Advertisement
thamizh Madayan : கருத்துக்கள் ( 18 )
thamizh Madayan
Advertisement
Advertisement
மார்ச்
28
2013
அரசியல் தி.மு.க., வெளியேறியதால் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டதா: விரக்தியில் கருணாநிதி
ஜகன் சொல்வது சரிதான். மாணவ சக்தி எல்லாம் கப்சா. 30 வருஷம் முன்னாடி வேலை இல்லாத் திண்டாட்டம். படிச்சு முடிச்சு என்ன வேலை பாத்து கிழிக்கப் போறோம்னு மாணவர்கள் மனம் தளர்ந்து போராட்டம் வறுமையின் நிறம் சிவப்பு பட்டம் பறக்கட்டும் என்று போனார்கள். இப்போ படிச்சு முடிச்சா வேலை. போராட்டம் செய்து, பரீட்சையை தள்ளி வச்சால் வேலை சேர டிலே ஆகும், சம்பளம் போயிடும். நல்ல படிப்பு படிக்கற ஒரு பயலும் போராட்டம்னு வரமாட்டான். ஏதாவது நாமக்கல்ல தண்ட காலேஜ்ல படிப்பு ஏறாம ஊர் சுத்தற காலிப் பசங்க தான் போராட்டம்னு வருவாங்க. படிச்சு முடிச்சு வேலைக்கு போற வழியப் பாப்பீங்களா? வெறும் பேச்சு வெட்டி கும்பலா இருக்கீங்களே   01:52:04 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
20
2013
பொது 15 ஆண்டு வாடகை கொடுத்தால் 16வது ஆண்டில் வீடு சொந்தம்: பஞ்சாப் அரசு கலக்கல் திட்டம்
பதினஞ்சு வருஷம் வாடக கொடுத்தால் வீடு உங்களுக்கே சொந்தம்னு வெச்சுக்கோங்க. அதுக்கப்புறம் வீடு வாடகைக்குத் தர வீட்டுக் காரர்கள் எல்லாம் மடையர்களா? உங்களுக்கு பாங்க வாசல்ல தவம் கெடக்க அலுப்பு. ஆனா இன்னொருத்தன் தவமிருந்து கட்டின வீட்ட தட்டிக்கிட்டு போக ஆசை. இப்படி ஒரு சட்டம் வந்தால், சாதுவா அடிதடி வம்பு தும்புக்கு போகாதவங்க எல்லாம் வீட்ட பூட்டி வெச்சுடுவாங்க. புதுசா வீடு கட்ட மாட்டாங்க. உங்களுக்கு வாடகைக்கு வீடு அரசியல்வாதிகள், குண்டர்கள் ரவுடிகள் தான் தைரியமா தருவாங்க. உங்கள் பேராசை உங்களுக்கு பேரு நஷ்டமாகும்.   01:26:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
20
2013
பொது 15 ஆண்டு வாடகை கொடுத்தால் 16வது ஆண்டில் வீடு சொந்தம்: பஞ்சாப் அரசு கலக்கல் திட்டம்
சுலைமான் நீங்க ஒரு வீடு கட்டி வாடகைக்கு விடுங்க. பதினஞ்சு வருஷம் வாடகை கொடுத்தவுங்களுக்கு வீட்டை எழுதி கொடுத்துடுங்க. இது எதோ அரசு திட்டம் போல இருக்கு. தனியார் வீடுகளுக்கு இப்படி ஒரு சட்டம் வந்தால் என்ன ஆகும். எல்லாரும் வீடு வாடகைக்கு விடுவதை நிறுத்தி விடுவார்கள். வீட்டு வாடகை தாறுமாறா ஏறும். அடிதடிக்கு பயப்படாத அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும்தான் தைரியமாக வீடு வாடகைக்கு கொடுப்பாங்க. ரெண்ட் கண்ட்ரோல் ஆக்ட் இருந்த வரை Bombay பெங்களூர் ஊர்களில் வாடகைக்கு இருப்பவர்கள் பட்ட கஷ்டம் சொல்ல முடியாது. 1940-60 களில் வாடகைக்கு இடம் பிடித்த சிலர் தவிர மற்ற அத்தனை பெரும் கஷ்டப் பட்டாக்கள்.   17:27:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
15
2013
