அடபோங்க தாத்தா, ஒகெனெகல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினால் முதல்வருக்கு பாராட்டு விழா வைப்பேன் என்றீர்களே, அது முதலில் என்ன ஆச்சு? இப்போது நிரூபித்தால் மன்னிப்பு கேட்க தயார் என்று கூறுகிறீர்கள். இப்படி சொல்வது ஒன்று செய்வது ஒன்று இருந்தால் எப்படி நாங்கள் உங்களை நம்பி ஆட்சியை ஒப்படைப்பது? முதலில் நீங்கள் சொன்னதை செய்துவிட்டு பிறகு மற்றதை பற்றி பேசுங்கள், புரியலையா, முதல்வருக்கு பாராட்டு விழா வைத்துவிட்டு பிறகு பேசுங்கள்.
11-ஜூன்-2013 01:01:40 IST
இந்த அறிவு கொள்ளை அடிப்பதற்கு முன் வந்திருக்க வேண்டும். அடித்த கொள்ளையின் அளவு மிக பெரியது. அதனால் வயதும், வயோதிகத்தை காரணம் காட்டி தப்பிக்க முடியாது. அம்மா பெங்களுரு நீதிமன்றத்திற்கு இரண்டு நாள் அலைந்த போது இனித்த அதே மனம் இன்று மனைவி நீதிமன்றம் சென்று பாதகமாக தீர்ப்பு வந்துவிடுமோ என்று பத பதைக்கிறது. உண்மையான கணவன் மனைவியை பினாமியாக்கி இருக்ககூடாது. இப்போவும் ஒன்று கெட்டு போகவில்லை, 2G கொள்ளையில் என் மனைவி வெறும் பினாமி தான், இந்த கொள்ளைக்கு முழு காரணம் நான் தான் என்று ஒப்பு கொண்டு விடுங்கள், பிறகு எல்லாமே சரியாகிவிடும்..... இதுவே அம்மா செய்திருந்தால் வழக்கு விசாரணையை முதல்வர் சந்திக்க பயபடுகிறார், அதனால் தான் வாய்தா வாங்குகிறார் என்று இதே வாயால் கூறியிருப்பார், சொந்த மனைவி என்றவுடன் பேச்சு வேறு மாதிரி உள்ளது.
02-ஜூன்-2013 00:12:49 IST
என்னது பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதா? நேற்றைய கருத்து கணிப்பை பார்த்தீர்களா? திமுக வெறும் நான்கு இடங்களில் தான் வெற்றி பெறுமாம், அது கூட டவுட்டு தான். அந்த 1 .76 லட்சம் கோடியை திரும்ப கொடுத்தால் வெற்றி வாய்ப்பு ஒரு சில தொகுதிகள் கூடலாம். 110 விதியை நீங்களே பிரபலபடுத்துகிறீர்கள் சின்ன தாத்தா அவர்களே. உங்க அப்பா போல என்ன மைனாரிட்டி ஆட்சியா நடத்துகிறார் அம்மா? மெஜாரிட்டி அரசு, எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றும் அளவிற்கு சட்டமன்றத்தில் பலம் உள்ளது.உங்களை போல யார் காலையும் பிடித்து கெஞ்சவெண்டியது இல்லை.எது எப்படியோ 110 விதியின் கீழ் நல்லது நடந்தால் நல்லது தானே? சட்டமன்ற தேர்தல் வந்துவிட்டால் உடனே நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்களா? 23 தொகுதிகள் குறைந்து 2 தொகுதிகள் தான் கிடைக்கும் உங்களுக்கு.
23-மே-2013 00:35:07 IST
இது எச்சரிக்கையல்ல எண்ணிப் பார்ப்பதற்காக.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். ஹ்ம்ம் பெருசு ஏதோ பயம் கலந்த தோணியில் பேச்சை அமுக்கி பேசுகிற மாதிரி தெரியுது? மக்கள் உங்களை இனி நம்ப போவதில்லை, ஆனால் ஒருவேளை அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா ஆனதை போல நீங்கள் அந்த 2G பணம் 1.76 லட்சம் கோடி ரூபாயை மக்களிடமே திருப்பி கொடுத்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு சீட்டுக்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது. எப்படி சவுகரியம்?
22-மே-2013 00:35:50 IST
எத்தனை கட்சிகளை உடைத்து, பிரித்து, ஒற்றுமையை குழைத்து மகிழ்ந்திருப்பீர்கள்? இன்று உங்களுக்கு என்று வரும் போது மட்டும் வலிக்குது. இன்றைய நிலைமையில் உங்களுடன் கூட்டணி வைக்க கூடிய ஒரே ஒரு தகுதியான ஆள் மாம்பழம் மாமா தான். காங்கிரஸ் வேறு இல்லை, கள்ள ஒட்டு போடவும் முடியாது, சிதம்பரம் வெற்றி பெற்ற சிதம்பர ரகசியத்தை போன்று அரங்கேற்ற முடியாது, எந்த தில்லு முல்லும் செய்ய முடியாது, அதனால் வேறு வழி இல்லை, துக்கடா கட்சிகளை வைத்து தான் நீங்கள் தேர்தலில் போட்டியிட முடியும். அப்போது தான் எங்களுக்கு உங்கள் எல்லாரையும் சேர்த்து குப்பையில் வீச முடியும்.
20-மே-2013 00:35:12 IST
தமிழ்நாட்டில் 40 க்கு 40 வாங்கிய ஒரு கட்சி, இன்று பரிதாபமான நிலையில் தோற்றுப்போனது. அந்த கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா MP கூட இல்லாத நிலையில் உள்ளது. நிச்சயம் பாஜக எடியுரப்பாவை அரவணைத்து வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவேண்டும் உண்மையில் எடியுரப்பா பிரித்த வாக்குகள் தான் பாஜக தோற்பதற்கு காரணம். பல தொகுதியில் எடியுரப்பா பத்து ஆயிரம் வோட்டுக்கள் வாங்கி காங்கிரசை ஜெயிக்கவைதுள்ளார். பாஜக விற்கு எடியுரப்பா நன்றி கடன் செலுத்தியுள்ளார். காங்கிரஸ் எதோ மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக நினைத்து கனவில் மிதக்கின்றார்கள், எடியுரப்பா மற்றும் JD கட்சிகள் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் காங்கிரஸ் இல்லாமல் போயிருக்கும். இதே போல தான் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வாக்குகளை பிரித்து வெற்றி பெறுகிறது. குஜராத்தில் கூட கேஷுபாய் படேலை வைத்து வெற்றி பெற்றிடலாம் என்று எண்ணியது, கேஷுபாய் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் குஜராத்தில் காங்கிரஸ் வழித்து எரியபட்டிருக்கும். சரி இந்த வருடத்தில் நடைபெற போகும் டெல்லி தேர்தலிலும், ராஜஸ்தான் தேர்தலிலும் இந்த வெற்றியை பெற்று காண்பிக்கட்டும். 2014 தேர்தலில் காங்கிரஸ் என்கிற கட்சிக்கு சங்கு ஊதி சமாதி கட்டவேண்டும். இன்று பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ் முயன்றது, அது என்ன என்றால் வாங்க தேசத்தை சுற்றியுள்ள இந்த பகுதிகள் பலவற்றை வங்கதேசத்துடன் இணைக்கும் மசோதா..... இந்த மசோதாவை எதிர் கட்சியினர் பிடுங்கி சென்று நிறைவேற்றாமல் தடுக்கப்பட்டது. அப்படியா பட்ட காங்கிரெஸ் கட்சியை கர்நாடக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். கர்நாடக மக்களுக்கு ஏழரை ஆரம்பம். தேர்தல் ஆணையம் புதிய கட்சிகள் தோன்றுவதை தடை செய்யவேண்டும். ஒரு மாநிலத்தில் பிரதான இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிட அனுமதிக்க வேண்டும். இந்த சிறு புதிய கட்சிகளால் தான் பிரதான கட்சிகளுக்கு பேராபத்து, இதனால் மக்கள் விரோத கட்சி ஆட்சிக்கு வந்துவிடுகிறது. இனி ஒவ்வொரு மாநிலத்திலும் மற்ற கட்சியினரை காங்கிரஸ் பிரித்து வாக்குக்களை பிரித்து வெற்றி பெற நினைக்கும், இது மிகவும் ஆபத்து.
08-மே-2013 14:37:45 IST
இன்று எடுத்த முடிவை 2009 எடுத்திருந்தால் ஒரு லட்சம் தமிழர்கள் காப்பாற்றபட்டிருப்பார்கள். சர்கள் பதவியை ரசித்து ருசித்து சாப்பிட்டுவிட்டு இப்போது நாடகம் ஆடுகிறார். கடைசியில் ஒரு பிட் போட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் விவாதம் செய்யப்பட்டு தீர்மானம் கொடுவரட்டும் என்றார். இந்த தீர்மானம் அமெரிக்க ஜெனீவாவில் தானே கொண்டுவரபோகிரார்கள்? அல்லது இந்திய பாராளுமன்றதிலா? சு.சுவாமி சொன்னதை போல, நிச்சயம் இவரு திரும்ப UPA அரசாங்கத்தில் போய் ஒட்டிகொல்வார். ஒரு நாள் கூட இவரால் பதவி இல்லாமல் இருக்கமுடியாது. நீங்கள் எல்லாம் பார்க்கத்தானே போகிறீர்கள்.
20-மார்-2013 00:25:53 IST
நண்பர் கார்த்திக், தமிழன் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தால், நம்முடைய பிரச்சனைகள் முதல்வரின் கவனத்திற்கு செல்லவேண்டும் என்றால், திமுகவை தோற்கடித்து எதிர் கட்சியாகவே வைத்துகொள்ள வேண்டும். அப்போது தான் தமிழன் மீது அவர்களுக்கு பாசம் பீரிட்டு வரும், போராட்டங்கள் அதிகம் நடைபெறும். மரியா, 10 வரும் யாரிடத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரம் இருந்தது? அப்போது இந்த அதிகாரத்தை பயன்படுத்தி போரை தடுத்திருக்கலாமே? அப்போது இல்லாமல் இப்போது இந்த அக்கறைக்கு காரணம்? வேறு ஒன்றும் இல்லை லோக் சபா தேர்தல் தான்.
06-மார்-2013 09:05:53 IST
நானும் ஜெயிலுக்கு போறேன், நானும் ஜெயிலுக்கு போறேன் காமெடி போல இருக்குது. ஆளும் கட்சியாக இருந்த போது இலங்கை இன படுகொலைக்கு துணை போனார்கள். எதிர்கட்சியாக வரும் போது மட்டும் தான் இவர்களுக்கு மக்கள் மீது பாசம் பீரிட்டு வருகிறது. அதனால் கருணாநிதியின் மக்கள் சேவை தமிழக மக்களுக்கு முழுமையாக கிடைக்கவேண்டும் என்றால் இனி வரும் அணைத்து தேர்தல்களிலும் டெப்பாசிட் இழக்க வைத்து, தோற்கடித்து வைத்து கொள்ளவேண்டும், அப்போது தான் இவர்களின் மக்கள் நல சேவை தமிழக மக்களுக்கு பரிப்பூரனமாக கிடைக்கும்.
06-மார்-2013 01:39:51 IST
ஐயா தினமலரே, முதல்வர் கொடி அசைத்து புதிய ரயிலை துவக்கி வைத்தால் உடனே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு அச்சாரம் என்கிறீர்கள், பிறகு மோடி பதவி ஏற்ப்பு விழாவில் முதல்வர் கலந்துகொண்ட பிறகு பாஜக கூட்டணிக்கு அச்சாரமா என்கிறீர்கள், பிறகு மரியாதை நிமித்தமாக முதல்வர் வைகோ அவர்களை நடு வழியில் சந்தித்ததால் வைகோவுடன் கூட்டணி என்கிறீர்கள்..... பிறகு பாஜகவும் வேண்டாம், காங்கிரஸ் கட்சியும் வேண்டாம் என்று கூறும் போது தனியாக நிர்ப்பார் என்கிறீர்கள். உங்கள் யூகத்திற்கு ஒரு அளவே இல்லையா? மதவாத சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுக்கவே மத்திய அரசுக்கு ஆதரவு என்று அணைத்து தில்லு முல்லு வேலைகளையும் செய்தது, இப்போது மதவாத கட்சி மதசார்பற்ற கட்சியாக தெரியுமா மஞ்ச துண்டுக்கு? முதலில் திமுகவை நம்பி இனி யாரும் வாக்களிக்கமாட்டார்கள். இரண்டு முறை திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு அவர்களால் எந்த நன்மையையும் தமிழகத்திற்கு ஏற்படவில்லை, மாறாக கெடுதல்கள் தான் அதிகம் என்று மக்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் போது சிகப்பு தோழர்கள் எப்படி மஞ்ச துண்டிடம் சேர்வார்கள்? தோழர்கள் எப்போதும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தான் விரும்புவார்கள், தோற்கும் கட்சியுடன் அல்ல. இப்போது டெசோ மானத்தில் பங்கேற்றால் முதல்வரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும், அடுத்த ஆண்டு வரும் ராஜ்யசபா MP தேர்தலில் தோழர்களுக்கு கொடுக்கவிருந்த ஒரு MP கூட அம்மா கொடுக்கமாட்டார். அதே போல, பாஜகவும் முதல்வரின் கோபத்திற்கு ஆளாக மாட்டார்கள். ஏன் என்றால் லோக்சபா தேர்தலில் 40 தொகுதியும் அம்மா அவர்கள் கைப்பற்றுவார்கள் என்று தெரியும். அப்படி இருக்கையில் அம்மாவை பகைத்து கொள்ள மாட்டார்கள். இப்போதைக்கு அல்ல, எப்பவுமே திமுகவுடன் மாம்பழம், முரசு, கை, குருமா போன்ற கட்சிகள் மட்டுமே சேர்வதற்கு தயாராக உள்ளது. முழ்கும் கப்பலில் பயணிக்க யாருக்கும் தைரியம் இல்லை. இன்னும் லோக் சபா தேர்தல் வர ஒரு வருடம் உள்ளது, இன்னும் என்ன என்ன யூகங்கள் வரபோகிறதோ? டெசோ எப்பவும் புஸ்சோ தான்.
24-பிப்-2013 01:38:17 IST