தினமலரில் இந்த Article-ஐ எழுதியது யார் என்று தெரியாது. ஆனால் இந்த செய்தியில் கடைசியாக அவர்கள் முடித்திருப்பது அருமை. "அவர்களுக்குத் தெரியாது நேர்மையின் விலை ரூ. 1.9 கோடியை விட அதிகம் என்று..." அருமையான வரி. உண்மையில் இந்த டிரைவர் போன்று நேர்மையாக இருப்பவர்கள் இந்த உலகில் வெகு சிலரே. பெரும்பாலான மனிதர்கள் "ஏதோ வாழ்க்கை... நாமும் வாழ்கிறோம்..." என்று பூமிக்கு பாரமாகத்தான் வாழ்கிறார்களே தவிர, மண்ணுக்குள் புதையும் முன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் தவிர, வேறு எதுவுமே நமக்கு சொந்தமில்லை என்று எப்போது மனிதன் உணர்கிறானோ அப்போது தான் அவனால் சாதிக்க முடியும். தான் மட்டும் நல்லவன் என்றும் தன்னை சுற்றி உள்ளவர்கள் செய்வது அனைத்தும் தவறு என்றும் நினைக்கும் வரை மனிதன் தன்னை உணரப்போவதில்லை. சுயமாக சிந்தித்து ஒழுக்கமாக எளிமையாக வாழ்ந்து காட்டும் மனிதர்கள் வெகு சிலரே உன்னத நிலையை அடைகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறார்கள். மனிதர்களே நாமும் கொஞ்சம் திருந்துவோமா?
15-மே-2013 14:08:06 IST
இங்கு கருத்து தெரிவிக்கும் வாசகர்களுக்கு நான் ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு சிலை அமைப்பதனால் மதுரைக்கு நன்மையே அன்றி, இதனால் மக்கள் வரிப்பணம் ஒன்றும் வீணாக போவதில்லை. இது ஒரு முதலீடு. எவ்வாறென்றால் ஏற்கனவே சுற்றுலா நகரான மதுரையில் இம்மாதிரியான (அமெரிக்காவில் உள்ள "சுதந்திர தேவி" போன்ற பிரம்மாண்ட) சிலை அமைப்பதினால் சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை கூடும். அதனால் கிடைக்கும் வருவாயை கணக்கில் கொண்டால் இந்த 100 கோடி என்பது ஒன்றும் பெரிதல்ல... ஆனால் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் சிலை அமைக்க படுமா என்பது தான் முக்கியம். இவ்வாறு அமைக்கப்பட்டால் மதுரையின் உட்கட்ட அமைப்பு வசதிகள் (ரோடு வசதி, சுகாதாரம், பராமரிப்பு ஆகியன) மேம்படும். 100 கோடியை வெகு விரைவில் சுற்றுலா வருவாய் மூலம் எளிதாக சம்பாதித்து விட முடியும். ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். என்னுடைய கருத்தை நீங்களும் ஆமோதிப்பீர்கள்.
15-மே-2013 10:20:48 IST
110-வது விதியின் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டிய ஒரு முக்கியமான அறிவிப்பு இன்னமும் பாக்கி உள்ளது... அது என்னவெனில் "தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் அகற்றப்படும்" என்பதே. அனைத்து மக்களின் வரவேற்ப்பும் அதற்கு கிடைக்கும். அது எப்போது நடக்கும் என்பதே தமிழக முக்கியமாக தென் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு. தென் மாவட்டங்களில் முக்கியமாக உசிலம்பட்டி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களில் இந்த சிலைகளால் நடக்கும் அட்டூழியங்கள்/கலவரங்கள் சொல்லி மாளாது. சிலைகள் அகற்ற பட்டால் மக்களின் மனதில் கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கும். நடக்குமா???. எதிர்பார்ப்புடன் oviya.vijay
15-மே-2013 07:19:25 IST
டைரக்டர் செய்த பெரிய தவறு... அப்பா செண்டிமெண்டை கிளைமாக்ஸில் புகுத்துவது என்று முடிவெடுத்தவர் விமலின் அப்பாவாக வரும் "டெல்லி கணேஷ்"-ஐ நல்லவராக காண்பித்திருக்கலாம். அவர் விமல் மற்றும் தனது மனைவிக்கு செலவு செய்த கணக்கை எழுதி வைப்பதாக காண்பித்திருப்பது நல்ல ஒரு தந்தை-க்குரிய அபிமானத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்த தவறி விட்டார்.
