E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Sekar Sekaran : கருத்துக்கள் ( 1836 )
Sekar Sekaran
Advertisement
Advertisement
அக்டோபர்
31
2014
அரசியல் மீனவர்கள் 5 பேர் விடுதலை கருணாநிதி வலியுறுத்தல்
இலங்கைக்கு ஆதரவு நிலையை எடுத்தவரே இந்த கருணா அவர்கள்தான். எவ்வளவு பேர் கொல்லப்பட்டும்..ஊடகங்கள் விரிவாக புகைப்படத்தோடு காணொளி மூலம் உலகிற்கு தெரிவித்தும்..கனிமொழியை ராஜபக்ஷேவை சந்திக்க அனுப்பிய செயல்களும்..பரிசு பெற்று வந்ததும்..அந்த பரிசின் தொகை என்ன என்பதை இதுவரை உலகிற்கு அறிவிக்கததும்..தமிழன் இப்படித்தான்..அவனது அரசியலும் இப்படித்தான் என்றுதான் துணிந்து இலங்கைக்காரன் செய்கின்றான். அந்த துணிச்சலை கொடுத்த இந்த உத்தமர் இப்போது அறிக்கையை விட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவியாக தன்னை உலகிற்கு காட்ட முயற்சிக்கின்றார். கச்சத்தீவை என்றைக்கு விட்டுகொடுத்து ஊழலில் தப்பித்தாரோ..அன்றே மீனவர்கள் வாழ்விலே மண்ணை அள்ளிபோட்டுவிட்டார். முதலைக்கு கூட கண்ணீர் உண்மையாக வந்துவிடக்கூடும்..ஆனால் இந்த அறிக்கை நாயகரின் வேடம் மட்டும் என்றைக்கும் மக்கள் மத்தியில் எடுபடாது. இன்னோர் வேஷமே இந்த அறிக்கை..   03:51:45 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
31
2014
கோர்ட் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி வந்த விவகாரத்தில் விசாரணை தயாளு, ராஜா, கனிமொழி உட்பட 19 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
ஒய்யார கொண்டையில் கருணா அவர்கள் பேன் பார்ப்பாரா அல்லது வழித்து கொண்டையே இல்லாமல் செய்வாரா? சொந்த மனைவிக்கு மனநோய் என்றார்..அல்சைமர் என்கிற நோயை உலகிற்கு அறிமுகம் செய்தார். காங்கிரசை மிரட்டி மிரட்டியே சாதித்தவர் இப்போது யோசிக்கின்றார். அம்மாவுக்கு அவர் செய்த கொடுமைகளுக்கு இது வேறு பாவ சம்பளம் மட்டுமே. போனஸ் எக்கச்சக்கமாக திகார் என்றும்..டெல்லி என்றும் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு காரணமே அதீத பணப்பேராசையே. இவர்களை எல்லாம் தூண்டிவிட்ட அந்த மஹா புண்ணியவான் யார் என்று விசாரியுங்கள்..ஸ்கெட்ச் போட்டுகொடுத்த அந்த மூளைக்கார சாணக்கியரை கண்டுபிடித்து உள்ளே தள்ளுங்கள். இவர்கள் அப்பாவி என்றால் கூட நம்பலாம்..ஒரு சதவிகிதம் மட்டுமே..ஆனால் நல்லவர் போல வேடம் தரித்து பசுத்தோல் போர்த்திய நரியை விடாதீர்கள்..வஞ்சகம் செய்வாரடி கிளியே அவர் வாய்ச்சொல் வீரரடி கிளியே..இப்போது யார் என்று புரிந்திருக்கும் கோர்ட்டார் அவர்களுக்கு..அந்த நபரை விசாரியுங்கள்..முறைப்படி..அழுது புரளுவார்..ஐயய்யோ என்று கதறுவார்..ஓங்கி கத்துவார்..விடாதீர்கள்..தூண்டிவிட்டவருக்குதான் தண்டனை அதிகம் என்பதால்தான் விடாதீர்கள் என்று வேண்டுகின்றேன். அவர் மீதான பாசம் நமக்கு கொஞ்சம் அதிகம்..   03:45:19 IST
