Advertisement
தினமலர் முதல் பக்கம் » Damodardeshvaasi Tribhuvanapathi dasa அவரது கருத்துக்கள்
Damodardeshvaasi Tribhuvanapathi dasa : கருத்துக்கள் ( 4 )
Damodardeshvaasi Tribhuvanapathi dasa
Advertisement
ஏப்ரல்
21
2013
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
அருமை எழுத்தாளர் ஜெயகரனுக்கு என் அனுதாபங்கள். டார்வினிஸம் என்பது நம்ப முடியாத ஒரு கோட்பாடு. 160 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த அடிப்படையற்ற விஷயம் அது. உலகில் 84 லட்சம் உயிர்வாழிகள் இருப்பதை இவர்களால் மறுக்க முடியுமா. எந்த எந்த வகை உயிரனங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளது என்பது இந்த டார்வினுக்குத் தெரியுமா. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வியாசதேவர் எழுதிய ஸ்ரீமத் பாகவதத்தில் அத்துணை கேள்விகளுக்கான பதில்களும் உள்ளது. ஆகவே இந்த பரிதாபப்பட்ட விஞ்ஞானிகளை நம்புவதை விட்டு சனாதன தர்மத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.   11:50:45 IST
Rate this:
16 members
0 members
28 members
Share this Comment

மார்ச்
4
2013
உலகம் கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் லண்டன் புதுமைப்பெண்
அன்புச்சகோதரர்களே, தங்கள் கருத்தினில் தாங்கள் கற்புக்கரசி திரௌபதியை மேற்கோள் காட்டியதற்கு கண்டனம் தெரிவித்து அதற்கான விளக்கமும் அளிக்க விரும்புகிறேன். ஒரே கணவனுடன் வாழ்வதே கற்பு என்னும் பட்சத்தில் ஐந்து கணவருடன் வாழ்ந்த திரௌபதி ஏன் கற்புக்கரசியாக போற்றபடுகிறாள் என்னும் கேள்வி இயற்க்கையானதாகும். திரௌபதி ஒரு தெய்வீகப்பிறவி, லக்ஷ்மிதேவியின் அம்சம். அவளை ஒரு சாதாரனப்பெண்ணாக நினைத்து விடக்கூடாது. அவள் அக்னியிளுருந்து தோன்றியவள். தோன்றியபோதே எல்லா தெய்வீக குணங்களுடனும் பேரழகுடனும் தோன்றினாள். சாதாரண மனிதர்களைப்போல் சிறு குழந்தையாகப் பிறந்து வளர்ந்தவள் அல்ல திரௌபதி. வேத கலாச்சாரத்தில் மிக உயர்ந்த பெண்களாகக் கருதப்படுவோர் ஐவர். ஸ்ரீ ராமரின் மனைவி சீதை, வாலியின் மனைவி தாரை, கௌதம முனிவரின் மனைவி அகலிகை, ராவணனின் மனைவி மண்டோதரி, பாண்டவர்களின் மனைவி திரௌபதி. ஐவரை மணந்தாலும் திரௌபதி ஒரு பத்தினியே. அது எவ்வாறு என அறிந்து கொள்வதற்கு மகாபாரத அறிவை பெறுதல் நலம்.   12:10:57 IST
Rate this:
63 members
2 members
59 members
Share this Comment

டிசம்பர்
25
2012
பொது சமீப காலமாக அதிகரித்துவிட்ட பாலியல் குற்றங்கள்
இந்த நாட்டிலிருந்து மதுவையும் மாமிசத்தையும் அறவே ஒழித்து விட்டால் இந்த மாதிரி கொடுமைகள் நிகழாது. இறை பக்தி மக்களிடம் மேலோங்க செய்ய வேண்டும். இறை பக்தி மட்டுமே மக்களை காப்பாற்றும். நேற்று ஒரு தலைவர் மதுவிற்கு எதிரான நடை பயணம் நிறைவு செய்தார்.அவர் வெற்றி பெறவேண்டுமானால் அவர் மக்களின் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும், மதுவிலக்கு சட்டத்தின் மூலமாக. பூரண மதுவிலக்கு என்பது நடை பெறாத ஒன்று. மக்கள் திருந்த வேண்டும். அதற்கு இறைபக்தி மக்களுக்கு அவசியம். அவர் பகுத்தறிவுவாதி என்கின்ற காரணத்தினால் சில விஷயங்களை செய்ய முடியாமல் போகிறது. அவர் செய்த பணி சாலச்சிறந்தது. ஆனால் இறைபக்தி மக்களிடையே வந்தால் ஒழிய பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத காரியம். பூரண மதுவிலக்கு வந்தால்தான் இந்த மாதிரி வன்கொடுமைகள் நிற்கும். மதுவும் மாமிசமும் மனிதனை மிருகமாக்குகிறது என்பதனை மக்கள் உணர வேண்டும்.   09:27:06 IST
Rate this:
8 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
28
2012
பொது சென்னையில் எல்.கே.ஜி., சீட்டுக்காக ரூ. 17 லட்சம் மதிப்பிலான கூடைப்பந்து மைதானம்: எங்கே செல்கிறது கல்வி?
இத்தனை லட்சம் கொடுத்து சீட் வாங்கி என்ன பிரயோஜனம்? குழந்தைகள் அங்கே கல்வி கற்கவா போறாங்க, எப்படி டாக்டர் ஆகலாம், டீச்சர் ஆகலாம்னு பயிற்சி பெறுவார்களே தவிர உண்மையான கல்வி இப்போ எங்கேயும் கொடுக்கிறது இல்லை. எல்லாம் இயற்கைக்கு மாறாக படிப்பாங்க, டார்வின் தியரிங்கிற முட்டாள்தனமான தியரியை படிப்பாங்க. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்னு படிப்பாங்க, பிறகு ஏதாவது பட்டம் வாங்கிட்டு இந்த பாழாய்ப்போன கார்பரேட் கலாச்சாரத்துல விழுந்து வாழ்க்கையை வீணடிப்பாங்க. ஒழுங்கா எல்லா தகப்பன்மார்களும் குழைந்தகளுக்கு விவசாயத்தை பத்தி கற்றுகொடுத்தா அவங்க காலத்துல சாப்பிடறதுக்கு வழி கிடைக்கும்.நல்ல அமைதியான வாழ்க்கை வாழ முடியும். இல்லன்னா இருபது வயசுல ஹார்ட் அட்டாக்ல போய்சேர வேண்டியதுதான்.   16:47:02 IST
Rate this:
4 members
4 members
53 members
Share this Comment