E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Sekar Sekaran : கருத்துக்கள் ( 2566 )
Sekar Sekaran
Advertisement
Advertisement
செப்டம்பர்
29
2014
அரசியல் கருணாநிதி வீட்டில் தொண்டர்கள் பாதுகாப்பு
அரசியலில்தான் எழுந்திருக்கவே முடியவில்லை என்றால்..இனி வெளியே கூட நடமாட முடியாது போல உள்ளதே. ஒரே திருத்தம்..இதுபோன்ற கல்வீசுகளை செய்வது கண்டிக்கத்தக்க ஒன்றுதான் என்றாலும்..அதனை செய்வது அதிமுகவினர் அல்ல என்பதை உணர முடிகின்றது..மனத்தால் நிரம்ப பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இப்போது அனைவரும் அம்மாவின் பக்தர்களாக உணர்ந்து அந்த கோபத்தில் பொதுமக்களின் செயல்பாடுகள் இவை. கட்சி சார்ந்த அதிமுகவினர் அல்ல..அம்மா மீது கொண்ட பற்றினால்..கருணா மீது கொண்ட கோபத்தால்..இவை அரங்கேறுகின்றன..விட்டுவிடுங்கள்..   02:07:04 IST
Rate this:
99 members
1 members
89 members
Share this Comment

செப்டம்பர்
29
2014
பொது ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் அதிகபட்சமா?
திருப்திகரமான கணக்கு என்றால் என்ன? நீதிபதிக்கு திருப்தி ஏற்ப்படும் வகையில் சமர்ப்பிக்க இது ஒன்றும் அவர் வீட்டு சொத்துக்கள் அல்லவே. 1990 களில் யாரிடம் கணக்கு வைக்கும் பழக்கம் இருந்தது. 100 சினிமா படங்களுக்கு மேல் நடித்தவரிடம் இந்த அளவுக்கு கூட சொத்துக்கள் இருக்காது என்கிற அதிபயங்கர அறிவாளி கொடுத்த தீர்ப்பு அருவருப்பான காரணமே. அம்மாவின் அம்மாவும் ஓர் நடிகையே..அப்படி இருக்கையில் இந்த அளவுக்கு சொத்துகணக்கு காட்டாமல் இருந்தால்தான் அது சந்தேகத்திற்கு உரியது. அப்படியே சரியான கணக்கு காட்டியிருந்தாலும்..திணிக்கப்பட்ட நீதிபதிக்கு இதுதான் டார்கெட் என்று எப்போதோ முடிவானதால்..சட்டத்தில் இல்லாத அளவுக்கு இன்னமும் கூட நூறுமுறை தூக்குதண்டனை என்றும்..ஆயிரம் கோடிகள் அபராதம் என்றுகூட தீர்ப்பு சொல்லி விளம்பரம் தேடிக்கொள்ளலாம். அசைன்மெண்ட்..டார்கெட்..இதுவேல்லாம்தான் மிகசரியான முறையிலே பயன்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்புகள் திருத்தப்படலாம் அல்ல..திட்டமிட்டு கொடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டது..நிஜம் மறைக்க இயலாது..   02:02:58 IST
Rate this:
1557 members
1 members
389 members
Share this Comment

செப்டம்பர்
29
2014
கோர்ட் தண்டனையை நிறுத்திவைக்க கோருகிறார் ஜெ., பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஜாமின் ஒரு வாரம் தள்ளிப்போக வாய்ப்பு
தீரப்ப் சொல்லப்பட்ட விதம் இப்போது பலரது கண்டனங்களுக்கு உள்ளாகிவிட்டது. அம்மாவை தண்டிப்பதில் ஓர் அசாத்திய ஆர்வ வெளிப்பாட்டை உணர முடிகின்றது. பொறுப்பற்ற முறையில் இப்படி ஓர் தீர்ப்பை சொல்லிவிட்டு, மூத்த வழக்கறிஞர்களின் ஏகோபித்த கண்டனத்தை பெறுகின்ற தீர்ப்பால்..பாதிக்கப்பட்டது அரசியல் சட்டமும் அதன் அமைப்ப்புமே. சட்டத்துறை அமைச்சரின் பணி வேடிக்கை பார்ப்பது என்பதோடு நின்றுவிடுகின்றது..அது அவர்களது அரசியல் சித்துவிளையாட்டின் ஓர் பகுதியே. வாக்களித்த மக்களுக்கும் சேர்த்து இந்த தண்டனை. சதியின் ஒர்முனை மட்டுமே இந்த அளவுக்கு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. போகிற போக்கையும் வருகின்ற செய்திகளையும் நோக்கும்போது..சிறைக்குள்ளேயே அம்மா அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் திட்டம் கூட இருக்கலாமோ என்கிற அச்ச உணர்வு எழுவதை தவிர்க்க இயலவில்லை. அதன் தாக்கம்தான் அம்மா அவர்களுக்கு நெஞ்சு வலி என்கிற கட்டுக்கதையினை பரப்பினார்கள்..அப்படி ஒன்றுமில்லாமலே..நீதியை மட்டும் கொன்றதோடு நிற்காமல் சர்வதேச சதிகூட ராஜபக்ஷே துணைகொண்டு செய்யப்படுகின்றதோ என்கிற சந்தேகத்தை இன்னமும் சில தினங்களில் உணரப்போகிறோம்..   01:54:25 IST
Rate this:
1176 members
1 members
1746 members
Share this Comment

