Advertisement
தினமலர் முதல் பக்கம் » karthi அவரது கருத்துக்கள்
karthi : கருத்துக்கள் ( 91 )
karthi
Advertisement
ஏப்ரல்
26
2013
அரசியல் சீனாவை பார்த்து இந்தியாவுக்கு பயம் ஏன்? - முலாயம்
அஜானுபாகுவானை கண்டு சிறியவன் மிரளுவதைப்போல் இந்தியா சீனாவிடம் பயந்து கொண்டு உள்ளது. நமது நாட்டு எல்லையை காக்க முடியவில்லை என்றால் காங்கிரஸ் அரசு மத்திய அரசிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தானே .அதை விடுத்து தொடை நடுங்கிக் கொண்டு இருப்பது ஏன்.சுண்டைக்காய் நாடு இலங்கைக்கு பயந்து தமிழக மீனவர்களை காவு கொடுத்துக் கொண்டிருக்கும் முதுகெலும்பு இல்லாத காங்கிரஸ் அரசு தன பதவியை காப்பாற்ற ஒரு மாநிலத்தையே அண்டை நாட்டிற்கு தாரை வார்க்க தயங்காது. இன்னும் இந்த ஆட்சி முடிவதற்குள் எத்தனை மாநிலங்கள் / நிலப்பரப்புகள் தாரைவார்க்கப் படுகிறதோ ஆண்டவனுக்கே வெளிச்ச்சம்.   17:07:25 IST
Rate this:
4 members
0 members
42 members
Share this Comment

மார்ச்
28
2013
அரசியல் நாங்கள் வெளியே வந்ததால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்து விட்டது? கருணாநிதி கேள்வி
இவரது அறிக்கையிலிருந்து எந்த அளவுக்கு பதவிப் பித்து இவரை ஆட்டி படைக்கிறது என்பது தெளிவாகிறது.இவருக்கும் தெரியும் இவர் வாபஸ் பெற்றாலும் மத்தியில் ஆட்சி மாற்றம் வராது என்று இவரது நாடகத்தின் ஒரு பகுதி தான் இந்த மத்திய அரசிலிருந்து விலகல்.முன் நடவடிக்கையாக மற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆதரவு பெற கால அவகாசம் கொடுத்துவிட்டு மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று தெரிந்த பின்புதான் இந்த விலகல் நாடகமே. இல்லாவிட்டால் இந்த எள்ளி நகையாடல் இவரிடம் வந்திருக்காது .இவர் இலங்கை தமிழருக்காகவோ அல்லது இந்திய தமிழருக்காகவோ என்றுமே துரும்பை கூட கில்லி போட்டது கிடையாது.தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான் என்பது பழமொழி.இங்கே தேன் கூட்டையே குடித்து காலி செய்தாகிவிட்டது.அந்த மத்திய அரசிலிருந்தோ அல்லது மத்திய அமைச்சர் பதவியில் இருந்தோ இனி சம்பாதிக்க முடியாது என்ற நிலை வந்தவுடன் அப்பாவி இலங்கை தமிழர்கள் நினைப்பு வந்து விட்டது.இனி இவர்களை வைத்து அரசியல் செய்து நாடாளு மன்ற உறுப்பினர்களை அறுவடை செய்தபின் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ராசபக்சே விற்கு சாமரம் வீச தயாராகவே இருப்பார். வழக்கம் போல் மதவாதிகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் அன்னையை ஆதரித்ததாக விளக்கம் வேறு கொடுப்பார்.இப்பொழுதெல்லாம் தமிழர்கள் சற்று விழித்துக்கொண்டார்கள் என்பதை இன்னும் இவர் மட்டும் உணரவில்லை.இவர் கூட்டணி ஆட்சியில் இருக்கும் பொது இலங்கை பிரச்சினையை பற்றி கேட்டால் அது அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சினை என்பார்.ஆட்சியில் இல்லாவிட்டால் தமிழர்கள் எனது உயிர் என்பார்.இவரது பதிவிப் பித்துக்காக தமிழகம் இழந்தது எத்தனயோ.ஆனாலும் மீண்டும் மீண்டும் அவருக்கு பதவியை கொடுத்ததால் இன்னும் தமிழ் மக்களை மாக்களாகவே நினைத்துக் கொண்டு உள்ளார் காலம் நிச்சயம் பதில் சொல்லும் உண்மை ஒருநாள் ஜெயிக்கும் அன்று அதனை பார்க்க தமிழினம் இருக்க வேண்டும் எனபதே எமது ஆசை.   14:36:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
