தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் தமிழ் தமிழ் என்று கூறி கொண்டு தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வேறு மொழி பெயர் வைத்துள்ளார். முதலில் அவர் பெயரான "கருணாநிதி" நூறு சதவிகித சமஸ்க்ரித பெயர். அவர் பேரன் (கனிமொழி) மகன் பெயர் "ஆதித்யா" சமஸ்க்ரித பெயர். ஸ்டாலின் ஆங்கில பெயர். அவர் வாரிசுகளின் நிறுவனங்கள் பெயர் ஆங்கில பெயர். அவர் இணைவி நடத்தும் நிறுவன பெயர் "ராயல் என்டர் பிரைசஸ்" பெயர் ஆங்கில பெயர். ஆகவே, இந்த அரசியல் தலைவர்கள் உபதேசம் எல்லாம் ஊருக்கு தான்.
18-ஜூன்-2013 06:43:37 IST
இந்த கதை எல்லாம் இருக்கட்டும்........ திருவாரூரில் இருந்து சென்னைக்கு திருட்டு ரயிலில் வந்த தாங்கள், தற்போது ஆசியா பணக்காரர் லிஸ்டில் முதலிடம் பிடித்தது எப்படி என்பதற்கு சர்வதேச நீதிமன்ற நீதிபதியை வைத்து ஒரு விசாரணை கமிஷன் அமைக்கலாமா? தமிழ், தமிழ் என்று கூறிக்கொண்டு, உன் முகத்தை மஞ்சள் துண்டால் மூடிக்கொண்டு, தமிழன் தலையில் எவ்வளவு நாளுக்கு மிளகாய் அறைக்கபோகிறாய். தமிழ் மொழியும், தமிழ்நாடும் யாரை வாழ வைத்ததோ இல்லையோ, உங்களை போன்ற தமிழின துரோகிகளை நன்றாக வாழ வைத்துள்ளது என்பதே கசப்பான உண்மை......உண்மை.....உண்மை....... ஜெய் ஹிந்த்
30-மே-2013 10:22:12 IST
நாடு சுதந்திரம் அடைந்த 1947 முதல் காங்கிரஸ் கட்சியும், அதன் கிளை கட்சிகள் திமுகவும் பல்லாயிரம் கோடிகள் ஊழல் செய்து இந்திய மக்களை வடிகட்டிய முட்டாள்கள் ஆக்கி வருகின்றன. இது வரை ஊழல் செய்த யாராவது ஒரு அரசியல்வியாதி தண்டனை அடைந்து இருக்கிறாரா? நடப்பது எல்லாம் நாடகம். எப்படி CBI நூறு கோடி லஞ்சம் பெற்ற சோனியாவின் தாய் மாமா குவத்ரோச்சியை பிடிக்க நானுறு கோடி செலவு செய்து, இது வரை பிடிக்காமல் நாடகம் ஆடுகிறதோ, அது போல் இதுவும் ஒரு நாடகம். இந்திய மக்கள் முட்டாள்கள் ஆக இருக்கும்வரை இது போன்ற நாடகங்கள் தொடரும். என்று, நேரு குடும்பம் இந்தியாவை விட்டு போகிறதோ, அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம். அது வரை மன்மோகன் சிங் தலைமையில் இது போன்ற மெகா ஊழல்கள் தொடரும்.
28-மே-2013 09:43:22 IST
போபோர்ஸ் புகழ் குவத்ரோச்சி (சோனியாவின் தாய்மாமா) வழக்கு எப்படி சிபிஐ மூலம் முடிவுக்கு வந்தோதோ, அதுபோல் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்பதை இந்திய மக்கள் நன்கு அறிவார்கள். என்று நேரு குடும்பமும், காங்கிரஸ் கட்சியும் இந்தியாவில் இருந்து நிரந்தரமாக விரட்டபடுகிறதோ, அன்று தான் இந்திய மக்களுக்கு உண்மையான சுதந்திரம். ஜெய் ஹிந்த்
28-மே-2013 09:42:48 IST
தமிழ் நாடு காங்கிரஸ் குழப்பத்தின் உச்ச கட்டத்தில் உள்ளது........ அதற்கு உதாரணம், காங்கிரஸ் திமுக கூட்டணி முறிந்தது என்று சொன்னவுடன் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து மகிழ்ந்தார்கள். பிறகு, டெல்லியில் நாடகம் அரங்கேறி, காங்கிரஸ் திமுக கூட்டணி மீண்டும் தொடங்கியது என்றவுடன் மீண்டும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து மகிழ்ந்தது தமிழ்நாடு காங்கிரஸ். மொத்தத்தில், காங்கிரஸ் திமுக கூட்டணி நூறு சதவிதம் சந்தர்ப்ப வாத கூட்டணி. மேலும், ஒரு வேளை, காங்கிரஸ் திமுக கூட்டணி முறிந்து தேர்தலில் தனியாக போட்டியிட நேர்ந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக காங்கிரசும், திமுகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி சேறு வாரி பூசிகொள்வார்கள். மக்களுக்கு, யார் குற்றவாளி என்பது தெரிந்து இருக்கும். ஆக மொத்தத்தில், இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும். அது தான், தமிழ்நாட்டிற்கு நல்லது. ஜெய் ஹிந்த்
03-ஏப்-2013 09:08:13 IST
ஊழல் செய்பவர்கள் சாகும்வரை தூக்கில் இடப்பட வேண்டும். ஆனால், இத்தாலி முசோலினி காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பம் இந்தியாவில் இருக்கும்வரை இது நடக்காது. மேலும் இங்கு ஒரு நண்பர் என்ன கொடுமை சார் இது? காந்தி பிறந்த நாடா இது? என்று கேட்டு இருக்கிறார். இந்த சுதந்திர தின உரையில் இந்திய பிரதமர் காந்தி பெயரை தப்பி தவறிகூட ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. ஆளும் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் இப்படி உள்ளது. அவர்களுக்கு தேவை காந்தி படம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் தான் தேவை, அதுவும் கோடிகள் கணக்கில், கொள்ளை அடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணம். எனவே, காந்தியை மறந்ததில் வியப்பில்லை. ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
03-ஏப்-2013 09:03:51 IST
அட பதர்களா.... நடப்பது அனைத்தும் நாடகமே. என்னோவோ காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் உத்தம புத்திரர்கள் போல நடிக்கிறார்கள். இந்த கூட்டு களவானியில் காங்கிரஸ், திமுக உடந்தை. "நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழு" இது தான் காங்கிரஸ் மற்றும் திமுகவின் தாரக மந்திரம். ஏற்கனவே காங்கிரஸ் குவத்ரோச்சி ( சொக்கதங்கதின் சொந்தகாரர் ), சுரேஷ் கல்மாடி நாடகங்களை காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாக நடத்தி இந்திய மக்களை அடி முட்டாள்களாக்கி விட்டது. இந்திய மக்கள் எப்போதும் ஏமாற தயாராக இருக்கும்போது, இது போன்ற நாடகங்கள் காங்கிரஸ் கட்சியால் அடிக்கடி நடத்தப்படும் என்பதே உண்மை.
03-ஏப்-2013 09:03:18 IST