திரு மரியா அவர்கள் யாருக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார், யாரை தாக்கி பேசுகிறார் என்றே புரியவில்லை. எதாவது சொல்ல வேண்டுமே என்று உளறுகிறீர்களா ? தெளிவாக்கவும்..
06-மார்-2013 09:10:26 IST
இவர்கள் ஆளும் கட்சி யாக இருந்த போதுதான் போர்க்குற்றங்களே நடைபெற்றன என்பதை உலகமே அறியும். பிறகு, இவருடைய சகோதரி கனிமொழியும் ஒரு குழுவும் ராஜபக்ஷே கொடுத்த விருந்தில் கலந்துகொண்டு மகிழ்ந்து பேசி உறவாடிவிட்டு வந்தார். அப்போதெல்லாம் தெரியாத ராஜபக்சேயின் கோர முகம், எதிர் கட்சியாக மாறியவுடன், காட்சிகள் மாறியவுடன் இப்போது தெரியத்தொடங்கியதுதான் ஆச்சர்யம். மக்களை எந்த அளவுக்கு முட்டாள்கள் என்று இவர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் ? ஸ்டாலின் வெறும் வெத்து வெட்டு, காமெடி நடிகர் வடிவேலு போல... இப்போது இருவருக்குமே மார்க்கெட் கிடையாது என்பது நிதர்சனமான உண்மை.
06-மார்-2013 09:02:36 IST
தற்போதைய நிலைமையில், எந்த டாக்டர் மற்றும் வக்கீல் பொது சேவை செய்கிறார்கள் ? இப்போது டாக்டர் மற்றும் வக்கீல்கள் தான் பெரிய பங்களா மற்றும் கார் வசதிகளுடன் இருக்கிறார்கள். இவ்வளவு வசதி இருக்கும்போது வரி கட்டாத, வரி ஏய்ப்பு செய்த பணமும் கண்டிப்பாக இருக்கும். எந்த டாக்டரும் வாங்குகின்ற பீஸ்-க்கு பில் கொடுத்ததாக சரித்திரம் இல்லை. வக்கீலும் அது போலவே. உண்மையாக சம்பாதிக்க, வரி ஏய்ப்பு செய்ய விரும்பாதவர்கள் ஏன் ஒரு பில் தரக்கூடாது ? consultation பீஸ் என்று சொல்லி ரசீது தரலாமே? பணப்பிசாசு தான் ஏறக்குறைய அனைவரும்... கட்டாயமாக சேவை வரி செலுத்தவேண்டும்...
05-மார்-2013 07:37:26 IST
ஒவ்வொரு தொலை தொடர்பு நிறுவனமும், ஒவ்வொரு விதமாக தங்களுக்கு வேண்டியவிதத்தில், பயன்படுத்தி கொள்கிறார்கள். வோடபோன் 45 நாட்கள், BSNL 90 நாட்கள் ( அதிலும் ஒருசில ப்ளானில், மீண்டும் ரி-சார்ஜ் செய்கின்ற பணத்திற்கு talktime கிடையாது. அது வெறும் புதுப்பிக்க மாத்திரமே.எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள். அதேபோல, pre -paid கார்ட்களுக்கான சர்வீஸ் சார்ஜ் TRAI வரையறை செய்ததை விட இன்னும் கூடுதலாகவேதான் செய்து கொண்டு இருக்கிறார்கள். எதற்க்காக பின் TRAI அதுபோல ஒரு அறிவிப்பு செய்ய வேண்டும் ? எதுவும் மாற்றம் இருந்ததா என்றால் ஒன்றும் இல்லை ? அவரவர் இஷ்டம் போல வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்..
26-பிப்-2013 03:58:20 IST
இதெல்லாம், சினிமா மற்றும் தொலைகாட்சி தொடர்கள் செய்யும் விளைவுகள். சினிமாவில் கணவன்-மனைவி மற்றும் காதலன்-காதலி உறவை, அன்பை அவர்கள் மிகைபடுத்தி காண்பிப்பது போல (ஊடல், சிணுங்கல், தொட்டு மற்றும் சில்மிஷம் செய்தல் ) இப்போதைய பெண்களும் தமது காதலன், கணவன் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதன் விளைவுகள்தான் இது போல வேலி தாண்ட தூண்டுகிறது. மன கட்டுப்பாடு எல்லோருக்கும் தேவை. ஒரு வாசகர் கூறியதுபோல, இந்த பெண்ணின் கணவர் மற்ற எந்த பெண்ணுடனாவது பழகி, நட்பு மட்டும்தான் என்று இந்த பெண்ணிடம் சொன்னால், இவர் நம்பிவிடுவாரா என்ன ? இவர்களை போன்றவர்கள் தப்பு செய்ய காரணம் தேடுபவர்கள். யாராவது புத்தி சொன்னால் மட்டும் இவர்கள் திருந்துவார்கள் என்று நம்புவதற்கில்லை.
24-பிப்-2013 06:53:34 IST
எத்தனை காலம்தான் மக்களை முட்டாள்கள் என்று எண்ணி, இவ்வாறே எல்லா தலைவர்களும் பேசுவார்கள் என்று தெரியவில்லை.. நாமும் எவன் சொன்னாலும் அதை கேட்டு, நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம்..எப்போது விடிவு காலம் பிறக்குமோ ? படிப்பறிவை எந்த கட்சி கொடுக்கிறோம் என்று சொல்கிறதோ அதற்க்கு ஒட்டு போடுங்கள். இலவசத்திற்கு மயங்கி உங்களையும் எதிர்காலத்தையும் இழக்காதீர்கள். ஜெய் ஹிந்த்.
13-பிப்-2013 09:08:36 IST
ரயிலில் முன்பதிவு செய்யும்போது தருகின்ற விலாசம் சரியானதுதான் என்பதை உறுதி செய்ய ஒரு புகைப்பட அடையாள அட்டை அல்லது விலாசம் உள்ள ஒரு அடையாள அட்டையின் ஒரிஜினல் காண்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான், முன்பதிவு செய்தவர்களை அடையாளம் காண முடியும்.. இனி, அவர்கள் வேறு விலாசத்தில் முன்பதிவு செய்தால் எங்கே பொய் தேடுவார்கள் ? அரசு இயந்திரம் / சிஸ்டம் சரியாக இயங்க வேண்டும். எல்லாம் சரியாகும்..
26-ஜன-2013 06:27:40 IST