Advertisement
Dr.R.Shanmuga Sundaram : கருத்துக்கள் ( 16 )
Dr.R.Shanmuga Sundaram
Advertisement
Advertisement
நவம்பர்
5
2013
பொது நாளை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
அப்பாடா, மேடு பள்ளங்கள் நிறைந்த கோயம்பேடு சாலைகள் எல்லாம் அம்மா வருவதால் அவசர, அவசரமாக சரி செய்யப்பட்டு விடும். மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்காக சென்னை மக்கள் பட்ட/படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட வேகமாக போகமுடியாதபடி நகரம் எங்கும் ட்ராபிக் ஜாமில் ஒவ்வொரு நாளும் சென்னைக்காரர்கள் பட்ட அவஸ்தைகளுக்கு மெட்ரோ ரயிலை ஒரு மாசம் இலவசமாக ஓட்டனும். வருங்கால தலைமுறை நல்லா இருக்க இன்றைய தலைமுறை படும் அவஸ்தைகளில் இதுவும் ஒன்று. எப்படியோ மெட்ரோ ரயில் நல்ல ஓடினால் சரி. இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.   15:49:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
17
2013
அரசியல் பவுர்ணமியில் தெரு விளக்குகளை அணைக்கலாம் மோடி அறிவுரை
இது உண்மையிலேயே மிகவும் நல்ல அறிவுரை. நம் நாட்டில் ullavargal வீட்டில் இருந்து ஜிம்முக்கு பைக்கிலே போவார்கள். அங்கு போய் சைக்கில் ஓட்டுவார்கள். அதற்கு ஆயிரக்கணக்கில் மாதாமாதம் ஜிம்முக்கு செலவு செய்வார்கள். காய், கறி வாங்கபோகும்போது சைக்கிளில் சென்றால் உடல் ஆரோக்கியம் பெறும். பெட்ரோலும் மிச்சம் ஆகும். ஆனால் நம் நாட்டு சாலைகள் மேடு பள்ளங்களாக இருப்பதால் யாரும் சைக்கிள் ஓட்டுவதை தவிர்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஸ்பீட் ப்ரேக்கர்ஸ். அது இருக்கும் இடங்களில் எல்லாம் வெளிச்சமும் கிடையாது. தொடர்ந்து வாகனம் ஓட்டுவது ஒரு சாதனையாக ஆகி விட்டது. வருங்கால பிரதமர் மோடி அவர்களின் இந்த கருத்திற்கு பாராட்டுகள். சைக்கிளில் அலுவலகம் போவது மக்கள் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் இதை பின்பற்ற வேண்டும்.   10:09:03 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
10
2013
அரசியல் எனக்கு ரெண்டு குரு ராகுல் உருக்கம்
அரசியலில் எதை செய்ய கூடாது என்று ஒருவரிடமும், எதை செய்யவேண்டும் என்று மற்றவரிடமும் ராகுல் பாடம் கற்று இருப்பார். இன்னும் ஐந்து ஆண்டுகள் எல்லோரும் வீட்டில்தான் இருக்க போகிறார்கள் .அப்போது இன்னும் நிறைய கற்று கொள்ளலாம்.   12:57:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
26
2013
பொது குற்றாலத்தில் குளிக்க தடை நீங்கியது
கடவுள் அருளால் கிடைக்கும் அவ்வளவு தண்ணீரையும் சேமித்து வைக்க உடனே ஒரு அணையை கட்டினால் சுற்று வட்டார மக்களுக்கு குடிநீர்/விவசாயதேவைகளுக்கு தண்ணீர் பிரச்னை தீரும். அரசு கவனிக்குமா? அருவி நீரை குளிக்க மட்டும் பயன்படுத்தாமல் மக்களின் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.அரசின் கவனம் தேவை.   10:13:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
26
2013
பொது 24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்வதால் மட்டும் முழுத்தொகையும் கிடைக்காது
குழப்பமாக உள்ளது இந்த புதிய முறை. இப்போது உள்ள முறையில் எல்லாம் நன்றாகவே நடந்து வரும் போது திடீரென்று ஏன் இந்த மாற்றம் என்று தெரியவில்லை. ஒரேஒரு குறையை மட்டும் மாற்ற வேண்டும். டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு என்று ஒரு தனி வரிசை ஏற்பாடு செய்தால் வசதியாக இருக்கும். கேன்சல் செய்வது எளிமையாக இருந்தால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மேலே வரும் வாய்ப்பு சீக்கிரமாக இருக்கும். மேலும் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் நுழைந்து தொந்தரவு செய்வதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரமான உணவும் தண்ணீரும் நியாயமான விலைகளில் கிடைக்க வேண்டும்.ஒவ்வொரு நிலையங்களிலும் கழிப்பறைகளை சுத்தம் செய்யவேண்டும்.ஓடாத மின்விசிறிகளை இயங்க வைக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லோருக்கும் ஒரு சீப்போ,பேனாவோ இலவசமாக கொடுக்கவேண்டும்.இதுபோல குறைகள் இருந்தால் பயணசீட்டு பரிசோதகரிடம் சொல்லி சரிசெய்யும் முறையை அறிமுகபடுத்த வேண்டும்.   10:01:44 IST
Rate this:
5 members
9 members
32 members
Share this Comment

ஜூன்
18
2013
பொது யமுனையில் வெள்ளப்பெருக்கு
வெள்ளத்தில் வடமாநிலத்தவர்கள் எவ்வளவோ பாதிப்புகளுக்கு ஆளானாலும் உபரி தண்ணீரை தெற்கு மாநிலங்களுக்கு மட்டும் கொடுக்க மாட்டார்கள். கங்கை காவிரி இணைப்பு ஒன்றுதான் இதற்க்கு தீர்வு ஆகும்.கர்நாடகாவில் வெள்ளம் வந்தால்தான் தமிழ்நாட்டுக்கு திறந்து விடுவார்கள்.அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டம் ஒன்றுதான் சரியான தொலைநோக்கு திட்டம் ஆகும்.தமிழ்நாட்டில் வாக்காளர்கள் அனைவரும் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு சொல்கிறதோ அந்த கட்சிக்கு வாக்குகள் அளிக்க வேண்டும். தண்ணீர் இருந்தால்தான் மின்சாரமும் கிடைக்கும்.திரும்ப திரும்ப இரண்டு கட்சிகளுக்கே ஓட்டு போட்டு எதை சாதித்தான் தமிழன்? அஞ்சு ரூபாய்க்கு அம்மா உணவகத்தில் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அம்பது ரூபாய்க்கு டாஸ்மாக்கில் தண்ணி அடித்துவிட்டு தூங்கும் தமிழன் என்று விழித்துக்கொள்ள போகிறான்?   11:32:43 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
பொது மத்திய பட்ஜெட்: வரி செலுத்துவோர் கனவு நிறைவேறுமா?
வருமான வரியை குறைத்தால் மக்களின் வாங்கும் சக்தி அதிகம் ஆகும்.சேமிப்பும் பெருகும்.பொருளாதாரம் வலுவடையும்.இந்தியாவில் மட்டும்தான் எல்லாவற்றிற்கும் வரி செலுத்த வேண்டி உள்ளது. செலவு ஒரு பக்கம், லஞ்சம் ஒருபக்கம்,வரிஒருபக்கம்.இப்படி இருந்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை எங்கனம் சிறக்கும்?தமிழக கோயில்களில் இப்பொழுது சாமி தரிசனம் கூட கட்டண சேவை ஆகி விட்டது...நல்ல சாலை வசதிக்கு கட்டணம்,பாத்ரூம் வசதிகளுக்கு கட்டணம்,மத்திய தர மக்கள் இப்படி எல்லாவற்றியும் பணம் கொடுத்து அனுபவிக்கும் போது வருமான வரியும் கூடினால் மக்கள் என்னதான் செய்ய முடியும்...நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் ஏதாவது வரிச்சலுகை கொடுத்தால் அது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்... 30% வரி என்பது உண்மையில் மிகபெரிய சுமை..   15:41:00 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
11
2013
எக்ஸ்குளுசிவ் சமஸ்கிருத ஆய்வு மையம் பணமின்றி முடக்கம் ; ஓலை சுவடிகள், "டிஜிட்டல்' மயமாவதில் தடை