13
2013
அரசியல் இத்தாலி விவகாரம்:பிரதமர் பதில்
இந்த 60 வருட காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகள் மத்தியில் நமது நாட்டின் மரியாதை எந்த லட்சணத்தில் உள்ளது என்று இந்த நிகழ்வு காட்டுகிறது.அண்டை நாடுகள் தான் மதிப்பதில்லை என்றால் தூரத்தில் உள்ள சுண்டைக்காய் நாடுகளும் இந்தியாவை மதிப்பதில்லை என்று நினைக்கும் போது நமது தலைவர்களின் கையாலாகதத் தன்மை புரிகிறது.நமது நாட்டின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் நம் நாட்டை நடத்தி செல்லும் இத்தாலி இளவரசி முயற்சி செய்து அந்த குற்றவாளிகளை கொண்டுவரலாம்.இன்கே பொறந்த வீட்டு மானம் முக்கியமா அல்லது புகுந்த வீட்டு மானம் முக்கியமா என்று அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.மற்றொன்று இத்தாலிக்காரன் ஒன்றும் இளித்தவாயன் அல்ல . இலங்கை கடற்படை சராசரியாக மாதம் 5 தமிழனை ( இந்தியனை) குருவி சுடுவது போல் சுட்டுத் தள்ளுகிறான் இலங்கை கடற்படை வீரனின் ..... கூட நம்மால் பிடுங்க முடியவில்லை .அப்புறம் இத்தாலிக்காரன் 2 பேரை மட்டும் கொன்று இருக்கிறான் ,அவனை பிடித்து மாதக் கணக்கில் அடைத்து வைத்தால் இத்தாலி அன்னைக்கு கோபம் வராதா ? இங்குள்ளவர்கள் தைரியம் கொடுக்காமல் இத்தாலிக்கு அந்த தைரியம் வர வாய்ப்பு இல்லை.    16:03:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
1
2013
விவாதம் அமைச்சர்கள் நீக்கப்படுவதற்கான காரணத்தை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமா?
நமது முதலமைச்சரின் எண்ணம் என்னவென்றால் அமைச்சர்கள் உழல் செய்வது தெரிந்தால் உடனடியாக பதவி நீக்கம் செய்வதன் மூலம் அவர்களுக்கு பயத்தை உண்டாக்கி இனி வருபவர்கள் ஒழுங்காக செயல்படுவார்கள் என்று நினைக்கிறார்.ஆனால் நமது ரத்தத்தின் ரத்தங்களோ முதல்வர் எபோது வேண்டுமானாலும் பதவியை விட்டு தூக்குவார் அதனால் இருக்கும் காலத்திற்குள் சம்பாதித்து விடவேண்டும் என்று குறுகிய காலத்திற்குள் அதிகம் சம்பாதித்து விடுகிறார்கள்.இதனால் மற்ற ஆட்சியை விட இந்த ஆட்சியில் இடமாற்றம், மற்றும் அரசு வேலைகளின் "விலைவாசி " சற்று அதிகம்.இதனால் அமைச்சர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.ஐந்து வருட வருமானத்தை இருக்கும் காலத்திற்குள் சம்பாதித்து விடுகிறார்கள்.முதல்வருக்கு தான் தேவையில்லாமல் கேட்ட பெயர் உண்டாகிறது.   16:48:36 IST
Rate this:
1 members
3 members
4 members
Share this Comment

மார்ச்
2
2013
அரசியல் மோடி பிரதமர் வேட்பாளர் ஆவது உறுதியாகுது !
