இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் ஆப்கானிஸ்தானும் ஒரு காலத்தில் இந்தியாவின் பகுதியாகத் தான் இருந்தது தெரிய வரும். மகாபாரதத்தில் வரும் காந்தாரம் இன்றைய ஆப்கானிஸ்தானின் பகுதிதான். அதை எப்படி
இந்த அரைக்கிறுக்கு மறந்தது ?
03-ஏப்-2013 09:34:03 IST
நண்பரே , நீங்கள் சொல்வது தவறு அவரின் இந்தத் தவிப்புக்கு நிச்சயமாக நான் காமத்தைச் சம்புந்தப்படுத்தவில்லை. நிறைவேறாத ஆசையின் விளைவால் எற்படும் உளவியல் சிக்கலுடன் சம்பந்தப்பட்டது இது என்பது எனது கருத்து..
31-மார்-2013 14:32:10 IST
இவருடைய கடிதத்திலிருந்து தெரிவது என்னவென்றால் , பழைய காதலியைப் பார்க்கத் தவிப்பது , உங்களை நான் இன்னும் மறக்கவில்லை என்ற வார்த்தைகளை, பழைய காதலியின் வாயிலிருந்து கேட்க வேண்டும் என்ற மனத்தின் அரிப்பெடுத்த ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் தான். இப்படிப்பட்டவர்களுக்கு, சந்தர்ப்ப வசத்தால் , பழைய காதலியைச் சந்திக்க நேரிடும் பொழுது , அந்த ஆசை நிறைவேறவில்லை என்றால் , அந்த ஆசை முழுவதும் வன்மமாக மாறி விடக் கூடும் . அதனால் அவரைச் சந்திக்க விரும்பும் ஆசையை உடனடியாக மனதிலிருந்து தூக்கிப் போட்டு விடுவது இவருக்கு நல்லது. பழைய காதலியை மறக்க முடியாதது காதலின் புனிதத்துக்கு அடையாளம் என்ற மாயையில் இவர் சிக்கிக் கொண்டிருக்கிறார். அது இன்றைய மனைவிக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகம் என்பதை உணர்ந்தால் இவரின் இந்தத் தவிப்பு , அல்லது மனத்தின் அரிப்பு ,அடங்கி விடும்.
31-மார்-2013 07:12:10 IST
தொட்டவனுக்கு மட்டுமல்ல ,விட்டவனுக்கும் அதே அளவிலான மதிப்பெண்கள் வழங்கப்படுவதே நியாயம். கேள்வியின் கேவலத்தைப் பார்த்து , இந்தக் கேள்வியைத் தொடுவது தனக்குக் கேவலம் என்று அவன் விட்டிருக்கலாம் அல்லவா?
30-மார்-2013 00:15:37 IST
ஈழப் பிரச்சினைக்காகப் போராடும் மாணவர்கள் , மீனவர்களின் துயரம் இவைகள் எல்லாம் பற்றிக் கவலையில்லை இவருக்கு. சக நடிகனுக்குப் பிரச்சினை என்றதும் அறிக்கை பறக்கிறது. இப்படிப்பட்ட மனிதரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் கும்பல் இனியாவது திருந்துமா?
23-மார்-2013 13:04:31 IST
@வடூவூரான், நன்றி . அவசரத்தில் நான் வாக்கியத்தைச் சரியாக அமைக்கவில்லை என்று நினைக்கிறேன் . நான் சொல்ல நினைத்தது "" அவரின் எல்லா செயல்களிலும் எனக்கு உடன்பாடில்லை என்ற போதிலும் "" . என்பது தான் .2G ஊழலை அம்பலப்படுத்தியதில் அவரின் பங்கு மகத்தானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனக்கு நெருடலான விஷயம் ஈழத் தமிழர்களின் விஷயத்தில் அவரின் நிலைப்பாடு. அப்படிப்பட்ட ஒரு சில நெருடல்களுக்காக அவரின் மற்ற நல்ல செயல்களைப் பாராட்டாமல் இருப்பது எனது மனச்சாட்சிக்கு நான் செய்யும் துரோகம் .
22-மார்-2013 12:41:07 IST
இந்த வெற்றியில் சுப்பிரமணி சாமியின் பங்கை மறுப்பவர்களும், மறப்பவர்களும் மனச்சாட்சி இல்லாதவர்கள். ( அவரின்
மற்ற செயல்களில் எனக்கு உடன்பாடில்லாத போதிலும் ) என்று உறுதியாய்ச் சொல்லுவேன் .
22-மார்-2013 02:18:05 IST
<<<<அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை >>>> அப்படியானால் நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு தவறு என்கிறாரா ?இவர் மீது ஏன் நீதி மன்ற அவமதிப்புச் சட்டத்தைப் பிரயோகிக்கக் கூடாது ?
22-மார்-2013 02:11:13 IST