ் கொலையாளிகளின் தண்டனை குறைப்பு சரிதான் மத்திய அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
இதே தினமலரின் இன்றைய செய்தியில் இந்தியாவில் ISIS தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் நடக்க கூடாது. அப்படியே நடந்தாலும் அந்த தீவிரவாதிகள் ஓரிருவர் வெடிகுண்டும் கையுமாக பிடிபட்டாலும் அவனை நான்கைந்து வருடங்கள் அல்லது பத்து வருடங்கள் சிறையில் வைத்து நம் நாட்டு வரி பணத்தில் அவனை தினமும் போஷித்து பிறகு ""அவனும் மனிதன் தானே, தவறு செய்வது மனித இயல்பு, செய்த தவறை மன்னிப்பது தெய்வ செயல் "" என்று தங்களை தெய்வத்துக்கு இணையாக இந்த நீதிபதிகளே நினைத்து கொண்டு அவனை மன்னித்து விட்டு விடுவார்கள். அந்த தீவிரவாதியால் இறந்தவர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சும்மா ஒன்றும் பேசாமல் அந்த தெய்வம் தந்த தீர்ப்பை ஏற்று கொண்டு போக வேண்டியது தான். இது தான் நம் நாட்டின் தற்போதைய நீதி பரிபாலனம்.   13:01:48 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
29
2015
கோர்ட் ராஜிவ் கொலையாளிகளின் தண்டனை குறைப்பு சரிதான் மத்திய அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
நம் நாட்டில் தான் குற்றம் புரிந்தவன் போலீசிடம் மாட்டி கொண்டால் டாடா காண்பித்து கொண்டே போலீஸ் வேனில் ஏறும் காட்சியை பார்க்கலாம். அவனுக்கு கவலை இல்லை.எப்படியும் அரசியல்வாதிகளோ அல்லது உணர்ச்சி வசப்படும் பொதுமக்களோ கூட அவனுக்காக பரிந்து பேசி அல்லது போராடி அவனை வெளியே கொண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு. நீதி துறையும் தற்போது எந்த குற்றத்தையும் கடுமையான கண்ணோட்டத்தோடு விசாரிப்பதில்லை, தண்டனை கொடுப்பதில்லை. கடும் குற்றம் புரிந்தவனை கூட பரிவோடு தான் விசாரிக்கிறது. இனி எதிர்காலத்தில் கொலை குற்றம் புரிந்தவன் மாட்டி கொண்டால் ""நான் என்ன கொலை தானே செய்தேன். அது ஒரு பெரிய குற்றமா, அதற்கு கூட தண்டனையா? "" என்று விவாதிக்கும் நிலை கூட ஏற்படும் போல தெரிகிறது/   12:10:23 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
29
2015
கோர்ட் ராஜிவ் கொலையாளிகளின் தண்டனை குறைப்பு சரிதான் மத்திய அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
பல வருடங்கள் சிறையில் இருந்ததால் இவர்கள் நிரபராதிகளா? இது ஒரு COLD BLOODED MURDER. பல வகைகளில் திட்டம் தீட்டி, நன்றாக வேவு பார்த்து நாள் குறித்து செய்யப்பட்ட கொலை. இதற்கு தூக்கு தண்டனை தான் தீர்வு. இவர்கள் உணர்ச்சி வசப்பட்டு உடனே முடிவெடுத்து கொலை செய்யவில்லை. செய்த கொலைக்கு இவர்கள் வருந்தவில்லை. இவர்களுக்கு தண்டனை குறைப்பு மற்றும் கருணை போன்றவவை தேவை இல்லை. நம் நாட்டு மக்கள் உணர்ச்சி வசப்பட்டு இவர்களுக்கு ஆதரவாக பேசி தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார்கள். இது தவறு. குற்றம் புரிந்தவன் அதற்கேற்ற தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். பல வகைகளில் குற்றம் புரிந்தவர் மாட்டி கொள்ளாமல் வெளியில் நடமாடி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அதை காரணம் காட்டி உண்மையான குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்க கூடாது. இவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதற்கு தூக்கு தண்டனை தான் சரியான தீர்வு. இத்தனை வருடங்கள் விட்டு வைத்ததே தவறு. இவர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கூறுபவர்கள் ஏன் அப்போது கருணையே இரக்கமே இல்லாமல் ஒரு படுபாதக கொலையை செய்தார்களே அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இவர்களுடைய செய்கையினால் தானே அமைதி பூங்காவாக அதுவரை இருந்த தமிழகத்தில் கூட தீவிரவாத செயல்கள் தலை தூக்கின.   11:15:27 IST
Rate this:
11 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
29
2015
பொது காருக்கு பெட்ரோல் கேட்கும் பிரதிபா
அப்துல் கலாம் அவர்கள் இருந்த பதவியில் இந்த அம்மாவும் இருந்தார்கள் என்பதே நம் நாட்டுக்கு ஒரு மிக பெரிய அவமானம். சில்லறை புத்தி இந்த அம்மாவை விட்டு போகவில்லை பாருங்கள். புனேவுக்கு சென்று அப்படி யாரிடம் என்னத்தை பிச்சை எடுக்க போகுதோ இந்த அம்மா. அதற்க்கு கூட நம் பணத்திலிருந்து பெட்ரோலா? இவர்களை போன்ற மக்கள் பணத்தில் ஜாலியாக பொழுதை போக்கி வாழ்கை நடத்தும் மக்கள் ஒரு உயரிய பதவியில் இருந்தார்கள் என்பதே நம் நாட்டுக்கு வெட்கக்கேடு.   09:58:02 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
26
2015
பொது 1.4 லட்சம் கி.மீ., நெடுஞ்சாலையின் இருபுறமும் பசுமை பழ மரம், பூச்செடிகள் வளர்க்க மத்திய அரசு முடிவு
மரம் நடுவதோடு மட்டும் நில்லாமல் ஆங்காங்கே சாலை ஓரங்களில் சிறிய சிறிய குட்டைகள் ((சிமெண்ட் தொட்டிகள் அல்ல)) ஏற்படுத்தி நீரை சேமித்து வைக்க வேண்டும். மரம் நடுவது ஒரு காரியமல்ல அவை உயிர் பிடித்து வளர வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும்.   21:42:58 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment