மாவோயிஸ்டுகள் உடனடியாக அடக்கப்படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மாவோயிஸ்டுகள் வளர்சிக்கு உறுதுணையாக இருக்கும் வறுமை, ஊழல், நாட்டை சுரண்டும் மற்றும் இயற்கை வளம்களை சுரண்டும் அரசியல் பெருச்சாளிகளை உடன் ஒடுக்கப்படவேண்டும்.
27-மே-2013 01:45:18 IST
சஞ்சய் தத் போன்ற ஆசாமிகளுக்கு கருணை காட்டினால், பணம் மற்றும் பலம் உள்ள குற்றவாளிகள்,சட்டத்தை மதிக்க மாட்டார்கள். ஆகவே அவர் தண்டனை காலத்தை சிறையில் கழிக்க வேண்டும்.
10-மே-2013 18:31:31 IST
கலைஞரே, 2009யில் தங்கள் முதல்வர், 40/40 என்று கையில் வெண்ணையை வைத்துகொண்டு நெய்க்கு தேடி கொண்டு இருந்திர்கள். பணத்துக்காக சொந்த இனம் செய்து மடிந்தபொழுது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தீர். இப்பொழுது பதவிக்காக தமிழர் இனப்படுகொலை பிரச்சினையை வைத்துகொண்டு அரசியல் லாபம் தேடுகிறீர்கள். பண்டார வன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஓர் எட்டப்பன், மாவீரன் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு ஒரு கருணா, ஆனால் தமிழ் இனத்துக்கு நீங்கள் தான் நிரந்தர எட்டப்பன்.
08-மார்-2013 05:25:45 IST
புதுசு புதுசா எதோ கதை உடுகிறார். பாவம் அவர் என்ன செய்வர். அவர் வேலையை காப்பற்றி கொள்ள அவர் இதை எல்லாம் பேசித்தான் ஆகவேண்டும். ஒவ்வொரு அணு உலையில் இருந்து எவ்வளவு கதிரியக்கமுள்ள பொருட்கள் காற்றிலும் மற்றும் கடலிலும் கலந்தது என்று அரசு அறிவிக்குமா? ஒரு விபத்து நடந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? போபாலில் புடிங்கியது போல் இங்கயும் புடுங்குவர்கள். போபாலில் கொல்லப்பட்ட 160000 மக்களுக்கும் மற்றும் காயம் அடைந்த 558,125 மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக, andresonயை பாதுகாப்பதில் இந்திய அரசு அக்கரை காட்டியது. ஜப்பானில் 2011 ஆண்டு நடந்த அணு உலை விபத்தை , உலக பணக்கார நாடான ஜப்பான் அரசால் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. அணு சக்தி என்பது நமக்கு ஓர் நிரந்தர தீர்வாக இருக்கமுடியாது. அதனாலதான் ஆஸ்திரியா அரசு, சுவீடன் அரசு , இத்தாலி அரசு, பெல்ஜியம் அரசு மற்றும் ஜெர்மனி அரசும் அணு உலைகளை பயன் படுத்துவது இல்லை என்ற முடிவு எடுத்து உள்ளன். ஆகையால் நாம் இயற்கை அளித்த காற்று மற்றும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும்.
06-மார்-2013 06:17:25 IST
இங்கே ஷோ காட்டவில்லை என்றல் மக்கள் சுத்தமாக மறந்து விடுவார்கள். மக்கள் எச்சில் துப்புகிறார்கள், அது வேறு கதை. டெல்லியில் ரொம்ப ஷோ காட்டினால் பாப்பாவை, நிரந்தரமாக திகரில் போட்டுவிடுவார்கள். இதுதான் தென்னை மரத்தில் உட்கார்ந்து இருந்த திருடனை தேள் கொட்டின கதை போல இருக்கு.
06-மார்-2013 05:04:07 IST
உயர் வகுப்பு ஊழல் - எம் பி, மத்திய அமைச்சர்கள், உயர் நடுத்தர வர்க்கம் ஊழல் - எம்எல்எ, மாநில அமைச்சர்கள், நடுத்தர வகுப்பு ஊழல் - நகர தந்தை, நகராட்சி, ஊராட்சி, கிராமம், மன்ற உறுப்பினர்கள், கீழ் வகுப்பு ஊழல்- கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.
04-மார்-2013 18:20:11 IST