Advertisement
Kumar : கருத்துக்கள் ( 183 )
Kumar
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
21
2016
அரசியல் கருணாநிதியை இகழ்வதில் போட்டா போட்டி
ஏன்யா ராமசாமி சுந்தரம், இப்போதைய முதல்வரோடு ஏன் இவரை ஒப்பிடவில்லை? அம்மா செய்த (அறிவுப்பு செய்த அல்ல) நன்மைகளையும் எடுத்து சொல்லுங்களேன்? அப்போதுதானே இன்னும் முன்னாள் முதல்வரை அசிங்கப்படுத்தலாம்.   23:22:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2016
அரசியல் எதையும் சந்திக்க நான் தயார் ஜெ.,வுக்கு சசிகலா புஷ்பா சவால்
இங்கு பதிவு செய்த சிலர் எம்பி பதவியை தூக்கி எறிந்துவிட்டு சசி அக்கா போராடலாமே என்று பதிவு செய்கிறார்கள். ஜெயா அம்மா முதல்வர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு இவருடன் எப்படி போராட முடியாதோ அப்படிதான் சசி அக்காவாலும் பதவியை தூக்கி எறிந்துவிட்டு போராட முடியாது. அரசு பதவிகள், அரசியல் கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவச குண்டலங்களே.   16:27:14 IST
Rate this:
25 members
0 members
30 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2016
பொது வசூலில் கபாலி சாதனை கிடா வெட்டி விருந்து
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன். சிந்திக்க வேண்டுகிறேன். திரையில், கனவுலகில் எல்லோரையும் மகிழ்வித்ததால் எல்லோரும் போற்றும் சூப்பர் ஸ்டார் தமிழ்நாட்டில், நிஜத்தில் மக்களுக்கு நல்லது செய்து எல்லோரையும் மகிழ்வித்து நிஜமான சூப்பர் ஸ்டாராக இருக்க விரும்புகிறேன். ரஜினி அவர்கள் பொதுவாக வெளியே வரும் போது ஒரு வெள்ளை சட்டை, வேட்டி முகத்தில் தாடியுடன் சன்யாசி போல எளிமையாக வருவது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் கபாலி படத்தின் பட்ஜெட்? சுமார் 100 கோடிக்கு மேல் சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் மட்டும் 20 கோடிக்கு மேல் மற்றும் லாபத்தில் பங்கு வேறு இவ்வளவு எளிமையான மனிதருக்கு எதற்கு இவ்வளவு பணம்? நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி நடத்தி வருகிறார் ரஜினி என்னும் மகா நடிகர் செய்தது என்ன? 2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன். சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. “ஆறிலிருந்து அறுபது வரை”, “ஜானி” போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். “எந்திரன்” னிலும் உங்கள் நடிப்பு அருமை. ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம். இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர். திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும் இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள். “சூப்பர் ஸ்டார்” என்று உங்கள் இடத்தில் இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட எங்களால் முடியவில்லை. என்னுடைய கேள்வி இதுதான்…. நீங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன? “அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா” என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான். நீங்களே கதை,வசனம் எழுதிய “பாபா” படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட பெரியது மக்கள்சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை சொன்னது நீங்கள்தான். கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார். நேற்று வந்த நடிகர் சூர்யா கூட “அகரம் அறக்கட்டளை” தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின் கல்விசெலவுகளை எற்றுவருகிறார். நடிகர் விஜய், நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய் மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார். ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன? “நான் ஆன்மிகவாதி”, “தாமரை இலை தண்ணீர் போல வாழ்பவன்”, “இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்” என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின் எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும், வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த ‘இமயமலை’ அளவுக்கு முரண் இருக்கிறேதே. நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின் காரணத்திற்கு வருகிறேன். நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகை… கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் மூன்று கோடி ருபாய். 1991 – இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் “ஆசிரமம்” என்று ஒரு பள்ளியை சென்னையில் தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பெயரை பார்த்துவிட்டு,அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன். அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க முடிந்த ஒரு பள்ளி என்று. சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள். இன்று, சென்னையில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்… உங்களது ஆஸ்ரமும் ஒன்று. TASSC (The Ashram School Specialised Curriculum) என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும் உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன். “அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்” என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி. சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை “ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்” என்று வெளிப்படையாகவே புகார் தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா? தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும் “பிம்பங்கள்” எல்லாம் உடைந்து சுக்குநூறாக சிதறிவிடுமே சார். முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார வீட்டு பிள்ளைகளை சேர்த்துகொள்ளும் உங்கள் பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல் சேர்த்துகொண்டால் என்ன? சமிபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது. அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன். நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின் தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள் நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின் தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா? சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும், புகழும் குவிப்பது