Advertisement
sumithran : கருத்துக்கள் ( 10 )
sumithran
Advertisement
Advertisement
ஜனவரி
13
2016
கோர்ட் ஒப்பந்தத்தை மீறிய கட்டுமான நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தனியார் கட்டுமான நிறுவனத்தின் பேரை ஏன் வெளியிட கூடாது? மற்றவர்கள் ஏமாறாமல் இருப்பார்கள் அல்லவா..?   11:24:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
1
2015
சினிமா வெள்ள நிவாரணம், ரஜினிகாந்த் 10 லட்சம் நிதியுதவி...
எந்த பேங்க் ன்னு பாத்தீங்களா..? கர்நாடகா பேங்க்..   08:47:10 IST
Rate this:
10 members
0 members
69 members
Share this Comment

நவம்பர்
29
2015
வாரமலர் சாண்டோ சின்னப்பா தேவர்!
நீங்க தான் சொல்றது..   15:28:17 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

அக்டோபர்
11
2015
வாரமலர் சந்தன மரங்கள்!
ஒரு குறும்படம் எடுக்க தகுந்த கதை.   13:46:38 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
5
2015
அரசியல் சூரிய மின்சக்தி துறையில் ஜெர்மனி ரூ.7,500 கோடி முதலீடு
இந்தியாவில், ஜெர்மன் மொழியை ஊக்குவிப்பது என்றும், ஜெர்மனியில், இந்தி(ய) மொழி(களு)க்கு ஊக்கம் அளிப்பது குறித்தும் பேசினர்.   15:11:19 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
16
2015
பொது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கட்டாயமாக்க சட்டத்தை திருத்த தமிழக அரசு முடிவு
அதுதான் நாம் ஏற்கனவே மின் மிகை மாநிலம் ஆச்சே... அப்புறம் எதற்கு இந்த கட்டாய சூரிய மின் உற்பத்தி எல்லாம்..? :P   13:40:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
8
2015
அரசியல் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டத்தை துவக்கினார் ஜெ.,
சோப்பு, ஷாம்பூ கம்பெனிகாரன் எவ்வளவு கட்டிங் கொடுத்தானோ.. ம்ம்ம் நடத்துங்க.... அதென்ன 'சவுபாக்கியா' சுண்டிலேகியம் .. புதுசா இருக்கே..   12:59:36 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
2
2015
அரசியல் ரூ.24 ஆயிரம் கோடியில் கடலாடியில் அனல் மின் நிலையம்
இருக்கிற அனல் மின் நிலையங்களுக்கே நிலக்கரி பற்றாகுறை... இதிலே புதிதாய் ஒரு அனல் மின் நிலையம்...   09:12:30 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2015
அரசியல் மதுவிலக்கை ஒத்தி தான் வைத்தோம் கருணாநிதி விளக்கம்
பாக்கெட் சாராயம் விற்றது அ.தி.மு.க அரசு. 100 மி.லி 15 ரூபாய்.   10:12:29 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2015
அரசியல் மதுவிலக்கை ஒத்தி தான் வைத்தோம் கருணாநிதி விளக்கம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகமெங்கும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களின் தொடர்ச்சியாக, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை எதிரொலித்திடும் வகையில், தி.மு.க சார்பில் 10ம் தேதி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தேன். இதற்கிடையே தி.மு.க.வை பிடிக்காத ஒரு சில குறிப்பிட்ட கட்சியினரும், ஏன் தி.மு.க.வை எதிர்க்காத ஒரு சில கட்சியினரும் கூட, மதுவிலக்கு பிரச்னை பற்றி தி.மு.க ஆட்சியில் இருந்த போது தானே, மதுவிலக்கை ரத்து செய்தது, எனவே தி.மு.க.வால் தான் எல்லாம் கெட்டுவிட்டது என்ற ரீதியில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கான விளக்கத்தை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். தி.மு.க 1971ம் ஆண்டு மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது அதற்கு முன்பும் பின்பும் என்ன நிலைமை என்பதையும் சற்று விரிவாக எடுத்துக் கூற வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன். மதுவிலக்கை தி.மு.க ஒத்தி வைக்க வேண்டிய, தவிர்க்க முடியாத நிலைக்கு அப்போதைய நிதி நிலைமை தமிழக அரசில் இருந்தது. அந்த முடிவை நாங்கள் எடுக்க முன்வந்த போது ராஜாஜி, என் இல்லத்திற்கு வருகை தந்து, அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவரிடம் நான் தமிழக அரசின் நிதி நிலைமைகளை எல்லாம் விளக்கிய பிறகு, அவர் உண்மையைப் புரிந்து கொண்டார். ஆனால் ராஜாஜி, ஏதோ கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவரது வீட்டிலிருந்து கோபாலபுரத்திற்கு நடந்து வந்ததைப் போலவும், என்னிடம் ஏதோ மன்றாடிக் கேட்டுக் கொண்டதைப் போலவும், அதை நான் கேட்கவில்லை என்பதைப் போலவும் சிலர் இப்போது பேசுகிறார்கள். அப்படிப் பேசுவதற்குப் பெயர்தான் அரசியல் ஆதாயம் தேடுவதாகும். அது போலவேதான் காயிதே மில்லத்தும் என்னைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அவரிடமும் நான் நிதி நிலைமையை விளக்கிக் கூறினேன். மதுவிலக்கை ஒத்தி வைத்து தமிழகச் சட்டப்பேரவையில் நான் உரை நிகழ்த்தும் போது கூட, மிகுந்த வேதனையுடன்தான் பேசினேன். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சட்டப் பேரவையில் பேசினேனே தவிர, மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச் சட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தேன். அப்போது மதுவிலக்குச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி காமராஜர் போராட்டம் நடத்தி, அவரது கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் மறியல் செய்து கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் நான் கூறி அவ்வாறே செய்தேன். 29-6-1971ல் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்குப் பதிலளித்து நான் உரையாற்றும் போது மதுவிலக்குக் கொள்கையை தி.மு.க ஒத்தி வைத்தது பற்றி நீண்ட நேரம் விளக்கமளித்தேன். தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்த போது கள்ளச்சாராயம், வார்னிஷ் குடித்து எத்தனை பேர் இறந்தார்கள் என்ற புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துக் காட்டினேன். இறுதியாக, மதுவிலக்கு தோல்வியுற்று விட்டது. இதைத் தவிர வேறு வழி இல்லை என்ற காரணத்தால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். அதுவும் ஒத்தி வைத்திருக்கிறோம். இந்தியா முழுவதற்கும் மதுவிலக்குத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும் வரையில் மதுவிலக்கை ஒத்தி வைத்திருக்கிறோம் என்றுதான் கூறினேன். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி வந்த தமிழகம் நமது மாநிலத்திற்கு அதனால் ஏற்பட்ட இழப்பை ஓரளவுக்காவது சரிக்கட்ட மத்திய அரசு முன்வராததால் நிதி நிலைமையை சமாளிப்பதற்காக மிகுந்த மன வேதனையுடன் 1971ம் ஆண்டு மது விலக்கை ஒத்தி வைப்பதாக நான் அறிவித்திருந்த போதிலும், காந்தி நெறி நின்று, அண்ணா வழியில் ஆட்சி நடத்திய எனக்கு மதுவிலக்கை ஒத்தி வைத்ததின் காரணமாக நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது என்பதுதான் உண்மை. 1971ல் தி.மு.க அரசு, கள், சாராயக் கடைகளைத் திறந்தது என்றாலும், 1974ல் தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே, மீண்டும் மதுக்கடைகளை மூடி, மது விலக்கை நடைமுறைப்படுத்தியது. அதை அமல்படுத்தும் சட்ட முன்வடிவு தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக 22-8-1974ல் நிறைவேற்றப்பட்டது. 1977ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மதுவை ஒழிக்க எவ்வளவோ பாடுபட்ட போதிலும், அவராலும் முடியவில்லை. எனவே 1981ல் அதே எம்.ஜி.ஆர். மீண்டும் கள், சாராய விற்பனைக்காக, மதுவிலக்கை ரத்து செய்தார். அதற்குப் பிறகு, 2001ல் இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது மது ஒழிப்பு பிரகடனம் செய்தார். எனினும், ஜெயலலிதா ஆட்சியின் அந்த ஆண்டில் மட்டும் மதுவிலக்கு சட்டத்தின்கீழ் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா குறுகிய காலத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு காரணமாகப் பதவி விலகி, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, அந்நிய மது வகைகள், 100 மில்லி ரூ.15 என்கிற மலிவு விலையில் 2002 ஜனவரி முதல் வாரத்திலிருந்து விற்பனைக்கு வரும் என்று அறிவித்தார். இந்த விவரங்களைப் பற்றி, 21-7-2015 ஆங்கில பத்திரிகை, 1974ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு சாராயக் கடைகளையும், மதுக்கடைகளையும் மூடியது என்றும், 1981ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு கள்ளுக்கடைகளைத் திறந்தது என்றும், 1982-83ம் ஆண்டு, அதே அ.தி.மு.க. அரசு தனியார் துறையில் மது வகைகள் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது என்றும், 1987ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு மதுக்கடை களைத் திறந்தது என்றும், 2003ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு மது விற்பனைக்காக டாஸ்மாக் நிறுவனத்தைத் தொடங்கி, அரசே ஊருக்கு ஊர் மது விற்பனைக் கடைகளைத் திறந்தது என்றும் எழுதியுள்ளது. தி.மு.க மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த மாதம் நான் அறிவித்த பிறகு, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், முன்னணியினரும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும், மகளிர் அமைப்புகளும் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் என்னைத் தொடர்பு கொண்டு, அந்த அறிவிப்பை வரவேற்றதோடு, நல்ல முடிவு என்றும் கூறினார்கள். ஆனால் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கலைஞர் சொல்வதைக் கேட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று அறிக்கை வெளியிட்டார். 22-12-2008ல் பா.ம.க. தலைவர் ராமதாசும், மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் என்னைச் சந்தித்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திய போது, அவர்கள் கூறியதில் ஒத்த கருத்துடைய தி.மு.க அரசு, 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதிலும் 1300 மதுக் கூடங்களை (பார்) மூடியுள்ளது என்பதையும், அதேபோல் 128 சில்லறை மது விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதையும் நினைவூட்டினேன். மேலும், தொடர்ந்து படிப்படியாக முழு மதுவிலக்கினை எய்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அது வரையில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமையாமல் நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவெடுத்துள்ளது என்றும், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் 1 மணி நேரத்தைக் குறைத்து மதுக்கடைகள் இயங்கும் என்றும் அறிவித்ததோடு, அதற்கிணங்க ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில், மதுபானங்களைத் தயாரிக்கும் உரிமம் சில கட்சிக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டினை தொடர்ந்து கூறி வருகிறார்கள். செய்தியாளர்கள்கூட அதைப் பற்றி என்னிடம் கேட்டார்கள். தமிழகத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்தி விட்டால், எல்லா மதுபானத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விடும். அதிலும் கூட தமிழகத்தில் தற்போது மதுபானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 11 இருக்கிறது என்றால், முதன் முதலாக அதற்கான உரிமம் வழங்கப்பட்டதே அ.தி.மு.க. ஆட்சியில் தான். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் மிடாஸ் என்ற நிறுவனம் யாருடைய நிறுவனம்? அந்த நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில் அந்த நிறுவனத்திலிருந்து தான் அதிக அளவுக்கு மதுபானங்கள் வாங்கப்படுகின்றன என்பது அல்லவா உண்மை? 2013-2014ம் ஆண்டில் எந்தெந்த மதுபானத் தயாரிப்பு கம்பெனிகளிடம் இருந்து எவ்வளவு தொகைக்கு மது வாங்கப்பட்டது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரத்தைப் பார்த்தால், மிடாஸ் நிறுவனத்திடமிருந்துதான், மற்ற நிறுவனங்களை எல்லாம் விட அதிகமாக ரூ.2,280 கோடிக்கு மது பானங்கள் வாங்கப்பட்டுள்ளன. நாடு விடுதலை அடைவதற்கு முன்பிருந்து தமிழகத்தில் மாறி மாறி வரும் மதுவிலக்குக் கொள்கை பற்றிய விவரங்களை தொகுத்துக் குறிப்பிட்டிருக்கிறேன். எனவே தி.மு.க முதன் முதலாக தமிழகத்தில் மதுவிலக்குக் கொள்கையை தளர்த்தியது என்பது தவறான பிரச்சாரம். மேலும் அவ்வாறு 1971ம் ஆண்டு மதுவிலக்குக் கொள்கையை ஒத்தி வைத்த தி.மு.க அரசு, 1974ம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி விட்டதையும், அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில்தான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு விட்டது என்பதையும், மது பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டது என்பதையும் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கலாம். இது நடந்து முடிந்த பிரச்னை. இனி நடக்க வேண்டியது என்ன? தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவித்தோம். ஆனால் தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை மேலெழுந்து போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அ.தி.மு.க. அரசு உடனடியாக தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். ஆனால் அ.தி.மு.க. அரசு அப்படிப்பட்ட புத்திசாலித்தனமான நடவடிக்கையை மேற்கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.   10:10:25 IST
Rate this:
23 members
0 members
10 members
Share this Comment