சரியாக சொன்னீர்கள் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்'' என்றார் முதியவர் இந்த பாணியை இந்திய சந்தையில் சீன கம்பெனிகள் நன்கு கையாளுகின்றன மக்களின் மனோபாவம் மாறவேண்டும் மாறுமா ?
30-மார்-2013 13:02:04 IST
சாய் ராம் ஒரு இஸ்லாமானவர் என்பது குண்டுவைத்தவர்களுக்கு தெரியுமா? இந்து முஸ்லிம் பிரச்னை இங்கே தேவை இல்லை இது அரசியலாக கூட இருக்கலாம் இல்லை நாட்டின் வளர்ச்சிபாதையை மாற்றும் வேலையாக கூட இருக்கலாம் அப்பாவி தமிழர்களை கண்காணித்த உளவு பிரிவு உள்நாட்டு பாதுகாப்பினை கண்காணிக்க தவறியது ஏன் உள்துறை அமைச்சு என்பது எதோ ஒரு பதவி அல்ல நாட்டின் பாதுகாப்பிற்கான கண்காணிப்பாளர் பதவி காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை பாதுகாப்பு சரிவர கண்கானிக்கபடவில்லை நிலையான அமைச்சர் உறுதியான நிலைப்பாடு இல்லை தமிழகத்தில் காவல்துறை மீது நம்பிக்கை ஆட்சியாளர்களை பொறுத்தே அமைகிறது இன்றைய முதல்வர் காவல்துறையின் அதிகாரத்தை சரியாக பயன் படுத்துகிறார் ரௌடி மற்றும் மதவாதம் சற்று பயந்து இருக்கிறது எந்த சாதியையும் அரசை மிரட்ட முடியவில்லை உதாரணதிற்கு தமிழக முதல்வர் இந்திய உள்துறை அமைச்சராகி இருந்தால் தீவிரவாதம் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் நான் அம்மாவின் ஆதரவாளர் அல்ல காங்கிரஸ் அதிகாரத்தை சரியாக பயன் படுத்த தவறிவிட்டது என்ற ஆதங்கமே
23-பிப்-2013 17:37:25 IST
எனக்கு புரியவில்லை காதலர் தினம் என்று கொண்டாடினால் ஜாதியை ஒழிக்கலாம் என்று கருத்து கூறிய மாண்புமிகு மக்களவை உறுப்பினர் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதி சான்றிதழை ஒழிப்பார்களா?
15-பிப்-2013 23:18:07 IST
தவறான தீர்ப்பு போலீஸ் சாருக்கு எதிரான இந்த தீர்ப்பு குற்றவாளிகள் தற்கொலை செய்துகொண்டால் போலீஸ் பாதிக்கப்படுமானால் எந்த விசாரணையும் சரிவர நடக்காது கருப்பாயி குற்றமற்ற பெண் நிரபராதி என நிருபிக்க படவில்லை அவ்வாறு இருக்க இதனை ஆண்டுகாலம் பணிபுரிந்த காவல் துறையினர் மீது நீதி துறை எப்படி பலி போடா முடியும் ?கருப்பாயி இறந்து போனதை மட்டும் கருதி கொண்டு இந்த தீர்ப்பு விசாரணை சரியாக விசாரிக்க படவில்லையோ என தோன்றுகிறது கருப்பாயி ஏழை என்பது ஓன்று தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஓன்று என அனுதாபம் கூட இந்த தீர்ப்புக்கு காரணமாக இருக்கலாமோ?பாதிக்க பட்டவர்கள் மேல் முறையீடு செய்ய வேண்டும்
15-பிப்-2013 00:56:32 IST
தவறான தீர்ப்பு போலீஸ் சாருக்கு எதிரான இந்த தீர்ப்பு குற்றவாளிகள் தற்கொலை செய்துகொண்டால் போலீஸ் பாதிக்கப்படுமானால் எந்த விசாரணையும் சரிவர நடக்காது கருப்பாயி குற்றமற்ற பெண் நிரபராதி என நிருபிக்க படவில்லை அவ்வாறு இருக்க இதனை ஆண்டுகாலம் பணிபுரிந்த காவல் துறையினர் மீது நீதி துறை எப்படி பலி போட முடியும் ?கருப்பாயி இறந்து போனதை மட்டும் கருதி கொண்டு இந்த தீர்ப்பு விசாரணை சரியாக விசாரிக்க படவில்லையோ என தோன்றுகிறது கருப்பாயி ஏழை என்பது ஓன்று தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஓன்று என அனுதாபம் கூட இந்த தீர்ப்புக்கு காரணமாக இருக்கலாமோ?பாதிக்க பட்டவர்கள் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
15-பிப்-2013 00:17:57 IST
சர்வதேச கட்டமைப்பு விசா வழங்க பயப்படும் அளவிற்கு கதையின் சாராம்சம் படத்தை பொழுது போக்கிற்கு எடுக்காமல் ஓவர் சீஸ் லாக் அப் நிகழ்ச்சியை போல் இருந்தது கதையின் ஒரு பகுதி சொந்த மண்ணில் அடுத்த நாட்டுக்காரன் நாட்டமை பண்ண நினைக்கிறது தப்புன்னு சொல்ல வந்து அமெரிக்கன்ஸ் அடையாளமாக மாறி இந்தியன் ரா ஆபீசர் இந்தியன் சொல்ஜெர் என்று முடித்து குழப்பிடாறு கடைசியில் ஜோர்ஜ் புஷ் போட்டவை சுட்டு தள்ளிட்டாரு நல்ல சினிமாக்ராபி வேற ஒன்னும் பெருசா தோணலை ஆப்கான் மட்டுமில்லை ஜிஹாதி என்ற பிரச்னை உலகம் புல்லா இருக்கு
13-பிப்-2013 10:15:13 IST
நன்றி மண்ணின் மைந்தன் கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை விஸ்வரூபமெடுத்து வெற்றி அடைய செய்த மமுக அமைப்பின் தலைவர்களுக்கு நன்றி தமிழக அரசிற்கு நன்றி அரசியலுக்கு அப்பாற்பட்டவரை அரசியலுக்குள் இழுக்காதீர்கள் கமலஹாசனை அடக்கி ஆழ நினைக்காதீர்கள்ஒவ்வொரு நடுவும் பார்க்க துடிக்கும் படம்
30-ஜன-2013 13:00:42 IST
பன்மொழி பழகிய முகநூல் அன்பர்கள், தாய் தமிழ்மொழியினை கலந்துரையாடலுக்கு பயன் படுத்துங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் தமிழ் மொழியை மறந்த நாம் தமிழ் மொழியின் பொருட்சுவையை பகிர இந்த தளத்தை பயன்படுத்துவோம்
19-ஜன-2013 15:50:54 IST