படிச்சா எங்கேயும் வேலை இல்லை ,இந்த வருடமே பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் கல்லூரி வளாகத் தேர்வு (கேம்பஸ்) முறையில் பல தகுதி திறமை வாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட வில்லை .உலகப்பொருளாதார மந்த நிலை இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தேக்கம் பின்னடைவு காரணமாக வேலை வாய்ப்புகள் வெகுவாக குறைந்து உள்ளதால் பொறியியல் கல்வியில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து படிப்பதற்கு பலர் நிச்சயம் யோசிக்கத்தான் வேண்டும் .பல நிறுவனங்கள் தற்போது வேலையில் இருக்கின்ற நபர்களையே வீட்டுக்கு அனுப்பி வேலை இழப்புக்கள் அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் புதிதாக வேலை வாய்ப்புகள் அமைவது சந்தேகமே i எனவே இந்த வருடம் பல தனியார் பொறியியல் கல்லூரிகள் பணத்தை கொடோகளில் அறுவடை செய்யமுடியாது நிச்சயம் "டல் "தான் .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
21-மே-2013 04:25:56 IST
பொருளாதார வளர்ச்சி என்று கூறுகிறீர்கள். தற்போது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றதை பார்க்க முடிகிறது. உலக அளவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் பல முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களே இந்த வருடம் கல்லூரிகளுக்கு சென்று திறமை மிகுந்த மாணவர்களை கேம்பஸ் தேர்வு செய்யாமல் நிறுத்திவிட்டது. சென்ற வருடம் தேர்வு செய்த மாணவர்களுக்கு இனி வேலை கிடைக்குமா என்பதும் மிகவும் சந்தேகமே. பலர் காத்திருப்பில் உள்ளனர். முதலில் உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிற்கு ஏதும் பாதிப்பு இருக்காது என பொருளாதார மேதைகளான நிதி அமைச்சர் ப.சி ,மன்மோகன் சிங் ,அன்றைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் பிறகு சிறிது நாட்களிலேயே தங்களுடைய கூற்றை திருப்பி விட்டனர். உலக அளவில் பாதிப்பு ஏற்பட்டால் அது இந்தியாவிற்கும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்தர் பல்டி அடித்து விட்டனர். தற்போது இந்தியாவிலும் பல இடங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருவதை கண்கூடாக க் காண முடிகிறது .எனவே பொருளாதார வளர்ச்சி நிரந்தரம் இல்லை .பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டால் அந்த நாட்டில் பிச்சைக்காரர்கள் இருக்கக் கூடாது ,வறுமை இருக்கக் கூடாது.ஆனால் நம் நாட்டில் இது இரண்டும் குறையவே இல்லை .இவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது .எனவே நாம் காண்பது உண்மையான வளர்ச்சி இல்லை இது கானல் நீர் வளர்ச்சியே
20-மே-2013 13:55:33 IST
கோடி மரம் வெட்டிய அபூர்வ அரசியல்வாதி ஆக வேண்டாமா அவர் ,நலம் பெற்று மீண்டு வரட்டும் அன்று அசோகர் மக்களின் நலன் கருதி மரம் நட்டார் ,அவர் சரித்திர கல்வெட்டில் இடம் பெற்றார் ,இவர் மரத்தை வெட்டி கல்வெட்டில் தன் பெயர் கட்டாயம் இடம் பெறச்செய்யப்போகிறார் .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
20-மே-2013 11:38:20 IST
ஒரு வழியாக இளைஞர் முதல் பெரியவர்கள் வரை பொன்னான நேரத்தை சீரழிக்கும் கிரிக்கெட் விளையாட்டை அழித்து விட்டீர்கள் ,உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
20-மே-2013 07:55:12 IST