உண்மையை தைரியமாக எடுத்துரைத்த ஆசிரியரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அரசியல் சிபாரிசுகளுக்கே எல்லா விருதுகள் வழங்கப்படுகின்றன. இதை மாற்ற வேண்டியது அவசியம்.
03-மே-2013 11:32:42 IST
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து, நீண்ட நாட்களாக வெளியான வாயுவால், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, அந்த நிறுவனம் தான், பொறுப்பேற்க வேண்டும். இதற்காக, அந்த நிறுவனம், அபராதம் செலுத்த வேண்டும். இது வரை சரி .அதன் பின் சொல்ல பட்ட ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு, சென்னை ஐகோர்ட் விதித்த தடை, ரத்து செய்யப்படுகிறது என்பது ஏற்புடையது அல்ல .தண்ணீர் , காற்று ஆகியவை மாசு பட்டதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்றால் எப்படி அதனை திரும்ப நடத்த அனுமதிக்க முடியும்?. இன்னொரு போபால் விஷ வாயு இறப்புக்கள் இங்கு வருவதற்கு சுப்ரீம் கோர்ட், நேற்று அளித்த தீர்ப்பு வழிவகுத்துள்ளது. இதில் விழித்துக்கொள்ள வேண்டியது பாதிக்க பட்டுகொண்டிருக்கும் - பாதிக்க பட போகும் பொது மக்களே பொது மக்கள் நலனுக்கு எதிராக - பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதிப்படைய செய்யும் விஷ வாயுவை வெளிவிடும் ஆலையை மூட வேண்டியது அரசின் கடமை.
03-ஏப்-2013 08:20:33 IST
இடை விடாமல் முயன்று இன்று மக்களின் அங்கீகாரம் பெற்று சினிமா துறையில் கலக்க போகும் நீங்கள் பிறருக்கு ஒரு எடுத்துக்காட்டு. மனம் தளராமல் உழைத்தால் இன்னும் பல சாதனைகளை படைக்க உங்களால் முடியும், வாழ்த்துக்கள் .
18-மார்-2013 21:38:12 IST
போலீஸ் பாதுகாப்பு, செங்கோல் ஏந்திய ஊழியர், "மை லார்டு' என அழைப்பது போன்ற, நீதிபதிக்கு உரிய சம்பிரதாயங்கள், தனக்கு தேவையில்லை என, ஒதுக்கிய நீதி நாயகம் சந்துரு அவர்கள் இந்த மண்ணின் தவ புதல்வர் . பதவியால் பெருமை பெறுவோர் பலர் இருக்க , நீதி நாயகம் சந்துரு அவர்களால், அவர் இருந்த பதவி பெருமை பெற்றது . அவர்கள் நீடூழி வாழ இறை அருள் துணை நிற்கட்டும். அவர்களின் மக்கட் தொண்டுகள் தொடரட்டும்.
10-மார்-2013 01:48:45 IST
போலீஸ் பாதுகாப்பு, செங்கோல் ஏந்திய ஊழியர், "மை லார்டு' என அழைப்பது போன்ற, நீதிபதிக்கு உரிய சம்பிரதாயங்கள், தனக்கு தேவையில்லை என, ஒதுக்கிய நீதி நாயகம் சந்துரு அவர்கள் இந்த மண்ணின் தவ புதல்வர் . பதவியால் பெருமை பெறுவோர் பலர் இருக்க , நீதி நாயகம் சந்துரு அவர்களால், அவர் இருந்த பதவி பெருமை பெற்றது . அவர்கள் நீடூழி வாழ இறை அருள் துணை நிற்கட்டும். அவர்களின் மக்கட் தொண்டுகள் தொடரட்டும்.
08-மார்-2013 10:17:33 IST
மண்ணை வளம் குன்ற வைத்து செயற்கை கெமிக்கல் உரங்களை நம்ப வைத்து இயற்கைக்கு எதிராக பசுமை புரட்சி என்னும் ஒற்றை பெரிதாக சாதித்து விட்டதாக ஒரு மாய தோற்றம் உருவாக பட்டது உண்மை . இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி ஆகும் உணவு பொருட்களை பயன்படுத்துவோம். ஆரோக்கியமாக வாழ வழி வகை காண்போம். இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிப்போம் . மனித குலத்தை காப்போம்.
01-மார்-2013 08:33:10 IST
இன்றைய இந்திய நிலையை பிரதிபலிக்கும் எண்ண குமுறல் இது. . ஊழல் ஊழல் என்று நாம் அனைவரும் புலம்பும் இந்த நேரத்தில் நம்மை ஆட்டி படைக்கும் ஊழல் எப்படி எதனால் எங்கு ஆரம்பம் ஆகின்றது என்று கண்டறிந்து களை எடுக்க வேண்டியது அவசியம். இதில் என்னுடைய அறிவுக்கு எட்டிய சில கருத்துக்களை இங்கே பல முறை சொல்லி உள்ளேன்.தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் தேர்தலில் ஒரு பைசா கூட சொந்த பணத்தை செலவழிக்க முடியாத அளவிற்கு தேர்தல் விதி முறைகளை மாற்றி அமைத்தால் அரசியலில் பணம் செலவழித்து அதை திரும்ப எடுப்பதற்காக சில அரசியல் வியாதிகள் வாங்கும் லஞ்சத்தை ஒழிக்க வாய்ப்பு உள்ளது. லஞ்சம் வாங்கும் அனைவரின் சொத்துக்களையும் பறி முதல் செய்து கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே லஞ்சம் தலை தூக்க முடியாமல் தடுக்க முடியும். இன்றைய செய்தியில் ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கு குறையாக லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை எடுக்க கூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கட்டளை வந்ததாக சொல்ல படுகின்றது. இது லஞ்சம் வாங்குவோரை ஊக்க படுத்த செய்யும் செயல் போலவே தோன்றுகின்றது . நாம் எங்கு போகின்றோம் ? இதன் முடிவு என்ன? என்று முடியும் இந்த லஞ்ச மோகம் ? என்று பிறக்கும் லஞ்சமே இல்லாத நாடு ? காமராஜரை - மக்களுக்காக உழைத்தவரை , நாம் மதிக்க தவறியதன் - நாம் போற்ற தவறியதன் - அவரை ஆட்சிகட்டிலில் இருந்து இறக்கியதன் விளைவு இது .
17-பிப்-2013 21:05:32 IST
"பிரிட்டிஷ் எம்பயர்' விருது பெறும் டாக்டர் கீதா நாகசுப்ரமணியத்துக்கு வாழ்த்துக்கள். தமிழ் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த உங்களுக்கு மேலும் பல சிறந்த விருதுகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். உங்களால் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
06-பிப்-2013 08:49:26 IST
விருது பெறும் காவல் துறையினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே 2006ல் ஜனாதிபதி விருது, 2009ல் முதல்வர் விருதுகளை பெற்று, தற்போது ஜனாதிபதியின், தகைசால் பணிக்கான விருதை, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியிடம் பெறுகின்ற தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைவர் ஏ.எம்.எஸ். குணசீலன் அவர்களும் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.ஜி.,பி., சைலேந்திரபாபு அவர்களும் நமது காவல் துறைக்கு ரோல் மாடல் ஆக பணியாற்றுபவர்கள் . அவர்களின் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
26-ஜன-2013 07:49:44 IST