Rate this:
17 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
31
2014
பொது நாட்டின் இருதயத்தில் ஈட்டியை பாய்ச்சிய சீக்கியர் படுகொலை படேல் பிறந்த நாள் விழாவில் பிரதமர் கண்டனம்
முப்பதாண்டு நிகழ்வினை நினைவு படுத்திவிட்டார். அதே போன்றுதான் குஜராத்தில் நடந்த இனக்கலவரமும் இதயத்தில் பாய்ந்த ஈட்டி போல அல்லாமல்..பேக்கரி எரிப்பில் கொல்லப்பட்டவர்களை பற்றியும்..ஓர் மதத்தை சார்ந்தவர்களை குறிவைத்து கர்ப்பிணி பெண் என்றுகூட பாராமல் கொல்லப்பட்டதையும் நிச்சயம் நினைவு கூறுவார்கள் வருங்கால பிரதமராக யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி. காலம் மாறினாலும் பட்ட காயங்கள் மாறாது வடுவாக ரணமாக வலிக்கவே செய்யும். படேலுக்கு பிரம்மாண்டமான சிலையை வைப்பதை யாரும் விமர்சிக்காமல் இருக்க இதுபோன்ற பேச்சுக்கள் துணை நிற்கும் என்று எண்ணி பேசிய பேச்சு இது. ஈட்டியாய் குத்தப்போகும் செலவு இந்த பிரம்மாண்டமான சிலைக்கு. அதனால்தான் இப்போதிருந்தே பாசத்தை கொட்டுகின்றார் பிரதமர்..வேஷக்கார பிள்ளை..ரோஷமில்லை இது..வேஷம்..   03:35:20 IST
Rate this:
23 members
0 members
54 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் தமிழக காங்கிரஸ் கட்சி உடைகிறது?வாசன் வட்டாரம் மும்முரம்
பொதுவாகவே தேசீய கட்சிகள் தமிழகத்தில் அழிவதற்கு மேலிடத்தின் திணிப்புகளே காரணமாக அமைகின்றது. கோஷ்டி கானம் அகோரமாக ஒலிக்கவும் மேலிட கோஷ்டிகள் காரணமாக இருக்கின்றார்கள். இதே நில்லையைத்தான் வருங்கால பா ஜ கவும் சந்திக்கும். காங்கிரசாவது இவ்ளோ காலம் ஆட்சியில் இருந்தார்கள்..பல கோஷ்டிகளாக பிரிந்து பின்னர் வேஷம் போட்டு காலத்தை தள்ளினார்கள். ஆனால் பா ஜ விலோ இப்போதே பல கோஷ்டிகள். காங்கிரஸ்கார்கள் சட்டையை கிழித்து வேஷ்டி இழந்து சண்டை போட்டார்கள். கதர் வியாபாரம் செழிக்க அந்த சண்டையும் காரணம் என்றால் அது மிகை அல்ல. பார்ப்போம் அடுத்து பா ஜ க கோஷ்டி சண்டை எந்த அளவுக்கு காற்றில் பறக்கப்போகிறது என்று..நிதியோடு சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் பசி..கருணா ஆலோசனைப்படியே ஆடுவார்..வியாபார ஒப்பந்தம் அப்படி..வாசன் மீண்டும் சைக்கிள் ஓட்ட தயாராகிவிட்டார்..பசி..பசியோடு கோவாலபுரம் நோக்கி ஓடுவார். பசியை கட்சியை விட்டு நீக்கினாலே காங்கிரஸ் ஓரளவு சாதிக்கும்..பசி ஒருபிரயோஜனமும் இல்லாத ஒரு கதர் வேஷ்டிகாரர்..   03:27:32 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

அக்டோபர்
31
2014
அரசியல் கலெக்டருடன் ஸ்டாலின் சந்திப்பு எதிரொலி செய்தித்துறை அதிகாரி உட்பட 3 பேர் இடமாற்றம்
ஸ்டாலினின் திருவாரூர் வருகையும் அங்கே அவர் காட்டிய ஓவரான பில்டப்பும்..அவர் இன்னமும் தான் ஓர் து.முதல்வர் என்றே எண்ணிக்கொண்டு செயல்பட்டார். பிற தொகுதி எம் எல் ஏ முதலில் தனது தொகுதியை பற்றி மட்டுமே கவனம் கொள்ளவேண்டும். அப்பா பிள்ளை உறவு என்பது அவர்களின் கொள்ளையோடு நிறுத்திகொள்வது பலன் அளிக்கும். திமுக நியமித்த பலரும் இப்படித்தான் அவர்களது விசுவாசியாகத்தான் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட அரசு ஊழியர்களை களை எடுப்பதே நல்லது. உளவாளிகள் போல செயல்படுவது அவர்களின் வேலை என்பதை திருவாரூர் விசிட் மூலம் மக்கள் அறிந்துகொண்டார்கள். வேலையை விட்டே தூக்கியிருக்க சந்தர்ப்பம் இருந்தும் அமைச்சர் அவர்களை மாற்றம் மட்டுமே செய்தது அவரது பெருந்தன்மையையே காட்டுகின்றது. அரசு ஊழியர்கள் இனியாவது கட்சி விசுவாசத்தை வீட்டில் மூட்டை கட்டிவைத்துவிட்டு செயல்பட இது ஓர் பாடமாக இருக்கும்.டம்மிகளின் ஆட்டம் திருவாரூரில்..அடக்கப்பட்டுவிட்டது..   03:19:10 IST
Rate this:
157 members
0 members
60 members
Share this Comment

அக்டோபர்
30
2014
அரசியல் கருணாநிதி கருத்துக்கு வைகோ மகிழ்ச்சி
வைகோவின் அரசியல் வாழ்வின் அஸ்தமனம் இந்த மகிழ்ச்சியின் எல்லை. இதுநாள்வரை அவருக்கென்று ஓர் மரியாதை ஒன்று இருந்தது..இனி அவரை ஓர் பச்சோந்தி அரசியல்வாதி என்றே அழைப்பார்கள். இந்த மகிழ்ச்சியை செஞ்சி ராமச்சந்திரனும் எல் கணேசனும் எடுத்த முடிவின்போதே எடுத்திருந்தால்..நிச்சயம் வைகோவை பாராட்டி இருக்கலாம். மேலும் பா ஜ கவிடமிருந்து வைகோ அவர்கள் ராஜ்யசபா எம்பி பதவியை மிக ஆவலோடு எதிர்பார்த்தார்..அது கிடைக்காமல் போகவே..சில நாட்களாக மத்திய அரசை குறை சொல்ல ஆரம்பித்தார். 23 பேர் இவருக்காக தற்கொலை செய்தது..அவர்கள் ஆன்மா இவரை மன்னிக்குமா? ஈழ விஷயத்தில் கருணா ஒருவர் ஈழத்திலும் இங்கேயும் இருக்கின்றார். அடுத்து வைகோவின் பயணம் ராஜபக்ஷேவை சந்திக்கும் நேரம் குறித்து அமையலாம். கனிமொழியை தொடர்ந்து அடுத்து வைகோவும் இலங்கை பயணம் மேற்கொள்ளாமல் போகமாட்டார் என்றே நம்பலாம். அருவருப்பான அரசியல் தமிழகத்தில் தழைக்க இவரும் ஒருவர். எட்டப்பன்கள் இப்போது கலிங்கப்பட்டியிலிருந்தும்.. வேதனை வெட்கம்..   13:27:27 IST
Rate this:
10 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
30
2014
கோர்ட் விரட்டுகிறார் சுப்பிரமணியசாமி வழக்கில் பின் தங்குகிறார் ஜெ.,
இப்போது மட்டும் இப்படி நடப்பது இல்லை. மி எது செய்தாலும் அவருக்கு ஆதரவாகத்தான் வடக்கே உள்ளவர்கள் எல்லோரும் பணிந்து செல்கின்றார்கள். அரசியல் ப்ரோக்கர் என்பதால் கூட பயந்து நயந்து போகின்றார்கள் என்றே எண்ணுகின்றேன். ராஜீவ் கொலை வழக்கில் கூட பாருங்கள் எவ்வளவோ ஆதாரங்களை சாமிக்கு எதிராக கூறியிருந்தாலும்..ஹ்ம்ம் இதுவரை அவர் மீதான நடவடிக்கை என்பதே இல்லாமல் போயிற்றே..சமீபத்தில் கூட தமிழக மீனவர்கள் படகை நான் சொல்லித்தான் ராஜபக்ஷே விட மறுக்கின்றார் என்று தேச துரோகத்தை போன்றே பேசினார். இப்படி வடக்கே உள்ளவர்களில் பலரும்..தெற்க்கே உள்ளவர்களில் சிலரும் பயந்து வருகின்றபோது அம்மா அவர்கள் சூனா சாமிக்கு பயம் கொள்ளவே மாட்டார்கள். எந்த அரசு பதவியில் இல்லாமல் இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்படுகின்ற மத்திய போலீஸ் படையானது தேவையே இல்லை என்றாலும்..இப்போது சொல்லுங்கள் வடக்கே உள்ளவர்கள் சாமிக்கு பயந்துதானே..இப்படியெல்லாம்..சாமியை எதிர்ப்பவர்களில் தமிழகத்தில் உள்ளவர்கள்தான் தைரியமானவர்கள்..அந்த வகையில் அம்மா அவர்கள்..   13:20:54 IST
Rate this:
283 members
0 members
248 members
Share this Comment

அக்டோபர்
29
2014
பொது ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கலாநிதி,தயாநிதிக்கு சம்மன்
பணம் பேசும் பேசும் என்கிறார்களே..பேசுவதை கேட்காதவர்கள்..இப்போது கேட்கலாம்.,இந்த செய்தி போல இன்னமும் நூறு ஆண்டுகளுக்கு பேசிக்கொண்டே இருக்கலாம். பணம் படைத்தவனுக்கான நாடு இது..   05:03:03 IST
Rate this:
8 members
1 members
80 members
Share this Comment

அக்டோபர்
30
2014
அரசியல் என் யோசனைக்கு பின் ரூ.60 கோடியை நிவாரண பணிக்கு அறிவித்தார் கருணாநிதி
சாணக்கியன் சொல்லித்தான் அரசே செயல்படுகின்றது. முதலில் சொந்த பிள்ளைகளை இவரது பேச்சை கேட்க சொல்லுங்கள் பார்க்கலாம். ரொம்ப நினைப்புதான் இவருக்கு. இப்படித்தான் இவரது நெஞ்சுக்கு நீதியில் இதே போன்று தன்னை தானே புகழ்ந்து எழுதிகொள்வார். அடுத்த செய்தியும் நிகழ்வும் இந்த நெஞ்சுக்கு நீதியில் அச்சேறும்.   04:59:52 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
29
2014
அரசியல் திறப்பு விழா சர்ச்சை வெற்று அரசியல் செய்கிறாரா விஜயகாந்த்?
மக்களை முகம் சுழிக்க செய்துவிட்டனர் இந்த ரசிகர் பட்டாளம். எவருக்கும் அவர் தலைவரை போன்றே நடைமுறை பற்றியோ..அல்லது பொது நிகழ்வுகளில் எப்படி நடந்துகொள்வது என்பது பற்றியோ தெரியவில்லை.கும்பலாக சென்று ஓர் பள்ளியை முற்றுகை இடுவது அருவருப்பான ஒன்று. என்னவோ இவர்கள் வீட்டு சொந்த பணத்தை போட்டுவிட்டு செய்த காரியம் போன்று நடந்துகொள்வது அநாகரீகத்தின் உச்சம். தொகுதியில் இருந்த ஓரிரு ஓட்டுக்களையும் இழந்துவிட்டார்கள் இந்த தேமுதிகவினர். பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதியே தடை செய்திருப்பார்கள். விசயகாந்து வந்திருந்தால்..பள்ளி வகுப்பறைக்குள் சென்று பாடம் நடத்தபோவதாக மிரட்டியிருப்பார். சொந்த வேட்ப்பாளரையே தலையில் டொங் டொங் என்று கொட்டியவர்..குழந்தைகளின் பதிலை கேட்டு புரியாமல்..அந்த குழந்தைகளின் தலையிலே கொட்டிவிடுவாறே என்று பயந்துதான் குழந்தைகளின் கோரிக்கையை ஏற்று.. நிர்வாகம் தவிர்த்திருப்பார்கள். நல்ல காரியம்தான்..வரவிடாமல் செய்தது..   04:50:08 IST
Rate this:
113 members
1 members
79 members
Share this Comment