சம்பவம் குண்டுகள் முழங்கிட மதுரை வீரர் உடல் அடக்கம்; கண்ணீர் மல்க ஊரே அஞ்சலி செலுத்தியது
அது கொக்கு சுடும் துப்பாக்கி மாதிரி இல்லை. நல்ல கார்பைன் ரைபிள் மாதிரித்தான் இருக்கு, AK47 ஒண்ணும் நல்ல சூப்பர் துப்பாக்கி இல்லை. M4 , MP14, Uzi எல்லாம் அதைவிட நல்ல துப்பாக்கி. AK47 எவ்வளவு தண்டமா மெயிண்டைன் பண்ணினாலும் சுடும் அது ஒண்ணுதான் அதன் சிறப்பு. அதான் கண்ட கழிசடைகளையும் சேர்த்துக் கொள்ளும் பயங்கர வாதிகள் அதை பாவிக்கறாங்க. ஆர்மி மாதிரி சூப்பர் டிசிப்ளின் மெயிண்டனன்ஸ் இருந்தால் AK ரொம்ப தண்டம். நம்ம ஆர்மி இப்போ நல்ல துப்பாக்கி வெச்சிருக்காங்கன்னு கேள்விப் பட்டேன்.    05:32:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
14
2013
பொது பிளஸ் 2 கணித தேர்வு எழுதிய மாணவர்கள் திணறல்: குழப்பமான கேள்வியால் நூற்றுக்கு நூறு சந்தேகம்
நான் பழைய படமுறையில் 10 மற்றும் 11 வகுப்புகளில் அல்ஜிப்ரா & ஜியாமெட்ரி தமிழில் படித்தேன். பிறகு பி யு சி யில் கெமிஸ்ட்ரி இயல்பியல் எல்லாம் ஆங்கிலத்தில் படித்தேன். இத்தனை வருடம் ஆங்கிலத்திலேயே பழகிய பிறகு இப்போது ஞானோதயம்: தமிழில் படித்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாகவே புரிந்திருக்கும் என்பதுதான்.   07:23:31 IST
Rate this:
4 members
1 members
26 members
Share this Comment

மார்ச்
8
2013
சம்பவம் தாராளமாக செலவழிச்சோம்: பைன் பியூச்சர் இயக்குனர்கள் வாக்குமூலம்
ஏமாந்தவர்களின் பெயர், முகவரி, புகைப் படம் வெளியிட்டால் ரொம்ப நல்லது. அடுத்து செவன் ஸ்டார் ப்யூட்டி சர்குலேஷன், சகாய மேரிமாதா ரொட்டேஷன், வெங்கிட்டு ரவுண்டப்பு என்ற பெயரில் எல்லாம் நிதி நிறுவனம் தொடங்குபவர்கள் இந்த ஏமாந்த சோணகிரிகளை நேரடியாக ஏமாத்தலாம். கில்லாடிகளுக்கு விளம்பர செலவு மிச்சம். இந்த அளவு பேராசையும் மடத்தனமும் ஒண்ணா இருந்தால் எந்த கொம்பனாலயும் இவங்கள காப்பாத்த முடியாது. போலீசு இவங்களிடமிருந்து புகார் பிரியாணி எல்லாம் வாங்கி தின்னுட்டு போய்ட்டு வாங்கப்பா ன்னு அனுப்ப வேண்டியதுதான்.   04:47:05 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
சம்பவம் இயக்குனர் மணிரத்னம், சுகாசினி மீது போலீசில் புகார்
இது ஒரு சிவில் ஒப்பந்தத் தகராறு. இதற்கு போலீசிடம் போகக் கூடாது. ஒப்பந்தத்தில் படம் ஓடாவிட்டால் நஷ்ட ஈடு தருவதாக மணி ரத்னம் சொல்லி இருந்தால், நீதி மன்றத்திடம் போகலாம். அப்படிப்பட்ட ஷரத்துக்கள் எதுவும் இல்லை என்றால் "அய்யா சாமி ரொம்ப நஷ்டப் பட்டுட்டேன் கொஞ்சம் பாத்துப் போடுங்க சாமி" ன்னு கெஞ்சி கூத்தாடி, இப்போ கொஞ்சம் பணம் அடுத்த படத்துக்கு கொஞ்சம் தள்ளுபடி வாங்கிக் கொண்டு போகவேண்டும். அவ்வளவுதான். போலீசு மிரட்டல் எல்லாம் சட்டப் படி செல்லாது. ஆனா ஒண்ணு கடல் படம் இந்தியாவில் ரிலீசான அதே நாள் இங்க அமெரிக்காவில் பக்கத்து தியேட்டரிலும் ரிலீஸ் ஆச்சு. படு தண்டம் படம். நிறைய கிருஸ்துவம் . ஆங்கில சப் டைட்டில் போட்டு வெளி நாட்டு திரை விழாக்களில் பரிசு வாங்க திட்டம் போட்டிருக்கார்னு தோணுது. "தேவனுக்கும் சாத்தானுக்கும் சண்டை. கொடும்பாவி ஆனா அநாதை அன்பால் நல்லவன் ஆனான்" அப்படின்னு ஒன் லைன் போட்டு பரிசு வாங்கலாம் அப்படி ப்ளான் போல. ஆனால் இது பாதிரி மொராலிட்டி டேல் நிறைய பாத்தாச்சு. ரொம்ப cheesy/corny ஆ இருக்கு, பரிசும் தேறாது.    00:22:16 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
சம்பவம் ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் வித்யா பலி கண்கள் தானம்
இது துயரமான செய்திதான். கண் தானம் செய்ததும் நல்ல காரியம்தான். ஆனால் அரசு நஷ்ட ஈடு தரவேண்டும் அரசு வேலை தர வேண்டும் என்றெல்லாம் போராடுவது சரி அல்ல. எதோ துயத்தில் வாடும் குடும்பம் தங்களுடைய கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியால் செய்த தவறு என்றெண்ணி மன்னித்து விடலாம். ஆனால் குற்றம் மற்றும் விபத்து ஆகியவையால் பாதிக்கப் பட்டவர்கள் அனைவருக்கும் அரசு நஷ்ட ஈடு தருவது என்பது சரி அல்ல.    06:14:13 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

பிப்ரவரி
24
2013
அரசியல் டில்லி "டெசோ' மாநாட்டில் பா.ஜ., தலைவர்கள் பங்கேற்பு?புது அணிக்கு தி.மு.க., திட்டம்
ஆங்கிலப் பழமொழி: "என்னை ஒரு முறை ஏமாற்றினால் அவமானம் உனக்கு. மறுபடியும் ஏமாந்தேன் என்றால் அவமானம் எனக்கு" (Fool me once, shame on you. Fool me twice, shame on me). தமிழ் பழமொழி நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. பா ஜ க மறுபடியும் இந்த மஞ்சள் துண்டுக் காரரிடம் ஏமாந்தால் அவர்களைத் பார்த்துத்தான் வேணுங் கட்டைக்கு வேணும் வெங்கலக் கட்டைக்கு வேணும் என்று பாடுவார்கள்.   08:55:44 IST
Rate this:
3 members
0 members
29 members
Share this Comment

பிப்ரவரி
23
2013
அரசியல் செங்கல்பட்டில் வைகோ மதுவிலக்கு பிரசாரம்
மது விலக்கு என்பது நடைமுறையில் சாத்தியமாகாத விஷயம். அமெரிக்காவில் 1920களில் மது விலக்கு சட்டம் கொண்டு வந்தார்கள். குற்றங்கள் பெருகின. Mafia , organized crime ஆகியவை உருவாயின. கடைசியில் அந்த சட்டம் கை விடப்பட்டது. ஆனாலும் இங்கே மதுவுக்கு அடிமையானவர்கள் குறைவுதான். எல்லோரும் குடித்தாலும் ஒரு அளவோடு குடிக்கின்றனர். குடித்தால் கார் ஒட்டுவதைத் தவிர்க்கிறார்கள். மதுவுக்கு அடிமையானவர்களை திருத்த திருந்த நற்பணி மன்றங்கள் (Alcoholics Anonymous etc) செயல் படுகின்றன. இது போல அளவுக்கு மீறி குடிப்பதைத் தவிர்க்க முயற்சி செய்தாலே போதும் முக்கால் வாசி குற்றங்களும் கொடுமைகளும் குறைந்துவிடும்.   04:30:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment