கொலை செய்தவர்கள் இத்தாலிய நாட்டினை சேர்ந்தவர்கள் என்பதால் விடுமுறை உண்டு. அவர்களது நாட்டுக்கு போய் இலகுவாக வரலாம். அவர்களுக்கு சிறை இல்லை.மரண தண்டனை இல்லை.
ஆனால் இந்த மாதிரியான தவறினை இன்னொரு நாட்டு பிரஜை செய்து குற்றம் சாட்டப்பட்டுரிந்தால் அணுகுமுறை வேறு.
இதுவா இந்திய நீதி துறை செயல் படும் முறை?
எவராவுது எனது வினாவுக்கு சரியான,நியாஜமான பதில் சொல்லுங்கள்:
23-மார்-2013 07:14:34 IST
புத்த பிக்குகளை தமிழ்நாட்டில் தாக்குவதனை நியாயமா? அல்லது தப்பா? என்பது சரியாக சொல்லமுடியாது உள்ளது . ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த சிங்கள புத்த பீடாதி அமைப்புக்கள், காவி உடுப்பு தரித்த புத்த மத பிக்குகள் யாவரும் சேர்ந்து "மகாவம்சத்தில் " எழுதப்பட்ட ஒரு தத்துவத்தினை தூக்கி பிடித்து பிரசாரம் செய்யும் காரணத்தினால் சகல சிங்கள மக்களும் இலங்கை தீவு சிங்கள மக்களின் தீவு, அங்கு வாழும் தமிழ் இனம் முற்றாக அளிக்க பட்டு தமிழ் மக்களும் சிங்கள மொழி படித்து சிங்கள தேசமாக மாற்றி அமைக்கப்படவேண்டும் என்று கொள்கையினை பிடித்து இருப்பதால் ஈழ தமிழனுக்கு இந்த கதி.
ஈழ தமிழனுக்கு உருவான விதி தமிழ்நாட்டு மீனவர்களையும் பலி கொள்கின்றது .ஒட்டு மொத்தமாக இலங்கை அரசியலில் தமிழனுக்கு உருவாகும் துயரத்துக்கு அத்திவாரம் இந்த பிக்குகளால் உருவாக்க பட்டுக்கொண்டு உள்ளது. இலங்கை அரசும் புத்த மத அமைப்புக்களுக்கு பயந்து ஆட்சி செய்கின்றனர் .உந்த காவிகள் நினைத்தால் தமிழனை பாதுகாக்கலாம். தமிழ் நாட்டு மீனவர்களையும் பலி கொள்ளது தடுக்கலாம்.
19-மார்-2013 04:24:14 IST
அந்த பாட்டி சொல்லுற விடயம் ஒரு கிரிமினல் குற்றம் என்ற கருத்தில் சொல்ல முடியுமா? எல்லாருடைய இளமை காலத்திலும் இப்படியான சம்பவங்கள் வரும்.போகும் .ஒரு நாட்டுக்கு உதவாத சமுக விரோத செயல் செய்தால் அல்லது செய்திருந்தால் மட்டுமே அது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு குற்றம் ஆகும். தமக்கு நன்கு தெரிந்த ஒரு மனிதன் இன்று பாப்பரசர் ஆகி இருப்பது இந்த வஜதான பாட்டிக்கு தாங்கி கொள்ள கொஞ்ச சிரமமாய் இருக்கு போல இருக்கு.
17-மார்-2013 06:09:59 IST
நான் கனடாவில்,அமெரிக்க எல்லைக்கு அருகில் கடந்த 25 வருடத்துக்கு மேலாக வசிக்கும் தினமலர் இணைய தள வாசகன். இந்த கனடா நாட்டிலும் முன்னர் தூக்கு தண்டனை இருந்து கடைசியாக 1961 ம் ஆண்டுடன் சட்டபூர்வமாக இதனை நிறுத்தி விட்டனர்.இப்போது மோசமான குற்றவாளிகளுக்கு எந்த சந்தப்பத்திலும் வெளியில் வரமுடியாத சாகும் வரையிலான ஆயுள் தண்டனை வழங்கபடுவது வழமையாக நீதி துறைகளில் மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.
இறுதியாக 1961 ம் ஆண்டு, கனடாவின் நாம் வசிக்கும் டொரோண்டோ நகரில் இருவர் தூக்கில் சாகடிக்கபட்டனர்.அதுதான் கடைசியான இந்த நாட்டின் மரண தண்டனை.
இந்த மரண தண்டனை முடிவுக்கு வந்த 50 வது ஆண்டு நினைவாக இங்கு வெளிவரும் சகல ஆங்கில ஊடகங்களில் கடந்த 2011 ம் ஆண்டு சில நினவு கட்டுரைகள் வெளி வந்திருந்தது. அதில் கனடாவின் பிரபல கனேடிய பெண் வக்கீல் ஒருவர் இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருந்தது சகலரின் மனதினையும் ஒரு முறை தொட்டு இருந்தது. ஏனனில் தான் சிறுமியாக இருந்த அந்த காலகட்டத்தில், அன்றைய காலத்தில் வக்கீலாக இருந்த தமது தந்தை இந்த வழக்கில் ஒரு குற்றவாளிக்காக ஆஜராகியிருந்தார் எனவும், அன்று தூக்கில் இடபட்ட அந்த கைதி உண்மையில் ஒரு அப்பாவி.நிரபராதி என சொல்லி சொல்லி வருத்தபட்டு கடைசியாக தமது தந்தை சில வருடங்கள் முன்பு காலமாகிவிட்டார் என குறிப்பிட்டதுடன் அந்த துயர சம்பவம் கனடாவின் நீதி துறை வரலாறுகளில் விவாதத்துக்கு வந்து இறுதியாக மரண தண்டனைக்கு இந்த நாட்டில் முற்று புள்ளி வைத்தாச்சு.
இத மாதிரியான ஒரு உதாரணங்களை இப்போது இந்தியாவில் அரங்குக்கு வரும் மரண தண்டனை பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் சகல இந்திய மக்களுக்கும் உண்டு.ஒரு மனித ஜீவாத்மாவின் கொடுமைஜன அழிவில் பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தவர்களின் ஒரு கடுப்பு இருக்கும் என்ற நியாயத்தினை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.ஆனால் நிரந்தரமாக சிறை கம்பிக்குள் முடங்கி வாழ் நாள் முழுவதும் இருந்து வருந்துவது என்பது மரண தண்டனைக்கு மேலான தண்டனை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் இதுதான் உண்மை. பொதுவாக விடுதலை புலிகள் எந்த ஒரு தாக்குதல்களும் செய்ய போனாலும் பொது கூட்டம், போட்டு தீர்மானித்து முடிவுக்கு வருவதில்லை. திட்டத்தின் முன்னணிஜில் இருப்பவர்களை தவிர தங்களுக்கு வாய்த்த தமிழ் நாட்டவர்கள் பலரின் உதவிகளை பஜன்படுத்துவார்கள்.இது அவர்களின் பாணி.என்ன நடக்கும் என்று தெரியாமல் உதவி பண்ணுகின்றோம் என பின்னல் நின்றவர்கள் அப்பாவிகள் யாவரைஜும் பழிக்கு பழி தூக்கில் போடுகிறோம் என்றால் காந்தியம் பேசி பலனில்லை.
16-பிப்-2013 06:04:40 IST
மிக பெரிய ஒரு சாதனை.பெண் அடிமைதனத்தில் மூழ்கி தத்தளிக்கும் சகல இந்திய பெண்ணினினதுக்கும் வழி காட்டி அவர்களை எல்லாம் தட்டி எழுப்பிவிடுகின்றது தங்கள் சாதனை. அபாரமான சாதனை.
வாழ்த்துக்கள். வக்கீல் தொழிலும் தொடர்ந்து சாதனை படைக்க என் வாழ்த்துக்கள்.
12-பிப்-2013 07:47:54 IST
மகிந்த ராஜபக்சவோ அல்லது கடந்த கால ஸ்ரீலங்காவின் கொடிய அரசுகள் எல்லாம் ஈழ தமிழர்களை துன்புறுத்தி அழிக்கும் போதெல்லாம் அவர்கள் பயப்படுவது தமிழ்நாட்டினை பார்த்து மட்டுமே.
ஈழ தமிழனை துன்புறுத்தினால் தமிழ்நாட்டுக்காரன் சகலரும் துடித்து வெகுண்டு எழுவார்கள் என்ற ஒரு அச்சம் இலங்கை அரசுக்கு உண்டு.
தமிழ்நாட்டில் ஈழ தமிழர்களுக்காக போராட்டம் என்பதனை தி.மு.க. நடத்தினால் என்ன அல்லது அ.தி.மு.க நடத்தினால் என்ன அல்லது வை.கோ, சீமான்,திருமாவளவன் குழு நடத்தினால் என்ன ஒருவருக்கு ஒருவர் விமர்சித்து எதிர்ப்பு தெருவிக்காது தயவு செய்து கூட்டாக ஆதரவு வழங்குங்கள் என்ற அன்பு கோரிக்கையினை மட்டும் பாதிக்கபட்ட சகல ஈழ தமிழ் சமூகமும் தமிழ்நாட்டு மக்களை நோக்கி வேண்டுகின்றனர். .
ஈழத்தில் யுத்தத்தில் மரணிக்கும் ஒவொரு தமிழனும் மரணிக்கும் இறுதி நேரத்தில் வட திசை நோக்கி என் தாய் திரு தமிழ்நாடே எங்கள் உஜிரினை காப்பாற்ற மாட்டயா?என்று கதறி கொண்டே மடிந்து போனான் என நம் ஈழ மக்கள் சொல்லி சொல்லி கதறுவார்கள்.சொல்லமுடியாத துன்பத்திலும் தமிழ்நாட்டு மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் எங்கள் பக்கம் என்ற நம்பிக்கை சகல ஈழ தமிழர்களுக்கும் உண்டு.
தமிழநாடு முழுவதும் கூட்டாக அசைந்தால் இந்திய மத்திய அரசு அசையும். இந்திய அசைந்தால் மகிந்தவும் சிங்கள அரசும் நடுங்கும்.அதனை விட்டுட்டு ஈழ தமிழர்களின் வாழ்வா?சாவா? என்ற விடயத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மோதுபட்டுகொண்டிருந்தால் மகிந்தவின் பார்வைஜில் அது ஒரு பலஜீனமாக தெரியும்.
05-பிப்-2013 09:37:55 IST
அலைகழிக்கிற கொடுமைதனை செய்கின்ற அதிகாரிகளின் வீட்டில் " மாற்று திறனாளி" என்று சொல்லப்படும் அந்த புனித ஜீவாத்மா வந்து பிறந்து, அவர்கள் படும் துன்பங்கள் வேதனைகளை நேர் நேரா எதிர் கொண்டால் மட்டுமே அந்த அப்பாவிகளை அலைகழிக்கும் அதிகாரிகளுக்கு அறிவும் மனிதாபிமானமும் வரும். .
29-ஜன-2013 06:29:26 IST
ஒரு மனித ஜீவாத்மாவின் பிறப்பு என்ற ஒரு தொடக்க புள்ளி அதிலிருந்து தொடங்கி மரணம் என்ற வாழ்வின் முடிவு புள்ளி இந்த இரு புள்ளிகளுகிடையில் தொடர்து கொண்டுருக்கும் வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் இந்த அற்புதமான ஆசிரியை மிக பெரிய பணிஜினை தனது வாழ்க்கை காலத்தில் ஏதோ ஒரு சமுக பணிஜினை இந்த மாணவ சமுகத்துக்கு ஆற்றி வருகின்றார் . வாழ்த்துக்கள். இந்த கடமை உணவர்வினை சகல ஆசிரியரும் தொடர்வார்களா?
27-ஜன-2013 05:12:48 IST
நான் டாக்டர் M .s .உதயமூர்த்தி அவர்களின் பல வருட கால ஒரு வாசகன். அவரது கட்டுரைகள், கருத்துகள், சிந்தனைகள், வழி காட்டல்கள் எல்லாம் என்னை போல பலருக்கும் ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கும் என்பதில் எது வித சந்தேகமும் இருக்காது.அவரின் எந்த ஒரு கட்டுரை , புத்தகமும் நான் படிக்காமல் தவற விட்டது இல்லை. நாடு ,சமுக வளச்சி என சிந்தித்து செயல் பட்ட ஒரு சமுக பணியாளன் . ஒரு மனிதனின் வாழ்க்கை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதனை தன் வாழ்வு மூலம் உதாரணமாக உலகுக்கு காட்டிய ஒரு வழி காட்டி. தனது பிறப்பு என்ற ஆரம்ப புள்ளிக்கும் இறப்பு என்ற முடிவு புள்ளிக்கும் இடையில் ஏதோ நல்ல பிரோஜோசனமான ஒரு சாதனை மிக்க மாமனிதனாக வாழ்ந்து இந்த உலகினை விட்டு பிரிந்து சென்று உள்ளார் . அவரின் ஆத்மா நிட்சயம் சாந்தியடையும்.
22-ஜன-2013 08:02:19 IST