| E-paper

 
Advertisement
Poompattinaththaan : கருத்துக்கள் ( 162 )
Poompattinaththaan
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2015
அரசியல் ஹசாரே போராட்ட மேடையில் கெஜ்ரிவால் அன்னா எனது குரு கெஜ்ரிவால் பெருமை
குட் மேன் அய்யா.. நொந்து போயிருப்பது டில்லி வாழ் மக்களல்ல.. அய்யோ டில்லி பிஜெபி நிலம இப்படி ஆயிடுச்சேன்னு நொந்து போயிருப்பது நீங்கள்தான். எத்ததையோ புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்து விட்டு விவசாயிகளிடம் நிலத்தை அபகரிப்பதற்கு அநியாயச் சட்டம் இயற்றவா, நடுவண் அரசு அமைய மக்கள் மோடிக்கு வாக்களித்திருந்தார்கள்? சிந்தித்து செயல்பட மோடி அவர்களுக்கு ஆலோசனை கூறுங்கள். அதைவிடுத்து நீங்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடாதீர்கள்.   19:56:42 IST
Rate this:
2 members
0 members
69 members
Share this Comment

பிப்ரவரி
21
2015
அரசியல் முலாயம் - லாலு திருமண கூட்டு பிரதமர் மோடி- நடிகர்கள் பங்கேற்பு
நண்பர் புகழ் சொன்னதுபோல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களது இல்லத் திருமணத்தில் அதிமுக தவிர அனைத்துக் கட்சியினரையும் காண நேர்ந்ததே.. அது அரசியல் நாகரிகமாகத் தெரியவில்லையா? அதிமுக அழிந்தால்தான் அரசியல் நாகரிகம் மேலும் தழைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. காலம் பதில் சொல்லும்.   23:15:44 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
20
2015
பொது ஜெட்லியின் பட்ஜெட் உரை அவுட் பாதுகாப்பு, நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை ஆவணங்களும் திருட்டு
பட்ஜெட் உரையைப் பாதுகாக்க முடியாத அரசு பதவி விலகுவதுதான் பாராளுமன்ற மரபு. இக்கால ஆட்சியாளர்கள் யாராயிருப்பினும் மரபுகளை மறந்து மாமாங்கத்துக்கும் மாமாங்கம் ஆச்சே.. அரசாட்சி வழிமுறைகள், மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டாலே அது உண்மையான குடியாட்சியாக மக்களாட்சியாக இருக்க முடியும். இல்லையேல் பதவி கிடைத்துவிட்டால் இயன்றவரைக்கும் எப்படியாவது அதன் பிடி தளராமல் காலாகாலத்துக்கும் அதனில் தாமே தொங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பும் இன்றைய அரசியல்வியாதிகள் உள்ளவரைக்கும் குடியாட்சியாவது,. மக்களாட்சியாவது..? இது கலிகாலம் அன்றோ.. இந்த யுகம் மாறி வேறு யுகம் பிறக்கும்போதுதான் அறம் தழைக்குமோ என்னவோ?   22:19:15 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
18
2015
அரசியல் பொதுமக்கள் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது
"மின் துறை மாநாட்டில், சிறந்த மாநிலமாக, தமிழகம் எப்படி தேர்வு செய்யப்பட்டது”? என்பதற்கான பதிலைத் தராமல் காற்றாலை முடக்கம் குறித்த பதிலை மட்டுமே தந்து தப்பித்திருக்கிறார் மத்திய அமைச்சர். தமிழ்நாட்டில் மின்சாரத்துறையின் சீரழிவுக்கு பரிசு கொடுத்தார்களோ என்னவோ? யார் கண்டது?   21:35:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
19
2015
அரசியல் பழமைகளை மாற்றவே பாடுபடுகிறேன் பிரதமர் மோடி பேச்சு
அப்படியே கொஞ்சம் ஆர்.எஸ்.எஸ்-ஸின் பழமைவாத சித்தாந்தங்களையும் மாற்ற முற்பட்டீர்களேயானால் நாட்டு மக்கள் மதமாச்சர்யங்களை மறந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள். தங்கள் வரவினால் கிருத்துவ, இஸ்லாமிய மத பரப்புரையாளர்களும் அடக்கி வாசிப்பதை மறுப்பதற்கில்லை. அதையே தான் ஆர்.எஸ்.எஸ் - ஸிடமும் எம்மதமும் சம்மதம் என நினைக்கும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். செய்வீர்களா.?.செய்வீர்களா..? ( அடடே இது அம்மையாரின் முழக்கமாச்சே.. பரவாயில்லை ஒருவகையில்அம்மையாரும் தங்கள் நட்பு வட்டாரம் தானே )   20:25:30 IST
Rate this:
9 members
1 members
15 members
Share this Comment

பிப்ரவரி
18
2015
அரசியல் தமிழகத்தில் பஸ் கட்டணம் குறையாது முதல்வர் ஓ.பி.எஸ்., திட்டவட்டம்
பஸ் கட்டணம் ஏறும்போது மட்டும் டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டுகிறீர்களே.. அதே டீசல் விலை இறங்கும்போதுமட்டும் ஏற்றிய பஸ் கட்டணத்தை குறைக்க ஏன் எண்ணம் வருவதில்லை? எல்லாம் வெளிவேடம் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன? என்ன தெரிந்து என்ன செய்ய? இதே மக்கள் மதிமயங்கி பணம் வாங்கிக்கொண்டு ஆட்சியில் அமர்த்தும்போது ஆட்சியாளர்கள் இதுவும் சொல்வார்கள் இன்னமும் சொல்வார்கள்.   20:08:15 IST
Rate this:
2 members
0 members
47 members
Share this Comment

பிப்ரவரி
17
2015
பொது மோடி செல்வாக்கு குறைந்துள்ளது ஹசாரே
பெரியவர் அன்னா ஹசாரேவின் கருத்து நூற்றுக்கு நூறு சரி. காங்கிரஸ் மேலிருந்த வெறுப்பினால் மாற்று தேடிக்கொண்டிருந்த மக்கள் வாராது வந்த மாமணியாக அமைந்த மோடி மீது வைத்திருந்த எதிர்பார்ப்புகள் தற்பொழுது தவிடுபொடியாகி வருகின்றன. உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் பெட்ரோல் விலை குறைந்தது.. ஆனால் விலைவாசி குறையவில்லை.. சற்றே கச்சா எண்ணெயின் விலை ஏறும்போது பெட்ரோல் விலையும் ஏறுவதுடன் மேலும் விலைவாசியும் ஏறுகிறது. இது என்ன லாஜி? இது முதலீட்டாளர்கள் அரசு.. சாமான்யர்களின் அரசு அல்ல.. காங்கிரஸ் கொள்ளை அடித்தது.. பாஜகவோ தொழிலதிபர்களை கொள்ளை அடிக்க வைக்கிறது. இதுதான் வித்தியாசம். இதற்கிடையில் மோடி அரசு இந்துத்துவா கொள்கைகளைப் இலைமறை காய்மறையாகப் புகுத்தப் பார்ப்பது அபத்தத்திலும் அபத்தம். மக்கள் வாக்களித்தது வாழ்வாதார வளர்ச்சியை எதிர்நோக்கி.. நடப்பதோ பாஜக கொள்கை வளர்ச்சி.. எல்லாவற்றிற்கு பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.. காங்கிரசுக்காவது பத்து ஆண்டுகள். பாஜகவிற்கு எட்டே மாதத்தில் டில்லி பதில் சொல்லி ஆரம்பித்து வைத்துள்ளது. ஆன்மிக அன்பர்கள் நிறைந்த ஸ்ரீரங்கமோ பாஜக எனும் ஒரு கட்சி இருப்பதாகவே காடிக்கொள்ளவில்லை. இவையெல்லாம் கருத்தில் கொண்டால் பாஜக எதிர்வரும் நாட்களில் சிறிதாகவுள்ள சேதாரத்தை தடுக்கலாம். இல்லையேல் மொத்தமும் சேதாரக் கணக்கில் சேர்ந்துவிடும். நினைவில்நிறுத்துவது நல்லது.   22:18:10 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
17
2015
கோர்ட் அந்த ஒரு ரூபாயை கூட வாங்காமல் இருந்திருக்கலாமே ஜெ., வழக்கில் நீதிபதி கேள்வி
அப்ப இங்கேயும் சங்குதானா? இந்த நீதிபதி வழக்கின் ஆரம்பத்தில் திமுகவை போட்டுத் தாக்கும்பொழுது இங்கே பலர் ஜெ.வுக்கு ஆதரவான தீர்ப்பு தரப்போறார் என்றார்கள். சினிமா போல ஆரம்பத்தில் சுவராஸ்யமா இருக்கட்டுமேன்னு திமுகவ ஒரு வாங்கு வாங்கி கிளைமாக்ஸ் நெருங்கும் பிற்பகுதியில் கதையில் திருப்பம் உண்டாவதுபோல இப்போது ஜெ. வழக்கறிஞரை குடைந்தெடுக்கிறார். குன்ஹா தீர்ப்பு எதுவுமே மேல்முறையீட்டில் தப்பியதில்லை என்றார்களே.. அதை உறுதிப்படுத்துவதுபோல் இருக்கிறாது இறுதிக்கட்ட விசாரணை. நீதிபரிபாலனத்தில் எதுவும் நடக்கலாம் யாருக்குத் தெரியும்? எப்படியோ யாராயிருப்பினும் நீதி வென்றால் நடுநிலையாளர்களுக்கு மகிழ்ச்சியே.   10:52:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
14
2015
பொது ஸ்ரீரங்கம் தொகுதியில் பதிவான ஓட்டு 81.8 சதவீதம் இடைத்தேர்தல் சுறுசுறுப்பு மீண்டும் நிரூபணம்
”அதிமுக அமோக வெற்றி.. சுமார் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வளர்மதி திமுக வேட்பாளர் ஆனந்தை வென்றுள்ளார்”. திமுக வேட்பாளர் ஆனந்த் நூலிழையில் டெபாசிட் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம் பெற்றுள்ள வாக்குகள் சுமார் 16,000 வாக்குகள். அவர் உட்பட போட்டியிட்ட மற்ற அனைத்து கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.” இதுதாய்யா வரும் 16 - ஆம் தேதி வரப்போகும் செய்தி என்பது எனது ஊகம். ஒருவேளை திமுக டெபாசிட் இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் எலெக்சன் நடந்ததா.. இல்லை கலெக்‌ஷன் நடந்ததா.. என்பதை கேட்டுத்தான் தெரியவேண்டுமா.. இல்லை சொல்லித்தான் புரியவேண்டுமா என்ன? எல்லாம் அந்த அரங்கநாதருக்கே வெளிச்சம்.   10:18:36 IST
Rate this:
57 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
12
2015
அரசியல் டில்லி தேர்தல் தோல்வி ஏன் ? ஆய்வு செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.,
இதுல என்னத்த ஆய்வு செய்ய இருக்கு? மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போடல அதனால தோத்துபோச்சு..   19:48:22 IST
Rate this:
9 members
1 members
71 members
Share this Comment