02-ஏப்-2013 20:39:26 IST
நான் படித்த பள்ளியில் எங்களுக்கு கற்றுக்கொடுத்தது... "உன் வலது கை செய்யும் உதவியை, உன் இடது கை அறியாமல் இருப்பதாக..." செய்யும் நல்ல செயல்கள் யாவாயினும் அது மக்களின் மனதில் நிற்க வேண்டும். அதனை சொல்லி காண்பித்தால், அதற்கு உண்டான மதிப்பை அது இழந்து விடும். "அம்மா உணவகம்" ரொம்ப நன்னாருக்கு... ஹி...ஹி...ஹி... இதற்கும் "உபயம்" என்று எழுதி வைக்கும் நபர்களுக்கும் என்ன வித்தியாசம். அடுத்து "அய்யா" ஆட்சிக்கு வந்தால் "அய்யா" உணவகமா?. யப்பா... முடியலடா சாமி... எப்போது தான் திருந்துவார்களோ... வட இந்தியாவில் ஊர் முழுக்க யானை சிலைகளை வைத்த "மாயாவதி"யின் நிலை என்ன. எத்தனையோ அறிக்கைகளை வெளிவிடும் தமிழக முதல்வர் தன்னுடைய காலில் விழும் அமைச்சர்களை அவ்வாறு விழ வேண்டாம் என்று ஒரு அறிக்கை வெளியிட்டால் போதுமே... ஆக முதல்வரே அதை விரும்புகிறார் என்று தானே அர்த்தம்... "பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்... துணிவும் வர வேண்டும்"... புரட்சி தலைவர் சொன்னது... புரட்சி தலைவி கடை பிடிப்பார்களா?
26-மார்-2013 06:28:42 IST
நான் படித்த பள்ளியில் எங்களுக்கு கற்றுக்கொடுத்தது... "உன் வலது கை செய்யும் உதவியை, உன் இடது கை அறியாமல் இருப்பதாக..." செய்யும் நல்ல செயல்கள் யாவாயினும் அது மக்களின் மனதில் நிற்க வேண்டும். அதனை சொல்லி கான்பித்தால் அதற்கு உண்டான மதிப்பை அது இழந்து விடும். "அம்மா உணவகம்" ரொம்ப நன்னாருக்கு... ஹி...ஹி...ஹி... இதற்கும் "உபயம்" என்று எழுதி வைக்கும் நபர்களுக்கும் என்ன வித்தியாசம். அடுத்து "அய்யா" ஆட்சிக்கு வந்தால் "அய்யா" உணவகமா?. யபா... முடியலடா சாமி... எப்போது தான் திருந்துவார்களோ... வட இந்தியாவில் ஊர் முழுக்க யானை சிலைகளை வைத்த "மாயாவதி"யின் நிலை என்ன. எத்தனையோ அறிக்கைகளை வெளிவிடும் தமிழக முதல்வர் தன்னுடைய காலில் விழும் அமைச்சர்களை அவ்வாறு விழ வேண்டாம் என்று ஒரு அறிக்கை வெளியிட்டால் போதுமே... ஆக முதல்வரே அதை விரும்புகிறார் என்று தானே அர்த்தம்... "பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்... துணிவும் வர வேண்டும்"... புரட்சி தலைவர் சொன்னது... புரட்சி தலைவி கடை பிடிப்பார்களா?
25-மார்-2013 08:00:06 IST
தினமலரா இது... மூச்சுக்கு முன்னூறு முறை ( பொய்யாக ) அம்மாவின் புகழ் பாடும் அ.தி.மு.க. M.L.A.-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு நிகராக புகழ் பாடி வந்த தினமலரா இவ்வாறு செய்தியை வெளியிட்டது... நம்பவே முடியவில்லை... ஆனால் இது தான் தமிழ்நாட்டினை ஆளும் கட்சிகளின் உண்மை நிலை. இனியாவது ஒருவரை மட்டும் புகழ் பாடாமல், பத்திரிகை தர்மத்தின் படி நடு நிலையுடன் மட்டும் ( உண்மையின் உரைகல்லாக ) செய்தியை வெளியிட்டால் வாசகர்கள் யாவரும் தினமலர் புகழ் பாடுவோம். செய்வீர்களா?
22-மார்-2013 09:34:22 IST
ஜெயலலிதா அரசின் செயல்பாடுகளை பெரிது படுத்தும் தினமலர், அவரை பற்றி ஒன்றே ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஜெயலலிதா யாரையும் வளர விட மாட்டார் என்பது இந்த உலகமே அறிந்த ஒன்று. தன்னை நம்பி இருப்பவர்களையும் உதாசினப்படுத்தும் செயல் அவரது பிறப்போடு ஒட்டி பிறந்தது. அதை மாற்ற யாராலும் முடியாது. வைகோ-வின் கதி... வாஜ்பாயின் கதி... கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதி... சென்ற சட்ட மன்ற தேர்தலில் முதலில் ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு... பின்பு அது தன்னுடைய கவனத்திற்கு வராமல் வெளியிடப்பட்டது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்ததை, தினமலர் தன்னுடைய கவனத்தில் கொள்ள வேண்டும். சசிகலா-வை விட்டு பிரிந்த போது பெரிதாக செய்தியை வெளியிட்ட தினமலர், சில காலங்களில் மீண்டும் சசி-ஐ தன்னுடன் இணைத்து கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நெற்றியில் தான் போட்ட நாமம் ஒரு கபட நாடகம் என்று ஜெயலலிதா-வுக்கு தெரியவில்லையா? நீங்கள் வேண்டுமானால் அவருக்கு விசுவாசமாக செயல்படுவதாக நினைக்கலாம். ஆனால் தனக்கு உபயோகப்படும் வரை வைத்து கொண்டு விட்டு தூக்கி எறியும் பழக்கம் ஜெயலலிதா-வுக்கு ஒன்றும் புதிதில்லை. தினமலரும் ஒரு நாள் அந்த அனுபவத்தை புரிந்து கொள்ளும் என்பதே நெடுநாளைய தினமலர் வாசகனான என்னை போன்றோரின் ஆதங்கம்... கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் செய்ய போகிறது தினமலர்.
20-மார்-2013 07:34:46 IST
1991-ல் ராஜீவ்காந்தி படுகொலைக்குப்பின் அ.தி.மு.க. ஆட்சி. 1996-ல் மூப்பனாருடன் சேர்ந்து தி.மு.க. ஆட்சி. பிறகு 2001-ல் அ.தி.மு.க. ஆட்சி. அதன் பின் 2006-ல் தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வண்ணத்தொலைகாட்சி பெட்டியால் மீண்டும் ஆட்சி கிடைக்கும் என்று ஏமாந்தனர் தி.மு.க.வினர். இப்போது (2011) ஆட்சி "அம்மா"வின் அ.தி.மு.க. கையில். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது... இந்த இரண்டு கட்சிகளும் மக்களைக் கவர என்னதான் கொடுத்தாலும் (கலர் டிவி, லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர்) தமிழக மக்கள் கொடுக்கும் பதில் என்னவோ "மாற்று ஆட்சி" தான்... அப்படின்னா 2016? அரசியல் சாணக்கியர் "கருணாநிதி" என்பது உண்மை தான். அடுத்து வரும் லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார்.
19-மார்-2013 11:44:56 IST