செப்டம்பர்
29
2014
பொது ஜெ., மீதான வழக்கில் உளவுத்துறை சொதப்பல் தயார் நிலையில் கர்நாடக போலீஸ் இருந்தது எப்படி?
அம்மா அவர்கள் மட்டுமல்ல யாருமே இந்த வழக்கின் தன்மையை வைத்து இப்படிப்பட்ட தீர்ப்பினை எதிர்பார்த்திருக்கவே முடியாது. ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது உலகறிந்த ரகசியம். இது திட்டமிட்டு ஓர் நபரை விலைக்கு ஏற்பாடு செய்து அகோராமான முறையில் சிறை செய்த தீர்ப்பு. தீர்ப்பு வெளியாகும் நேரம் கடந்துபோனதே அவர்களின் சதியை அப்போதுதான் உணர முடிந்தது. மொத்தத்தில் இது நியாயமான தீர்ப்பே அல்ல என்பதை உலகே ஒப்புகொள்கின்றது. எழுதி கொடுத்த தீர்ப்பை வாசித்து சென்றார்..துணிச்சலாக எதிர்கொண்டார் அம்மா அவர்கள். பதவியில் இருந்துகொண்டே ஆட்சி செய்தார்..இப்போது பதவியில் இல்லாமலேயே ஆட்சி புரிகின்றார்..மக்களின் மனதிலும் சேர்த்தி.   01:46:16 IST
Rate this:
505 members
1 members
628 members
Share this Comment

செப்டம்பர்
29
2014
அரசியல் தமிழக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு கண்ணீர் விட்டு அழுதபடி பொறுப்பேற்பு
இதே நிலை வேறு கட்சியில் ஏற்பட்டிருந்தால் இந்நேரம் பதவிக்கு சண்டை போட்டு சட்டை கிழிந்து வேஷ்டி உருகப்பட்டு..மண்டை உடைந்து போலீஸ் கேசாகி..கட்சி உடைந்து அண்ணனாவது தம்பியாவது..தங்கையாவது இப்படி பல வேடங்கள் உருவாகி இருக்கும். அப்படி ஏற்படாமல் போய்விட்டதே என்கிற எரிச்சல் பலரிடம் காண முடிகின்றது. அம்மாவின் ஆணைப்படி அமைதி காத்து மாற்று அமைச்சரவை ஏற்படுவது இந்தியாவிலேயே அதிமுகவில் மட்டும்தான் இருக்கும்..இருக்க முடியும். குதிரை பேரத்தில் எம் எல் ஏக்கள் வேறு கட்சியில் இப்படி ஓர் பதவி பிரமாணம் நடந்திருக்குமா? அருவருப்பான கட்சியில் இருப்போருக்கு அசிங்கமான எண்ணத்தின் வெளிப்பாடுதான் இங்கே சிலரது அருவருப்பான கருத்து.அழுகை என்பது சதிகாரர்களின் சூழ்ச்சிக்கு இப்படி ஓர் நிலை வந்துவிட்டதே என்பதே ஆகும். தாயை பிறந்த பிள்ளையை போன்று அழுகின்றார்கள்..பாசம் தெரியாதவர்களுக்கு இது வேடிக்கை வினோதம்.   17:03:35 IST
Rate this:
1650 members
3 members
291 members
Share this Comment

செப்டம்பர்
28
2014
கோர்ட் பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி
நிச்சயம் இவருக்கு உண்டான பரிசு கவர்னர் பதவி அல்லது அயல் நாட்டு தூதுவர் பதவியை பெறுவதற்கு சந்தர்ப்பம் உண்டு.   04:22:20 IST
Rate this:
141 members
3 members
105 members
Share this Comment