வெளி நாட்டில் வாழும் இந்தியர்களில் 90% சமஸ்க்ரிதம் மேல் பற்று உள்ளவர்கள். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு டிரஸ்ட் அமைத்து அதில் அவர்களின் நன்கொடைகளை சேர்த்து அந்த பணத்தை கொண்டு சமஸ்கிரத கல்லூரியை காப்பாற்றலாம்.. இது போன்ற காரியங்களுக்கு அரசாங்கம் எந்த நன்மையையும் செய்யாது. ஏன் என்றால் இது வோட்டு வாங்கி தராது. தேவ பாஷையான சமஸ்க்ரிதம் அழிந்து போகாமல் இருக்க அந்த பாஷை மேல் பற்று உள்ளவர்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும். சமஸ்க்ரிதம் விரும்பும் மக்கள் ம்யுசிக் அகாடமியில் உட்கார்ந்து சமஸ்க்ரித பாடல்களை ரசிக்கும் பொது,அவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த மொழியையும் காப்பாற்றலாமே. அப்படி இல்லை என்றால் தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமே இருக்காது.அவர்கள் தங்கள் அறிவையும், ஆளுமையையும் இந்த விசயத்தில் பயன்படுத்தி மொழியை வாழ வைக்கலாம்.மைய அரசாங்கத்திற்கும் மனிதவள மேம்பாட்டு துறைக்கும் கூட்டு விண்ணப்பம் அனுப்பலாம்....   11:08:30 IST
Rate this:
75 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
பொது 2011 முதல் 2013 வரை புதுப்பிக்க தவறியவர்கள் இம் மாதம் இறுதி வரை புதுப்பிக்க புதிய சலுகை
மிகவும் நன்றி.ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது என்பது மூட நம்பிக்கைகளில் ஒன்று என தோன்றுகிறது.அனைத்து வேலைகளுக்கும் பரீட்சை வைத்துதான் ஆட்களை தேர்வு செய்யும் போது வேலை வாய்ப்பு அலுவலகத்தின் வேலை என்னவென்ற தெரியாமல் பலரும் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.சீனியாரிட்டி என்பது தேவை இல்லாத ஒன்றாகிவிட்டது.இந்த சூழ் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதும் புதிப்பிப்பதும் தேவைதானா?   09:35:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
4
2013
அரசியல் ராமர் கோவில் பா.ஜ.,வின் நிரந்தர கொள்கை: கல்ராஜ் மிஸ்ரா
தாராளமாய் ராமருக்கு கோயில் கட்டுங்க.ஆனா அதுக்கு முன்னால இந்தியாவோட பொருளாதாரம் மேம்பட, லஞ்சம் ஒழிக்க,வேலையில்லா திண்டாட்டம் ஒழிய,வறுமை ஒழிய,நேர்மையான அரசாங்கம் அமைய,நதிநீர் பிரச்னைகள் தீர,விலைவாசி குறைய,அணைத்து மக்களுக்கும் அடிப்படை வசதி கொடுக்க,தொழில் பெருக, விவசாயம் வளம் பெருக,இப்படி மக்கள் முன்னால காங்கிரஸ் கவெர்மெண்ட் வைத்திருக்கிற பிரச்னைகள் தீர முதலில் தீர்வுகள் சொல்லுங்க.அப்பத்தான் பீ,ஜெ,பீ மேல மக்களுக்கு நம்பிக்கை வந்து ஆட்சிய கொடுப்பாங்க.பசியட இருக்கிரவனால சாமி சரியா கும்பிட முடியாது.ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.எங்கும் உள்ள இறைவனுக்கு ஏதோ ஓரிடத்தில் மட்டும் கோயில் கட்டுவதுதான் உங்கள் கொள்கை என்றால் அதை மாற்றி கொள்ளுங்கள்.முதலில் உங்கள் கட்சியின் பிரதம மந்திரிக்கு யார் தகுதி என்பதையே இன்னும் நீங்கள் தீர்மானிக்காமல் இருக்க வேண்டாம்.காங்கிரஸ் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது.நீங்களாவது நல்ல அரசாங்கம் கொடுங்கள்.முதலில் மக்கள் பிறகுதான் எல்லாம்.ஆல் த பெஸ்ட்.   09:51:59 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment