Advertisement
MrBoy : கருத்துக்கள் ( 17 )
MrBoy
Advertisement
Advertisement
மே
26
2013
பொது சத்தீஸ்கரில் நிகழ்த்தப்பட்ட நக்சல் வெறியாட்டத்தில் 30 பேர் பலி
திறமையான உங்களை போன்ற மக்கள் தான், நீங்க சொன்ன அதே "திறமையற்ற" காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய சொன்னீங்க, இப்போ கத்தி என்ன ஆக போகுது..? மாவோயிஸ்ட்களால் சாமானியன் சாகடிக்க படும்போது வெறும் "ஆறுதல்" சொல்லி தப்பிக்கும் அரசியல் தலைவருகளுக்கு ... இப்போ அரசியல் வாதிகள் என்பதால் அவசர சிகிச்சை, ஆம்புலன்ஸ் விமானம், z பிரிவு பாதுகாப்பு ன்னு கொஞ்சம் வித்தியாசம்..நா போராளிகளுக்கு ஆதரவா பேசலை... அதே சமயம் அரசியல் வாதிகளிடம் இது ஒரு பாடமாக இருக்கட்டும்.. என்றைக்கு நம் நாட்டு தலைவர்கள் மக்களை மதிக்கிரான்களோ அன்றைய தினம் முதல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது... - இது என் தாழ்மையான கருத்து.   06:18:23 IST
Rate this:
1 members
1 members
42 members
Share this Comment

மே
15
2013
அரசியல் எலியும், கருணாநிதியும் ஒண்ணு அமைச்சரின் கிண்டல் பேச்சு
மக்களிடம் - நீங்க ரெண்டு கட்சி காரனும் சேர்ந்து செய்யாத "கிண்டலா" இப்போ புதுசா பன்னீர் செல்வம் செய்துட்டாரு, உபரியா போட்ட பட்ஜெட்ல இருந்து எத்தனை உருப்படியான திட்டங்கள் மக்களிடம் சேந்துச்சு ன்னு சொல்ல முடியுமா? கரெண்ட் கொடுங்கடன்னா, எலி, பல்லின்னு காமெடி பண்ணிட்டு... ஒன்னு மட்டும் உறுதி, எதையோ மறைக்க... நீங்க ரெண்டு பேரும் கச்ச தீவை வைத்து அடுத்த நாடகத்தை ஆரம்பிச்சுட்டீங்க.   07:21:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
13
2013
அரசியல் ராகுலுக்கு இலவசமாக செய்தித்தாள் வழங்கிய சிறுவனை தத்தெடுத்தது காங்.,
நல்ல விஷயம் தான், இல்லாதோருக்கு உதவும் குணம் எல்லாரிடத்திலும் வளர வேண்டும்.. இதற்க்கு ராகுல் வந்து சொன்னா தான் செய்யனும்னு அவசியம் இல்லை...   13:00:55 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தென் மாவட்டங்களில் ஒன்பது தொழில் பூங்கா ஜெ., அறிவிப்பு
அம்மா அவர்களுக்கு, கரெண்ட் இல்லாம எத்தன கோடி போட்டு தொழில் தொடங்கி என்ன பிரயோஜனம்? யாருக்காக நீங்க இந்த வெட்டி அலம்பல் கொடுக்குறீங்க..? நீங்க ரெண்டு கட்சிகாரனும் வெட்டியா அறிக்கை விட்டு ... ரியல் எஸ்டேட் காரனுக்கும்..அவனோட புரோக்கர் களுக்கும் தான் தொழில் கொடுக்குறீங்க... அவனுகளும் அந்த இடத்தில IT பார்க் வருது, இந்த இடத்துல நாலு வழிசாலைன்னு ஏமாத்தி காசு பாக்குராணுக... தொழில் பேட்டை தொடங்கும் முன், இருக்குற சிறு தொழில் கம்பெனிகளுக்கு கரெண்ட் ஏற்பாடு செய்து கொடுங்க மேடம் ... எனக்கு விவரம் தெரிஞ்சு கடந்த 22 ஆண்டுகளாய் "சிவகங்கை மாவட்டத்தில் கிராபைட் தொழிற்சாலைன்னு " அரசியல் நாடகம் பார்த்துட்டேன்.. இன்னும் எத்தனை முறை அதை மறு ஒளிபரப்பு செய்வானுகளோ இந்த அரசியல் வாதிகள்...?   06:36:53 IST
Rate this:
3 members
0 members
38 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்க தமிழக அரசு திட்டம்
இது போன்ற எண்ணற்ற "ஐடியா" சொல்ல என்னை போன்ற ஒரு சாமானியன் போதுமே... முதலில் இது போன்ற ஐடியா க்கள் நடைமுறைக்கு ஒத்து வருமான்னு யோசிக்க வேண்டும்.. மக்கள் எல்லாரும் அரசியல் வாதிகளின் இது போன்ற கவர்ச்சி விளம்பரங்களையும்.. காகித அளவிலான திட்டங்களையும் நம்பி நம்பி ஏமாருவதால் தான் எத்தனையோ நல்ல திட்டங்கள் துவங்கபட்டும் இரு கட்சிகளாலும் மாறி மாறி புதைக்கப்பட்டு போனது... என்னை பொறுத்தவரை, மனிதனின் அளவுக்கு அதிகமான "ஆசை" இன்றைக்கு பிரச்னை வடிவில்.. நிலத்தடி நீரில் தொடங்கி, சுற்றுச்சூழல், உணவு உற்பத்தி தட்டுப்பாடு, பஞ்சம் என பல வற்றை எதிர்நோக்கி உள்ளது ... இதில் பாதிக்க பட போவது யார்னு பார்த்தா? திட்டங்களை சொல்லி பணம் பார்க்கும் அரசியல் வாதிகளோ .. அதை கேட்டு கொண்டு வெட்டி பேச்சு பேசும் இன்றைய தலைமுறையோ அல்ல... நம் குழந்தைகள் தான் மிகவும் கஷ்டப்பட போகின்றனர்... உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சொத்து சேர்த்த பெருமை மக்களிடம் இருக்கலாம் .. ஆனா, சோத்துக்கு பதிலா சொத்தையோ ... பணத்தை தின்ன முடியாது... இங்கு நான் அரசியல் பேசவில்லை ...ஏன்னா, அவனுக எல்லாம் ஒரு விளம்பர பச்சோந்திகள் ...ஒரு நாள் இரவில் ஒரு மாவட்டத்தின் வறட்சியை கணக்கிட்ட கயவான்கள்... இவ்ளோபெரிய ஆதங்கத்தை ஏன் சொல்றேன்னா? என் கோவம் எல்லாம் மக்களின் மீதும்.. அவர்களின் "அளவுக்கு அதிகமான ஆசை" மீதுமே.. இது எல்லா மட்டத்திலும் இன்று பரவி கிடப்பதே ஒரு நோய் ... அதை குணப்படுத்தாமல், எத்தனை அரசாங்கம் வந்தாலும் இங்கே ஒன்னும் நடந்து விட போவது இல்லை...   10:58:05 IST
Rate this:
2 members
1 members
52 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
சம்பவம் மனைவி, மகளை இழந்த நபருக்கு யாருமே உதவ முன்வராத கொடூரம்
இது தான் இன்றைய இந்தியா... தான் வாழ்ந்தால் போதும் என்ற மனோபாவம் வளர்ந்து நிற்பதின் வெளிப்பாடே இது போன்ற செயல்களும், நேற்றைய பிரசவ செய்திகளும், டெல்லி பெண்ணின் சாவும் ... மனித நேயம் வளர்க்க யாரும் முன்வருவது இல்லை என்று சொல்லும் முன், மனித நேயம் என்றால் என்ன? என கேள்வி கேட்க்கும் நபர்களின் எண்ணிக்கை கூடியதே இது போன்ற நிகழ்வுகள்... "நமக்கும் ஒரு நாள் இதே நிலை வரும்" என்று அனைவரும் நினைத்து பார்க்கவேண்டும் ,, குறைந்த பட்சம் குழந்தைகளிடமாவது விட்டு கொடுக்கும் மனபக்குவம், பொறுமை, மனித நேயம், உதவும் குணம் என்ன என்பதை சொல்லி கொடுத்து புண்ணியம் தேடுவோம்...   08:43:13 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
4
2013
கோர்ட் காமன்வெல்த் விளையாட்டு ஊழல்:சுரேஷ் கல்மாடி மீது இன்று குற்றச்சாட்டு பதிவு
போட்டி முடிஞ்சு, 3 வருஷம் ஆச்சு ...ஒரு ஒலிம்பிக் போயிருச்சு ...அவன் அவன் அடுத்த ஒலிம்பிக் தயாராகிட்டு இருக்குராணுக ... இதுக்கு நடுவுல நம்ம ஊரு வீராங்கனைன்னு சொன்ன ஒரு பொம்பளைய, பொம்பள இல்ல ஆம்பளைன்னு தீர்ப்பு சொல்லிட்டணுக ... இப்போ தான் நம்ம ஊரு CBI குற்றப்பதிவு செய்ய போகுது ... ஒரு திரைபடத்திற்கு இரவு பகல் என்று பாராமல் கொடுக்கும் முக்கியதுவம் நம்ம நாட்டில் இதுபோன்ற கேவலங்களுக்கு கொடுப்பதில்லை ... இதற்க்கு முடிவு ..?   09:58:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
23
2013
பொது "டாஸ்மாக்'கில், விற்பனை இலக்கை எட்டாத அதிகாரிகள் சஸ்பெண்ட்
பணியை சரியாய் செய்யாத அரசு அதிகாரிகளின் மீது நம்ம நாட்டுல முதன் முறையா நடவடிக்கையான்னு ஒரு நிமிடம் உறைந்து போனேன்... எத்தனையோ நல்ல திட்டங்களில் அரசு அதிகாரிகளின் செயல்பாடு மிகவும் கேவலமாக இருக்கும்போது எடுக்காத நடவடிக்கை ... இந்த மாதிரி மக்களை கொள்ளும் "மது விற்பனை" விசயத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்குக்கா இந்த அக்கபோருன்னு ? வெட்கப்பட வேண்டியதே தவிர .. வேற ஒன்னும் சொல்லுவதற்கு இல்லை...    06:53:20 IST
Rate this:
0 members
1 members
102 members
Share this Comment

ஜனவரி
23
2013
பொது பணக்காரர்களுக்கு அதிக வரி: விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி ஆதரவு
உங்களது கருத்தை வரவேற்கிறேன்... அதே சமயத்தில் பணக்காரர்களுக்கு அதிக வரி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... வெளிப்படையா எந்த பணக்காரன் இந்தியால இத ஒத்துக்குவான்..? பணக்காரன் வச்சு இருக்குற சொத்துக்கு வரி கட்டுனாலே போதும் சார் ... அதுவும் இல்லாம, இன்றைய இந்தியாவில் வரி கட்ட எல்லாரும் தான் ரெடி... ஆனா ஊதரிதனாமா செலவு செய்யும் அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை உங்க கோழி கூரை ஏறுவது கடினம் ... இதுவரை கட்டின வரிய பிரயோஜனமா செலவு செய்தாலே பாதி ஏழ்மை குறையும்... அரசியல் இல்லாத ... அவனுக அக்கபோரு நுழையாத நம்ம ஊருக்கு பயன்படும் வேற நல்ல வழி இருந்தா சொல்லுங்க சார் .   14:21:41 IST
Rate this:
2 members
1 members
19 members
Share this Comment

ஜனவரி
22
2013
பொது நகை - புடவை விசாரிக்கும் பெண்களே., தொகுதி தெரியுமா உங்களுக்கு ?
நியாமான அறிவுரை.. படிச்சவன் தானுண்டு தன் வேலையுண்டுன்னு போயிடுறான்... இதுதான் தவறுக்கு முதல்படி ... குடும்ப தலைவிகளும், பெற்றோர்களும் தாங்கள் சந்தித்து கொள்ளும்போது ... குழந்தைகளின் எதிர்காலம், நாட்டின் நடைமுறை, அத்தியாவசியமான வீட்டு, நாட்டின் பொருளாதாரம் நாட்டின் சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள், அதன் விளைவுகள், ஓட்டுரிமை, தொகுதி நிலவரம் என பேசி பகிர்வது நல்ல விஷயம்... ஆனால், முடிவு எடுக்கும் போது தங்களின் தகுதிக்கேற்ப, உரிமையுடைய தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்... இந்த மாற்றம் அடித்தட்டு மக்களிடம் வரவேண்டும், ஏன்னா,,? அரசியல் வாதிகளின் டார்கெட் அவர்கள் தான்.   06:52:28 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment