Desabakthan : கருத்துக்கள் ( 71 )
Desabakthan
Advertisement
Advertisement
ஜூன்
18
2016
பொது வெளிநாட்டு நிலங்களை குத்தகை எடுத்து விவசாயம் அதிரடி விளைபொருள் விலையை கட்டுப்படுத்த அரசு திட்டம்
இந்த விஷயத்தில் தொழிலதிபர்களையோ சீனா முறையையோ பிரதமர் பின்பற்றாது நம் நாட்டிலேயே விவசாயத்தை ஊக்குவித்து பெரு வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். சிறந்த நீர் கால்வாய், மேலாண்மை, தனியார் பங்களிப்புடன் விவசாய நிலங்களை அறிந்து பயிரிடல், விற்பனை செய்தல் நலம். பதுக்கு முறை, தரகு வர்த்தகம் ஒழிய வேண்டும். கட்டுமான முறையில் கள்ளப்பணம் பேராசை ஒழிந்து கட்டுப்பாட்டுக்குள் வந்தால் அனைவர் பார்வையும் விவசாயம் மேல் திரும்பும். உணவு பொருளுக்கு வெளி நாடுகளிடம் நேரடியாகவோ மறைமுகவாகவோ கையேந்துதல் நல்லதல்ல.   01:47:22 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
18
2016
அரசியல் தமிழக நதிகள் இணைப்புக்கு நிதி ஜெ.,வுக்கு கனிமொழி யோசனை
உப்பு சப்பில்லாத ஆலோசனை. அதென்ன மடாதிபதிகள், சாமியார்கள்? மற்ற மத அமைப்புகள்ல பணமே இல்லையா? அதை சொல்ல தான் தைரியமே கிடையாதே. அப்படியே கொஞ்சம் ரெண்டுஜி பணத்தை திருப்பலாமே. இந்து அரநிலயங்களை மிராட்டனும், கொள்ளை அடிக்கனும்கிற நினைப்பு இவங்களை விட்டு போகவே போகாது. அதுக்கு அம்மாவையும் கெடுக்க நினைப்பது ரொம்ப ஓவர்.   01:38:24 IST
Rate this:
2 members
1 members
85 members
Share this Comment

ஜூன்
19
2016
அரசியல் பிரதமர் மீது பாக்., மீடியா மோகம்!
அமெரிக்காவிலேயே நம்முடைய தனி மனித பயங்கர வாதத்தை கையாளும் விதத்தை பாராட்டுகிறார்கள். ஜெர்மனி, பிரான்சு ஏக்கம் கொண்டுள்ளது. மோடிஜி நமக்கு ஒரு வரப் பிரசாதம். கடுமையாக உழைக்கும் எளிமையான தேசப்பற்று மிக்க அனைவரையும் மதிக்கும் குறை கூற முடியாத ஊழல் புகாரற்ற ஒரு தலைவர். அருமையான தேர்வு தான். அங்காங்கே ஒரு சில குறைகள் அவப்பெயர்கள் இருப்பினும் இதுவரை கண்டிராத ஜன நாயக தலைமை. இப்போது வடக்கு இலங்கையிலும் தெற்கு பசிபிக் கடலிலும் வாலாட்டி பாக்குடன் கை கோர்த்து உலக அமைதிக்கு அச்சுறுத்தலாய் இருக்கும் சீனாவின் கொட்டத்தை அடக்க இவருக்கு தோள் கொடுக்க வேண்டும்.   01:31:48 IST
Rate this:
3 members
0 members
73 members
Share this Comment

