இப்படியே இன்னும் அடுத்த தேர்தலுக்குள் காங்கிரஸ் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து விட வேண்டியதுதான். வேறு வழியில்லை. சி பி ஐ முழுத்து கொண்டது. அடுத்த தேர்தலின் காங்கிரஸ் வெற்றி பெறாது என்பது சி பி அய்க்கு தெரிந்தது விட்டது. அவர்களின் அதிரடி இனி தொடரும் என்றே நம்பலாம்.
05-மே-2013 13:12:54 IST
நல்ல நடவடிக்கைதான். இதில் மாற்று கருத்து இல்லை. ராமதாஸ் சவால் விட்டதற்காக அவரை கைது செய்ததை எந்த எதிர்கட்சியும் எதிர்க்கவில்லை? இவரை விட பெரிய சவால் விட்டு திரியும் கூடங்குளம் உதயகுமார் கும்பலை கண்டு கொள்ளாமல் இருப்பதின் மர்மம் தான் இன்னும் விளங்கவில்லை.
04-மே-2013 21:28:08 IST
நல்லது எங்கு நடந்தாலும் , அது யாரால் நடத்த பட்டாலும் , அங்கு சென்று அந்த நல்லதை பற்றி தெரிந்து வரவேண்டும். அப்படி சென்ற கேரள அமைச்சரை பாராட்ட வேண்டும். அதை விட்டு மோடியை சந்தித்ததற்காக அவர்மீது நடவடிக்கை என்பது காழ்ப்பு உணர்ச்சியே அன்றி வேறில்லை. இவர்களால் வளர்ச்சி ஏற்படுத்த முடியவில்லை என்ற வயிற்றெரிச்சலே இதற்கு மூல காரணம்.
21-ஏப்-2013 13:04:54 IST
தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு, பிரபல் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம் நல்ல சூடு கொடுத்துள்ளதை இங்கு வேறு பகுதியில் காணலாம். ஒட்டு போடாதவர்களுக்கு மற்றவர்களையும் அரசியல் நடைமுறைகளையும் விமர்சிக்கும் உரிமை இல்லை என்று அவர் கூறியிருப்பது மிகவும் சரி.
07-ஏப்-2013 19:06:55 IST
மிகவும் நம்பிக்கையை தரும் செய்தி. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை நமக்கு மனம் திக் திக் தான். பி ஜே பி கட்ச்சியின் மூத்த தலைவர்கள் இதில் எந்த ஈகோவும் பார்க்காமல், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் முனைப்புடன் இருக்க வேண்டும். இதில் ஏதாவது கோளாறு செய்து வேறு ஒருவரை இவர்கள் அறிவித்து விட்டால், நிச்சயம் பி ஜே பி க்கு அது ஒரு தற்கொலை முயற்சியாகவே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மக்கள் உங்களை புறந்தள்ளிவிடுவார்கள் என்பதிலும் ஐயமில்லை. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பட்டால் மட்டுமே, மக்கள் பி ஜே பி க்கு வாக்களிப்பார்கள் என்பதை இந்த மூத்த தலைவர்கள் உணர்ந்து செயல்பட்டு பி ஜே பி யை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
31-மார்-2013 06:52:03 IST
எதிர்பார்த்த ஒன்றுதான். ஏதோ இங்குள்ள அரசியல் வாதிகளும் தமிழ் ஆர்வலர்கள் என்று கூறி கொள்பவர்களும், இவர்கள் தான் இலங்கை தமிழருக்கு அதாரிட்டி என்பது போல் ஆடாத ஆட்டம் ஆடினார்கள். அங்கே அவதி படும் தமிழருக்கு இவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியுமா?? FOR EVERY ACTION THERE IS AN EQUAL AND OPPOSITE REACTION . என்பதை அனைவரும் உணர்ந்து தங்கள் நிலையை அறிந்து அடக்கமாக பேச வேண்டும். இதற்கும் ஒரு போராட்டம் என்று இவர்கள் கிளம்பினால், இனி இலங்கை தமிழர்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
30-மார்-2013 19:14:02 IST