செப்டம்பர்
28
2014
அரசியல் தமிழகத்தின் அடுத்த முதல்வர் இன்று தேர்வு
இதே ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவை தவிர யாரேனும் வெற்றிபெற முடியுமா? எந்த எதிர் கட்சியினர் இந்த போட்டிக்கு தயார்?   04:20:22 IST
Rate this:
1202 members
1 members
25 members
Share this Comment

செப்டம்பர்
28
2014
அரசியல் சட்டமும் நீதியும் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன சுப்ரமணியன் சாமி
உளவாளிகள் என்கிற கூட்டம் இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கொண்டு திரிவார்கள். ஓர் எம் பி பதவியை கூட பெறுவதற்கு வக்கில்லாதவர். மிரட்டியே காரியம் சாதிக்க நினைப்பவர் இந்த சூனா சாமி. மோடிக்கும் எனக்கும் ஓர் டீல் உள்ளது என்கிற பேட்டியின் சாராம்சம் என்னவென்று இப்போது புரிந்துபோனது. பா ஜ கவின் அழிவுக்கு நிச்சயம் இவரே காரணமாக இருப்பார். அதிலும் இவருக்கு தமிழகத்தில் கிடைக்கும் மரியாதை கொஞ்சனஞ்சமிருக்காது. வாய்ச்சவடால் என்பார்களே..அறியாதவர்களுக்கு இதோ இவரே என்பதை இப்போது கூறுகின்றேன். ராஜீவ் கொலையில் சமந்தமுண்டு என்கிற அளவிலேயே இவர் மீதான புகார் கூட எடுபடாமல் காப்பாற்றப்பட்டதால்..தான் ஓர் அறிவு கொழுந்து என்று சொல்லி திரிகின்றார். 14 கருப்புப்பூனை படையோடு உலா வருகின்றார்..அரசியல் ப்ரோக்கர் இவர்..இவரால் ஒரு மாற்றத்தையும் தமிழகத்தில் கொண்டுவரவே முடியாது.   04:13:39 IST
Rate this:
163 members
0 members
94 members
Share this Comment

செப்டம்பர்
28
2014
அரசியல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் ஜனாதிபதிக்கு கருணாநிதி கடிதம்
அம்மா அவர்கள் திரும்ப வரும் வரையில் நான் பதவியில் இருக்கின்றேன்..அம்மா வந்ததும் திரும்ப தந்துவிடுகின்றேன் என்று இன்னமும் சொல்லாமல் இருக்கின்றாரே. ஆச்சர்யம்தான். இவரது இந்த அறிக்கையின் சாராம்சமானது...ஆட்சியை கலைத்து விடுங்கள்..அராஜகம் நடக்கின்றது என்பதுதானாக இருக்கும். திமுகவினருக்கு அதிமுக கரைவேஷ்டி கொடுத்து பஸ்ஸை தீவைத்து கொளுத்துவது போன்ற அடாவடி செயல்களை செய்ய ஏற்ப்பாடு செய்துவிட்டுத்தான் இந்த அறிக்கையையே கொடுத்துள்ளார். இவரோ அல்லது இவரை நம்பும் எதிர் கட்சியினரோ அரசியலில் எந்த ஓர் மாற்றத்தையுமே கொண்டுவந்திடவே முடியாது. வெத்து அறிக்கை..வீண் முயற்சி..   04:08:48 IST
Rate this:
128 members
2 members
87 members
Share this Comment

செப்டம்பர்
28
2014
அரசியல் ஊழல் வழக்கில் பதவி இழந்த முதல் முதல்வர் இவர்தான்
இந்த தீர்ப்பினால் அம்மா மீதான காழ்புணர்ச்சி தெளிவாக தெரிகின்றது. ஒருபோதும் ஆட்சி மாற்றமோ அல்லது கட்சி உடைந்துபோகும் என்றோ யாரும் என்னிட முடியாது. வெறும் வார்த்தைகளால் இப்போதைக்கு உத்தமர்கள் போன்று எதிர் அணியினர் பேசித்திரியலாம். அம்மா மீதான செல்வாக்கினை யாராலும் குறைத்திடவே முடியாது. மிகப்பெரிய மக்களின் ஆதரவை இதுவரையிலும் இல்லாத அளவுக்கு மேலும் பெற்றிடுவார். இதுதான் நிஜமானது. இப்போதைக்கு ஆனந்தக்கூட்டாடுங்கள். பின்னர் நிரந்தர சோகம்தான் எதிர் கட்சியினருக்கு. ஒருபோதும் கலங்காத மனம் கொண்டவர் அம்மா அவர்கள்.   03:50:58 IST
Rate this:
395 members
2 members
221 members
Share this Comment