எத்தனை முறை தான் கூறுவதோ? இந்தியாவில் இன்று காங்கிரசா அல்லது பா ஜ கவா என்பது இல்லை. இந்த மக்களின் கோரிக்கை நிராகிக்கப்படுமே ஆனால் மத்தியில் ஆட்சி என்று ஒன்று இருக்கப்போவதில்லை.
06-ஏப்-2013 09:33:04 IST
நாற்பது ஆண்டுக்கு முன் காங்கிரசை தமிழன் ஒட்டு ஒழித்தான், இன்று அதன் மறைமுகக்கூட்டாளியான திமுகவையும், அதே காங்கிரசைக்கொண்டே இன்று ஒட்டு ஒழித்து விட்டான்.
19-மார்-2013 11:53:34 IST
தி மு கவின் ஐக்கியமுன்னணியைவிட்டு, இந்த காலம் தாழ்த்திய விலகல், தமிழ்நாட்டில் காங்கிரசுடன் அது ஏற வேண்டிய உடன்கட்டையிலிருந்து அதை காப்பாற்றிக்கொள்ள உதவாது.
19-மார்-2013 11:40:16 IST
இந்த செய்தியின் இப்போதைய வெளியீடு தமிழினத்தை பிளக்கும் என்று எவரேனும் கருதினால், அவர்கள் தோற்றுப்போவார்கள். தமிழன் இன்று மேலும் இருகுவான், ஒன்று படுவான், முதல்வர் தலைமையில் வெகுண்டு எழுந்து, இந்த கொடுஞ்செயலுக்கு காரணமான கர்த்தாவையும், கருவியையும் ஒன்றோழிப்பான்.
19-பிப்-2013 19:44:32 IST
தமிழ்நாடு, பாண்டியின் நாற்பது நிச்சயம். எட்யூரப்பவுடன் கர்நாடகாவில் இரண்டு அல்லது மூன்று, தெலுகு தேசத்துடன் ஆந்த்ராவில் இரண்டு அல்லது மூன்று, தோழர்களுடன் கேரளாவில் இரண்டு அல்லது மூன்று, ஆகமொத்தம் சற்றேறக்குறைய ஐம்பது அம்மா கையில். அம்மா தலைமையில் மத்தியில் ஆட்சி என்பது இனியும் கனவு அல்ல நிஜம்.
19-பிப்-2013 19:29:53 IST
திட்ட கமிசனில் அலுவாலியாக்களின் பங்கு என்று ஒரு பெரிய புத்தகம் எழுதலாம் இன்று. இந்தியாவில் ஒரு பங்கு என்பது இன்று ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. எனக்கென்ன இவர்கள் அடையாள அட்டை கொடுப்பது. மக்கள் என்ன மாக்களா அல்லது நெடுஞ்சாலை மரங்களா??? இந்தியா என்ன சிறைச்சாலையா அல்லது இந்தியர் அனைவரும் சிறைக்கைதிகளா? ஜனநாயகத்தில் மைனாரிட்டி அரசு என்பதே கொடுமை என்றல், மக்கள் ஆதரவில்லாத அரசு என்பது அதைவிட கொடுமை. அடிமை எண்ணம் மேலோங்குவது, கைலாகத்தனம் மிகப்பெரிய அளவில் வெளியாவது, ஜனநாயகத்துக்கு, நாட்டின் அமைதிக்கு, பொருளாதாரத்திற்கு, என்று அனைத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து. இந்தியாவிற்கு இப்போது ஏற்பட்டுள்ளது பொருதார இழப்பு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அச்சாணியான மக்களின் நம்பிக்கை. சில பேரின் சுய நலத்தாலும், பேராசையாலும் இந்திய பொருளாதாரத்தின் ஸ்திர தன்மை பாழாகிவிட்டது. இதை இப்போதைக்கு மீட்டு எடுக்க முடியாது. புரட்சியின் மூலம் இதை மீட்க முடியுமா என்றால், புரட்சியின் மீது மக்களின் நம்பிக்கை அதைவிட தாழ்ந்து காணப்படுகிறது. ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள், அரசை துஷ்டனாக கருதவும், அந்த துஷ்டனை கண்டால் தூர விலக தயாராகிவிட்டார்கள். இப்படி மக்கள் விலகி ஓடுவதால் தான் இன்று அரசு மக்களை கூவி கூவி அழைத்துக்கொன்டிருக்கும் அவல நிலை. எல்லோருக்குமே அரசு வேலை என்பது சாத்தியமில்லை தான். அனைவருக்கும் வேலை செய்யாமல் உணவளிக்க அரசுகளுக்கு முடியாது தான்.ஊழலில்லாத, ஊக்குவிக்கும் அரசு கூடவா சாத்தியமில்லை. லோக்பால் என்ற மற்றுமொரு ஊழல் வாய்ப்பு என்ற அமைப்பு, என்னை பொருத்தவரை தேவை இல்லை. அரசையே லோக்பாலாக என் மாற்ற முடியாது என்பது தான் கேள்வி.அரசுகள் இன்று மாமூல் வாங்கும் ரவுடிகளாகவும், நிலா அபகரிப்பவர்களாகவும் மக்கள் பார்க்க தொடங்கி இருப்பது என்று சர்வ சாதாரண நிகழ்வாகி போய்விட்டது. இன்றைய இந்தியாவில் காவல் நிலையங்களில் (அரசின்) புகார் கொடுக்க மக்களுக்குள் பிரச்சினைகள் இல்லை, மக்களுக்கு அரசியல்வாதிகளால் பிரச்சினை என்ற புகார்களே அதிகம். நீதி மன்றங்களிலும் இதே நிலை தான். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அறுபத்தி ஐந்து ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருந்த பொய்/வறட்டு/இலுப்பைப்பூ சர்க்கரை ஜனநாயகம் செத்து விட்டதை முற்றிலும் ஆளும், எதிர் கட்சிகள் உணர்ந்தாலும், அந்த பிணத்தை வைத்துக்கொண்டு எரியற வீட்டுல பிடுங்கியது ஆதாயமாக பிரதி பலன் கண்டு கொண்டிருக்கிறார்கள். புரட்சியை தூண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைய தேதியில் மக்கள் நன்கு பிழியப்பட்ட சக்கைக்காக சண்டை மற்றும் உயிரிழப்பு எதற்கு என்று ஒதுங்கி போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்தியாவினால் ஒரு பிரயோசனமும் இல்லை என்ற முடிவை மக்கள் நெருங்கிக்கொண்டிருக்கிரார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே என்ற கோஷம் இன்று இந்தியாவிற்கு எடுபடாது என்பதே உண்மை. பிளவு பட்டால் தான் உண்டு வாழ்வு, நம்மில் பிளவு நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே என்ற கோஷமே இந்தியாவில் விரைவில் ஒலிக்கும் என்பது என் நம்பிக்கை. இன்று இந்திய மக்களால் ஒரு ஆடம்பரமான சுமார் எழுநூற்றியைம்பது பிரதிநிதி கொண்ட மத்திய அரசிற்கு தீனி போட முடியாது. அந்த அந்த மாநிலம், அந்த அந்த மக்கள். மாநிலங்களுக்குள் அத்தியாவசிய தேவை பரிமாற்றம். பங்கு இராணுவமே இந்தியாவிற்கு மத்திய அரசிற்கு பதிலாக போதுமானது. பத்திரிகைகள் சித்தரிப்பது போல காங்கிரசா அல்லது பாஜக வா அல்லது பாஜக வின் மோடியா என்பதை இன்றைய அளவில் ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் மக்கள் நிச்சயமாக இல்லை, இருக்கவும் மாட்டார்கள்.
03-பிப்-2013 10:20:23 IST
அரசை இன்று மம்மூல் வாங்கும் ரவுடிகளாகவே மக்கள் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். ஏனென்றால், இன்று உள்கட்டமைப்பு என்ற பேரில் கொள்ளை தொடர்வதனாலேயே. வேலை வெட்டி இல்லாத வெத்து வேட்டுகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் சேர்ந்த ஒரு கூட்டம், பொது, கட்சி சாரா மக்களின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் முறையில் கண்கூட நடந்துக்கொள்கின்றன என்பது உண்மை. சுதந்திர இந்தியாவில் அன்று முதல் இன்று வரை இந்த IAS IPS தேர்வுகள் புரியாத சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. இன்றைய முதல் தேவை இந்த தேர்வு முறைகளில் நேர்மையான முறை. இதையும், எதையும் போல இந்தியாவில் முதலில் புரிந்துக்கொண்ட தமிழக அரசு இதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய மக்களுக்கு இன்று உள்கட்டமைப்பு என்றால் என்ன? சுபிட்சம் என்றால் என்ன? இவைகளில் அரசுகளின் பங்கு என்ன? என்பது தெள்ள தெளிவாக புரிய ஆரம்பித்து விட்டது. ஒரு சமீபத்திய செய்தி,என்னவென்றால், சென்னை மாநகராட்சியில் சுமார் இருநூறு பேருந்து நிருத்தக்குடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இவற்றை துரு பிடிக்கா இரும்பு கொண்டு அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த, இது போன்ற பரிந்துரைகள், விருப்பங்கள் பெரும்பாலும் ஒரு ஒப்பந்தத்தில் கிரே ஏரியா மற்றும் ஒரு ambiguity , அதாவது தெளிவில்லா தன்மையை உருவாக்கும். இத தெளிவில்லா தன்மை ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் வேண்டும் என்றே உருவாக்கப்படுகிறது. ஏனென்றால், இது போன்ற ஒப்பந்தங்கள் தான் ஊழலின் ஊற்றுக்கண். சாதா நிழற்கூடை மூலம் சிறிதாக கொள்ளை அடிக்க வாய்ப்பு என்றால், துரு பிடிக்காத என்ற வார்த்தையின் மூலம் பெரிதாக கொள்ளை அடிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. இது போன்று ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் ஒரு தெளிவில்லா கோரல் அவசியமாக்கப்படுகிறது. இது போன்ற ஒப்பந்தங்களை முடிவு செய்யும் ஒரு IAS அதிகாரியோ ஒன்று கமிஷன் நோக்கத்தோடோ, ஒமிஷன் நோக்கோடோ முடிவு செய்கிறார். இதன் இழப்பு இறுதியில் யாருக்கு என்றால், வரி செலுத்தும் மக்களுக்கே. E -டெண்டர் என்ற முறை புகுத்திவிட்டோம், இதில் ஊழல் பெருமளவு குறைந்துவிட்டது என்பது சரியல்ல. உள்கட்டமைப்பு என்ற பேரில் கொள்ளை அடிக்கும் ஒரு கூட்டம் இன்னும் எளிதாக, தீர்கமாக, தெளிவாக கொள்ளை அடித்துக்கொண்டு தான் இருக்கிறது. முன்-அனுபவம் என்ற ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவதும், இதை அவர்களுக்கு பிடித்த ஒப்பந்தக்காரருக்கு ஏற்படித்திக்கொடுப்பதும் இந்த IAS அதிகாரிகளே. மொத்தத்தில் "திருடனா பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்று கூறி முடித்துக்கொள்ளவேடிய அவல நிலை தான் பொது, கட்சி சாரா மக்களின் நிலை.
03-பிப்-2013 08:54:19 IST
இறந்தவர், இறப்புக்கு சில காலம் முன் தங்களை நண்பனாக கூறாதது தான் இப்போ ஆராயப்படவேண்டிய விஷயமே.... பட்டகாலிலே படும், கெட்டக்குடியே கெடும் என்பதற்கு நல்ல உதாரணமாக விளங்கப்போகிரீர்கள் போலிருக்கிறது.
02-பிப்-2013 07:42:15 IST