E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
JAY JAY : கருத்துக்கள் ( 1750 )
JAY JAY
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2014
உலகம் இந்தியாவில் விரைவில் புல்லட்ரயில் ஜப்பான் நிதி உதவி அளிக்க தயார்
5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி என்பது. அகமதாபாத் - மும்பை , புல்லட் ரயில் திட்டதிற்கே சரியாகி விடும்? இதனால் ஒட்டுமொத்த இந்தியா வளர வாய்ப்பு இல்லை... இந்தியாவிலேயே எண்ணற்ற வளம் உள்ளது... எந்த நாடும் தமது தொழில் நுட்பத்தை முழுமையாக இந்தியாவிற்கு தராது.... நமது நாட்டுக்கு அதிரடியாக தேவை சில.....1. இந்தியாவில் உழலும் கருப்பு பணத்தை , அரசு கஜானாக்கு கொண்டு வருவது... 2 ..அதன் மூலம் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, வேலை வாய்ப்பை அதிகபடுத்துவது... 3. இந்தியாவே புதிய தொழில் நுட்பங்களை கண்டு பிடிப்பது.... அதற்கு அரசு மட்டும் போராடினால் போதாது... ஒவ்வொரு இந்தியனும் நேர்மையாகவும் கடின உழைப்பாளியாகவும் இருக்க வேண்டும்... கடுமையான சட்டங்கள் மூலமே ஒவ்வொரு இந்தியனையும் நேர்மையாளனாக மாற்ற முடியும்...அப்போது தான் இந்தியா முன்னேறும்...   17:32:53 IST
Rate this:
9 members
0 members
116 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2014
அரசியல் தலைமை மாற்றத்தில் அல்ல சிந்தனை மாற்றத்தில்தான் தி.மு.க.,வின் எதிர்காலம்
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாததால், பொதுமக்கள் திமுகவை வீழ்த்த நினைப்பதாக பொருள் படும்படி எழுதியுள்ளீர்கள்.... மக்கள் திமுகவை வெறுத்ததற்கு 3 காரணம்... 1. ஊழல். 2.குடும்ப அரசியல். 3. மீடியா, மற்றும் சினிமாக்களில் இவர்கள் குடும்பத்து ஆதிக்கம்.... போன்றவை தான்.. திமுகவின் பகுத்தறிவு கொள்கைகளை யாரும் சட்டை பண்ணுவதே இல்லை... திமுகவின் பம்மாத்துக்களை மக்கள் நம்ப மாட்டார்கள்... அதுபோல இந்தி திணிப்பை எதிர்த்தது ஒன்று தான் அண்ணாதுரை செய்த மிக நல்ல காரியம்... இன்று வரை இந்தி திணிப்பை எதிர்ப்பதில் தப்பு இல்லை என்றே தோனுகிறது... ஊழலற்ற, கர்மவீரர் , பெருந்தலைவர் காமராசரையே வீழ்த்தியது , மத்திய காங்கிரசின் தேவையற்ற இந்தி திணிப்பு தான்.... மற்றபடி பகுத்தறிவு , சுயமரியாதை என்று திமுக கூறுவதெல்லாம் சும்மா பம்மாத்து... ஸ்டாலின் விநாயாகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறியவுடன், மக்கள் பொத்துக்கொண்டு திமுகவிற்கு மீண்டும் வாக்களித்து விட போகிறார்களாக்கும்?   13:11:22 IST
Rate this:
1 members
1 members
93 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2014
அரசியல் பீகாரில் லாலு - நிதீஷ் கூட்டணி வெற்றி பஞ்சாப்-கர்நாடகாவில் காங்., வெற்றி
மோடி தனது செயல்பாடுகளை இதுவரை தொடங்கவில்லை என்பதனையே காட்டுகிறது இந்த முடிவுகள்... மக்களும் மாத்தி மாத்தி, மாத்தி, மாத்தி, மாத்தி ஓட்டு போட்டு களைப்படைந்து விட்டார்கள்... ஆனாலும் தீர்வு எதுவும் இல்லை... ஜேட்லியின் பட்ஜெட், பசி யின் XEROX COPY பட்ஜெட் போல தான் இருந்தது... NDA க்கு ஸ்டார்டிங் டிரபுள் போல உள்ளது... ஒட்டு மொத்த இந்தியாவை புரட்டி போட்டு விடுவார் மோடி என்ற மக்களின் கனவு தகர்கிறது .. மோடி தனது முதல் கட்ட நடவடிக்கைகளை எதுவும் தொடங்காமல் இருப்பது, மக்களிடையே பொறுமையை சோதித்ததன் விளைவு தான் இடை தேர்தல் முடிவுகள்.... ஆனாலும் 60 ஆண்டு கோளாறை 3 மாதத்தில் சரி செய்ய இயலாது , ஆனால் அதனை சரி செய்வதற்கான ஆயத்த பணிகளையோ அல்லது குறைந்த பட்சம் திட்டங்கள் அல்லது அறிவிப்புகளை கூட மோடி அரசு இதுவரை சொல்லாதது நிச்சயம் ஒரு ஏமாற்றமே...   13:17:00 IST
Rate this:
102 members
1 members
158 members
Share this Comment

