நெஜமாலுமே வீடா இல்லை, செட்டிங்ஸா?.. ஏன்னா, நம்ம T .R ன்னாலே செட்டிங்க்ஸ் தான் ஞாபகத்துக்கு வருது.. நாம பாட்டுக்கு எதார்த்தமா ஜோக் அடிச்சா தலைவர் கோவிச்சுட்டு "செட்டிங் வீடு அது சினிமால.. செங்கல் வீடு அது நிஜ வாழ்வுல.." ன்னு தலையைக் கோதிக்கிட்டு பேஜார் பண்ணிடப் போறாரு..
12-ஜூன்-2013 23:06:47 IST
அன்புள்ள ஸ்வேதா.. உமது இலட்சியங்கள் மாத்திரம் உன் கண்களுக்குப் புலனாகட்டும்.. நீ இன்னார் பேதி, இன்னார் மகள் என்கிற எவ்வித அடையாளங்களையும் மனதினின்று தூரம் தூக்கி எறிந்து விடு.. ஓர் உயர்தரத்தை உனது வாழ்வில் நீ அடைந்த பிற்பாடு, உன் தாய் போல உன் தாத்தா போல இருக்கிற இன்னும் பலரையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் மாற்றி அமைப்பது குறித்து யோசி.. இப்போது, உனது படிப்பில் மட்டுமே உமது கவனம் முழ்தும் இருக்கட்டும் பெண்ணே..
10-ஜூன்-2013 22:46:14 IST
அரசாங்க ஊழியர்கள் மாத்திரம் வெங்காயம் தக்காளி வாங்கி சாப்பிட்டால் போதும்.. மற்றவர்கள் சும்மா அதைப் பார்த்து ஜொள் விட்டுக் கொண்டிருந்தால் போதும் .. என்று சொல்லாமல் சொல்கிறது அரசாங்கம்.. .. பகிர்ந்து உண்கிற பண்பாடு ஏற்கனவே நமது கலாசாரத்தில் காணாமற்போய் விட்டது.... மேலும் மேலும் சுயநலம் மாத்திரமே மேலோங்க வழி வகுக்கிற விதமாக ஒரு சாரார் சற்றும் சிரமமே அற்று வசதியான வாழ்வினை அனுசரிக்க, அரசாங்க வேலையற்ற இன்னொரு சாராரோ அகதிகள் போல வாழ்வினை எதிர்கொள்ள வேண்டிய அவலத்துக்கு ஆளாகித் தவிப்பது ஏன் எவருக்கும் புலனாகவில்லையா அல்லது அதையெல்லாம் கண்டு கொண்டு அதற்கு ஓர் தகுந்த தீர்வினை வகுக்கிற மேன்மையான குணம் இல்லையா?.. தேர்தல் நெருங்குகிற சமயத்தில் மாத்திரம் எல்லா தரப்பினருக்கும் சமவிகிதத்தில் சலுகைகளை அறிவிக்கிற அரசு, மற்ற காலங்களில் அரசாங்க ஊழியர்களை மாத்திரமே மாற்றி மாற்றி உபசரிக்கிறது.. இதற்கெல்லாம் எவர் தீர்வு காண்பது, என்றைக்குக் காண்பது??
07-ஜூன்-2013 21:26:47 IST
எய்தவனிருக்க அம்பை நொந்து கொள்வது போல... ஒரு மாணவன் நன்கு கற்று தேர்வு பெறும் பொறுப்பு அந்தந்த வகுப்பாசிரியர் வசமிருக்க.. அதனை விட முக்கியமாக, எதிர்காலத்தில் தான் ஓர் உருப்படியான குடிமகனாக கவுரவமான முறையில் இந்த சமூகத்தில் ஓர் அந்தஸ்த்து பெற்றுத் திகழ வேண்டும் என்கிற அக்கறை ஆர்வம் அனைத்தும் கல்வி கற்கிற மாணவனுக்கு இருக்க வேண்டும்.. இவர்களை எல்லாம் மேய்க்கிற பொறுப்பு நிச்சயம் தலைமை ஆசிரியருக்கு உண்டு என்பதில் ஐயமில்லை... ஆனால் அவர்கள் மட்டுமே குற்றவாளிகள் போன்று அவர்களை கூண்டிலேற்றும் விதமாக கேள்விகள் கேட்பதும் ரைடு விடுவதும் அவ்வளவு பொருத்தமாக இல்லை..
07-ஜூன்-2013 13:22:10 IST
முருகன் மாத்திரம் ஜாலியாக மயிலில் பறந்து மிதந்து செல்ல, பக்த ஜனங்களை இப்படி அந்தரத்தில் தொங்க விட்டு விட்டாரே.. அன்றைக்கு 4 பேர்களை இதே பெட்டியில் இருந்து விழ வைத்து உயிரைப் பறிக்க வைத்த இதே நிர்வாகம், இப்போது இப்படி கொல்லாமல் கொல்கிற காரியத்தை செய்து மக்கள் மனசைப் பதறிக் கதற வைத்துவிட்டதே.. ஐயோ.. கம்னு யானைப் படியில் ஒரு எக்சர்சைஸ் மாதிரிக் கருதி நடந்து சென்று விடுவது தான் உத்தமம் போலும்..
06-ஜூன்-2013 21:47:29 IST
பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை என்று உலகத்தில் எதுவும் இல்லை.. ஆனால் சற்று பொறுமையுடன் எதனையும் தீர்க்க முயலவேண்டுமே அன்றி கோபமும் அவசரமும் கொண்டால் இந்த மாதிரி முட்டாள் தனமான முடிவுகளைத் தான் எடுக்கவேண்டும்.. குழந்தை இல்லை என்கிற ஏக்கத்தில் எத்தனையோ பேர்கள் தவிக்கிறார்கள்.. ஆனால், இந்தப் பரிதாபத்திற்குரிய கணவனுக்கு இப்படி குடும்பமே இல்லை என்பது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.. தயவு செய்து பச்சிளம் குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கிற பெற்றோர்களுக்கு ஓர் தாழ்வான வேண்டுகோள் யாதெனில், அந்தக் குழந்தைகளுக்காகவாவது எவ்வளவு சண்டை கட்டுகிற ஓர் சந்தர்ப்பம் அமைந்தாலுமே கூட அதனை அடக்கி சமாதானமாகி விட வேண்டுகிறேன்.. இந்தக் கொடூர சம்பவத்தினை ஓர் பாடமாக கருதி செயல்பட வேண்டுகிறேன்.. நன்றி..
06-ஜூன்-2013 21:36:17 IST
பாடல்களின் உலகநாயகன்.. ஓர் SP பாலசுப்ரமணியம் போல பாட பலர் உண்டு.. மலே.வாசுதேவன் போல, ஜேசுதாஸ் போல, இப்படி எல்லாரைப் போலவும் பாட பலருண்டு.. ஆனால், TMS க்கு ஈடு இணை TMS மட்டுமே என்பதை உலகமக்கள் அனைவருமே அறிவோம்.. இது பேரிழப்புதான்..
26-மே-2013 13:23:36 IST
இளையராஜாவோடு மனஸ்தாபம் இல்லாமல் சகஜமாக இருந்திருந்தால் இன்னும் பல பாடல்களைப் பாடி பரவசப் படுத்தி இருப்பார்.. கோழிகூவுது படத்தில் இடம்பெற்றிருந்த "அண்ணே அண்ணே.. சிப்பாய் அண்ணே " பாடலை, ரெகார்டிங் சென்டருக்குள் எருமைகளை விட்டுப் பாட வைத்ததாக அன்றொரு நாள் டிஎம் எஸ் அவர்கள் விமரிசித்த காரணத்தால் இசைஞானி அவரைப் புறக்கணித்தார்.. பக்திப் பாடல்கள் ஆகட்டும், எம்ஜியார் சிவாஜிக்கான பாடல்கள் ஆகட்டும், இவரை விட்டால் இன்னொருவர் ஒருக்காலும் பொருந்தி வந்திருக்க மாட்டார்.. நல்லவேளையாக இந்தக் காலகட்டத்தில் சிவாஜி எம்ஜியார் இருவரும் இந்தப் பூவலகில் இல்லை.. அவர்கள் இன்றைய கால கட்டத்தில் நடித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அது இன்னும் பேரிழப்பாக இருந்திருக்கும்.. அவர்களுக்காகவே ஆண்டவன் இவரை இந்த உலகில் ஜனிக்க வைத்து விட்டு அவர்களைக் காட்டிலும் நீண்ட ஆயுளையும் கொடுத்த .. அந்த ஆண்டவனுடைய அனுக்கிரகமே அனுக்கிரகம்.. நன்றி டிஎம்ஸ் அவர்களே.. உங்கள் ஆத்மா சத்தியமாக சாந்தி பெறும்.., சொர்க்கம் செல்வீர்கள்.. அங்கும் சென்று ஆனந்த ராகம் இசைப்பீர்கள்.. உங்களது பல்லாயிரம் பாடல்கள் ஒலிநாடாவில் இங்கே உலவிக்கொண்டிருக்கும் , எல்லா காலங்களிலும்.. ஒரே துரதரிஷ்டம் என்னவென்றால் உங்களைப் போல அந்த சிம்மக் குரலில் பாட உங்களது மகனை தயார் படுத்தி இருந்தால் எங்களுக்கெல்லாம் இன்னும் ஆதரவாக இருந்திருக்கும், சீர்காழி கோவிந்தராஜன் தனது மகன் சிவசிதம்பரத்தை தயார் படுத்திவிட்டுப் போனது போல..
25-மே-2013 21:50:34 IST
இனி சாமிகளுக்குப் பிரச்சினை என்பதே இல்லை... டி. ஆர் மட்டும் பக்தி மானா இருந்து மகன் சாமிகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தது எல்லா சாமிகளுக்கும் செம வருத்தம்.. இப்ப எல்லாம் கிளியர்.. ஏய்யா அப்பன் மகன் ரெண்டு பேரோட பக்தி யாருக்குய்யா வேணும்?.. போயி ஆகற வேலையப் பாருங்க.. அவுரு பெரிய பக்தராம், எந்தக் கிசு கிசுவலயும் சிக்கலயாம்.. ஆனா அவுரு எடுத்த எல்லா படங்களும் கிளுகிளுப்பு இல்லாத படம் ஏதாவது உண்டா? தீந்தநகதீம் அப்டிங்கற வரியப் போட்டு போட்டு எப்டி எல்லாம் சாகடிச்சாரு?.. அவுரு எடுத்த அத்தனை படங்களில் ஏதாவது ஒரு படத்தை உக்காந்து ஒரு மனுஷன் இன்னைக்குப் பார்க்க முடியுமா?.. வீராசாமியைப் பார்த்த ஒவ்வொரு மனிதனும் நேரா சுடுகாட்டுக்குத் தான் போகணும்.. இவுங்க பெரிய கலை சிங்கங்கள்.. இவுங்களைப் பத்தி வேற நியூசு.. போயிப் படுத்துத் தூங்குங்கப்பா..
22-மே-2013 22:02:51 IST