ஜூன்
13
2016
எக்ஸ்குளுசிவ் நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா தென்மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்னைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போச்சு!
மிகவும் அருமையான அலசல் விழிப்புணர்வு கட்டுரை. ஆங்கிலேயர், கடவுள் காமராஜர் இவர்கள் அந்த காலத்தில் நல்லுள்ளங்களுடன் சாதித்ததை போல இப்போது நல்ல ஆளில்லையே என்பது வேதனை. மாற்றத்துக்கு நேர்மையாக இப்போது சுறு சுறுப்பாக இருக்கும் பா.ஜ.க வுக்கு ஓட்டுப்போட மக்கள் தயாரில்லை. மாற்றி மாற்றி குத்துவதால் உள்ள பலனை அனுபவிக்கவே வேண்டும். துரும்பு அசையனும்னா கூட முதல்வர் கடைக்கண் பட வேண்டும் என்பது ஆரோக்கியமானதல்ல. ஒதுக்கியதன் அர்த்தம் குழந்தைக்கு கூட தெரியும். இந்த கட்டுரைக்கு அரசு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்.   09:42:01 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
13
2016
அரசியல் ஸ்டாலினுடன் கருணாநிதி மோதல் புது அவதாரத்தின் பின்னணி
இந்த செய்தி ஏற்றுக்கொள்ளும்படியா இல்லையே. இங்க மு.க வுக்கு எதிர் கருத்துக்களுக்கு ஆபீஸ் போட்டு (நிறைய நடுநிலை ஆதரவாளர்கள் தவிர்த்து அ.தி.மு.க அப்படி எதுவும் பண்ணுவதாக தெரியவில்ல)இருநூறு தம்ப்ஸ் டவுன்களுக்கு குறையாம விழுவதில் உள்ள கணக்கிலிருந்து இரண்டு கோஷ்டிகளும் ஒற்றுமையாத்தானே இருக்காங்க.   09:25:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
12
2016
பொது வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியது ரூ.34 லட்சம் கோடியா?
//அனுப்பி வைப்பது குறித்து பரிசீலித்து// அதுசரி இமய மலையை பிடுங்கி கொண்டுபோய் வெளிநாட்ல நட்டாலும், அதை அந்த நாட்டு காரன் ஒத்துக் கிட்டாலும் நம்ம ஆட்கள் பரிசீலிப்பிலேயே கலந்தள்ளி அடுத்த தலைமுறைக்கு தொடர் நாடகம் கொடுப்பார்கள். கண்துடைப்பு விசாரணை தான். அதென்ன தில்லிக்கு பக்கத்திலிருந்து தான் அனுப்பணுமா?ஒவ்வொரு நாட்லயும் தூதரகம்னு திறந்து அதிகாரிகளை வைத்து இருக்றவங்க ஒண்ணும் பண்ண முடியாதோ?அவங்களுக்கு விவரம் பத்தாது போதும். ஆனா பாருங்க இந்தியாவுல இருக்கிற ஒவ்வொரு தூதரக ஆட்களும் சிறந்த புலனாளிகளாக இருப்பார்கள். நம்ம ஆட்களை வைத்தே தவறு நடப்பதை உறுதி செய்வார்கள். அதுமாதிரி நம் தூதரகம் முனைப்பாக செயல் பட்டதுண்டா?பதுக்கியவனை நேர்கொள்ள ஒரு அரசாங்கத்துக்குமோ, நீதிமன்றத்துக்குமோ முதுகெலும்பு கிடையாது. என்ன இவங்க சவாரி செய்வது அவங்க முதுகிலேதான். //மிகக்குறைவாகவே இருக்கும்//ஆமாம் அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.   01:24:33 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
11
2016
பொது விமான சேவை துறையில் அதிரடி மாற்றம் மகிழ்ச்சி! பயணிகளுக்கு அதிக இழப்பீடு வழங்க முடிவு
அருமை. முன்னேற்றம், மாற்றம் வெளிப்படை தன்மை தேவை. பா.ஜ.க. அரசு கலக்குகிறது. குறை கண்டுபிடித்து ஒரு கூட்டம் வர வேண்டுமே. அதேநேரம் விமான தொழில் நுட்ப கோளாறாக இருப்பின் நிறுவனம் தண்டிக்க பட கூடாது.   01:29:52 IST
Rate this:
6 members
0 members
20 members
Share this Comment

ஜூன்
11
2016
பொது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீண்டும்...கண்டுபிடிப்பு! டூகடத்தல்காரன் தீனதயாள் வீட்டில் தொடர்கிறது சோதனை
பயன் படாத சிலைகளை கோவில் நகைகளை பணத்தேவைக்கு விலை பேசுவது தவறில்லை எனும் கோட்பாடு இருக்கும் வரை இப்படித்தான். கலைப்பொருளை விலை பொருளாக பார்த்தால் விபரீதம் தான். சமீபத்தில் வெளிவந்த சிலை கடத்தலை ஆதரித்த அந்த படம் சரியான மொக்கை ஆனால் என்னவோ கூட்டம் மொய்த்தது. மலரின் நியாயமான திரை விமரிசனத்துக்கு எதிர் கருத்துக்களும் நிறையவே. ஒருவேளை ஜாதிப்பற்று காரணமாக பாராட்டோ என்னவோ.   01:22:29 IST
Rate this:
0 members
1 members
18 members
Share this Comment

ஜூன்
10
2016
அரசியல் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிகருணாநிதி கண்டனம்
இவரின் பிதற்றலை போட்டு மலர் தன் விளம்பரத்தை பெருக்குகிறதோ இல்லையோ அருவெறுப்பை சம்பாதிக்காமல் இருந்தால் சரி. ரெண்டு தமிழர்கள் ஒண்ணு சேர்ந்தால் ஆங்கிலத்தில் விளாசுவதை கண்டிக்காது மொழி திணிப்பை சாடுவது இவரின் குள்ள நரித்தன்னம்.   13:00:12 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
10
2016
அரசியல் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிகருணாநிதி கண்டனம்
இன்னும் காலத்துக்கேற்றவாறு இப்போதய தலைமுறை மீடியா தாக்கம் இல்லாமல் பழைய நெஞ்சுக்கு நீதி காலத்திலேயே இருக்கும் இவரின் எந்த ஒரு அறிக்கையும் இப்போ வேப்பங்காய் தான். விடுங்கள்.   12:52:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X