ஜூலை
22
2014
உலகம் இலங்கையுடன் நல்லுறவே மோடி விருப்பம்சுப்பிரமணியன் சுவாமி
இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடு... இலங்கை தமிழர் விஷயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசும் சரி, தற்போதைய பாஜக அரசும் சரி மிக சரியான நடவடிக்கைகளை தான் எடுத்து வருகிறது.... காங்கிரசை ஏதாவது ஒரு விஷயத்தில் பாராட்ட வேண்டும் என்றால், அதனது வெளிநாட்டு கொள்கை விஷயத்தில் மட்டும் பாராட்டலாம்... இலங்கையில் தீவிரவாதத்தை ஒழித்ததில் காங்கிரஸ் சிறந்த பங்கு ஆற்றியது.... ஆனால் அதே சமயம் ராஜபக்ஷே ராணுவம் உச்சகட்ட போரின்போது செய்த மனித உரிமை மீறல்களை, போர் குற்றங்களை மன்னிக்க இயலாது...[ இலங்கை ராணுவம் செய்த தவறுக்கு காங்கிரசை தமிழ்நாட்டில் பலிகடா ஆக்கியது முட்டாள்தனம்....காங்கிரஸ் இந்தியாவில் செய்த ஊழல்களுக்கு வேண்டுமானால், காங்கிரசை தேர்தலில் பலமுறை பலிகடா ஆக்கலாம்... ].. அதேசமயம் போர்குற்றம் புரிந்த ராஜபக்சேயை தண்டிக்க இந்தியாவால் முடியாது...உலக நாடுகள் தான் அதனை செய்ய வேண்டும்...குறிப்பாக ஐநா சபை.... இங்கு வீராவேசம் பேசி இன உணர்வை தூண்டி, தமிழ் செண்டிமெண்ட் மூலம் ஓட்டு வாங்க நினைப்பவர்களின் பப்பு, அகில இந்திய லெவலில் இனி வேகாது....   10:03:16 IST
Rate this:
20 members
1 members
107 members
Share this Comment

ஜூலை
22
2014
உலகம் இலங்கையுடன் நல்லுறவே மோடி விருப்பம்சுப்பிரமணியன் சுவாமி
மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் இலங்கை கூட நல்லுறைவையே நாடும்... பாஜகவும் அதற்கு விதிவிலக்கல்ல.... நமது தமிழகத்தில் உணர்வாளர்கள் என்று சொல்லி திரியும் சிலர் இதனை உணர்ந்து கொண்டு, இனிமேலாவது தமிழகத்தில் வாழும் தமிழர் நலனுக்காகவும், அனைத்து இந்தியர் நலனுக்காகவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்... குறிப்பாக வைகோ...   09:54:18 IST
Rate this:
104 members
1 members
178 members
Share this Comment

ஜூலை
22
2014
உலகம் இலங்கையுடன் நல்லுறவே மோடி விருப்பம்சுப்பிரமணியன் சுவாமி
காங்கிரசை இந்த இலங்கை விஷயத்தில் எதிர்த்த நம்ம உணர்வாளர்களுக்கு இது ஒரு மூக்கறுப்பு அல்லது சவுக்கடி..... வைக்கோ மற்றும் சீமான் கோஷ்டிகள் இப்போ எங்கே போயிற்று ?   09:51:55 IST
Rate this:
26 members
1 members
350 members
Share this Comment

ஜூலை
21
2014
சினிமா என்றுமே உனக்கே முதல் மரியாதை இன்று நடிகர் திலகத்தின் நினைவு தினம்...
சிவாஜி நடிப்பில் அந்த காலத்தில் கொடிகட்டி பறந்தவர்.... இந்த கால இளைஞர்கள் அவரது நடிப்பை மதிப்பார்களா ? அல்லது ரசிப்பார்களா ? என்று தெரியவில்லை.. அவரது குடும்பத்து வாரிசுகள் பிரபு என்றாலும் சரி விக்ரம் பிரபு என்றாலும் சரி, தங்களது தந்தை அல்லது தாத்தா பெயரை ஓரளவுக்கு காப்பாற்றி கொண்டுள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்.... அத்தகைய கொடுப்பினை எத்தனை பேருக்கு வாய்க்கும்?..   13:19:16 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
21
2014
அரசியல் மன்மோகன் சிங்கை மிரட்டிய திமுக அமைச்சர்மார்கண்டேய கட்ஜூ பகிர் அறிக்கை
மார்கண்டேய கட்ஜு , உண்மையிலேயே ஒரு சிறந்த ஜட்ஜு.... சிறப்பான கருத்துக்களை அவ்வபோது கூறுபவர்.... அவரது மார்கண்டேய என்ற முதல் பெயரிலேயே அந்த முன்னாள் அமைச்சரின் குடும்ப பெயர் புதைந்து கிடக்கிறது என்ற உண்மை சிறு குழந்தைக்கு கூட தெரியுமே.....   09:54:46 IST
Rate this:
4 members
0 members
38 members
Share this Comment

ஜூலை
20
2014
சினிமா ரசிகர்களுக்கு கண்ணீரை சமர்பித்த தனுஷ்...
மயக்கம் என்ன, 3, மரியான், நய்யாண்டி ..இப்படி வரிசையாக தோல்வி படங்களை கொடுத்த ஸ்டார் நடிகர் அல்லாத இன்னொருவரால் , மீண்டும் இப்படி தொடர்ந்து படங்கள் நடிக்க வாய்ப்பு கிட்டுமா? இதுக்கு காரணம் ரசிகர்கள் அல்ல.... மாமனார்... உள்ளதை சொல்ல வேண்டுமென்றால் தனுஷ் தனது மனைவி , மற்றும் மாமனாருக்கு நன்றி பல கோடி சொல்ல வேண்டும்....   15:24:58 IST
Rate this:
57 members
4 members
200 members
Share this Comment

ஜூலை
19
2014
சினிமா தனுசுக்கு நம்பிக்கைக் கொடுத்த தண்டச்சோறு செண்டிமென்ட்...
சில சமயம் உண்மைய சிம்பாலிக்கா இல்லாம, பட்டவர்த்தனமா சொன்னா தான் படம் கூட ஓடும் போல... நம்ம மக்களுக்கு உண்மைய இப்படி பட்டவர்த்தனமா கேட்பதில ஒரு இன்பம்....   16:03:08 IST
Rate this:
3 members
0 members
32 members
Share this Comment