நியாயமானதே.. அதுதான், சினிமாவில் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன் சார் உங்களுக்கு மனம் வரவில்லை? “என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா”. – படையப்பா படத்தின் பாடல் வரிகள் நினைவில் இருக்கிறதா? சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க போகிறீர்கள்? நீங்கள் அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ, அதிகாரிகளை போன்று லஞ்சம் வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன் படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள் நாங்கள். சென்னை மழை வெள்ளத்தின் போது நீங்கள் செய்த உதவிகள் தான் அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளானது ஏன் கமல் போன்ற நடிகர்கள் உதவி செய்யவில்லை இருந்தாலும் அவர்களை விட்டு விட்டு உங்களை மட்டும் விமர்சனம் செய்ய காரணம் மற்ற நடிகர்கள் யாரும் உங்களை போல ரசிகர்களை சுய லாபத்துக்காக பயன்படுத்துவதில்லை உணர்வுபூர்வமான வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள் சொந்த ‘பிசினஸ்”க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க, ரஜினி சார். ரசிகர்களுக்கு பொதுவான சில கேள்விகள் 100 கோடி செலவு செய்யாமல் படம் எடுக்க முடியாதா? தற்போது எல்லாம் சில லட்சங்களில் எடுத்த படங்கள் நல்ல வரவேற்பை பெறுகிறதே? பிறகு ஏதற்கு 100 கோடி ஆக உங்களின் நோக்கம் சினிமா என்ற பெயரில் உச்ச நடிகரை வைத்து மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும் என்பது தான் ஒரு திரைப்படத்தின் நோக்கம் இதுவா? ஒரு திரைப்படத்தை தயாரிக்க 100 கோடி செலவு செய்ய கூட தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள், ஏழை மக்களுக்கு 1 ரூபாயக்கு உதவி செய்ய மனம் வருவதில்லை ஏன்? 100 கோடி போட்டால் 200 கோடி வரும் அது முதலீடு திருட்டு விசிடிக்கு எதிராக போராடும் சினிமாகாரர்கள் தியேட்டரில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்களுக்கு ஆதரவாக போராடியது உண்டா? ரசிகர்கள் தான் முட்டாள்களாயிற்றே படம் பார்க்க 5000 ருபாய் கூட கொடுக்க தயாராக இருப்பார்களே எனது தலைவர் படம் 100 கோடி வசூல் சாதனை, Record Break ing என்று மார்தட்டிக் கொள்ளும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல ஆசை படுகிறேன், அந்த பணம் ஏழைகளுக்கு உதவ போகிறதா? வசதியில்லா மாணவர்களின் கல்விக்கு உதவவா போகிறது ?ஒரு கோடிஸ்வரனை மேலும் கோடிஸ்வரனாக்க நமது 120 ருபாய் போகிறது அவ்வளவு தான் இதில் என்ன அவ்வளவு பெருமை நமக்கு இதில் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வேறு வெட்கக்கேடு சாதாரண மக்கள் 10,000 போன் வாங்கினால் 300 ரூ முதல் 500 ரூ வரை வரி ஆனால் கோடிக்கணக்கில் எடுக்கபடும் படங்களுக்கு வரி விலக்கு? அதற்காக திரைப்படங்களே பார்க்க வேண்டாம் என்று சொல்ல வில்லை ரசிகர்களுக்காக நேர்மையாக பாடுபடும் எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள் அவற்றை வரவேற்போம். மக்களாகிய நாம் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால் நம்மை சுற்றி நடக்கும் பல அரசியல்கள் புலப்படும் அரசியல்வாதிகள் மக்கள் முன் சிறந்த நடிகர்களாகவும், சினிமா நடிகர்கள் திரைக்கு பின்னால் மக்களை சுரண்டும் சிறந்த அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. சிந்திப்பீர்   08:11:03 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2016
பொது புழக்கத்தில் ரூ.400 கோடி கள்ள நோட்டுகள்
தமிழ்நாட்டு கடனை இந்த சிஸ்டம் மூலமா அடைச்சிடலாம் போலிருக்கே   07:30:41 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2016
அரசியல் அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட ஜெ., காரணம் எம்.எல்.ஏ., பேச்சு
இதுக்கு அம்மா என்ன பதில் சொன்னாங்க? சிரித்து புளகாங்கிதம் அடைத்திருப்பார்களே... அம்மாவை சொர்க்கலோகத்துக்கே எடுத்துச்செல்லும் கருத்து இது. இப்படி இன்னும் கொஞ்சம்பேர் கிளம்பினால் ரொம்ப என்டர்டெய்ன்மெண்டாக, கலகலப்பாக இருக்கும்.   23:35:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
31
2016
உலகம் முஸ்லிம் ராணுவ வீரரின் பெற்றோரைகிண்டலடித்து சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்
துரும்புக்கு வாய்க்கொழுப்பு அதிகம். வெறுப்பு அரசியலை நடத்துகிறார். அதே நேரத்தில் முஸ்லீம் பயம் அமெரிக்கர்களுக்கு நிறையவே உண்டு. பலர் அந்த பயம் இல்லாதது போல நடிக்கிறார்கள். துரும்புதான் ஜெயிப்பார்.   01:12:13 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
25
2016
கோர்ட் விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ்
இது முருங்கை மரத்தில் ஏறி குட்டி சாத்தானை பிடிக்கும் விக்கிரமாதித்தன் கதை. அடுத்த நோட்டீஸ் ரெடியாகிறது.   08:53:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
26
2016
அரசியல் தே.மு.தி.க.,வை பார்த்து அ.தி.மு.க.,வுக்கு பயம் சொல்கிறார் பிரேமலதா
முழு விஷயங்களை போடாமல், பிட் பிட்டா விஷயங்களை போட்டு பெயரை கெடுக்காதீர்கள்.   16:10:22 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
25
2016
அரசியல் சட்டசபையில் தி.மு.க., உறுப்பினர்கள் அமளி
பேர் சொல்லி பேசுவது என்ன தவறு? பேசியதில் தவறு இருந்து அதை சட்டப்பேரவை தலைவர் நியாயப்படுத்தினால் வெளிநடப்பு தவறில்லை. பெற சொல்லிட்டான், பேர்ல முதல் எழுத்த சொல்லிட்டான் ...... சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.   16:31:52 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
25
2016
கோர்ட் விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
நரி, குளித்துக்கொண்டிருந்த யானையை வெளியே வரும்படி மிரட்டியதாம். கேட்டால் என் ஜட்டியை காணவில்லை அதனால்தான் என்றதாம்.   16:20:57 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment