Advertisement
Sekar Sekaran : கருத்துக்கள் ( 2961 )
Sekar Sekaran
Advertisement
Advertisement
ஜனவரி
19
2017
பொது ஜல்லிக்கட்டு நடக்குமா? கைவிரித்தார் பிரதமர்
அவ்வளவு எளிதாக ஜல்லிக்கட்டினை நடத்த விடுவார்களா என்ன? அதில் ஒரு கவுரவ பிரச்சினை இருக்கிறது. இப்படியே ஒவ்வோர் மாநிலத்திலும் போராட்டம் என்று வந்து கோரிக்கை வைத்தால்..அதுவே பழக்கமாகிவிடும் என்பதும்..தமிழன் என்றால் மந்தை கூட்டம் என்றும் வடக்கே உள்ளவர்களின் எண்ணத்தினை நாம் அவ்வளவு சுலபமாக மாற்றிவிட முடியாது. சுப்ரீம் கோர்ட் ஐ காட்டி தப்பித்துக்கொண்டார் பிரதமர். கழுவிய மீனில் நழுவிய மீன்போல..பாராளுமன்றத்தில் என்னால் முடிந்தவரை அவசரச்சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்று உறுதி கொடுத்திருக்கலாமே..செய்வார்களா? ஹூம்..அதெப்படி செய்வார்கள்? அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால்தான் பொறுக்காதே..மத்திய அரசுக்கு பாதிப்பு வருகின்ற வகையில் ரயில் மறியல் போராட்டம்..மின்சார தடை போராட்டம் என்று ஆரம்பித்தால்..அடிச்சுப்பிடிச்சு ஓடோடி வருவார்கள்..சாத்வீகமோ..காந்தீயவழியோ..இங்கே அவை எடுபடாது..போராடுபவர்கள் காலக்கெடுகொடுத்து இந்த பிரச்சினையை கையாளலாம்..அதுதான் சிறந்தவழி..ஒருக்காலும் தமிழனுக்கு இந்தியாவில் மதிப்பே இல்லை..அதன் உண்மை நிலைதான் பிரதமரின் ஒரே வரி பதில்..ஒரு மாநில முதல்வர் எவ்வளவு முக்கியத்துவம் இருப்பின் டெல்லிக்கு வந்திருப்பார்..என்று கருத்தினாரா மோடிஜி..? ஹூம்..அதே போலத்தான் வறட்சி நிவாரணத்துக்கு கூட கெஞ்சிக்கொண்டிருக்கணும்..நாம் வரி செலுத்தவில்லை? கர்நாடகாவிற்கு 2000 கோடிவரை தாராளம் காட்டுகின்றார்...நமக்கு சென்ற ஆண்டுவெள்ளத்திற்கு கொடுத்த பணம் வெறும் 940 கோடி மட்டுமே..மாற்றாந்தாய் மனப்பான்மையில் மோடியின் செயல்பாடுகள் தமிழர்களை ஓரம்கட்டுகின்றதை பறைசாற்றுகின்றது..அவமானம்..பெருத்த அவமானம்..   12:21:38 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
18
2017
அரசியல் ஜெ.,க்கு அளித்த சிகிச்சை விபரம் வெளியிட தீபா வலியுறுத்தல்
மாத்தி மாத்தி பேசுகின்றார்.. நீங்கள் சாவில் மர்மம் இருப்பதாக சொன்னால் தான் இந்த கூட்டத்தில் இருப்பவர்களை தக்கவைக்க முடியும் என்று சொல்லி தந்ததை இந்த பெண்ணும் உணர்ந்து இப்போ மாற்றி சொல்லுகின்றார். இவருக்கு அரசியல் தெரிந்து களத்தில் தாக்குபிடிப்பார் என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக. அம்மாவின் குடும்ப வாரிசு என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இவரை நடுத்தெருவுக்கு கொண்டுவர துடிக்கின்றார்கள்..அம்மா அவர்களிடம் தெரிந்த அந்த தெய்வீக லட்சணம்.. அழகு.. கம்பீரம்.. ஆற்றல்.. இவற்றில் ஒன்றைக்கூட இவரிடம் காணமுடியவில்லை.. அரசியல் அறிவை போன்றே அதுவும் இவரிடம் மிஸ்ஸிங். வடாம் பிழிந்து வெய்யிலில் காயவைத்து பப்படம் சுட்டு நின்றுகொண்டு.. மதம் மாறி கிறித்துவ பாடல்களை பாடிக்கொண்டிருந்தவரை பண ஆசை பதவி ஆசை புகழ் ஆசை சொல்லித்தந்து இப்படி கொண்டுவந்து தத்தி ரேஞ்சுக்கு பலவீனப்படுத்துகின்றார்களே..அம்மா அவர்கள் சொன்னதை மறந்துவிட்டார்களே.. குடும்ப அரசியல் அதிமுகவில் இல்லை என்பதை மறந்துபோய்.. மிஸ்டர் எக்ஸ்கள்.. ஒதுக்கிவிடப்பட்டவர்கள்..குறிப்பிட்ட சாதிப்பகைமை..இவற்றுக்காக இந்த அப்பாவி பெண்ணை வீதிக்கு கொண்டுவந்துவிட்டார்களே.. கட்சியில் சேர்ந்து அங்கிருந்து போராடி இருந்தால் இவருக்கு ஆற்றல் உள்ளது..அரசியலில் அம்மாவை போன்று வருவார் என்று எதிர்பார்த்திருக்கலாம்..சொத்துக்கள் ஏதேனும் அம்மா அவர்கள் இவருக்காக உயில் எழுதி வைத்திருந்தால் பெற்றுக்கொண்டு போய்விடலாம்..இவருக்கு பின்னால் நிற்கும் கூட்டமெல்லாம்..அடுத்த எந்த போட்டி என்றாலும் தனக்கு பதவி நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செயல்படுகின்ற மோசமான பதவி வெறியர்கள் கூட்டம்..விஜய்காந்து கட்சியினரை பார்த்து சூடுபோட்டுக்கொண்ட கூட்டம் அது. என்னமோ..பணமும் பதவியும் படாதபாடு படுத்துகின்றது..அது இந்த பெண்ணையும் விடவில்லை போலும்..வேதனை..ஒரு பெண் பலிகடா ஆக்கப்படுகின்றார் சிலரின் பதவி வெறிக்கு..சாதி வெறிக்கு..இதுதான் உண்மை..   06:10:42 IST
Rate this:
29 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
17
2017
பொது என்.எஸ்.ஜி.,யில் உறுப்பினராக இந்தியா தீவிர முயற்சி
நிச்சயம் இந்த முறை இந்தியாவுக்கு வெற்றி கிட்டும் என்றே நம்பலாம்.. சீனாவின் எதிர்ப்பு பயத்தின் உச்சமே.. அமெரிக்காவின் புதிய அதிபர் சீனாவுக்கு எதிரானவர் மட்டுமல்ல..இந்தியாவுக்கு சாதகமானவர் என்பதால் சீனாவின் பயம் எல்லை கடந்து நிற்கின்றது..   07:03:07 IST
Rate this:
5 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
17
2017
பொது எம்.ஜி.ஆர்., நினைவு தபால் தலை வெளியீடு 15 நிமிடங்களில் விழா நிறைவு
மக்களின் மனதில் நிரந்தரமாக வாழ்கின்றவர் எம் ஜி யார் அவர்கள்..அம்மா அவர்களை போல.. அதனால் பூக்கடைக்கு அடிக்கடி விளம்பரம் தேவையில்லை.. புகழ்பாட நேரமில்லை என்பது இங்கே முக்கியம் இல்லை.. நூற்றாண்டு கொண்டாட்டத்தில் போதுமான அளவுக்கு புகழ் பாடியாயிற்று..உங்கள் காதில் விழாமல் போனால் அதற்கு இப்படியா செய்தி போடுவது?   07:00:21 IST
Rate this:
30 members
1 members
9 members
Share this Comment

ஜனவரி
17
2017
பொது மகாத்மா காந்தியின் படத்தை டாய்லெட்டில் பயன்படுத்தாதீர்!
காந்திப்படத்தையே கரன்சியிலிருந்து தூக்கியாச்சு..இனி கழிவறையில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லாமல் விட்டார்களே..ஆர் எஸ் எஸ் க்கு நன்றிங்கோ..   06:56:27 IST
Rate this:
12 members
0 members
25 members
Share this Comment

ஜனவரி
17
2017
அரசியல் ஜெ., பிறந்தநாளில் முக்கிய முடிவு தீபா
பேராசை.. கனவுலகில் மிதக்கின்றார்.. சொந்த அத்தையாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டவர்..பெற்ற தகப்பனால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்..நேற்று வரையில் அரசியலில் ஆவன்னா கூட தெரியாதவர்..சரஸ்வதி சபதம் படத்தில் பிச்சைக்கார பெண்ணுக்கு கிடைத்த திடீர் அதிர்ஷ்டம் போல இவருக்கு..ஒரு சந்தர்ப்பம்.. அவ்ளோதான்.. இவருக்கு பின்புலம் வேறு சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.. பண உதவியோடு அதிகார ஆசையை காட்ட யோசிக்காமல் கட்சி ஆரம்பிக்கின்றேன் என்று சொல்வது இவரது பேராசையின் உச்சம் தான்... பெண்புத்தி பின்புத்தி என்பதன் உதாரணம் இவரே..   06:52:32 IST
Rate this:
43 members
1 members
11 members
Share this Comment

ஜனவரி
17
2017
அரசியல் 1,500 போலீசார்! எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத அ.தி.மு.க., சசிகலாவுக்கு... எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்வைத்து அராஜகம் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார்
அவர் மிகப்பெரிய ஒரு ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற தகுதியின் அடிப்படையில் பாதுகாப்பு கொடுக்கப்படுகின்றதே. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கூடிய ஓர் ஆளும் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தவறில்லையே..ஸ்டாலினுக்கு எதற்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு? அவர் அவ்வளவு பெரிய அப்பா டக்காரா என்ன? அவருக்கே கொடுக்கப்படுகின்றபோது..சசிகலா மேடத்துக்கு கொடுப்பதில் பொறாமைப்பட வேண்டாம்..   06:38:07 IST
Rate this:
132 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
16
2017
அரசியல் அதிமுகவை கைப்பற்ற சதி கே.பி.முனுசாமி ‛பகீர் புகார்
2014 தேர்தலில் தர்மபுரியில் எளிதாக வெற்றிபெற இருந்த சூழலில் இவர் சாதிப்பாசம் பொங்க சின்ன ஐயா என்று இவரால் அழைக்கப்படுகின்ற சி பி ஐ வழக்கு உள்ள அன்புமணி வெற்றிபெற உதவியவர் என்பதை உளவுத்துறை கொடுத்த தகவல்களை உறுதியாக்கிக்கொண்டு அமைச்சர் பதவியை பறித்தார் அம்மா அவர்கள்..அப்படிப்பட்ட இந்த நபர் இனி எந்த காலத்திலும் அமைச்சர் பதவி என்பதே கிடைக்காது என்று தெரிந்தபின்னரே வாய் திறக்கின்றார் யோக்கிய சிகாமணிபோல..அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும் வரை இவரை சீந்தக்கூட இல்லை...அப்படிப்பட்ட இந்த நபரைத்தான் கோழைகள்தான் இவரை வீரன் என்று போற்றி திரிவர்..உண்மையான கட்சி தொண்டர்களுக்கு இவர் மீது எப்போதோ நம்பிக்கை போயாச்சு..சீந்துவார் இல்லாமல் கிடந்தார்..எங்கேயாவது ஒட்டிக்கொள்ளலாம் என்று அலைகின்றார். அம்மாவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த இவர்போன்றோரும்..இவரை நம்பும் கட்சிக்காரர்களும் அக்கட்சிக்கே பார்ம்தான்..யூஸ்லெஸ்..போகியில் தூக்கி அறியப்பட்டவர்... சேரநாட்டுக்காரர்.. அடுத்து பாண்டியனார் என்று செல்லா காசுகள் புலம்பல்கள் ஏராளமாக கூவி கூவி புலம்புவார்கள்..அட்ரஸ் இல்லாத நபர்கள் பட்டியலில் முதல் நபர்..   14:04:31 IST
Rate this:
56 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
15
2017
அரசியல் ராமாவரம் தோட்டத்திற்குள் நாளை நுழைகிறார் சசிகலா எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்களையும் வளைக்க திட்டம்
இது புது நோய்..ஆமாம் தினமலருக்கு பிடிச்சிருக்குற இந்த நோயிக்கு பேரு சசிபோபியா..ன்னு சொல்வாங்க..எங்கே பார்த்தாலும் யாரை பார்த்தாலும் எந்த செய்தியிலும் சசிகலா பற்றியே செய்திகள்..அதில் ஒன்றுகூட உருப்படியே கிடையாது..குளிர்காலத்திலேயே இப்படி இருக்கே..இன்னம் மே மாதத்து வெயிலில் என்ன ஆகப்போகுதோ தினமலருக்கு?   09:08:32 IST
Rate this:
70 members
1 members
11 members
Share this Comment

ஜனவரி
15
2017
அரசியல் புதுக்கட்சி துவக்க ரஜினி ஆலோசனை சசிகலா அதிர்ச்சி
செய்தியை படிச்சதுமே ரஜினி சிரிச்சுட்டாரே..இந்த தினமலர் நலலாதானே இருந்துச்சு..என்னாச்சு..நான் ஏதோ பேசிட்டேன்..அவுக அவுங்க கட்சியை பத்தி சிந்திக்கிறாங்க..இதுல எங்கிருந்து அதிர்ச்சி வந்துச்சு..ஹலோ..108 ஆம்புலன்சுங்களா? ஆமா நீங்க நேரா தினமலர் ஆபீசுக்கு போங்க..அங்கே இருக்கிறவங்க அத்தனை பேரையும் தூக்கிட்டு கீழ்பாக்கம் கொண்டுட்டு போங்க..ஆமா ரஜினிதான் சொல்றேன்..தாமதம் வேண்டாம்..சுமார் ஒருமண்டலமாவே இப்படித்தான் ஏதேதோ உளறிட்டு செய்தின்னு சொல்லிட்டு திரியறாங்க..நல்லா கவனிச்சு அனுப்புங்க..இல்லைனா அப்படியே அங்கேயே..ஹ்ம்ம்..மகிழ்ச்சி..   09:04:48 IST
Rate this:
29 members
2 members
21 members
Share this Comment