Santhosh Gopal : கருத்துக்கள் ( 765 )
Santhosh Gopal
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2017
அரசியல் சசி குடும்பம் நாடகம் இ.பி.எஸ்., தந்திரம்!இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை
அண்ணாமலை சசி நல்லவரா கெட்டவரா, ஆனால் அவர் வெளியே இருந்த வரையில் கட்சியை ட்டுக்கோப்பாக வைத்திருந்தார். இன்று அவர் நியமித்த ஆள் தான் முதல்வர் என்பதை மறக்க வேண்டாம். ஜெயா அம்மா எடுப்பார் கை பிள்ளை இல்லை, பெரும்பாலும் கட்சி பணிகளை கவனித்து சசி தான் அதனால் சீட் பெற அம்மாவை விட சசியை தான் இவர்கள் சுற்றி வலம் வந்தனர்.   16:16:27 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
அரசியல் சசி குடும்பம் நாடகம் இ.பி.எஸ்., தந்திரம்!இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை
தேச நேசன் அவர்களே, உங்களுக்கு அரசியல் புரியவில்லை. அதாவது 122 MLA க்கள், 30 க்கும் மேற்பட்ட MP க்கள், 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கட்சி குழு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் ஏன் 12 MLA க்கள் வைத்துள்ள OPS காலில் விழுகிறார்கள் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. EPS க்கு இத்தனை பேர் ஆதரவு இருந்தும் இரட்டை இலையை முடக்கினார்கள். சொல்ல போனால் EPS க்கு தான் இரட்டை இலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் பாஜக வின் நிர்பந்தத்தால் தேர்தல் கமிஷன் இலையை முடக்கியது. இனிமேலும் 122 MLA க்கள், 30 MP க்கள் 80 சதவிகிதம் உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் மத்திய அரசு கொடுக்கும் நிர்பந்தம் காரணமாக தேர்தல் கமிஷன் இரட்டை இலையை மீண்டும் முடக்கலாம் என்ற காரணத்தால் இரு அணிகளும் இணைந்தால் தான் மீண்டும் இரட்டை இலை கிடைக்கும் என்பதால் தான் இணைய பேச்சுவார்த்தை. மேலும் இப்போது OPS பாஜக வின் கட்டுப்பாட்டில் உள்ளார், அதனால் இரட்டை இலை சின்னம் EPS க்கு கிடைப்பது மிகவும் கடினம் தான் என்பதால் தான் இத்தனை பேச்சுவார்த்தைகளும். நீங்கள் தொலைகாட்சிகளில் விவாத மேடைகளை பாருங்கள், அதில் தான் இந்த விவரத்தை நான் தெரிந்து கொண்டேன்.   11:34:26 IST
Rate this:
12 members
1 members
8 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
அரசியல் சசி குடும்பம் நாடகம் இ.பி.எஸ்., தந்திரம்!இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை
தினமலர் இப்போது புரிகிறது இப்போதெல்லாம் வரும் கருத்துக்களில் OPS க்கு ஆதரவாக வருகிறதே என்று எண்ணினேன், ஆனால் OPS கு எதிரான கருத்துக்களின் வாக்கியங்களை நீங்கள் நீக்கிவிட்டு தங்களுக்கு தோதான வாக்கியத்தை மட்டும் நீக்காமல் வெளியிடுகிறீர்கள். என்னுடைய முந்தய கருத்தில் மிரட்டலுக்கு அடிபணிந்த OPS , நாளை முதல்வராக பதவியேற்று வேறு யாராவது மிரட்டினால் ராஜினாமா செய்துவிடுவாரா என்ற வாக்கியத்தை நீக்கிவிட்டீர்கள், இப்படி தான் இந்த கருத்து பகுதியில் OPS க்கு ஆதரவாக கருத்துக்கள் வருகிறதோ?   11:27:30 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
அரசியல் சசி குடும்பம் நாடகம் இ.பி.எஸ்., தந்திரம்!இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை
@ நான்கபாலி எனக்கு EPS ஸும் OPS ஸும் ஒன்னு தான், ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்தவர்கள் ஆனால் இன்று OPS செல்லும் பாதை தவறானது. அம்மா 2 முறை முதல்வராக அமர்த்தப்பட்டவர் என்று எழுதியுள்ளீர்கள். சசியோட சிபாரிசால் தான் அம்மாவால் 2 முறை முதல்வராக அமர்த்தப்பட்டார், அதுவும் இடைக்கால முதல்வராக தான். அம்மா ஒன்றும் OPS தான் என்னுடைய வாரிசு தான் அறிவித்து செல்லவில்லை. மேலும் ஒரு பேட்டியில் அம்மாவிடம் தங்களின் அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, நான் யாரையும் வாரிசாக அறிவிக்கமாட்டேன், ஏன் என்றால் இந்த கட்சி என் சொந்த முயற்சியில், பல இன்னல்களை சமாளித்து, என்னுடைய திறமையால் கட்டி காத்து வந்துள்ளேன், அதே போல யாருக்கு திறமை இருக்கிறதோ, அவர்கள் கட்சியையும், ஆட்சியையும் ஆளட்டும், நான் இவர்கள் தான் என்னுடைய அரசியல் வாரிசு என்று அறிவிக்கமாட்டேன் என்றார். மேலும் அம்மா இருந்த போது இதே OPS மற்றும் நத்தம் விஸ்வநாதனை ஒதுக்கி வைத்திருந்தார் ஏன்? OPS ஜானகி அணிக்கு ஆதரவாக பெரியகுளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார், அவரை அதிமுகவிற்கு அழைத்து வந்தததே இவர்கள் கூறும் அந்த மாபியா குடும்பத்தில் உள்ள தினகரன் தான் என்பதை மறவாதீர்கள். மேலும் அம்மா சிறை சென்ற போது யாரை முதல்வராக போடலாம் என்ற ஆலோசனையில் சசி கொடுத்த ஆலோசனை படி, யாரும் எதிர் பார்க்காத வகையில் OPS ஐ அழைத்து நாற்காலியில் அமரவைத்தார். ஒரு பேட்டியில் அமைச்சர்கள், OPS ஐ விட கட்சியில் சீனியர்கள் அதிகம் உள்ளனர் ஆனால் அம்மா சொன்னார் என்ற ஒரே காரணத்தால் தான் ஜூனியர் ஆன OPS ஐ நாங்கள் ஏற்று கொண்டோம் என்று. OPS தான் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர் என்று கூறுகிறீர்கள், எப்படி? இப்போது OPS பாஜகவின் பிடியில் இருக்கிறார். OPS முதல்வரானால் கட்சியை பாஜகவிற்கு அடகு வைத்துவிடுவார். OPS க்கு எந்த திறமையும் இல்லை. அவருக்கு எந்த அமைச்சர்களும், MLA க்களும் கட்டுப்பட மாட்டார்கள். முதல்வர் என்கிற கம்பீரம் அவரிடத்தில் இல்லை. அன்று காவல் துறையை கையில் வைத்திருந்த OPS என்னை மிரட்டினார்கள் என்று கூறும் OPS , நாளை முதல்வரானபோது யாராவது மிரட்டினால் ராஜினாமா செய்துவிடுவாரா? என்னை கேட்டால் மதுசூதனனன் கூட முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர்.   11:24:04 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
அரசியல் சசி குடும்பம் நாடகம் இ.பி.எஸ்., தந்திரம்!இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை
இன்று அம்மா சாவில் மர்மம் இருக்கு, அதற்கு விசாரணை தேவை என்று கூறுகிறார்கள், ஆனால் OPS முதல்வராக இருந்த போது, காவல் துறை மற்றும் உள் துறையை கையில் வைத்து என்ன செய்து கொண்டிருந்தார்? அம்மாவை கடைசி வரையில் பார்க்கவில்லை என்று கூறும் OPS , டிசம்பர் 5 தேதி யார் சொல்லி முதல்வராக பொறுப்பேற்றார்? இவர் உண்மையான விசுவாசி என்றால், அம்மா என்னிடம் நேரில் சொல்லட்டும் நான் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே. ஒருவேளை முதல்வராக தொடர்ந்திருந்தால் இவற்றை எல்லாம் மறைத்திருப்பார், EPS கூட பதவி ஏற்றது முதல் நல்லது சிலவற்றை செய்துள்ளார், நிச்சயம் EPS OPS ஐ விட நன்றாக ஆட்சி செய்வார். மேலும் EPS ஒன்றும் இன்று வந்தவர் அல்ல, அவர் OPS ஐ விட மிகவும் சீனியர். MGR காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர், சேவல் சின்னத்தை எதிர்த்து ஜானகி அணியில் OPS ஐ போல எதிர்த்து போட்டியிட்டனர் அல்ல. ஏன் கட்சியில் OPS ஐ தவிர வேறு யாரும் முதல்வர் ஆகா கூடாதா? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மிக்ச்சர் சாப்பிடுபவர் என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்டவர் என்பதை மறக்க வேண்டாம்.   00:39:53 IST
Rate this:
16 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
சம்பவம் தினகரனுக்கு திகார்? இரட்டை இலை சின்னத்துக்காக ரூ.60 கோடி லஞ்சம் தர முற்பட்டார்
என்னத்த உலகத்தில் இல்லாத world wide திருட்டை பண்ணிவிட்டார்கள்.. உலகத்தில் ஊழல் செய்யாத அரசியல் வாதி யாரும் இல்லை. இன்றய நிலைமையில் ஒவ்வொரு அரசியல் வாதி வீட்டிலும் சோதனை நடத்தினால் ஒருத்தன் கூட அரசியலில் இருக்க முடியாது. எதோ சசி கும்பல் மட்டும் தான் திருட்டில் ஈடுபட்டது போல இருக்கு கணேஷ் உங்கள் கருத்து. இன்று வரை, ஒரே ஒரு முறை, ஒரு மணி நேரம் கேடி சகோதரர்களை உள்ளே போட முடிந்ததா?   11:39:58 IST
Rate this:
15 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
பொது அ.தி.மு.க.,வை விட்டு சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் மதுசூதனன்
அட பக்கி பயலே, உனக்கு சூடு சுரனையே இல்லையா: உனக்கு சசியை பிடிக்கவில்லை என்றால் ஏன் அவர் கையை பிடித்து சின்னம்மா கட்சியை காப்பாற்ற நீங்கள் தான் பொதுச்செயலாளராக பதவி ஏற்கவேண்டும் என்று கெஞ்ச வேண்டும்? கட்சியில் உங்களை தவிர வேறு யாரும் சசி கையை பிடித்து அவ்வாறு கெஞ்சவில்லை. இப்போ காட்டுற இந்த வெறுப்பை, பொதுச்செயலாளர் பதவிக்கு முன் மொழிவதற்கு முன்பே காட்டியிருந்தால் கட்சியில் சசி வந்திருக்க மாட்டார், அவர் மாபியா கும்பல் என்றால் அந்த மாபியா கும்பலை கொண்டு வந்தது உங்கள் தவறு. இப்போது அவர் சிறைவாசம் அனுபவிப்பதும் உங்களால் தான். ஆனால் பன்னீரும் நீயும் சாஷ்டாங்கமா காலில் விழுந்தீங்களே, என்ன நடிப்புடா சாமி. உங்களையும் தூக்கி தாங்கி பிடிக்க சில ஊடகங்கள் இருக்குது பாரு... சசி குரூப்பை விட உங்கள் குரூப்பு ரொம்ப டேஞ்சர். நீங்கள் பாஜக வலையில் விழுந்துவிட்டீர்கள். ஆனால் ஒன்று கூறுகிறேன், தினகரன் மட்டும் தான் கட்சியை காப்பாற்ற முடியும், உங்கள் ஒருவராலும் அது முடியாது. தினகரன் இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் எப்படி உங்களால் கட்டுக்கோப்பாகவும், ஒற்றுமையாகவும் நடத்த முடியும்? OPS பேச்சுக்கும், கட்டளைக்கும் ஒருத்தன் கூட அடிபணிய மாட்டான்   04:05:30 IST
Rate this:
35 members
2 members
16 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
சம்பவம் தினகரனுக்கு திகார்? இரட்டை இலை சின்னத்துக்காக ரூ.60 கோடி லஞ்சம் தர முற்பட்டார்
எனக்கு ஒரு டவுட்டு, ஒருவேளை நாளை பன்னீர் தினகரன் அணியில் இணைந்துவிட்டால் (இணையாது சும்மா ஒரு கற்பனை), இன்று பன்னீரை தாங்கி பிடிக்கும் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் எப்படி எடுத்து கொள்ளும்? பன்னீர் கெட்டவராகி விட்டார் என்று கூறுமா அல்லது தினகரன் புனிதமாகிவிட்டார் என்று கூறுமா?   03:45:46 IST
Rate this:
12 members
1 members
21 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
சம்பவம் தினகரனுக்கு திகார்? இரட்டை இலை சின்னத்துக்காக ரூ.60 கோடி லஞ்சம் தர முற்பட்டார்
நண்பர்களே அனைவரும் youtube இல் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் பாண்டே அவர்கள் maafoi பாண்டியராஜன் மற்றும் தமிழ் இம்சை அவர்களை பேட்டி காண்பதை பாருங்கள். எவ்வளவு அழகான கேள்விகள். பாண்டே அவர்களுக்கு சல்யூட். நீங்கள் அனைவரும் அந்த கேள்விக்கு பதில் நிகழ்ச்சியை கட்டாயம் பார்க்கவேண்டும் அப்போது தான் பாஜக வின் உண்மை முகம் வெளியே தெரியும்.   03:43:47 IST
Rate this:
22 members
1 members
6 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
சம்பவம் தினகரனுக்கு திகார்? இரட்டை இலை சின்னத்துக்காக ரூ.60 கோடி லஞ்சம் தர முற்பட்டார்
எனக்கு அப்போதே ஒரு டவுட்டு. அதாகப்பட்டது, சசி எப்போது சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக கவர்னரிடத்தில் MLA க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்தாரோ, அவர் அந்த கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த போது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு தேதி வெளியாகவில்லை, தீர்ப்பு உறங்கி கொண்டு இருந்தது, ஆனால் வராத தீர்ப்பிற்கு, அதாவது தீர்ப்பு தேதியே தெரியாத நிலையில் ஆளுநர் தீர்ப்பிற்க்காக காத்திருக்கிறார். உடனே கர்நாடக பாஜக வில் உள்ள ஒருவர் உச்சநீதிமன்றத்திற்கு சென்று எப்போது தீர்ப்பு வழங்க உள்ளீர்கள், விரைவாக தீர்ப்பு கொடுங்கள், தீர்ப்பு தேதியை அறிவியுங்கள் என்று கேட்க, உச்சநீதிமன்றமும் வேறு வழி இல்லாமல் தீர்ப்பு தேதியை வெளியிட்டது (யாருடைய நிர்பந்தமோ). அப்போதே தெரியும் தீர்ப்பு குன்ஹா கொடுத்த தீர்ப்பின் படியே வரும் என்று. ஒரு வேளை பன்னீர் செல்வமே முதல்வர் என்று சசி அனுமதித்து இருந்தால் தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்கலாம். சசியும் வெளியே இருந்திருப்பார், இன்று பன்னீரும் அவர் வாயாலே சின்னம்மா என்று சசியை செல்லமாக அழைத்திருப்பார். எப்போது தினகரன் தலைமை பதவிக்கு போட்டி என்று வந்தவுடனே பெர்ரா வழக்கு தூசு தட்டப்பட்டது. தினகரன் யார் என்று மக்களுக்கு தெரிவதற்கு முன் இந்த வழக்குகள் எல்லாம் உறங்கி கொண்டிருந்தன, ஆனால் தினகரன் RK நகர் போட்டி என்று வந்தவுடன் இந்த வழக்குகள் சூடு பிடிக்க தொடங்கும் என்று நினைத்தேன். அதே போல நடந்தது. மேலும் RK நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெறுவார் என்று உளவு துறை கூறியதால் பா.ஜ.க எப்படியாவது இந்த தேர்தலை ரத்து செய்ய ஒரு காரணம் கண்டு பிடித்தாகவேண்டும், அந்த காரணம் ரத்து செய்யும்படியும் இருக்கவேண்டும், அதே சமயத்தில் தினகரனுக்கு அவ பெயரை ஏற்படுத்தும் படி இருக்கவேண்டும். அதற்காக அவசர அவசரமாக ரைடு விட்டு சில ஆவணங்களை கைப்பற்றி, தேர்தலை நிறுத்த காரணத்தை கண்டு பிடித்து நிறுத்தியும் விட்டார்கள். பன்னீருக்கு ஆதரவு கொடுத்த போது சரத் குமார் வீட்டில் ரைடு நடத்தவில்லை. எப்போது தேர்தல் வைத்தாலும் வெற்றி பெறுவேன் என்று தினகரன் கூறியதால் தான் இந்த பழி வாங்கல். தினகரன் லஞ்சம் கொடுக்க முற்பட்டார், அதுவும் தேர்தல் ஆணையத்திற்கு. இது நம்பும்படியாக உள்ளதா? அப்படி என்றால் காவி பண்டாரம் பாஜக இரண்டாம் இடம் பெற்ற கோவா மற்றும் மணிப்பூரில் ஆட்சியை கைப்பற்ற சுயேச்சை MLA க்களுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுத்தார்கள் என்பதை கூறுவார்களா? திக் விஜய சிங் கேள்விக்கு இன்னும் பாஜகவில் யாரும் பதிலே கூறவில்லை. இது ஒரு மோசமான நிலைமை. தமிழகத்தில் ஆட்சியில் நீடிக்கவேண்டும் என்றால் பாஜக தயவு தேவையா? இது என்ன கூத்து. இவர்களை எதிர்த்தால் என்ன வழக்கு வேண்டுமானாலும் போட்டு உள்ளே தள்ளிவிடலாமா? இந்த நிகழ்வுகளை பார்த்து சுடலை சந்தோஷப்பட கூடாது. நாளைக்கு அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் காவி பண்டாரங்கள் இதே போன்ற தொல்லைகள் கொடுப்பார்கள். நிறைய வழக்குகள், அதாவது 2G போன்ற வழக்குகள் தீர்ப்பு இதை விட மோசமாக கூட வரலாம். இன்றைக்கு அதிமுகவிற்கு இந்த நிலைமை என்றால் நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமை தான். ரொம்ப கஷ்டம் பாஜக வையும், தினமலரை சமாளித்து ஆட்சி நடத்துவது என்பது குதிரை கொம்பு தான்.   03:41:38 IST
Rate this:
50 members
2 members
21 members
Share this Comment