இன்னும் பெரிய பண முதலைகள் பேர் வர்றதெல்லாம் பாக்கி. ஸ்ரீசாந்த்துக்கே எல்லா கோபத்தையும் கொட்டிடாதீங்க. அதே போல.. அம்பானி , மால்யா எல்லாம் லிஸ்டுல இருக்கும்.. ஆனா வெளிய வரவே வராது. பண பேய்கள் உலகம் அது.. இந்த கேடு கேட்ட கிரிக்கேட்டால்தான் குற்றாலீஸ்வரன் போன்ற நம் நாட்டின் / ஊரின் தங்கங்கள் வெளிய வராமலே போய்டாங்க..
16-மே-2013 16:04:15 IST
நூல்களை அழிப்பது ஒரு இனத்தின் கலாச்சாரத்தையே அழிப்பது போலாகும். அதனால்தான் இலங்கையில் அதையும் மெனக்கெட்டு அழித்தார்கள். பாஸ்கர் ஒரு நல்ல காரியத்தை தொடங்கி ( புத்தகங்களை பற்றிய ) நம் அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். எல்லாரும் ஒன்று பட்டு நம் நாட்டில் மிச்சம் இருக்கும் புத்தகங்களையாவது நகல் எடுத்து வளரும் சந்ததிக்கு கிடைக்கும் வழியில் செய்தால் நன்றாக இருக்கும்.
15-மே-2013 12:24:49 IST
பின்னே.. இந்த வன்முறைக்கு நாங்கள்தான் காரணம்.. டவுசர் பாண்டி உள்ளிருக்கும் வரை இந்த வன்முறை தொடரும் - னா பேட்டி குடுப்பாங்க.. இதெல்லாம் நம்மளே புரிஞ்சுக்கணும்.. எல்லாம் ரொம்ப தெளிவா பேசி வெச்சுத்தான் நடத்தறாங்க. ed play.. இன்னும் கொஞ்ச நாள்ல அப்பனும் மவனும் சேந்து புகை பிடித்தாலும் சினிமா பார்த்தாலும் இளைஞர்களுக்கு தீங்கு விளைவிக்கும்னு பேட்டி தருவாங்க பாருங்க..
03-மே-2013 11:09:28 IST
சூப்பர்.. பெங்களூர் குண்டு வெடிப்பில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே இன்னும் 13 வருஷம் ஆகும். அப்புறம் தண்டனை கிடைக்க சுமார் 37.5 வருஷம் ஆகும். நம்ம ஜென்மம் முடிஞ்சுடும். வாழ்க வெள்ளையர்கள் (குறைஞ்சது இந்த மாதிரி விஷயங்களிலாவது அதிரடி காட்டணும்னு உலகத்துக்கு சொல்றதுக்காக மட்டும்.. வாழ்க வெள்ளையர்கள்)
20-ஏப்-2013 11:01:29 IST
கோயம்புத்தூர் பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் நான் மனைவி என் குழந்தை மூவரும் காரில் போய்கொண்டு இருந்தோம். எங்கள் கண் முன்னே அரசு பேருந்து டிவிஎஸ் 50யில் சென்ற ஒரு 70 வயது பெரியவரை சாலையிலிருந்து ஓரம் கட்டிவிட்டது. அவர் தடுமாறி வழிமாறி ஓரத்தில் உள்ள ஒரு சுவரில் மோதி ஒரு புதர் மேல் விழுந்தார். யாரும் நிற்க வில்லை. நானும் சுதாரித்து விபத்து இடத்தில் இருந்து கொஞ்சம் முன் போய் காரை நிறுத்திவிட்டு தண்ணீர் கொண்டு வந்து அவரை உட்கார வைத்துக்கொண்டிருந்தேன். பேச்சு மூச்சு இல்லை. ரத்தம் தலையிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. நிறைய பேர் இதை பார்த்துக்கொண்டே சென்றார்கள். இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான அந்த அரசு பஸ் ஓடியே விட்டது. பின் மெதுவாக கூட்டம் கூடியது. வந்தவர்கள் முதலில் கேட்ட கேள்வி. நீங்கதான் இடிச்சீங்களா என்பது. எனக்கு பதறிவிட்டது நிறைய பேருக்கு இப்படி பதில் சொல்லி. என் மனைவி அழுதே விட்டாள். அதில் ஒருவர் வந்து, தம்பி , எனக்கு இந்த பெரியவரை தெரியும். என் ஊர்தான். குடிகாரர்.. இப்ப கூட குடிச்சுட்டுத்தான் வந்திருப்பார். நீங்க இருந்தீங்கன்னா உங்களுக்கு பிரச்சினை. குடும்பத்தோட இருக்கீக்ங்க.. கிளம்புங்க என்றார். சங்கடத்துடனே கிளம்பினேன். ஆனால் அந்த சூழ்நிலையில் சிலர் நடந்த விதத்துக்கப்புரம் நான் இன்னொருவனுக்கு உதவி செய்ய முழு மனசுடன் போவேனா? அது என் குற்றமா ? என்னை போல் எவ்வளவோ பேர் உதவி செய்யப்போய் உதை பட்டிருப்பார்கள். இதற்க்கெல்லாம் என்ன பதில்.
16-ஏப்-2013 10:12:09 IST
கத்தி கூப்பாடு போட்டு யாரும் அதற்க்கு செவி கொடுக்காததால் அவமானப்பட்டு இப்போ நம்மளே களத்தில் குதிக்கற நிலைமை வந்தாச்சு. இதை ஒற்றுமையாக நடத்தினால் இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளிடமிருந்து நம் நாட்டை காப்பாற்றி நம் குழந்தைகளுக்காவது நல்ல வாழ்க்கை கிடைக்க வெக்கலாம். முடிந்த வரை கூவி பார்ப்போம். வேறு ஒன்னும் செய்யவும் முடியாது.
02-ஏப்-2013 10:45:28 IST
வாங்கற காசுக்கு மேல கூவறாரே இவரு.. பாவம்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்..
21-மார்-2013 09:33:54 IST
நம்ம நாட்டுக்கும் வெளி நாடுகளுக்கும் இதான் வேறுபாடு. நம்ம ஊர்ல எத்தன பேர் சமீப காலமா எவ்வளவு கண்டுபிடிப்புகள சொல்லியிருக்காங்க. ஒரு பய புள்ளயாவது ( டாட்டா, மாருதி ) எதாவது செஞ்சாங்களா.. அங்க பாருங்க. உடனே ஒரு கம்பெனில இதை பயன் படுத்த முடிவு பண்ணிட்டாங்க. எங்க ஊருலயும் ஆயிரம் பீட்டர் டியர்மேன் இருக்காங்கன்னு உலகத்துக்கு எப்படி சொல்ல..
20-மார்-2013 10:47:26 IST
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. பழைய கேள்வித்தாள்களில் இருந்து எடுக்கப்பட்ட பாடங்களையும் வினாக்களையும் வைத்தே பாடங்கள் தேர்வு செய்யப்படுவது காலம் காலமாக நடக்கும் கலாச்சாரம்தானே. இந்த மாதிரி பாடம் படிப்பதற்கு பதில் மாணவர்கள் சும்மாவே இருந்து விடலாம். இவர்களின் யோசனை திறன் கண்டிப்பாக பாதிக்கப்பட்டு விடும் இந்த மாதிரி பாடம் நடத்தும் முறையினால்.
15-மார்-2013 11:14:03 IST