150 ஆண்டுகளுக்கு முன் இந்த பாரதத்தில் பிறந்த நரேந்திரர் இந்தியாவின் புகழை உலகம் வியக்க செய்தார். இன்றைய நரேந்திரரும் இந்தியாவின் புகழை உலக அரங்கில் நிலை நாட்டுவார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த நிலையை அமெரிக்கா போன்ற வல்லரசுகள் விரும்பாது. இந்தியாவை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே விரும்பும். அதனால் காங்கிரஸ் கைத்தடிகளின் மூலமும், ப.ஜ.க வில் உள்ள புல்லுருவிகள் மூலமும் மோடியை பிரதமர் ஆக விடாமல் தடுக்க பார்க்கும். அதற்க்கு ப.ஜ.க வின் கூட்டணி கட்சி தலைவர்களும் துணை போவார்கள். மீண்டும் ஒரு ஊமை பிரதமரோ விளையாட்டு பிள்ளயையோ இந்தியாவின் பிரதமராக்க துடிக்கும்.இங்கே தமிழகத்தை எடுத்துக்கொண்டால் "தானை " மதவாதம் என்ற பெயரை சொல்லி சிறுபான்மை மக்களை தூண்டிவிட பார்க்கும். அதே நேரத்தில் ப.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் முக்கிய இலாகாக்கள் தரப்படும் என்ற ஒப்புதலை கொடுத்தால் மோடியை ஆதரிப்பார் .ஆனால் இன்றைய நிலையில் மோடி "தானை " யை நம்புவாரா என்பது சந்தேகமே . இந்தியாவை பொருத்தவரை நல்லவர்கள் பதவிக்கு வருவது அவ்வளவு சுலபமல்ல.இத்தனையும் மீறி மோடி பிரதமரானால் அது இந்தியாவின் அதிர்ஷ்டமே   16:36:07 IST
Rate this:
10 members
1 members
83 members
Share this Comment

பிப்ரவரி
18
2013
பொது கூடங்குளம்: மார்ச்சில் மின்உற்பத்தி
எந்த வருடம் மார்ச் என்று சொன்னால் அதுவரை நாங்கள் பொறுத்துக்கொள்வோம்.   18:57:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
9
2013
சம்பவம் அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்; தாமதம் ஏன்? : அரசு விளக்கம்
பார்லிமென்ட் தாக்குதல் நடத்தி இந்திய நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்திய அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது சரியான முடிவு.அதே நேரத்தில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை தூக்கில் போடுவதில் என் இவ்வளவு ஒளிவு மறைவு .யாருக்காக நமது அரசு பயம் கொள்கிறது.திடீரென ரகசியமாக தூக்கில் போடுவதன் மர்மம் என்ன.? இதைப்போலவே கசாப் - ரகசியமாக தூக்கில் இடப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்.பொதுவாகவே சிறுபான்மையினரின் ஓட்டுக்களை குறிவைத்து மத்திய அரசு காய் நகர்த்தி வரும் வேளையில் இந்த நடவடிக்கை சற்று ஆச்சர்யமாக உள்ளது.மேலும் அவனது கசாப் உடலையும், அப்சல் குருவின் உடலையும் வெளியில் கொண்டுவராமல் சிறை வளாகத்திற்குள் புதைக்கப்பட்டதாக அரசு தெரிவிக்கிறது ..மத்திய அரசு பெரும்பான்மை மக்களையும் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களையும் ஒரே நேரத்தில் பெறுவதற்காக இந்த புதைப்பு/ மறைப்பு ? வேலையே செய்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளுக்குள் எழுகிறது.பொய்யை வெளியில் விட்டு உண்மையை புதைக்காமல் இருந்தால் சரி   14:22:00 IST
Rate this:
7 members
1 members
79 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் ராஜபக்சேவின் சுயரூபத்தை இப்போதாவது புரிந்து கொள்ளுமா மத்திய அரசு: கருணாநிதி ஆதங்கம்
இவருடைய செய்திகளுக்கு கருத்து எழுதி எழுதி கடுப்பு தான் ஆகிறது.இவர் தமிழ் மக்களை வேண்டுமானால் ஏமாந்தவர்களாக நினைக்கலாம்.இவர் அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை இவரது இரட்டை வேட அரசியலால் ஏமாற்ற முடியாது.மத்தியில் கூட்டணியில் பங்கு கொண்டு , அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லாம் ஒப்புதல் கொடுத்து விட்டு இங்கு பத்திரிக்கையாளர்களுக்கு முன்பு மட்டும் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது, அங்கு மக்கள் பட்ட சித்திரவதை தெரிந்தும் ஆட்சி வெறியும், பதவிப்பித்தும் இவரது கண்ணை கட்டியதோ ? உண்ணாவிரத நாடகம் நடத்தி ராஜபக்சேயை விட தமிழர்களின் முதல் எதிரியாக இவர் உள்ளார் .இவரை விட ராஜபக்சே பரவாயில்லை . அவன் தன் இனத்தை காப்பதற்காக தமிழ் இனமக்களின் நெஞ்சில் குத்தினான். இவர் தன் பதவியை காப்பதற்காக தன் இனத்தின் முதுகில் குத்தினார்.இன்று வரை தமிழ் இன மக்களுக்காக எதனை இழந்தார்.ஏன் இப்போதும் மத்திய அரசை கெஞ்ச வேண்டும்.இவருக்கும் உரிமை இருக்கிறதல்லவா. இவரது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யலாமே.அதை விடுத்து மத்திய அன்னையின் மனம் கோணாமல் அறிக்கை விடுகிறார்.இனி மத்தியில் இருந்து ஏதாவது தகவல் வந்தால் நான் அப்படி கூறவில்லை என்று மறுப்பு அறிக்கை விடுவார். உள்ளூரிலே எலி பிடிக்க முடியலாம் இவர் வெளியூரிலே முயல் புடிக்க போகிறாராம் . உண்மையில் இவர் தமிழர்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் உரிமையை பெற்றுக்கொடுங்கள்.மின்சார பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை,மத்திய நிதி ஒதுக்கீடு முதலியவற்றில் உங்களது பங்கான தடையை விலக்கி அவற்றை பெற்றுத்தர முயற்சி செய்யுங்கள். முதல்வர் "ஜெ" யின் மீதான வெறுப்பில் 6 கோடி தமிழர்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். இந்த முறை அ.தி.மு.க என்றால் அடுத்த ஆட்சி தி.மு.க தான் என்கிற மூட நம்பிக்கையில் " ஜெ " ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்ப்படுத்தலாம் என்று நினைத்தால் உங்கள் நினைப்பில் மண்தான் விழும். காலம் எப்போதும் உங்களுக்கு சாதகமாகவே அமையும் என்று கனவு காணாதீர்கள்.இன்றைய நிலையில் உங்களுக்கு பிறகு தி.மு.க என்கிற கட்சி நிலைக்குமா என்பது சந்தேகமே அதனை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.   14:25:03 IST
Rate this:
130 members
1 members
128 members
Share this Comment

பிப்ரவரி
5
2013
அரசியல் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வில்லை: பன்னீர்செல்வம் மீண்டும் விளக்கம்
விவசாயிகளின் தற்கொலை தொடர்பாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி செய்திகள் மூலமும் மக்கள் தெரிந்து கொண்டு தான் உள்ளார்கள்.இதை நமது அமைச்சர் மறுப்பது ஏன் என்று புரியவில்லை. காவிரியில் தண்ணீர் இல்லாமல் போனதும் அதன் தொடர்ச்சியாக விவசாயம் பொய்த்துப் போனதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் உண்மையில் நீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அதனையும் சுப்ரீம் கோர்ட்டில் ஆதாரமாக வைத்து காவிரியில் நீர் திறந்து விட அழுத்தம் கொடுக்கலாம். இதன் மூலம் மற்ற விவசாயிகளையும் காப்பாற்ற இயலும்.அதனை விடுத்து தங்கள் ஆட்சியின் பெயர் கெட்டு விட கூடாது என்பதற்காக தவறான தகவலை சபையில் தெரிவிப்பதன் மூலம் நமக்கு நாமே குழி தோண்டிக்கொண்டு இருக்கிறோம்.   15:46:54 IST
Rate this:
44 members
0 members
77 members
Share this Comment

பிப்ரவரி
5
2013
அரசியல் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு ; கறுப்புடை ஆர்ப்பாட்டம்; கருணாநிதி
எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்.பகுத்தறிவு பாசறைகள் கருப்பு நிறத்தை "துக்க" த்தின் நிறமாக கருதுவதன் அர்த்தம் ஏன்?.அது மட்டும் மூட நம்பிக்கை இல்லையா ? கருப்பு என்றால் - துக்கம் என்று உலக அளவிலான கோட்பாடு ஏதேனும் உள்ளதா ? .மற்ற கலர்களை போல் அதுவும் ஒரு கலர் தான் .சிகப்பு என்றால் ஆபத்து என்பது வேண்டுமானால் சொல்லலாம்.இவை எல்லா பாதுகாப்பு சாதனங்களிலும் குறிக்கப்படுகிறது. நமது தானை நினைத்த நேரமெல்லாம் கருப்பு சட்டை அணிந்து போஸ் கொடுக்கிறார்.முகத்தில் தெரியும் "மோனலிசா" புன்னகையின் மூலம் அவர் எவ்வளவு துக்கத்தில் உள்ளார் என்பதும் புரிகிறது.அப்படியானால் மஞ்சள் நிறத்தில் மற்ற நாளெல்லாம் "மங்களகரமாக " இருந்ததை ஒப்புக்கொள்கிறாரா? இலங்கையில் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களின் பெயரை சொல்லி நல்லா "வண்டி" ஒட்டுராருயா.பாப்போம் இன்னும் என்ன என்ன வித்தஎல்லாம் வச்சிருக்காருன்னு அப்புறம் கடைசியா ஒரு சந்தேகம் தி.மு.க வின் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் மதுரையிலே படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார் .கண்டனத்தையோ , அறிக்கையோ ஒன்னும் காணோமே ,ஒரு வேளை உண்மை தெரிஞ்சிருக்குமோ ?   11:10:54 IST
Rate this:
2 members
0 members
35 members
Share this Comment